Friday, October 1, 2010

ரேப் ட்ராகன் - 21


அவர்

இணைய தளபதி ரஃபிக் அவர்களின் ரிஸ்க் ரொம்மான்ஸ்ஸ்ஸ்

சொகுசு விடுதியின் அறையினுள் தன்னுயிரை நீக்க திடம் கொண்ட ரஃபிக்கின் மனக் கண்களின் முன்பாக அவன் கடந்தகால வாழ்வின் பளபளக்கும் பக்கங்கள் விசிறிகளாக விரிந்து மடங்கின. அப்பக்கங்களை தீராத தாகத்துடன் சுவைத்துக் கொண்டு பஞ்சணை வீரமரணத்திடம் தன்னை மெல்ல மெல்ல அந்த வீர வாலிபன் கையளித்துக் கொண்டிருந்த சமயத்தில்… ஆம், நானும் அறிவேன்….என்று ஒலித்த அந்த இனிய குரல் ரஃபிக்கை மீண்டும் அந்த சித்தரவதை கூடத்திற்கு அழைத்து வந்தது.

- ஆகா.. என்னே இனிமையான குரல், இது என்ன குயின்ஸ்லேண்ட் குயிலின் கீதமா இல்லை கீரின்லேந்து கிளியின் சங்கீதமா… ஏன் இந்தக் குரல் என் நரம்புகளை கரைக்கிறது, என் ரத்தத்தின் வெப்பத்தை மூட்டுகிறது, ஏன் என் இதயத்தில் காதலின் வரவேற்பு சங்கீதம் ஆலாபனை செய்கிறது.. ஏன்.. ஏன்..ஏன்… ரஃபிக்கின் மனதில் கேள்விகள் அலை அலையாக கரைமோதின.

பஞ்சணையில் விலங்கிடப்பட்ட நிலையில் கிடந்த ரஃபிக்கின் விழிகள் அந்த இனிய குரல் வந்த வழியில் தம் பாதங்களை பதித்தன. மேலே பயணித்தன. அவன் விழிகளின் பயணம் முடிவடைந்த இடத்தில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுருவம் அந்த வாலிபனின் மனதை லப்பு டப்பு என்று துடிக்க வைப்பதற்கு பதிலாக காதல்…காதல்.. காதல் என வேகமாக துடிக்க வைத்தது. அந்தப் பெண்ணின் அழகில் மயங்கிய ரஃபிக்கின் விழிகள் கலங்க ஆரம்பித்தன.

சொகுசு விடுதியின் கூரையில் தலைகீழாக தன் பேரழகை தொங்க விட்டிருந்த அந்த நங்கையின் கபில நிற விழிகள் ரஃபிக்கின் இதயத்தை கூரான ஊசி முனைகள்போல் துளைபோட்டன. தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணின் அங்க லாவண்யங்ளை தாகம் கொண்ட சிசு போல் பருக ஆரம்பித்தான் ரஃபிக். அவனது கலங்கரை விளக்கில் ஒரு விம்மல் உதித்தது.

கபிலவிழியாள் தலைகீழாக தொங்கினாலும் அவள் வாளிப்பான தொடைகளிலிருந்து பிடிவாதமாக கீழே இறங்க மறுத்த அந்த அதி குட்டைப் பாவாடையை தன் மனதில் சபித்தான் புரட்சிக்காரன். தட்டையாக வழுக்கி நீண்ட அவளின் வயிற்றுப் பகுதியின் மேற்புறத்தில் நிமிர்ந்து நின்ற குன்றுகள் அவனை எச்சில் விழுங்க வைத்தன. பின்புறமாக உதித்த மேடுகளை முழுமையாக தரிசித்திட அவன் உள்ளம் ஏங்கியது. திறந்திருந்த அவளது வயிற்றுப் பகுதியில் அழகான சிரிப்பாக இருந்த அந்த தொப்புளை ஊடுருவி நின்ற வளையலின் முனையில் மினுங்கிய பச்சைக் கல்லின் மீது ஜோ என்ற எழுத்து பதிந்திருந்தது. புரட்சிக்காரனின் ஒழுக்கம் அவனிடமிருந்து விடைபெற்றது. புரட்சி அவனில் கருகியது. அவன் உதடுகள் விடாது துடித்தன. நாக்கு அலைபாய்ந்தது.

- தலைகீழாக தொங்கும் பேரழகே, உன்னிடம் என் மனம் திறந்தேன். நான் உன்மீது காதல் கொண்டேன். என் உடல், பொருள், ஆவி என யாவும் இனி உனக்கே தந்தேன். என்னை ஏற்றுக்கொள் இல்லை மேலும் உன் விழிகளை என்மீது பாய்ச்சி என் உயிரைக் கொள்…. உணர்சிப்பிழம்பாக விழுந்த ரஃபிக்கின் காதல் வார்த்தைகளை கேட்ட அந்தக் கபிலவிழியாள் கூரையிலிருந்து அறைக்குள் குதித்தாள். அவள் கூரையிலிருந்து குதித்தது ஒரு கரும் பறவையின் தரையிறங்கலின் அழகை தன்னில் கொண்டிருந்தது.

கபிலவிழியாளின் இடையூறால் சற்று வெலவெலத்துப்போன இரு அழகிகளும் ரஃபிக்கின் இந்த திடீர் மாற்றத்தைக் கண்டு மனம் நொந்து புண்ணாகினார்கள்.

- நயவஞ்சக புரட்சிக்காரா, எம் காதல்களையும், கெஞ்சல்களையும் மறுத்து எம்மை வன்முறையின் பாதையினை அணைக்கத் தூண்டிய நீ, இந்த வவ்வால் மாமியைக் கொஞ்சிக் குலாவி சரசமாடத் துடிக்கிறாய், டேனி, இவனை இப்போதே கொல்ல வேண்டும் என என் மனம் துடிக்கிறது என்ற இளவரசி, அறையில் தன் மனத் துடிப்பை நிறைவேற்றக்கூடிய ஆயுதங்கள் ஏதேனும் உண்டா என தன் பார்வையை ஓட்டினாள்.

கூரையில் இருந்து அறையினுள் இறங்கிய கபிலவிழியழகி, இருளிற்கு கறுப்பு சாயம் பூசியது போன்ற வண்ணம் கொண்ட தன் நீண்ட கருங்கூந்தலை தடவிக் கொடுத்தாள். பருத்த தன் வாழைத் தண்டுத் தொடைகளை அசைத்து ஒரு கவர்ச்சியான நடை நடந்தவாறே ரஃபிக் விலங்கிடப்பட்டிருந்த பஞ்சணையை நெருங்கிய அவள், சாட்டை அடியால் ரஃபிக்கின் உடலிலிருந்து துளிர்த்துக் கொண்டிருந்த குருதியை நோக்கி தன் விழிகளை செலுத்தினாள். அவள் கரங்கள் ரஃபிக்கை நோக்கி நீண்டன. அவள் விரல்கள் ரஃபிக்கிலிருந்து துளிர்த்த ரத்தத்தை தொட்டு அவள் இதழ்களிற்கு மீண்டன. அவளது நீண்ட நாக்கு, விரல்களில் ஒட்டிக்கொண்டிருந்த குருதியைத் தீண்டியது. ம்ம்ம்ம்ம்…… ரத்தத்தின் உன்னத சுவையை அனுபவிப்பதுபோல் தன் கண்களை மூடினாள் கபிலவிழியாள்.

- புரட்சிக்காரனின் ரத்தமும் புனிதர்களின் ரத்தம் போல் இனிக்கவே செய்கிறது என்று ரஃபிக்கின் ரத்தப் பரிசோதனை முடிவுகளை வெளியிட்ட கபிலவிழியாள் கடகடவென சிரிக்க ஆரம்பித்தாள். அளவிற்கு மீறிய வளர்ச்சியைக் கொண்டிருந்த கபிலவிழியாளின் வேட்டைப் பற்கள் தந்தங்கள் போல் தோற்றம் தந்தன. அந்தப் பற்களின் கவர்ச்சியில் ரஃபிக் தன்னை இழந்தான். ஆகா .. அந்தப் பற்கள் என் மேனியில் பதியாதா, என் உடலை செல்லமாக கடிக்காதா என அவன் மனதினுள் விம்மினான். கபிலவிழியாளின் விரல்கள் தன் மீது பட்டதால் தான் பிறந்த பலனை அடைந்த புரட்சிக்காரன்….

- புரட்சிக்காரனின் உதடுகளை உன் நாக்கு ஒரு முறை சுவைத்தது எனில், அமிர்தத்தின் இலக்கணம் என்ன என்பதை அது தெரிந்து கொள்ளும் பாக்யம் பெறும் பேரழகியே என்று குழைவாக பேசினான்.

ரஃபிக்கின் இந்தக் குழைவான குரலை பொறுத்துக் கொள்ளமுடியாத டேனி, துரோகி, ஓரவஞ்சனைக்காரா என்று ரஃபிக்கை பார்த்து கத்தினாள்.

- அடக்கு உன் குரலை என டேனியை நோக்கி சீறினாள் கபிலவிழியாள். அந்தக் குரலில் சேர்ந்திருந்த வன்மையில் டேனி ஒடுங்கினாள்.

- தங்கலிங்க ரஸவாதம் தெரிந்த ஒருவரை நீ அறிவாய் என்று சற்று முன் கூறினாய் அல்லவா கபிலவிழியாளின் கேள்வி டேனியை நோக்கி நீண்டது.

- ஆமாம்… அச்சம் கலந்த குரலில் பதில் தந்தாள் டேனி.

- அவரின் கண்கள் கிளிகள் பார்த்து வெட்கம் கொள்ளும் பச்சை வண்ணமாக இருந்திருக்குமே… கபிலவிழியழகின் குரலில் இனிமை எல்லை மீற ஆரம்பித்தது

அவர் என்ற சொல்லை கபிலவிழியாள் உச்சரிக்கையில் அவள் கொண்ட மாற்றங்களை கூர்ந்து அவதானித்துவிட்ட ரஃபிக்… அவன் யாரோ, எவனோ, அந்தப் பச்சைக் கண்ணனைக் கொல்லாது நான் என் உயிரை விடமாட்டேன் என உணர்சிவசப்பட்டுக் கத்தினான். யாரோ ஒரு முகம் தெரியாத அந்நியனை கபிலவிழியாள் அன்பு சொரியும் குரலில் அவர் என்று அழைத்தது ரஃபிக்கின் உயிரை உலுக்கியது.

- புரட்சிக்காரனே, அவரைக் கொல்லும் முன்பாக நீ என்னைக் கொல்ல வேண்டும் அதன் முன் நான் உன்னைக் கொன்றிருப்பேன் என்று ரஃபிக்கிற்கு பதிலடி தந்தாள் கபிலவிழியாள்.

அவர், அவர் என்ற சொற்களில் கபிலவிழியாள் சொரிந்த பிரியம் ரஃபிக்கிற்கு விஷமாகக் கசந்தது…. புரட்சித்தாயே இது என்ன புதிய சோதனை, இந்தக் கதையை எழுதுபவனிற்கு நல்ல புத்தியைக் கொடு தாயே என்று குரலெடுத்துக் கதறினான் ரஃபிக். அவன் மனதில் அரும்பிய காதல் மொட்டில் கண்ணீரின் பனித்துளி தன் மென்சோக சித்திரத்தை வரைய ஆரம்பித்தது.

6 comments:

  1. சார்...
    உங்களது சமுதாய அக்கறை மெய்சிலிர்க்க வைப்பதாய் உள்ளது. பள்ளி,கல்லூரிகளில் பாலியல் கல்வியை எப்படி புகுத்த என்று அரசு யோசித்து கொண்டிருக்கும் போது சத்தமேயில்லாமல் நீங்கள் 21 தொடரின் மூலம் அதை சுலபமாக செய்வதைக் கண்டு என் நெஞ்சு விம்முகிறது.(Note it: நெஞ்சு)
    சீக்கிரமே கலைமாமணி விருது ஃபிரான்சிற்கு உங்களைத் தேடி வந்தால் ஆச்சரியப்படாதீர்கள்.


    (அப்பா..யாரையாவது வம்பிழுத்தா தான் நிம்மதியா தூக்கமே வருது)

    ReplyDelete
  2. மீண்டும் ரஃபிக் வந்துவிட்டாரா! :-)
    அட்டகாசம் செய்யப் போகிறாரா இல்லை அல்லோகல்லோபடப் போகிறாரா?! :-)))

    ReplyDelete
  3. அன்பு நண்பரே,

    எந்திரன் வெளியிட்டால் நான் திகிலடைந்திருக்கும் நிலையில், இந்த கதையின் போக்கு பீதியூட்டுவதாக உள்ளது.

    இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுகில்லை.

    ReplyDelete
  4. நண்பர் கொழந்த, இந்த கதைக்கும் பாலியல் கல்விக்கும் என்ன சம்பந்தம் :)) விருது வழங்கும்போது என்ன கஞ்சத்தனம் நோபலையே அனுப்பி வையுங்கள் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் எஸ்.கே, புரட்சிக்காரர் என்ன செய்வார் என்பது அவரிற்கே தெரியாது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ஜோஸ், முதல் ஷோவில் பீர் அபிஷேகம் செய்த முதல் நபர் நீங்கள்தான் என்று பட்சி கூறுகிறது. இதற்கே பீதியடைந்தால் :)) கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  5. மிக அருமையான பதிவு

    http://denimmohan.blogspot.com/

    ReplyDelete
  6. நண்பர் டெனிம், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete