Showing posts with label Piranha 3D. Show all posts
Showing posts with label Piranha 3D. Show all posts

Wednesday, September 8, 2010

பிரான்ஹாக்களின் ஸ்பிரிங் பிரேக்


சிறிய நிலநடுக்கம் ஒன்றின் காரணமாக விக்டோரியா ஏரியின் அடித்தரையின் ஒரு பகுதி பிளவுற, அந்த ஏரியின் தரையின் கீழ் இருந்த ஒரு நிலகீழ் ஏரியானது விக்டோரியா ஏரியுடன் இணைகிறது. இதனால் அந்த நிலத்தடி ஏரியினுள் இன்னமும் வாசம் செய்து கொண்டிருந்த, 2 மில்லியன் வருடங்களிற்கு முன்பு வாழ்ந்திருந்த, கொடிய பிரான்ஹா மீன்களின் மூதாதையர்களும் விக்டோரியா ஏரியினுள் குடிபுகுகிறார்கள். இந்தக் கொடிய ஆதி பிரான்ஹாக்களின் அகோரப் பசிக்கு விருந்து படைப்பதற்குத் தயாராக ஏரியில் காத்திருக்கின்றன ஸ்பிரிங் பிரேக் கேளிக்கை கொண்டாட்டத்தில் கலந்து கும்மாளமிட, விக்டோரியா ஏரியில் குழுமியிருக்கும் வனப்பான, வாளிப்பான, செழிப்பான அமெரிக்க இளம் சமுதாயத்தின் உடல்கள்…

1980களில் வெளியான பிரான்ஹா திரைப்படங்களின் ரீமேக் அல்ல பிரெஞ்சு இயக்குனர் Alexandre Aja இயக்கியிருக்கும் Piranha 3D. ஆனால் 1980களில் பல்கிப் பெருகிய திகில் காமெடி வகைத் திரைப்படங்களின் வரிசைக்கு களங்கம் விளைவிக்காதவாறு அவர் இத்திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.

piranha-3d-2010-14883-415851601 நிறைய பிகினிக்கள், எக்கச்சக்கமான சிலிக்கோன் முலைகள், லீட்டர் லீட்டராக போலி ரத்தம், 3D நுட்பம், படத்தின் நிஜ ஹீரோக்களான அட்டகாசமான கிராபிக்ஸ் ஆதி பிரான்ஹாக்கள், ஒரு வரிக்கதை, நீர் நிலைகளை குப்பைத் தொட்டிகள் ஆக்காதீர் என்ற ஒரு உபதேசம்!! இவற்றுடன் களம் இறங்கியிருக்கிறார் இயக்குனர்.

ஒரு பக்கம் காவல்துறையின் எச்சரிக்கையை சட்டை செய்யாது ஏரியில் கேளிக்கை கொண்டாட்டங்களில் ஈடுபடும் இளைஞர்களை, மாமிசப் பிரியர்களான பிரான்ஹாக்களிடமிருந்து காப்பாற்றுவதற்காக காவல்துறை போராடுகிறது. மறுபக்கம் போர்னோ படப்பிடிப்பிற்காக வந்த ஒரு குழுவின் படகு கொடிய பிரான்ஹாக்கள் நிறைந்த ஏரியில் மூழ்க ஆரம்பிக்கிறது.

இந்த இரு நிகழ்வுக்களிற்குமிடையில் மாறி, மாறி திரைக்கதையை நகர்த்துகிறார் இயக்குனர். போர்னோ படப்பிடிப்புக் குழுவினரின் படகில் லோகேஷன் காட்டச் செல்லும் அண்ணன், அவன் பேச்சைக் கேட்டு வீட்டில் இருக்காது படகில் மீன் பிடிக்க சென்று ஒரு தீவில் தனியே மாட்டிக்கொள்ளும் அவன் சிறுவயதுச் சகோதரங்கள், ஆபத்தில் மாட்டிக் கொண்ட தன் குழந்தைகளை மீட்க ஓடோடி வரும் ஷெரீப் அம்மா என திகில், காதல் சென்டிமெண்ட், அம்மா பிள்ளைகள் சகோதர செண்டிமெண்ட், பாலியல் காட்சிகள் என்பவற்றின் கலவையாக படம் நீந்துகிறது.

இதில் பாலியல் காட்சிகள் முதல் கொண்டு திகில் காட்சிகள் வரை பெரிதான தாக்கம் எதனையும் பதிவை எழுதும் முதிர்ந்த வாலிபர் மீது ஏற்படுத்தவில்லை. ஆங்காங்கே சில காட்சிகளில் சிரிக்க முடிகிறது. விறுவிறுப்பு பீர் குடித்தது போல் மிதமான உணர்வில் அலைகிறது. அற்புதமான போர்னோ நடிகையான Riely Steele, மற்றும் கவர்ச்சி சுனாமி Kelly Brook ஆகியோரின் மார்பகங்களையும், மன்மத மேடுகளையும், பிருஷ்டங்களையும் 3D யில் பார்ப்பது என்னவோ புதிய அனுபவம்தான். ஆனால் ஒளிப்பதிவு இன்னமும் தெளிவாக இருந்திருக்கலாம். கடற்கன்னிகள்போல் அவர்கள் ஏரி நீரினுள் ஆடும் ஆட்டம் செம காமெடி. இரு அற்புதமான அழகுகளின் திறமையை வீணே ஏரியில் தூக்கி கடாசியிருக்கிறார்கள்.

piranha-3d-2010-14883-1397131742 பிரான்ஹாக்கள் விதம்விதமாக மனித உடல்களை சுவைப்பதையும், பிரான்ஹாக்களின் தாக்குதலிலிருந்து தப்பி ஓட விழையும் மனிதர்களின் உடல்கள் குரூரமான முறைகளில் சிதைக்கப்படுவதையும் சூடாக ரத்தம் வழிய வழிய அழகாக காட்டியிருக்கிறார்கள். பிரான்ஹாக்கள் ஏரியில் குழுமியிருக்கும் இளைஞர்கூட்டத்தை தாக்கும் அந்தக் காட்சி ரத்தக் களரிக்கு சரியான உதாரணம்.

போர்னோ நடிகையின் மார்பகங்களில் பொதிந்திருந்த சிலிக்கோன்கள் பிரான்ஹாக்களின் அன்பான கவனிப்புக்களின் பின்னே நீரினுள் மேலெழுவதை காமெடி என்று ஏற்றுக் கொண்டாலும் துண்டிக்கப்பட்ட ஆணுறுப்பை பிரானாக்கள் விழுங்கி, கடித்து, குதறி, சப்பி, வெளியே காறி உமிழ்வது ஆண்களின் அடிவயிற்றை டச் பண்ணுகிறது. அதுவும் 3Dயில். இக்காட்சியை கைதட்டி ரசித்து மகிழ்ந்த பெண் ரசிகைகளிற்கு என்ன தண்டனை தரலாம்.[ பிரான்ஹா தொட்டிக்குள் இறக்கலாமா ] ஆண்களின் மனதை நோகடிப்பதற்கு ஒரு எல்லையே இல்லையா.

படத்தில் உண்மையிலேயே கொட்டம் அடிப்பவர்கள் ஆதி பிரான்ஹாக்கள். அவலட்சணமான அழகில் அவை அடிக்கும் கூத்து அருமை. ஒரு மனிதனைக்கூட மிச்சம் விடாமல் கடிக்க துடிக்கும் பிரான்ஹாக்களின் வேகம், அசைவு, நளினம், முகபாவம் என்பன ரசிக்க வைக்கின்றன. உண்மையில் இது பிரான்ஹாக்களின் ஸ்பிரிங் பிரேக் என்றால் அது மிகையல்ல. சில தருணங்களில் வேகமாக நீந்தி வந்து விட்டு அவை அடிக்கும் அந்த பிரேக், கூல்.

பிரான்ஹாக்களை அழித்தொழிக்கும் முயற்சிக்கு இயக்குனர் அதிகம் சிரமப்பட்டிருக்கவில்லை. எனவே உச்சக்கட்டக் காட்சிகள் சற்று ஏமாற்றத்தையே தருகின்றன. மேலும் இரண்டாம் பாகத்திற்கு அச்சாரம் போட்டுத்தான் திரைப்படத்தை நிறைவு செய்கிறார்கள். இவ்வகையான திரைப்படங்களில் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக நல்ல ஆச்சர்யங்கள் கிடைப்பதுண்டு. துரதிர்ஷ்ட்டவசமாக பிரான்ஹா 3D யில் முலைகளையும், பிருஷ்டங்களையும், பிரான்ஹாக்களையும், ரத்தத்தையும் தவிர பாராட்டிக் கொள்ள ஏதுமில்லை. [*]

ட்ரெயிலர்