Showing posts with label தொடர். Show all posts
Showing posts with label தொடர். Show all posts

Saturday, August 21, 2010

ரேப் ட்ராகன் - 13




வேங்கையாட்டம்

ஸ்னான அறையை விட்டு மழையில் நனைந்த சிங்கம்போல் கோபத்துடன் வெளியேறிய புரட்சிக் காளை ரஃபிக், தன் அறைக்குள் நுழைந்து, தன் உடலை நன்கு துவட்டி முடித்து, ஆடைகளை அணிய ஆரம்பித்தான். ரஃபிக்கின் விழிகள் அறையினுள் ஒரு வட்டம் போட்டன.

ரஃபிக்கின் சொகுசு அறையானது அங்கு தங்கக்கூடிய பலவகையான வாடிக்கையாளர்களின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்திருந்தது. மது வகைகள், பழ வர்க்கங்கள், மேலும் ரஃபிகிற்கு தெரிந்திராத பலவகைப் பொருட்களால் அந்த அறை நிரம்பியிருந்தது. ஆனால் வாடிக்கையாளர்கள் தங்கும் அறையில் ஏன் விலங்குகளும், சவுக்குகளும் இடம்பெற்றிருக்கின்றன என்பதை ரஃபிக்கால் புரிந்து கொள்ள முடியவில்லை.

புரட்சி நகரிலிருந்து குந்தவியை கடத்திச் செல்வதற்காக வரும் வீரர்களிற்காக இந்த சொகுசு விடுதியில் சில காலம் தான் தங்கியிருக்க வேண்டும் என்பது அவன் எண்ணத்தில் அமிலமாய் இனித்தது. இரு பருவச்சிட்டுக்களினதும் வினோதமான போக்கை அவனால் தாங்கிக் கொள்ள இயலாது இருந்தது. ரஃபிக்கின் உடலின் ஒவ்வொரு துளையிலுமிருந்து புரட்சி தீவிரத்துடன் சுவாசித்துக் கொண்டிருந்தது.

குந்தவியை புரட்சி நகர வீரர்கள் கையில் ஒப்படைத்துவிட்டால் தன் கடமை நிறைவேறிற்று என்று தன் மனதில்கூறி பெருமூச்சு விட்டான் ரஃபிக். குத்து நகர் சிறையில் திருக்கை வால் சவுக்கடி பெற்றுக் கொண்டிருக்கும் தொரசிங்கம், ராவணன், வேலாயுதம் போன்ற புரட்சிக்காரர்களை விடுவிப்பதற்காக இளவரசி குந்தவி பயன்படுவாள் என்பதை ரஃபிக் நன்கறிந்திருந்தான். இருப்பினும் இளவரசி குந்தவியுடன் தன் கவிதைகளை அவன் பகிர்ந்து சுவைத்த நாட்கள் அவன் மனநதியில் அலைகளாக சுழன்றன.

ஹா… என்ன இனிமையான நாட்கள் அவை! மன்னன் குத்தலகேசி மட்டும் குறுக்கே வந்திராவிடில்…. இவ்வாறாக சுழன்ற தன் எண்ணங்களை ரஃபிக் சிரமத்துடன் கட்டுப்படுத்தினான். புரட்சியை தவிர வேறு எதுவுமே அவன் சிந்தனைகளிலும், எண்ணங்களிலும் நுழைந்துவிடக்கூடாது என்பதில் அவன் பிடிவாதமாக இருந்தான். காதல்கூட ஒருவகையில் புரட்சிதான் என்பதை ஏற்க மறுத்தது அவன் உள்ளம். அறையிலிருந்த சாளரத்தின் வழியாக தன் கண்களை செலுத்தினான் ரஃபிக்.

இந்தவேளையில் ரஃபிக்கின் அறைக்குள் நீரில் நனைந்த புஷ்பமாக உள்ளே நுழைந்தாள் இளவரசி குந்தவி. இளவரசியின் பின்னால் தன் கவர்ச்சி உடலை நளினமாக அசைத்து நடை பயின்று வந்த மராக்கோ மாதுளை டேனி, இளவரசியின் கண்சிமிட்டல்களை புரிந்து கொண்டவளாக ரஃபிக்கின் அறையின் கதவை இழுத்து மூடி அதன் தாழ்ப்பாளையும் போட்டாள்.

வான் மேகம் பூமியை தன் துளிகளால் நனைக்கும். இதைக் கண்ட மயில்கள் தோகை விரித்து ஆடும். செடிகளில் பூத்திருந்த புஷ்பங்கள் வான் துளிகளின் ஸ்பரிசத்தில் தம்முடல் வியர்க்கும். இவ்வாறு உடல் வியர்த்த அழகிய மலர்களாக தன் அறைக்குள் நுழைந்த பெண்களைக் கண்ட ரஃபிக்கின் புருவங்கள் உயர்ந்தன. மேலும் தன் அறையின் கதவுகளை டேனி தாழ்பாளிட்டதைக் கண்டு வியப்புற்ற புரட்சிக்காரன்… பெண்ணே ஏன் என் அறைக் கதவுகளை தாழிட்டாய்… என்று ஒரு கேள்வியையும் ஆடையில்லா மலரான டேனியை நோக்கி வீசினான்.

- மான் ஓடிவிடக்கூடாது அல்லவா…. தன் மயக்கும் விழிகளால் ரஃபிக்கை பார்த்தபடியே பதில் தந்தாள் இளவரசி குந்தவி.

- மானா!?.. அறையைச் சுற்றி தன் விழிகளை நாடகபாணியில் சுழலவிட்ட புரட்சிக்காரன் ரஃபிக்… இங்கு மான்கள் ஏதும் இருப்பதாக என் கண்களிற்கு தெரியவில்லையே இளவரசி என்றான் கேலியாக.

- மான் இங்கு இருக்கிறதா இல்லையா என்பது பார்ப்பவர்களின் பார்வையையும், பசியையும் பொறுத்திருக்கிறது.. அறையின் கதவின்மீது தன் முதுகைச் சாய்த்து, தன் பருவ அழகுகளை ஒய்யாரமாக வளைத்து செக்ஸி போஸ் தந்தவாறே நின்றிருந்த டேனியின் தேனிதழ்களிலிருந்து இந்தச் சொற்கள் மென்மையாக வெளிப்பட்டன.

- பசி கொண்ட பார்வையாளர்கள் இங்கு யாரோ?… ரஃபிக்கின் குரலில் கிண்டல் குறைந்திருக்கவில்லை.

- நாங்கள்… குந்தவி, டேனி இருவரும் ரஃபிக்கின் வினாவிற்கு ஒருசேரப் பதிலளித்தார்கள்.

- ஹாஹாஹாஆஆ.. உங்கள் கண்களிற்கு நான் மானாகக் காட்சியளிக்கிறேனா! வேடிக்கை, வினோதம், விசித்திரம். நீங்கள் அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்களின் ஒளடதங்களை சுவைத்து விட்டீர்களா என்ன? இதைக்கூறிய ரஃபிக் பருவச்சிட்டுக்களை நோக்கி ஒரு புன்னகையையும் வீசினான்.

- இல்லை, நாங்கள் இன்னமும் சுவைக்கவில்லை. ஆனால்.. என்று இழுத்தாள் இளவரசி குந்தவி.

- ஆனால்.. என்ன? ரஃபிக் பொறுமையிழக்க ஆரம்பித்தான்.

- ஆனால் இனிமேல்தான் சுவைக்கப்போகிறோம். ம்ம்ம்ம்ம்.. யமி யமி யம் என்று கிசுகிசுப்பாக பதிலளித்த மரக்கோ மாதுளை டேனி, தன் உதடுகளை அவள் நாக்கினால் தடவினாள். அந்த நாக்கின் அசைவு புரட்சிக்காரனின் அடிவயிற்றில் தேள் ஒன்றை ஊரச்செய்தது.

- என்ன உளறுகிறீர்கள் நீங்கள்.. என்று கோபமாக துடித்தான் ரஃபிக்.

- உளறவில்லை புரட்சிக்காரரே, உறுதியுடன் சொல்கிறோம். நீர் இங்கு மான். நாங்கள் வேங்கைகள். வெறிகொண்ட, பசிகொண்ட பெண் வேங்கைகள். பசிகொண்ட பெண்வேங்கை என்ன செய்யும் தெரியுமா புரட்சிக்காரரே..

- புரட்சிக் கவரிமானின் கூரிய கொம்புகளிற்கு தலைப்பாகையாகும்… குந்தவியிடமிருந்து கேள்வி வந்த வேகத்திலேயே பதிலை வீசினான் ரஃபிக்.

- இல்லை.. புரட்சிக் கவரிமானின் சுவையான உடலை, அடித்து, கிழித்து, சிதைத்து, புசித்து தன் பசியாறும்.. தன் கீழுதடுகளை உதடுகளை பற்களால் கவ்வியபடியே கதவிலிருந்து முன்னே நகர்ந்தாள் டேனி.

ஏதோ விபரீதம் அரங்கேறப்போகிறது என்பது ரஃபிக்கிற்கு தெளிவாக ஆரம்பித்தது. ஹாஆ… இந்த இரு பெண்களும் என்னை என்ன செய்து விட முடியும். மலர்கள் மோதியா மலைக்கு வலிக்கப் போகிறது என்று எண்ணிய அவன்…

- பெண்களே, நீங்கள் நெருப்புடன் விளையாட விரும்புகிறீர்கள் என்றான்.

- நெருப்பு, நெருப்புடன்தான் விளையாட வேண்டும், நீருடன் அல்ல புரட்சிக்காரரே என்று வேகமாகக்கூறிய குந்தவி, ரஃபிக்கை நோக்கிப் பெண்வேங்கைபோல் பாய்ந்தாள். மராக்கோ மாதுளை டேனி, பசிகொண்ட விலங்குபோல் பின்புறமாக ரஃபிக்கை நெருங்கினாள். ரஃபிக்கின் மேல் பாய்ந்த குந்தவி, அவனது மேலங்கியை தன் கைகளினால் கிழித்து எறிந்தாள். ரஃபிக்கின் பாறைபோன்ற மார்புகளை குந்தவியின் விரல் நகங்கள் கீறின.

- வேங்கையாட்டம் ஆரம்பம் புரட்சிக்காரரே.. குந்தவியின் உதடுகள் ரஃபிக்கின் காதில் முணுமுணுத்தன. அச்சொற்களின் அனல் ரஃபிக்கின் உடலை தகிக்க வைத்தது.

[ஓடி விளையாடு பாப்பா...]

Sunday, August 1, 2010

ரேப் ட்ராகன் - 12


புரட்சி கற்சிலை

குளோபல் ஹீரோ ரஃபிக் சாகஸம்!

வெதுவெதுப்பான நீரும், நானாவித மலர் இதழ்களும் கலந்திருந்த குளியல் தொட்டிக்குள், தன் உடலை இருத்தி, காட்டுப்பூனையே பொறாமை கொள்ளும் விழிகளை மூடி, நீரின் ஸ்பரிசத்தையும் மறந்து, புரட்சி மாதாவை தன் மனக் கண்ணின் மத்திய புள்ளியில் நிறுத்திக் கொண்டிருந்தான் ரஃபிக். அவன் உள்ளம் புரட்சி, விடுதலை, சுதந்திரம் போன்ற வார்த்தைகளை மெளனமாக உச்சாடனம் செய்து கொண்டிருந்தது.

நறுமண சுகந்தத்தால் தழுவப்பட்ட அந்தக் குளியல் அறையில் புரட்சிக்காரன் ரஃபிக்கிற்கு தன் கனிவான சேவைகளை வழங்கிட வேண்டி, அந்த சொகுசு விடுதியின் பணிப்பெண், மராக்கோ மாதுளை டேனியும் ஆடைகள் ஏதும் அற்ற நிலையில் குளியல் அறையின் ஒரு ஓரமாக நின்றிருந்தாள்.

- ஹும்ம்ம்.. இவ்வளவு நேரமாக கண்களை மூடி இருக்கிறாரே, இவர் என்ன விஸ்வாமித்திரரின் சீஷ்யரா… என்ற கேள்வியையும் மராக்கோ மாதுளை டேனியின் இளமனம் எழுப்பவே செய்தது. இதனால் அவள் இள மாதுளைகள் இக்கேள்வியை தாமே ரஃபிக்கிடம் கேட்டு விடுபவைபோல் சற்று நிமிர்ந்து நிற்கவும் முயன்றன. புரட்சியை மணந்துவிட்டவனிற்கு வேறு பெண்கள் இனிப்பதில்லை என்பது அந்த இளம் கனிக்கு தெரியாமல் போனதில் ஆச்சர்யம் ஏதுமில்லையல்லவா.

இவ்வாறான கேள்வியை தன் மனதில் எழுப்பிக் கொண்டிருந்த இளமாதுளை டேனியின் கண்களில்தான் குளியல் அறையின் திரைச்சீலையை விலக்கிக் கொண்டு உள்ளே நுழைந்த குத்து நகரின் அழகுச்சிலை குந்தவி முதலில் பட்டாள்.

டேனியை முன்னர் கவனிக்கத்தவறிய குந்தவி, குளியல் அறையின் ஒரு ஓரத்தில் ரஃபிக்கின் மதயானை உடலை பிடித்து, மசித்து விடுவதற்காக எண்ணெய் வகையறாக்களை தயார் செய்துகொண்டிருந்த டேனியைப் பார்த்தாள், சுட்ட பொன்னின் மீது மலைத்தேனை ஊற்றிய நிறத்தில் பளபளத்த டேனியின் உடலைக் கண்டாள், சிலையொன்றின் அங்கங்களைப்போல் கச்சிதமாக திரண்டிருந்த டேனியின் இளமை அழகுகளைக் கண்டாள். குந்தவியின் மனதில் பொறாமை எழுந்தாலும் தன் கண்களில் குறும்பையும், சினத்தையும் வரவழைத்துக் கொண்ட அவள்.. சிவபூஜைக்குள் நுழைந்து விட்டேன் போலிருக்கிறது என்றாள்.

dany verissimo அமேசான் காடுகளில் வாழும் அழகிய கிளியின் குரல்போல் குளியல் அறைக்குள் ஒலித்த குந்தவியின் குரலைக் கேட்ட ரஃபிக், தன் தியானம் கலைந்து கண்களைத் திறந்தான். குளியல் அறையின் வாசலிற்கருகில் ஒய்யாரமாக நின்ற குந்தவியைப் பார்த்த அவன்… குளியல் அறையில் பூஜை செய்ய மாட்டார்கள் இளவரசி என்றான்.

- அது பக்தர்களைப் பொறுத்தது வீரக் கவியே என்ற குந்தவியின் பதிலில் ஏளனம் தெறித்தது. மேலும் அழகான பக்தைகள் பூஜையில் உதவுவதற்கு முன்வரும்போது பூஜை களைகட்டும், பரவசம் பொங்கும்… பொன்னிறச் சிலையாக நின்ற டேனியைப் பார்த்தவாறே இதைக்கூறிய குந்தவி ரஃபிக் அமர்ந்திருந்த குளியல் தொட்டியை நெருங்கவும் செய்தாள்.

- குந்தவி, நான் இப்போது கவிஞன் அல்ல, புரட்சிக்காரன். நான் மலர்களின் அழகைப் பாடுவதில்லை. வீரமரணத்தின் மான்பை இசைப்பவன். விடுதலை என்பது என் பேச்சு, புரட்சிதான் என் மூச்சு.. இவ்வாறு பதிலளித்த ரஃபிக், தன் விரல்களால் டேனியை நோக்கி சைகை செய்தான். ரஃபிக்கின் விரல்களை கடித்து தின்று விடலாமா என்று ஏங்கியவாறே ரஃபிக்கின் உடலைத் துவட்டிவிடுவதற்காக ஒரு துணியை எடுத்துக்கொண்டு அவன் அமர்ந்திருந்த குளியல் தொட்டியை நெருங்கினாள் டேனி.

- உங்கள் செயல்களைப் பார்த்தாலே தெரிகிறது நீங்கள் புரட்சிக்காரர் என்பது. ஆம் உங்கள் குறுவாளுடன் குளிக்கிறீர்களே அதுவும் புரட்சியில் அடக்கமா என வினவிய குந்தவி தன் விரல்களால் குறுவாளைச் சுட்டிக் காட்டி கலகலவென நகைத்தாள். மின்னல் நீரில் பாய்ந்தால்போல் அகன்றிருந்த தன் கால்களை விரைவாக ஒடுக்கினான் புரட்சிக்காரன் ரஃபிக். தன் கண்களில் அந்தக் குறுவாள் படாவிடிலும் இன்னமும் சில வினாடிகளில் தன் கைகளால் அதனை தொட்டு கூர்பார்க்கும் பாக்யம் கிடைக்கப்போகிறதே என எண்ணி உருகினாள் டேனி.

குந்தவியின் சிரிப்பும், மராக்கோ மாதுளை டேனியின் வித்தியாசமான பார்வையும் புரட்சிக்காரன் ரஃபிக்கிற்கு சற்று எரிச்சலை தரவே என்ன பெண்களோ என்று தன் மனதில் எண்ணியவாறே குளியல் தொட்டியிலிருந்து எழுந்து நின்றான். நீர்த்திவலைகள் தழுவி ஓடி வழுகி விழுந்த ரஃபிகின் உடல் மீது லாவகமாக துணியைப் போர்த்திய டேனி, ரஃபிக்கின் வைர உடலை துவட்டிவிட ஆரம்பித்தாள். ரஃபிக்கின் மேடு பள்ளங்களில் அவளது அனுபவம் பெற்ற விரல்கள் கவிதையொன்றின் படிக்கப்படா வரிகள்போல் ஊர்ந்தன. மேலும் குறிப்பிட்ட ஒரு மேட்டை ஆதுரத்துடன் தடவிக் கொடுக்கவும் செய்தன. மேட்டின் உயரத்தை அளக்கவும் முற்பட்டன. புரட்சி மாதாவிற்கு பிடிக்காத இவ்வகையான தொடுதல்களை மேலும் நீட்ட விரும்பாத ரஃபிக்.. டேனி போதும் நிறுத்து உன் துவட்டலை, இனி நானே துவட்டிக் கொள்கிறேன் என்றவாறே குளியல் தொட்டியிலிருந்து வெளியேறினான்.

- துவட்டி விடுவதற்கு என் கரங்களை அனுமதிக்காமல், உங்கள் கரங்களை நம்பும் நீங்கள் ஒரு கல்நெஞ்சர் என்று கூறிய டேனியின் கண்களில் கண்ணீர் அரும்பு பூத்தது. புரட்சி..புரட்சி..என்று உங்கள் உங்கள் உடல், மனம், சிந்தனை யாவும் கல்லாகி விட்டன. நீங்கள் ஒரு புரட்சிக் கற்சிலை என விம்மினாள் டேனி.

1221649816 - உடல், உள்ளம் மட்டுமல்ல புரட்சிக்காரரிற்கு இன்னொன்றும் கல்லாகி விட்டது எனக்கூறிய குந்தவியின் விரல்கள், ரஃபிக் இடுப்பைச் சுற்றிக் கட்டியிருந்த துணியை சுட்டிக்காட்டவே தன் ஏக்கத்தையும் மறந்து கலகலவென சிரிக்க ஆரம்பித்தாள் அழகி டேனி. இளவரசி குந்தவியும் அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டாள். அப்போது அந்தக் குளியல் அறை கிளிகளின் சிரிப்புகளால் தழுவப்படும் பாக்யம் பெற்றதாகியது.

அந்த இரு பருவசிட்டுக்களின் சிரிப்பொலிகளும் புரட்சிமாதாவின் பக்தனாகிய ரஃபிக்கின் காதுகளில் அக்கினி திராவகம்போல் பாயவே, கோபத்துடன் வேகமாக குளியல் அறையை விட்டு வெளியேறினான் அவன்.

- நீங்களும் உங்கள் உடலைக் கழுவிக் கொள்கிறீர்களா இளவரசி… தன் அழகிய விழிகளால் குந்தவியை பார்த்தவாறே வினவினாள் டேனி.

- ஆம், நன்றாகக் கழுவிக் கொள்ளப் போகிறேன். ஏனெனில் இந்த நீராடலின் பின் ஒரு பெரிய பூஜை நடக்கவிருக்கிறது. அப்பூஜையில் உன் உதவியும் எனக்குத் தேவை பெண்ணே என்றவாறே தன் உடைகளை களைந்த குந்தவி, தன் பூரண அழகுகளுடன் நீர் தொட்டியினுள் இறங்கினாள். குந்தவியின் அசர அடிக்கும் மேனியழகு டேனியின் உணர்வுகளை அலைபாயச் செய்தது.

- டேனி, நான் புரட்சிக்காரி அல்ல எனவே உன் வித்தைகளை தயங்காது நீ என்னிடம் காட்டு என்றவாறே தன் பொன்னுடலை நீரினுள் இருத்தினாள் குந்தவி. குளியல் தொட்டியினுள் திடீரென இரு தாமரைகள் பூத்தன. புதிதாய்ப் பூத்த அந்த தாமரைகளைச் சுற்றி, நீரில் மிதந்த மலரிதழ்கள் மெதுவாக நடனமாடின.

குளியல் தொட்டியினுள் இருந்த குந்தவியை நெருங்கிய டேனியின் காதுக்குள் குந்தவி ரகசியமாக ஏதோ சொன்னாள். அதைக் கேட்ட மராக்கோ மாதுளையின் முகம் குப்பெனச் சிவந்தது. டேனியின் விரல்கள் தாமரைகளை நாடி நீந்த ஆரம்பித்தன. புரட்சிமாதாவின் பக்தனான ரஃபிக்கின் சோதனை காலமும் அக்குளியல் தொட்டியில் தாமரைகளுடன் நீராட ஆரம்பித்தது.

[ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மி கொட்டுங்களே]

[தொடரில் இடம்பிடித்திருக்கும் படங்கள் நெய்க்காரான்பட்டி குளோபல் ஹீரோ ரஃபிக் ரசிகர் மன்றத்தலைவர் முனியாண்டி அவர்களின் விருப்பத்தினை பூர்த்தி செய்யும் வகையில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.]

Thursday, July 15, 2010

ரேப் ட்ராகன் - 11


ஸ்னானத் தொட்டி இந்திரன்

லத்பானிய இலக்கியங்களிற்கு சவால்விடும் வகையில் அமைந்திருக்கும் இத்தொடர் வழியாக, வாசக அன்பர்களிற்கெல்லாம் நன்கு அறிமுகமாகிவிட்ட குத்து நகரின் இளவரசியை, அவள் பள்ளியறைக்குள் புகுந்து, அலுங்காமல், நலுங்காமல் கவர்ந்து சென்ற புரட்சிக்காரன் ரஃபிக் என்ன ஆனான்? அவன் முரட்டுக் கரங்களில் மாட்டிக் கொண்ட அழகுப் பைங்கிளி குந்தவிக்கு என்ன நடந்தது? என்ற கேள்விகளை இந்தப் பண்பாடு வழுவாத தொடரின் தீவிர வாசக அன்பர்கள் தங்கள் பரிசுத்தமான மனங்களில் எழுப்பியிருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது.

ஆனால் பகல் இருந்தால் இரவும் இருக்கும் என்பதைப்போல் சில துஷ்ட ஆன்மாக்கள், குந்தவியிடம் மாட்டிக்கொண்ட ரஃபிக்கின் நிலை என்னவாகிற்றோ என்பதை அறிய ஆவலாக இருந்ததையும், இதையே சாக்காக வைத்து, இந்த துர் ஆன்மாக்களின் தலைமை அலுவலகம், ரஃபிக்கின் நிலை குறித்த உண்மைகளை உலகின் கண்களிற்கு இட்டு வருவதற்காக பல ஊழல்கள் நிறைந்த தேர்தலை நடாத்தியதையும் பார்க்கும்போது, என்ன மாதிரியான ஒரு லோகத்தில் நாம் ஜீவிக்கிறோம் எனும் கேள்வி எம் முன் பூதாகரமாக எழவே செய்கிறது.

எனவே மேலும் சொற்களை வீணாக்காது, அழகுச்சிலை குந்தவியும், புரட்சிக்காரன் ரஃபிக்கும் தற்காலிகமாக தங்கியிருக்கும் அந்த சொகுசு விடுதியை நோக்கி எம் மன ஓடங்களில் பயணிப்போம் நண்பர்களே.

செந்நிற நாரைகளின் சிறகுகளும், பீனிக்ஸ் பறவையின் வயிற்றுப்பகுதியின் மென்சிறகுகளாலும் கலந்து உருவாக்கப்பட்டிருந்த சொகுசுவிடுதியின் பஞ்சணையில், அழகு மலராக மயங்கிக் கிடந்த குத்து நகர இளவரசி, மெல்லத் தன் கயல் விழிகளைத் திறந்தாள். தன் உடல் மிகவும் அயர்ச்சியுற்றிருப்பதை உணர்ந்த அவள், இரவு விசேட பூசைகள் எதுவும் நடக்கவில்லையே என தன் மன எண்ணங்களை ஓட விட்டவாறே பஞ்சணையில் சிறிது நேரம் கிடந்து தன்னை நிதானித்துக் கொண்டாள். இது தன் பள்ளியறை அல்ல என்பதை அவள் ஊகித்துக் கொண்டபோது அந்த உண்மை அவளிற்கு ஆச்சர்யத்தை வரவழைத்தது.

பஞ்சணையில் கிடந்தவாறே இளமை நுரைக்கும் தன் உடலை, நளினமாக அப்படியும், இப்படியுமாக வளைத்து சோம்பல் முறித்தாள் இளவரசி குந்தவி. பஞ்சணை, தான் செய்யப் பெற்ற பாக்கியத்தை அந்தக்கணம் பெற்றதால் மெதுவாக முனகியது. தான் இருக்கும் அறையை தன் அழகிய விழிகளால் சற்று நோட்டம் விட்டாள் குந்தவி. தரமான சொகுசு விடுதியொன்றின் அறையில் அவள் இருப்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. இருப்பினும் குத்து நகர அந்தப்புர பள்ளியறையிலிருந்து அவள் எவ்வாறு இங்கு வந்து சேர்ந்தாள் என்பது அவளிற்கு புதிராகவே இருந்தது. மேலும் இவ்வாறான சொகுசு விடுதியை தேர்ந்தெடுப்பதில் தேர்ந்த திறமை பெற்றிருக்கும் கதாசிரியரின் அனுபவத்தையும் அவளால் வியக்காமல் இருக்க முடியவில்லை.

மென்மையான பஞ்சணையில் வளர்த்திவிட்ட தங்க வாழை எனக் கிடந்த தன் மலர் உடலை, அழகாக வழுக்கி, தரையில் கால் பதித்து நின்றாள் அழகுக் குந்தவி. அறையின் ஒரு பக்கமாக அமைந்திருந்த ஸ்னான அறையிலிருந்து வெளிவந்த வாசப் பொடிகளின் நறுமணம் அவள் நாசியில் தயக்கமின்றி நுழைந்தது. அந்த நறுமணத்தோடு கலந்திருந்த ஆண்வாசம் அவள் உடலில் ஒரு பசியை மெதுவாக தட்டி எழுப்ப தொடங்கியது. தன் பாதங்களால் மெதுவான அடிகள் எடுத்து வைத்து மெல்ல ஸ்னான அறையை நெருங்கினாள் இளவரசி குந்தவி. ஸ்னான அறையையும், பள்ளி அறையையும் பிரித்த மெல்லிய நூலிழை திரைச்சீலையை, தன் பட்டு விரல்களால் மெல்ல விலக்கிய அந்த அழகுச்சிலை, ஸ்னான அறையினுள் தன் மதன விழிகளை மெல்ல சுழலவும் விட்டாள்.

ரோஜா, செங்கமலம், அல்லி, தாழை, நீர் மல்லிகை போன்ற மலர்களின் இதழ்கள் வெதுவெதுப்பான நீரின்மேல் மிதக்க, பல நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்ட நானாவித வாசனைப்பொடிகள் நீரில் கலக்கப்பட்டதால் அவை உருவாக்கிய சுகந்த வாசம் அந்த ஸ்னான அறையை நிரப்ப, வானுலக அதிபதி இந்திரனை ஒத்த அழகுடன் ஸ்னான தொட்டிக்குள் அமர்ந்திருந்தான் புரட்சிக்காரன் ரஃபிக். சிலை போன்ற அவன் மேனியில் நீர்த்திவலைகளும், மலரிதழ்களும் கோலம் போட்டிருந்தன. ரஃபிக் தன் கண்களை மூடி, புரட்சிமாதாவை ஸ்னான தொட்டியில் தியானித்தவாறு இருந்தான். அவன் தியானம் விஸ்வாமித்ரரின் தவம்போல் ஒளிர்ந்தது.

ஸ்னான தொட்டிக்குள் கண்களை மூடி தேவலோக மன்மதன்போல் அமர்ந்திருந்த ரஃபிக்கை கண்டு கொண்ட குந்தவியின் மார்புகள் சற்று விம்மித் தணிந்தன. அவள் மூச்சு சூடாக வெளியேறியது. அவள் உடலில் ஒரு வேகம் படர ஆரம்பித்தது. திரைச்சீலையை ஒருபுறம் தள்ளி விலக்கியவாறே ஸ்னான அறைக்குள் தன் பாதங்களை எடுத்து வைத்தாள் குத்து நகரின் இளவரசி குந்தவி.

[ ஸ்னானத் தொட்டி இந்திரன் தவம் கலையுமா? ]


ரேப் ட்ராகன் ஹிட்ஸ் லிஸ்ட்: இலுமினாட்டி கிளப் சாங்

கவனிக்க வேண்டியவை: .26ல் வரும் ஹிப் மூவ்/ 1.29ல் கொரிய அழகி கிம்மின் பேக் மூவ்/ 1.40ல் இலுமினாட்டியின் செஸ்ட் மூவ்/ 3.22-3.36 வரை இலுமினாட்டியின் நான்ஸ்டாப் டான்ஸ்/ 4.25ல் இருந்து பாடலின் இறுதிவரை இலுமினாட்டியின் செக்ஸி டான்ஸ் மூவ் :)))) அம்மூசு மாமே அம்மூசு

Monday, July 5, 2010

ரேப் ட்ராகன் - 10


ஸ்லோமோஷன் க்ரீன் ஐஸ் நாவல்பழம்!

சீன அழகி ஸிங்ஸிங்கின் இன்ப விடுதியில், நாசக்குத்து நாவலனின் கேள்வி நாராசமாக ஒலித்து அடங்கியபோது அங்கு குடிபுகுந்த அமைதி அந்த இன்ப விடுதிக்கு பொருத்தமற்ற ஒன்றாக இருந்தது.

மேலும் நாவலனின் புரவி கேசரி, இறுதிவரை அவனிற்கு பிடிகொடாது டிமிக்கி நல்கியதும், இளவரசன் இலுமி தன் ரதத்தின் பக்கவாட்டு தட்டில்கூட நாவலன் தொங்கியவாறு பயணித்து வருவதற்கு அனுமதிக்காததும், இலுமியின் ரதம் கிளப்பிய தூசியைப் பருகியவாறே ரதத்தின் பின்னால் வேகமாக இன்ப விடுதி வரை ஓடி வந்ததும், இன்ப விடுதியின் முன்னால் இருந்த இன்றைய ஸ்பெஷல்- மெகான்நரி முழுமுங்கு அட்டையில் இருந்த அழகிய சிட்டின் யெளவனத்தில் மயங்கிய இலுமினாட்டி, தன்னிடம் பொறுப்புக்களை தட்டி விட்டு முழுமுங்கு முங்கச் சென்றதும் நாவலனின் குரலில் வழமைக்கு மீறிய அனலைக் கலந்திருந்தன.

நாவலனின் அனல் குரல் கேள்விக்கு விடையளிக்க முயன்ற சீனன் ஷங்லிங்கை, பச்சைக் கண்ணன் தன் விழிகளால் தடுத்தான். மேலும் தன் குரலில் ஒரு பவ்யத்தை வரவழைத்துக்கொண்ட பச்சைக் கண்ணன்,

- கேள்வி கேட்கும் வீரர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ளலாமா? என்று பதிலுக்கு ஒரு கேள்வியை நாவலனிடம் வீசினான்.

- ஹாஹாஹா…. என்ற ஒரு முரட்டுச் சிரிப்பை உதிர்த்த நாவலன்…. நாவலன், நாசக்குத்து நாவலன் என்று தன் பெயரை ஸ்டைலாக உச்சரித்துவிட்டு கடகடவென நகைத்தான்.

- வினோதமான பெயர்தான் உங்களிற்கு வீரரே என்றான் பச்சைக் கண்ணன்.

- என் குத்தும் வினோதமாகவே இருக்கும் எனப் பதில் அளித்த நாவலன் தன் கரங்களை வேகமாக காற்றில் செலுத்தினான், அடிவாங்கிய காற்று பச்சைக் கண்ணனின் கேசத்தினுள் தஞ்சம் புக முயன்றது.

- அப்படியா! வீரரே எங்கே, என்னைக் குத்துங்கள் பார்க்கலாம் என்று கூறியவாறே நாவலனை நெருங்கி சில எட்டுக்கள் எடுத்து வைத்தான் பச்சைக் கண்ணன்.

பச்சைக் கண்ணன் இலகுவாக ஆறு அடி உயரத்தை தாண்டியிருந்தான், திடமான அகன்ற தோள்கள், திமிறிய புஜங்கள், இறுகிய தசைகள் தெறித்த கால்கள், தீர்க்கமான அசைவு; இந்தக் கலவையுடன் நாவலனை அண்மித்த பச்சைக் கண் அசுரன், தன் கையிலிருந்த மதுக் கிண்ணத்திலிருந்து அழகாக ஒரு மிடறு இழுத்தான். பிரெஞ்சு ஒயின் அவன் வாய்க்குள் அமிர்தமாக அசைந்தது. ஒயினின் சுவையில் ஒரு கணம் தன்னையிழந்த பச்சைக் கண்ணன்…வீரனே, உன்னை என்னைக் குத்தச் சொன்னேன் என்றான்.

இதைக்கேட்ட நாவலன், வலிய வந்து தன்னிடம் நாவல் குத்தை கேட்கும் பச்சைக் கண்ணனை பரிதாபமாகப் பார்த்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நாவலனின் கரங்கள் இயங்கின. அவன் இரு கரங்களும் வெறி கொண்ட இடிகளாக பச்சைக் கண்ணனின் முகத்தை நோக்கிப் பாய்ந்தன. பின்பு அங்கு நடந்தவற்றை கொஞ்சம் ஸ்லோமோஷனில் பார்க்கலாம். ஸ்டார்ட் ஸ்லோமோஷன்…

நாவலனின் கரங்கள் இயங்க ஆரம்பித்ததை படுவேகமாக அவதானித்து விட்ட பச்சைக் கண்ணன் வேகமாக செயல்பட்டான். தன் கையிலிருந்த மதுக் கிண்ணத்தை மேலே எறிந்தான். யாரோ கயிறால் கட்டி மேலே இழுத்தாற்போல் அக்கிண்ணமும் ஒரு துளி ஒயினைக்கூட சிந்திவிடாது நேர்கோட்டில் மேலே உயர்ந்தது. தன் முகத்தை நோக்கி வந்த நாவலனின் கரங்களிலிருந்து சாமர்த்தியமாக விலகிய பச்சைக் கண்ணன், அதே வேகத்தில் தன் கால்கள் இரண்டையும் அகலவிரித்து நிலத்தில் வீழ்ந்தான். அதே நேரத்தில் உறுதியான அவன் இரு முஷ்டிகளும் நாவலனின் கச்சையிலிருந்த நாவல் பழச்சின்னத்தின் மேல் மின்னலாக வெடித்தன..

- யம்மாஅம்மாஆஆஆஅஹோஓஓஓ… என்றலறியவாறே தன் நாவல்பழத்தை கையில் பிடித்துக் கொண்டு சாய்ந்தான் நாவலன். அவன் வாழ்நாளில் அவனை யாரும் திருப்பி அடித்ததில்லை. அதுவும் அங்கு!! அகல விரித்த கால்களை மீண்டும் வேகமாக பழைய நிலைக்கு இழுத்து நிமிர்ந்தெழுந்த பச்சைக் கண்ணன், மேலேயிருந்து கீழே விழுந்து கொண்டிருந்த மதுக் கிண்ணத்தை தன் கைகளில் பிடித்துக் கொண்டான்…. ஸ்டாப் ஸ்லோமோஷன்… உன் குத்து வினோதக் குத்து ஆனால் என் குத்து வீழ்த்தும் குத்து என்று முழங்கிய க்ரீன் ஐஸ், கிண்ணத்திலிருந்து ஒயினை ஒரு மிடறு உறிஞ்சினான். ம்ம்ம்ம்ம்… இந்த ஒயின் அற்புதத்தின் வரைவிலக்கணம் என்று சீன அழகியைப் பார்த்து பாராட்டவும் செய்தான் அவன்.

நாவல் பழத்தில் அடிவாங்கிய நாவலன், வேதனை வலியில் முனகியவாறே… பச்சைக் கண் வீரரே என்னை இதுவரையில் யாரும் அடித்ததேயில்லை என்றான்.

- எதற்கும் முதல்முறை என்று ஒன்று உண்டு நாவலனே.. என்று புன்னகைத்தவாறே பதில் தந்தான் பச்சைக் கண்ணன்.

- நீங்.. நீங்கள் யார்? நாவலனின் கேள்வியில் மரியாதை கலந்திருந்தது.

நாவலனின் இந்தக் கேள்வியைக் கேட்ட பச்சைக் கண்ணன் கடகடவென சிரித்தான். தன் மொட்டைத் தலையை தடவி, தொங்கு மீசையை நீவி விட்ட சீனனும் அந்த சிரிப்பில் இணைந்து கொண்டான். தன் சிரிப்பை ஒரு கணம் நிறுத்திய பச்சைக் கண்ணன்….

- நாவலனே, நாங்கள்தான் நீ இங்கு தேடி வந்த மனிதர்கள். இதோ மதிப்பிற்குரிய சீனக் கடற் கொள்ளையன் ஷங்லிங்.. என்று சீனனை அறிமுகப்படுத்தினான் பச்சைக் கண்ணன்.

- சமுத்திரங்களின் தரைகள்கூட இவர் காலடித் தடம் பதித்திட தவமிருக்கும், கொடும் புயலும் இவர் முன் அடங்கும், கன்னிகள் இவர் கண்டபின் கைபட்ட கனிகள், எதிரிகளின் எமன், எமனின் ஹிட் கவுண்டர், வரலாற்றின் வரிகளில் தேடினாலும் கண்டடையமுடியாத உண்மையின் குரல், ஜெமினி கணேசனின் குருநாதர், இதோ பெருமைமிகு கடற்கொள்ளையன் க்ரீன் ஐஸ் காமா ஜோஸ்….. பச்சைக் கண்ணனை இவ்வாறு அறிமுகப்படுத்திய சீனன், காமா ஜோஸைப் பார்த்து தன் உடலை முன் வளைத்து நாடகபாணியில் சலாம் அடித்தான்.

இதைக் கண்ட காமா ஜோஸும், சீன அழகி ஸிங்ஸிங்கும் பலமாக சிரிக்க ஆரம்பித்தார்கள். சீனனும் சிரித்தான். வலியுடன் கீழே கிடந்த நாவலன், அந்த வேதனையின் மத்தியிலும், உடலில் பொட்டுத் துணி இல்லாமலிருந்த ஸிங்ஸிங்கின் அழகிய உடலைப் பார்த்து செம நாவல் கட்டையப்பா இவள் என மனதுக்குள் எண்ணிக் கொண்டான். நாவல் பழத்திற்கு மட்டும் வாயிருந்தால் தன் வேதனையில் அது அன்று ஒரு ஒப்பாரியே வைத்திருக்கும்.

[ ரேப் ட்ராகன் தீம் சாங் கீழே நைனா... நன்றி மைக் சேகர் ]

Monday, June 28, 2010

ரேப் ட்ராகன் - 9


சீன அழகி ஸிங்ஸிங்

பிரபஞ்ச சொர்க்கம் என்று செல்லப் பெயர் சொல்லி அழைக்கப்படும் குத்து நகரின் குத்துக் கார்னரின் இன்ப விடுதிகளும், அவற்றின் அழகிகளும், அந்த அழகுப் பதுமைகள் தம்மைத் தேடி ஆசையுடன் ஓடி வரும் வாடிக்கையாளர்களிற்கு வழங்கும் சேவைகளும் பிரபஞ்சப் புகழ் பெற்றவை. தம் வாழ்நாளில் ஒரு தடவையேனும் குத்துக் கார்னரில் தம் காலடி மற்றும் கோலடி பதிக்க வேண்டுமென ஆசைப்பட்ட ஆன்மாக்கள் பல பல.

இந்த இன்ப விடுதிகள், பலதரப்பட்ட வாடிக்கையாளர்களையும், அவர்கள் சுருக்குப் பைகளில் காசுகள் நிரம்பியிருக்கும் பட்சத்தில் இரு கரம் விரித்து வாஞ்சையுடன் வரவேற்றன. பல தேச அழகிகளின் சேவைகளையும் வாடிக்கையாளர்கள் இங்கு பெற்றுக் கொள்ள முடியும். அதேபோல் இன்பவிடுதி ஒன்றில் மெனு அட்டை பாவனையை அறிமுகம் செய்து புரட்சி செய்தவள்தான் சீன அழகி ஸிங்ஸிங்.

ஸிங்ஸிங்கின் விடுதியின் முன்பாக இன்றைய ஸ்பெஷல்- மெகான்நரி முழுமுங்கு……. 150 பொற்காசுகள் என்ற ஒரு பெரிய அட்டை தொங்கியது. அட்டையில் பெரிதாக அழகி மெகான்நரி கண்ணடித்துக் கொண்டிருந்தாள். அழகி மெகான்நரியின் உடல் கூறுகளின் முக்கிய பாகங்களில் கறுப்பு வட்டங்கள் அராஜகம் செய்தன.

சீன அழகியின் இன்ப விடுதியினுள் வழமை போலவே கூட்டம் கொண்டாட்டமாகவிருந்தது. கடற்கொள்ளையர்கள், திருடர்கள், கொலைகாரர்கள், வணிகர்கள், ராஜதந்திரிகள், கலைஞர் பெருமான்கள் என பல சீமான்கள் விடுதியில் தமக்கு இஷ்டமான இன்பங்களை சுகித்து மகிழ்ந்து கொண்டிருந்தனர்.

முரட்டுக் கூச்சல்கள், இன்ப முனகல்கள், வாந்தி ஒலிகள், போதைக் கத்தல்கள் என்பன விடுதியின் ஒத்திசையாக ஒலித்தன. விடுதியின் ஆழமான பகுதியில் பிரத்தியேக வாடிக்கையாளர்களிற்கான பகுதி அமைந்திருந்தது. சீன அழகி ஸிங்ஸிங்கின் வடிகட்டலின் பின்பாகவே பிரத்தியேக வாடிக்கையாளர்கள் பகுதிக்குள் ஒருவர் நுழைய முடியும்.

பிரத்தியேகப் பகுதியின் ஓரத்தில் நீண்ட ஒரு பார் அமைந்திருந்தது. பலவகையான மதுவகைகளையும் வாடிக்கையாளனின் ரசனைக்கேற்ப அது பரிமாறியது. பாரில் தனியே அமர்ந்து ஒரு மனிதன் பிரெஞ்சு ஒயினைச் சுவைத்துக் கொண்டிருந்தான். அந்த மனிதன் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகிலேயே ஒரு வட்டமான பஞ்சணை மீது ஒரு சீனப் பதுமையும், ஒரு சீனனும் இருந்தார்கள். அவர்களின் உடல்களில் பொட்டுத்துணிகூட இருக்கவில்லை.

சீன அழகியின் வாளிப்பான மார்புகள், மலரத்துடிக்கும் தாமரைகளை ஒத்திருந்தன. அவள் ஒடுங்கிய கண்களிலிருந்து போதை மேகம்போல் வினியோகமானது. அவளது அழகிய கரங்களின் விரல்கள் பஞ்சணையில் அவளிற்கு முதுகைக் காட்டிக் கொண்டிருந்த சீனனின் முதுகில் ஆழமான கோடுகளை இழுத்தன.

இப்போது அந்த சீனப் பைங்கிளி தன் உடலை மெதுவாக சீனனை நோக்கி சாய்த்தாள், தாமரை மொட்டுக்களின் நுனிகள் சீனனின் முதுகை ஸ்பரிசித்தன. சீனனின் முதுகில் மேலிருந்து கீழ் நோக்கி தாமரைகள், நீரில் அசைந்து வருவதுபோல் அசைந்து சென்றன.

- ஸிங்ஸிங்… அழகிக்கு முதுகைக் காட்டியபடியே கிடந்த சீனனின் குரல் மெதுவாக ஒலித்தது.

- சொல்லுங்கள் ஷங்லிங்… சீன அழகி ஸிங்ஸிங்கின் குரலில் அமிர்தம் நனைந்திருந்தது.

- உன் விரல்களில் மந்திரமிருக்கிறது ஸிங்ஸிங்.

சீனன் கூறியதைக் கேட்டு க்ளுக்கென்று சிரித்தாள் சீன அழகி. கொஞ்சம் நாணப்பட்டவாறே… அவை விரல்கள் அல்ல ஏன்று தன் மனதிற்குள் கூறிக் கொண்டாள். இதனை எண்ணுகையில் அவள் முகம் செக்க சிவந்திருந்தது. ஆனால் பதிலுக்கு

- உங்கள் உடல் அந்த மந்திரத்தை விழிக்க வைக்கிறது.. என்றாள் தன் குரலில் மேலும் குழைவைக் கூட்டி. இதைக் கூறிய ஸிங்ஸிங்கின் தாமரை மொட்டுக்கள் சீனன் ஷங்லிங்கின் இடுப்பிற்கு கீழ் இறங்கின, அவன் பின்னழகுகள் மேல் வட்ட வட்டக் கோலங்களை இட்டன. இது போதாது என்று சீன அழகியின் கைவிரல்களும் சீனனின் இடுப்பின் முன்பகுதியை நோக்கி தம் பயணத்தை ஆரம்பித்தன.

-க்ர்ர்ர்ர்ர்ர்….. என்று மலைவேங்கைபோல் உறுமினான் ஷங்லிங். உறுமுவதோடு நின்றுவிடாது தன் உடலை திருப்பவும் செய்தான். அவன் மார்பில் பல வெட்டுக் காயத் தழும்புகள் இருந்தன. முதுகில் இருந்த காயங்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதை எண்ணி சீனப் பதுமை ஸிங்ஸிங் வியந்தாள்.

பளபளத்த தன் மொட்டைத் தலையை தடவிய சீனன் ஷங்லிங், தன் தொங்கு மீசையை நீவினான். மெல்லிய உடல்வாகு கொண்ட சீனனின் எலும்புகள் முறுக்கேறி இருந்தன. இரும்பை ஒத்த அவன் வயிற்றுப் பகுதியில் சொர்க்கத்தின் முகவரி என்ற வார்த்தைகள் பச்சை குத்தப்பட்டிருந்தன. அவ்வார்த்தைகளின் கீழிருந்து ஆரம்பித்த ஒரு அம்புக்குறி இடைக்கு கீழே ஆழமான ஒரு இடத்தை நோக்கி நீண்டது.

- நீங்கள் ஒரு வல்லவர்…. ஸிங்ஸிங்கின் குரல் குழைந்தது, அவள் விரல்கள் சொர்க்கத்தின் முகவரியை தேடின.

- எதில் வல்லவன் அழகியே.. சீனன் முனகினான்.

- உங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் என்று பதிலளித்த ஸிங்ஸிங் சொர்க்கத்தின் முகவரியை சுட்டிக் காட்டினாள்.

- அது ஒரு கலை, அழகியே என்று ஆரம்பித்த சீனனின் குரலை… ஹாஹாஹா என்ற ஒரு பெரும் சிரிப்பு வெட்டியது.

பாரில் அமர்ந்திருந்து பிரெஞ்சு ஒயினைப் பருகிக் கொண்டிருந்த மனிதன் சிரித்த சிரிப்பு சீனனிற்கு எல்லையற்ற கோபத்தை தந்தது.

- எதற்காக சிரிக்கிறாய் நீ ? என்றான் சீனன் கோபமாக.

- இல்லை.. சொர்க்கத்தின் முகவரியில் ஒரு கட்டெறும்பு இருக்கிறது.. சிரித்தபடியே கூறினான் அம்மனிதன். அவன் பச்சைக் கண்களில் குறும்பு கொப்பளித்தது.

பஞ்சணையிலிருந்து வேங்கையென துள்ளி எழுந்தான் சீனன் ஷங்லிங். எழுந்த வேகத்திலேயே பாரை நெருங்கிய சீனன் தன் கைகளை முறுக்கி பச்சைக் கண்ணனின் கழுத்தை நோக்கி இறக்கவும் தயாரானான். அந்த அடி மட்டும் பச்சைக் கண்ணனின் கழுத்தில் இறங்கியிருந்தால் இந்த தொடரிற்கு நிறைவு இந்த அத்தியாயத்துடனேயே கிட்டியிருக்கும் ஆனால் விதி வலியது.

- யாராடா இங்கே…. என்று தன் முரட்டுக் குரலில் இரு பெயர்களை ஓங்கி உச்சரித்தவாறே விடுதியின் பிரத்தியேகப் பகுதிக்குள் காட்டெருமைபோல் நுழைந்தான் நாசக்குத்து நாவலன். நாவலன் வாயிலிருந்து வந்து சிதறிய பெயர்களைக் கேட்ட சீனன் ஷங்லிங்கும், பச்சைக் கண்ணனும் நாவல் வண்ண வேதாளம் போல் நின்ற நாசக்குத்து நாவலனை வெறித்துப் பார்த்தார்கள்.

[தொடரும்]

Monday, June 21, 2010

ரேப் ட்ராகன் - 8


நாசக்குத்து நாவலன்

குத்து நகர் இன்பக் குத்துக்களிற்கும், கேளிக்கைகளிற்கும் மட்டும் பெயர்பெற்றது அல்ல. அங்கு பல கில்லாடிகளும் தமது சாகச வாழ்க்கைகளை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கில்லாடிகளில் சிறந்தவர்களில் ஒருவனாக நாசக்குத்து நாவலன் குத்து நகர குடிசனங்களினால் கணிக்கப்படுகிறான்.

நாவலன் குடும்பத்தில் சந்ததி சந்ததியாக ஆண் வாரிசுகள் அனைவரிற்கும் நாவலன் என்ற பெயரே நிலைத்து நின்றது. நாவலனின் முன்னோர்களில் ஒருவர் நாவல் மரம் ஒன்றின் கீழ் எடுத்த சபதத்தின் பின்பாக ரவுடித்தனம் செய்வதே அவர்கள் குல வழக்கமாகி விட்டிருந்தது.

நாவலன்களின் சிறப்பம்சம் அவர்கள் தம் உடல் மேல் பூசியிருக்கும் வண்ணப் பூச்சு ஆகும். தலையை முழு மொட்டை போட்டுக் கொண்டு உடல் பூராவும் நாவல் வண்ணத்தைப் பூசியிருப்பார்கள். கண்கள் இருக்குமிடத்தில் வெள்ளை வண்ணம் இட்டிருப்பார்கள். வெள்ளை வண்ணத்தை ஒரு கறுப்புக் கோடு நீள் வட்டமாக சூழ்ந்திருக்கும்.

உடலின் நாவல் வண்ணப் பூச்சிற்கேற்ப இடுப்பில் ஒரு கறுப்புக் கச்சையை நாவலன்கள் அணிந்திருப்பார்கள். கச்சையின் முன் பக்கத்தில் அங்கே!! ஆம் அங்கேதான்.. ஒரு நாவல்பழ இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும். கச்சையின் இரு புறமும் உள்ள உறைகளில் இரு குறுவாள்கள் அபாயமாக தொங்கியவண்ணம் இருக்கும். சில வேளைகளில் தொலைவில் இருந்து பார்ப்பவர்களிற்கு மூன்று குறுவாள்கள் தோற்றமளிக்குமாற்போல் இருக்கும். ஆனால் அருகில் வருகையில் குறுவாள்கள் இரண்டுதான் என்பதை அறிந்து தெளியலாம்.

தம் உடலின்மீது பூசப்பட்ட வண்ணப்பூச்சிற்கு சேதம் ஏற்படும் எனும் காரணத்தால் நாவலன்கள் தம் உடல்மீது நீர் படுவதை வெறுத்து வந்தார்கள். ரவுடித்தனம் செய்தாத நாட்களில், நாவலன்கள் அழகான மேலங்கியும், தலைப்பாகையும் அணிந்து நகரில் சீமான் போல் வலம் வருவதும் உண்டு.

நாவலன்கள் தங்குமிடம் நாவற்பழ வடிவில் அமைந்திருக்கும். அதேபோல் நாவலன்கள் விரலில் அணிந்திருக்கும் மோதிரங்களிலும் நாவற்பழ சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். யாராவது நபர்களின் வதனங்களில் நாவற்பழ முத்திரை பதிந்து இருப்பதைக் கண்டால் அவர்கள் நாவலன்களிற்கு முகம் கொடுத்தவர்கள் என்பது புரிந்துவிடும். இதனால் நாவற்குத்து நாவலன்கள் என்ற பட்டப்பெயர் இவர்களிற்கு கிடைத்திருந்தது. இதுவே கால ஓட்டத்தில் மருவி நாசக்குத்து நாவலனாகியது.

நாவற்பழ மரங்களால் சூழ்ந்திருந்த தனது நாவல்பழ வடிவ தங்குமிடத்தில், சமகால நாவலன் தனது புரவி கேசரியோடும், தனது கடிநாய் உப்புமாவுடனும் நாவற்பழ ஆசனத்தில் அமர்ந்திருந்தபோது அவனது உதவியாளன் நாவல் குள்ளன், இளவரசன் இலுமினாட்டியிடமிருந்து வந்திருந்த ஓலையை நாவலனிடம் பவ்யமாகத் தந்தான்.

இளவரசன் இலுமினாட்டியிடம் இருந்து வந்த ஓலையைப் படித்த நாவலன், தன் ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்தான். தனது உடலை அப்படியும் இப்படியுமாக அசைத்து சில அப்பியாசங்களை நாவலன் செய்தான். அவன் நாவல் வண்ண உடலில் தசைகள் விம்மின. தன் எஜமானன் நாவலனின் உடல் அழகை பார்த்து பெருமிதம் கொண்ட நாவல் குள்ளன், மத்தளம் ஒன்றை எடுத்து தட்ட ஆரம்பித்தான். டம்மு டம்மு டம்மு என்ற ஓசை நாவல் மரங்களை அணைக்க ஆரம்பித்தது.

நாவல் குள்ளனின் மத்தள வாசிப்பிற்கேற்ப தன் உடலை ஆட்டியும் அசைத்தும் நாவலன் தன் தேகப் பயிற்சியை தொடர்ந்தான். கால்களை உதைத்தான். கைகளால் வெட்டினான். மத்தள ஓசைக்கு பக்கவாத்தியம்போல் கடிநாய் உப்புமா வவ்வவ்வவ் என்றது. நடந்து கொண்டிருக்கும் களேபரத்தைக் கண்ட புரவி கேசரி… அய்யோ வேலை வரப் போகிறதே என துணுக்குற்று அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. இதைக் கண்ட நாவலன் காற்றில் குத்துக்களை விட்டவாறே கேசரியை துரத்த ஆரம்பித்தான். அவன் வாய்லிருந்து உய்ய்ய் என்ற சீழ்க்கை ஒலி தொடர்ந்து ஒலித்தவண்ணம் இருக்க, கேசரி காது கேட்காதது போல் வேகமாக ஓடிச் சென்றது.

[நாவலன் குத்து... நாசக்குத்து]

Monday, June 14, 2010

ரேப் ட்ராகன் - 7


குத்தலகேசியின் கண்ணீர்

அபசகுனம் என்று கூறியவாறே தன் நீண்ட கால்களை எட்டி வைத்து விரைவாக நடக்க ஆரம்பித்த இளவரசன் இலுமி, அங்காங்கே தன்னைக் கடந்து சென்ற அரண்மனை பணிப்பெண்களைப் பார்த்து தன் கண்களைச் சிமிட்டிக் கொண்டே நடந்தான். அவன் கண் சிமிட்டலிற்கு கிடைத்த பதில்கள் காஸனோவாவையே பொறாமைப்பட வைப்பதாக இருந்தன.

மந்திராலோசனை மண்டபத்தை அடைந்த இளவரசன் இலுமி, தந்தை குத்தலகேசியை வணங்கினான். மந்திரியைப் பார்த்து தலையை அசைத்தான். மந்திரவாதி கருந்தேளைக் கண்டு விட்டு… பாஸ், நீங்கள் இங்கு என்ன செய்கீறீர்கள்… என்றான்.

தன் மதுக் கிண்ணத்திலிருந்து உதடுகளைத் திருப்பி மந்திரவாதி கருந்தேள் பதிலளிப்பதற்கு முன்பாக குத்தலகேசியின் சிம்மக் குரல் கர்ஜனையாக எழுந்தது.

- லுமினாட்டி

- ந்தையே

- உன்னிடம் ஒரு முக்கிய விடயத்தை ஒப்படைக்கப் போகிறேன்… என்றவாறே மந்திரி குத்துப் பிடியைப் பார்த்த மன்னன் குத்தலகேசி, வெறுமையாகவிருந்த தன் மதுக் கிண்ணத்தை மந்திரியிடம் நீட்டினார்.

- விடயமா?! என்ன விடயம் தந்தையே?

- அரண்மனைக்கு இருவரை நீ இட்டு வர வேண்டும் மகனே.

- அதற்கு நானெதற்கு தந்தையே, இந்த அரண்மனை எங்கும் மந்திரி குத்துப்பிடி போல் வெட்டி வேலையாட்கள் நிறைந்திருக்கிறார்களே!!

இளவரசன் இலுமியின் சொற்களைக் கேட்ட மந்திரி குத்துப் பிடியின் கண்களில் உஷ்னம் ஏறியது. அவர் கைகளில் இருந்த மன்னனின் மதுக் கிண்ணம் நடுக்கம் கண்டது. இதனை அவதானித்துவிட்ட மன்னன் குத்தலகேசி….இலுமினாட்டி, முதலில் பெரியவர்களை மதிக்கக் கற்றுக் கொள்..என்று சீறினார்.

- யார் பெரியவர்? அரிய சிந்தனைகள் எனும் பெயரில் குப்பைகளை அப்பாவிகள் தலையில் கட்டும் இவர் பெரியவரா? ஆலோசனைகள் எனும் பெயரில் மொக்கைகளையும், வெற்றுக் கிண்ணங்களில் மதுவையும் நிரப்பும் இவர் பெரியவரா… ஹாஹாஹா தந்தையே நீங்கள் பேரானந்த விகடனிற்கு ஜோக் எழுத முற்படவேண்டும். அல்லது…… இளவரசன் இலுமி இழுத்தான்.

- அல்லது… மன்னன் குத்தலகேசியின் குரலில் கோபம் எல்லை மீற முற்பட்டது.

- அல்லது.. மதுக்கிண்ணம் காலியாகவே இருக்கக்கூடாது என துடிதுடிக்கும் நீர் பெரியவரா.

இலுமினாட்டியிடம் இருந்து வந்த இந்த சொற்களைக் கேட்டதும் தன் ஆசனத்தில் இருந்து துள்ளி எழுந்தான் மன்னன் குத்தலகேசி. மந்திரவாதி கருந்தேள் நிலைமை சூடாவதை உணர்ந்தான்.

- ஹாஆஆஆ…… அரண்மனையில் இருக்கும் பணிப்பெண்களிடம் நவராவா குறுவோலை வீசி, அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு அவர்களிடம் மன்மத ஒளடதங்கள் பெற்று, எம் நாட்டுப் பெண்டிரை வெறுத்து விதேசிகளான கொரியப் பெண்டிரை தேடி ஓடி, மன்மத சுகத்தில் திளைத்து, உடல் இளைத்து, களைத்து திரியும் நீ எனக்கு மகனாக வாய்த்தது நான் பெற்ற சாபமடா, நன் பெற்ற சாபம்… எனப் பாய்ந்த குத்தலகேசியின் குரல் தழுதழுத்தது.

- நான் உங்கள் சாபம், நீங்கள் என் சாபம்… இரக்கமில்லாமல் வெட்டினான் இளவரசன் இலுமினாட்டி. நிலைமை மோசமாகிக் கொண்டே செல்வதைத் தடுக்க விரும்பிய மந்திரவாதி கருந்தேள்… இளவரசே இலுமினாட்டி, தந்தை சொல்வதைக் கேள், உன் உதவி இப்போது எமக்கு அவசியம் என்றான்.

மந்திரவாதியின் தலையீட்டால் சற்று சாந்தம் கொண்ட இளவல் இலுமி…. யாரை இங்கு இட்டு வர வேண்டும் என்றான் வெறுப்பாக.

- இளவரசே என்னருகே வா என்றழைத்தான் மந்திரவாதி கருந்தேள்.

இலுமினாட்டி மந்திரவாதியை நெருங்கி வரவும் மேசையிலிருந்த வெள்ளைத் துணியை இலுமிக்கு சுட்டினான் மந்திரவாதி. அந்த துணியில் ஒரு காட்சி ஓடிக் கொண்டிருந்தது… இதோ, இவனையும், இவனையும் என துணியில் தெரிந்த இரு உருவங்களை இளவரசனிற்கு காட்டினான் ராஜ மந்திரவாதி.

- இவர்கள் இப்போது எங்கு உள்ளார்கள் மந்திரவாதி அவர்களே?

- குத்து நகரில் இன்ப விடுதிகள் நிறைந்த குத்துக் கார்னரில், ஒரு இன்ப விடுதியில்…. மந்திரவாதி உச்சரித்த இன்ப விடுதி எனும் சொல் இளவரசன் இலுமிக்கு தேனாக காதில் வழிந்தது.

- ஒஹோ..பலே..பலே. இந்த இன்ப விடுதி யாருடையது என்பது உங்களிற்கு தெரியுமா மந்திரவாதி அவர்களே?

- சீன அழகி ஸிங்ஸிங்கின் இன்ப விடுதி அது இளவரசே… மந்திரவாதியின் பதிலில் புன்னகை கலந்திருந்தது.

- ம்.. உடனே புறப்படு என்று இலுமினாட்டியைப் பார்த்து உத்தரவிட்ட மன்னன் குத்தலகேசி…. நாசக்குத்து நாவலனையும் உன்னுடன் அழைத்துச் செல் உன் வீரதீரம் நாம் அறியாததல்ல என்று முழங்கினார்.

சற்று அமைதியாக நின்ற இளவரசன் இலுமி, தந்தையே நன்றாகக் குடி, ஏனெனில் நாளை என் தலையில் உன் முடி.. என்று இரக்கமில்லாத வார்த்தைகளை உதித்துவிட்டு மந்திராலாசோனை மண்டபத்தை விட்டு வெளியேறினான்.

தன் மகனின் சொற்கள் கூரிய அம்புகளாக தன் இதயத்தில் வந்து பாய்வதை உணர்ந்த மன்னன் குத்தலகேசி தன் ஆசனத்தில் வீழ்ந்தார். வெறுமையாக இருந்த தன் மதுக்கிண்னத்தை பார்த்த அவர் விழிகளில் இருந்து வழிந்த கண்ணீர் அக்கிண்ணத்தை நிரப்ப ஆரம்பித்தது.

[பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் ஜின்னு]

Saturday, June 5, 2010

ரேப் ட்ராகன் - 6


நவராவா

குத்து நகர அரண்மனையின் நீண்ட தாழ்வாரங்களில் குளிர் காற்று தவழ்ந்து விளையாடியது. பல நாட்டுக் கலைப்பொருட்களின் அலங்காரங்களும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நானாவித செடி கொடிகளும் அந்த அரண்மனையின் ரம்யத்தை மேலும் அதிகரிக்க செய்தன.

தான் ஆசையுடன் வளர்த்து வரும் கன்னி மாதுளைகளை ஆதரவுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு. அரண்மனை பணிப் பெண்கள் தங்கள் வேலைகளைப் பார்பதற்காக அங்கும் இங்கும் விரைந்து கொண்டிருந்தார்கள். பணிப் பெண்களின் நவ நளின அங்க அசைவுகளை தூணிற்கு அருகில் நின்ற ஒரு செடியின் பின்பாக மறைந்திருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது ஒரு உருவம்.

செடிக்கு பின்னால் மறைந்திருந்த அந்த உருவத்தின் உதடுகளிலிருந்து ஆகா, பலே, அருமை, சூப்பர், இப்போதே கை வைக்க வேண்டும் போலிருக்கிறதே போன்ற சொற்கள் வந்து வீழ்ந்தபடியே இருந்தன.

உருவம் நின்றிருந்த தூணின் பக்கமாக தன் அழகிய உடலை ஒய்யாரமாக அசைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள் பணிப்பெண் கிம். கிம் ஒரு லட்டு, அவள் கொரிய நாட்டுச் சிட்டு. சிட்டின் உடலோ தாய்லாந்தின் பட்டு. உருவம் மறைந்திருந்த செடியை கொரிய அழகி கிம் நெருங்கிய வேளையில், அதற்காகவே காத்து நின்றதைப்போல் அந்த உருவம் தன் கையிலிருந்த குறுவோலை ஒன்றை கிம்மை நோக்கி வீசியது.

காற்றில் உருண்டு சென்ற அந்தக் குறுவோலை கொரிய நாட்டு அழகி கிம்மின் மார்க்கச்சைக்குள் சென்று கச்சிதமாக விழுந்தது. இந்த செயலின் கச்சிதமே அந்த உருவத்திற்கு இந்தக் குறுவோலை எறியும் விடயத்தில் உள்ள அனுபவத்தின் முதிர்ச்சியை தெளிவாகக் காட்டியது. தன் இலக்கை குறுவோலை அழகாக சென்று சேர்ந்ததைக் கண்ட அந்த உருவம் “மச்சம்டா உனக்கு’’ என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளவும் செய்தது.

ஒய்யாராமாக நடந்து சென்று கொண்டிருக்கையில் தன் மார்புகளிற்குள் ஒரு வண்டு வந்து வீழ்ந்து விட்டதே என்று எண்ணிய கொரிய அழகி கிம், “மொட்டுக்கள் இருக்கும் இடத்தில் வண்டுகள் வந்து வீழ்வது சகஜம்தானே” என்று தெளிந்து க்ளுக் என்ற ஒரு சிரிப்பை உதிர்த்தாள். அழகிய இளம் மொட்டுக்களிற்கிடையில் சிக்கியிருந்த வண்டையும் அவள் வெளியில் எடுத்தாள். அது வண்டல்ல ஆனால் ஒரு குறுவோலை என்பதைக் கண்டு கொண்ட கிம், அவ்வோலையைப் பிரித்தாள். அதில் “நவராவா” என்று எழுதியிருந்தது.

ஆகா, இது அவரல்லவா. தன் பள்ளியறையை கொரிய நாட்டு அழகிகளின் ஓவியங்களால் அலங்கரித்திருப்பவர். தன் பஞ்சணையின் தலைப் பக்க சுவரில் “இது என் பஞ்சணை, இதன் மீது நான் செய்வதில்லை வஞ்சனை” என்று எழுதி வைத்திருப்பவர். இன்ப சித்ரவதைகளின் சித்தர். அவரின் கைகளில் இன்று தான் படப்போகும் பாட்டை எண்ணிய கொரிய அழகி கிம்மின் உடலில் ஒரு இன்ப நடுக்கம் ஓடியது.

அந்த தருணத்தை எண்ணிய அந்த அழகியின் முகம் நாணிச் சிவந்தது. அந்த தேவதையின் உடலில் நாணம் கிளித்தட்டு விளையாடியது. தன் தலையை அழகாக சாய்த்தவாறே அவ்விடத்திலிருந்து அகன்றாள் அழகி கிம். அழகி கிம்மின் ரியாக்‌ஷன்களை தன் கண்களால் அளவெடுத்த அந்த உருவம், வெற்றி! வெற்றி! இன்று கும்மாங்கு குத்துதான் என்று மகிழ்ந்தது.

அத்தருணம் அந்த உருவத்திற்கு பின்னால் வந்து நின்ற அரண்மனை வீரன், “இளவரசே உங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்றான். கண்களில் கொப்பளிக்கத் தொடங்கிய வெறுப்புடன் அவ்வீரனை நோக்கிய குத்து நகர இளவலான இலுமி எனும் இலுமினாட்டி, “அபசகுனம்! அபசகுனம்” என்றவாறே அங்கிருந்து கிளம்பினான்.

[நவராவா]

  • நவராவா என்றால் என்ன என்பதை சரியாகக் கூறுபவர்களிற்கு இளவல் இலுமியின் பஞ்சணையில் ஒரு இரவு இலவசம்.
  • கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியம், விய்யகாரா குளிகைகள்... நீண்ட நேரம், அதீத சக்தி, பரிபூரண திருப்தி... இளவல் இலுமி உபயோகிக்கும் அற்புத ஒளடதங்கள் இப்போது உங்களிற்கும்... தொடர்புகளிற்கு...வெவெவெ.அரண்மனைவைத்தி.கும்

Friday, June 4, 2010

ரேப் ட்ராகன் - 5


ஆபத்திற்கு பாவமில்லை

மன்னன் குத்தலகேசியின் ஆலோசனை மண்டபத்தை ராஜ மந்திரவாதி கருந்தேள் அடைந்தபோது மந்திரி குத்துப்பிடி அவனை வரவேற்றார்.

- வாருங்கள் மந்திரவாதி அவர்களே, தாங்கள் அணிந்திருக்கும் நவநாகரீக உடைகளின் அழகு என் மனதில் பொறாமையை உண்டு பண்ணுகிறது என்றவாறே ஒரு ஆசனத்தை காட்டினார் மந்திரி குத்துப்பிடி.

மன்னன் குத்தலகேசியை வணங்கிய மந்திரவாதி கருந்தேள், மந்திரி காட்டிய ஆசனத்தில் வசதியாக அமர்ந்து கொண்டான்.

- மதிப்பிற்குரிய மந்திரவாதி அவர்களே, நேற்றிரவு ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்தேறி விட்டது என்று கூறியவாறே மதுக்குப்பிகள் இருக்கும் பக்கம் நகர்ந்த மந்திரி குத்துப்பிடி, மந்திரவாதி கருந்தேளிற்கு பிடித்தமான வெள்ளை மதுவை ஒரு கிண்ணத்தில் ஊற்றினார்.

- ஒலையைப் படித்தீர்களா என்ற குத்தலகேசி, குத்துப்பிடியை நோக்கி தன் குவளையை உயர்த்தி சைகை காட்டினார்.

இல்லை என்று உண்மையைக் கூறினால் மன்னனை அவமதித்தது போலாகும் என்பதை நன்கறிந்திருந்த ராஜ மந்திரவாதி

- படித்தேன், குந்தவி கடத்திச் செல்லப்பட்டது அறிந்தேன் எனக் கூறிமுடித்தவாறே மந்திரி குத்துப்பிடி வழங்கிய மதுக்கிண்ணத்திலிருந்து ஒரு மிடறு இழுத்தான். பக்குவமான பதத்தில் இருந்த வெள்ளை மது, நாக்கிலும், அண்ணத்திலும் கிச்சு கிச்சு மூட்டியது.

- விடயம் குந்தவி சம்பந்தப்பட்டதால் அவளால் பாதிக்கப்பட்ட ஒற்றர் படையையோ, நம் வீரர்களையோ இதில் நம்பி பொறுப்பை ஒப்படைக்க முடியாது. குந்தவி என்றதுமே அவர்கள் காரியத்தை தாமே விரும்பிக் கெடுப்பார்கள். எனவே எமக்கு உங்கள் உதவி தேவை மந்திரவாதி அவர்களே என்றார் குத்துப்பிடி.

வெள்ளை மதுவை மீண்டும் சுவைத்த மந்திரவாதி கருந்தேள், மது சிலவேளைகளில் சிந்தனைகளை வளர்க்க உதவுகிறது அதுவே எல்லை மீறும் போது மனிதனையே சிதைத்து விடுகிறது, என்ன விசித்திரம் என்று எண்ணியபடியே மந்திரியைப் பார்த்து

- இதற்கு ஒரு வழி இருக்கிறது மந்திரியாரே என்றான்.

- என்ன வழி? மந்திரி குத்துப்பிடியின் குரலில் ஆர்வம் குழைந்தது.

- கூலிப்படையை நாடுவது என்ற மந்திரவாதி கருந்தேள், காதும் காதும் வைத்தபடி காரியத்தை முடிக்க வேண்டுமானால் அதற்கு திறமையான ஆசாமிகள் தேவை என இழுத்தான்.

மந்திரி குத்துப்பிடியின் விழிகளும், மந்திரவாதியின் விழிகளும் நேரிற்கு நேர் சந்தித்துக் கொண்டன. மந்திரி குத்துப்பிடிக்கு கருந்தேள் எங்கு வருகிறான் என்பது மெல்லப் புரிய ஆரம்பிக்கவே சற்றுப் பயம் கலந்த குரலில் – அவர்களா என்றார்.

- அவர்களேதான் என்று பதிலளித்தான் கருந்தேள்.

- அவர்கள் மிகவும் மோசமானவர்கள் என்று தயங்கினார் குத்துப்பிடி.

- ஆபத்திற்கு பாவமில்லை என்ற மந்திரவாதியின் மதுக்கிண்ணம் காலியாகி இருந்தது.

மந்திரவாதியும், மந்திரியும் பேசுவதை, உன்னிப்பாக மதுவைக் குடித்தபடியே காதில் போட்டுக் கொண்டிருந்த மன்னன் குத்தலகேசி, யார் அவர்கள்? என்ற கேள்வியை அவ்விருவரையும் நோக்கி வீசினான்.

- மன்னர் பெருமானே, மிகவும் மோசமான கடற்கொள்ளையர்கள் அவர்கள் என மந்திரி குத்துப்பிடி அளித்த பதிலில் நடுக்கம் விளையாடியது.

- கடற்கொள்ளையர்களா!? என்று வியந்த மன்னன் குத்தலகேசி, அவர்களை நாம் எங்கு சென்று பிடிப்பது மந்திரவாதியே என்றவாறு தன் ஆசனத்தில் நன்கு சாய்ந்து அமர்ந்து கொண்டார்.

தனது கடல் நீல வண்ண மேலங்கிக்குள் இருந்து ஒரு வெண்ணிற துணியை எடுத்த மந்திரவாதி கருந்தேள், அதனை ஆலோசனை அறையில் இருந்த மேசைமீது விரித்தான். நீள் சதுர வடிவில் அந்த வெண்ணிறத் துணி அமைந்திருந்தது. அவனது விரல்கள் அத்துணியின் மீது சில புள்ளிகளில் அழுத்தின, சில இடங்களில் கோடுகள் வரைந்தன. மெல்ல மெல்ல அந்த வெண்ணிறத் துணி உயிர் பெற ஆரம்பித்தது. சட்டகம் ஒன்றிற்குள் ஒரு காட்சி விரிய தொடங்கியது.

- மோசமானவர்கள், மிக மோசமானவர்கள் எனும் சொற்களை துணியைப் பார்த்துக் கொண்டிருந்த மந்திரவாதி கருந்தேளின் உதடுகள் மெதுவாக முணுமுணுத்தபடியே இருந்தன.

[தொடரும்]

Tuesday, June 1, 2010

ரேப் ட்ராகன் - 4


ராஜ மந்திரவாதி

அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய அந்த ஆளுயர நிலைக் கண்ணாடியில் தெரிந்த கவர்ச்சியான ஆணின் உருவம், தன் தலையை அப்படியும், இப்படியுமாக அசைத்துப் பார்த்து கண்ணாடியில் தெரிந்த தன் அழகிய வதனத்தின் பிரதிபலிப்பில் திருப்தி கொண்டது.

மின்னும் சிவப்பு சட்டை, பளபளக்கும் நாவல் வண்ண கால் சராய், சீனத்தின் மென்பட்டால் செய்த கடல் நீல மேலங்கி என அந்த ஆணுருவம் அணிந்திருந்த உடைகள் அதன் அழகை மேலும் எடுப்பாக்கி காட்டின.

நிலைக் கண்ணாடிக்கு அருகிலிருந்த தட்டொன்றில் பலவிதமான மோஸ்தர்களில் தலைப்பாகைகள் சீரான ஒழுங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. தட்டை நெருங்கிய அந்த அழகனின் விரல்கள், மென்மையாக தலைப்பாகைகள் மீது ஒரு கோடாக ஊர்ந்தன. அந்த விரல்களின் ஊர்வலமானது பப்பாசிப் பச்சை தலைப்பாகையில் தடைப்பட்டது.

பப்பாசிப் பச்சைத் தலைப்பாகையை தன் தலையில் அணிந்து கொண்ட அந்த அழகன், மீண்டும் நிலைக் கண்ணாடியில் தன் தோற்றத்தைப் பார்த்து மகிழ்ச்சியுற்றான், உவகை கொண்டான். முன்னைய இரவில் அவன் கலந்து கொண்ட துகிலுரி நடன விருந்தின் நினைவுகள் அவன் மனதை மெதுவாக தட்டின.

- ஹ்ம்ம்ம்ம்…. என நீண்டதொரு பெருமூச்சு ஆண் அழகனிடமிருந்து வெளிவந்தது.

- அழகான இளம் பெண்கள், வாளிப்பான தேகங்கள், கை விரல் சொடுக்கில் தீர்ந்து விடக்கூடிய காமதாகம், ஆனால் நான் விரும்புவது அதுவல்லவே….என்று அந்த கம்பீரமான ஆணின் மனம் முணுமுணுத்தது.

- காதல். உண்மைக் காதல். ஒரு இரவு மழையின் சுகத்தை தன் விரல்களில் பிசைந்து ஊட்டக்கூடிய அமர காதல்… ஏன்?……. ஏன்? இதுவரை எனக்கு கிடைக்கவில்லை. அழகில்லையா… திறமையில்லையா இல்லை வசதிகள்தான் இல்லையா… ஏன் என் இதயம் இரவுகளின் மெளனத்தில் ஊமையான அனாதையாக அழுகிறது…. ஏன் இன்னும் நான் கன்னி கழியாதவனாக என் காலத்தைக் கடத்துகிறேன்..

அந்நிலையில் – பிரபோ… என அழைத்த குரலானது அழகனின் சிந்தனைகளிலிருந்து அவனை கலைத்துப் போட்டது.

- ம்ம்ம்… அழகனின் ம்மில் கூட இனிமை இருந்தது.

- அரண்மனையிலிருந்து அவசர ஓலை வந்திருக்கிறது பிரபு.

- அந்த ஓலையை மேசையின் மீது வைத்து விட்டு செல்.

பணியாளன் பவ்யமாக அறையினுள் நுழைந்து, அரண்மனையில் இருந்து வந்த அவசர ஓலையை மேஜை மீது வைத்துவிட்டு நகர்ந்தான். சிறிது நேரம் மேஜையில் இருந்த அந்த ஓலையையே வெறித்துப் பார்த்தான் ஆண் அழகன். அரண்மனை ஒலையைப் பிரிக்காமலே அதில் எழுதியிருக்கும் செய்தியை அவனால் படித்துவிட முடியும். அவனிடம் அழகும், கம்பீரமும் மட்டுமல்ல பல சக்திகளும் குடி கொண்டிருந்தன. வேகமாக தன் அறையை விட்டு வெளியேறி, அரண்மனைக்கு செல்ல ஆரம்பித்தான் ராஜ மந்திரவாதி கருந்தேள்.

[தொடரும்]

Monday, May 31, 2010

ரேப் ட்ராகன் - 3


குத்தலகேசியும் குத்துப்பிடியும்

இளவரசி குந்தவி கடத்தப்பட்ட செய்தி அறிந்த குத்து நகர மன்னன் குத்தலகேசி, முதலில் அந்த செய்தியை நம்ப முடியாது வியந்தான். அவன் மனதில் ரகசியமாக நிம்மதிக் காற்று வீச ஆரம்பித்தது. அப்பாடா தீர்ந்தது பெரும் தலைவலி என்று மனதில் களி கொண்டவாறே மந்திராலோசனை மண்டபத்தில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தான் மன்னன் குத்தலகேசி.

மன்னர் குத்தலகேசியின் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் எண்ணங்களை ஒருவாறு ஊகித்துக் கொண்ட குத்து நகர மந்திரி குத்துப்பிடி தொண்டையை மென்மையாக செருமிக் கொண்டு பேச ஆரம்பித்தார்.

- மன்னாதி மன்னனே, என்ன இருந்தாலும் குந்தவி உங்கள் புத்ரி

- ஹா.. குந்தவி என் புத்ரியல்ல என் மானத்தை வாங்க வந்த சத்ரி அவள்.

- அதற்காக!! மன்னன் மகளை புரட்சிக்காரன் ஒருவன் அரண்மனைக்குள் புகுந்து, எம் கடுங்காவலைக் கடந்து, அந்தப்புர பள்ளியறைக்குள் நுழைந்து கடத்திச் சென்றிருப்பதனை அப்படியே விட்டுவிட முடியுமா?!

- விட்டு விட்டோமானால் எம்மிடம் எஞ்சியிருக்கும் கொஞ்ச மானமாவது மிஞ்சும், இவ்வார்த்தைகளை உதிர்த்தபோது மன்னன் குத்தலகேசியின் குரல் தாழ்ந்திருந்தது.

- மன்னா, நாளை இந்த ஊரும், உலகமும் உம்மைத் தூற்றுமே, பெற்ற மகளையே காப்பாற்ற முடியாத மன்னன் என இகழுமே, ஏனைய நகர மன்னர்கள் எம்மைப் பார்த்து நகைப்பார்களே என்பதனைச் சற்று சிந்தித்துப் பாருங்கள் என்றவாறே மந்திரி குத்துப்பிடி மதுபான வகையறாக்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சந்தன மர மேஜையை அணுகினார்.

- குத்துப்பிடி என் மகள் குந்தவி பற்றி உனக்குத் தெரியாதா? அவள் உன்னையும்கூட…. மன்னன் மேலும் வார்த்தைகளை தொடரமுடியாதபடி அவனை அவசர அவசரமாக இடைவெட்டிய மந்திரி குத்துப்பிடி,

- வேண்டாம் மன்னர் மன்னா, அதனை நான் மறந்து விட்டேன். இன்னமும் காயங்கள்கூட சரியாக ஆறவில்லை. ராஜ வைத்தியர் ஏழு அவர்கள் தந்த பச்சிலை வைத்தியம்தான் கொஞ்சம் உதவுகிறது என்றவாறே மதுக்குப்பி ஒன்றிலிருந்த மதுவை ஒரு குவளையில் அளவாக ஊற்றி, இரு குளிர் கட்டிகள் போட்டு மன்னன் குத்தலகேசியிடம் தந்தார் மந்திரி குத்துப்பிடி. குந்தவி தனக்குச் செய்த அந்தப் பாதகச் செயலை எண்ணிப் பார்க்கையில் அவர் உடல், உள்ளம் ஆகிய இரண்டும் கட்டியணைத்துக் கொண்டு சிலிர்த்தெழுந்தன.

மந்திரியிடமிருந்து மதுக் குவளையைப் பெற்ற மன்னன் குத்தலகேசி, குளிர் கட்டிகள் மதுக் குவளையின் சுவரில் மோதி மென்சதங்கை ஒலி எழுப்பும் வகையில் குவளையைச் சில சுழட்டுகள் சுழட்டி, பின் தன் இதழ்களில் குவளையைப் பொருத்தி ஒரு மெகா இழுவை இழுத்தார். தரமான அந்த மது அவர் தொண்டையை ஆலிங்கணம் செய்தது. ஹ்ம்ம்ம்ம்… என்ற பெருமூச்சொன்று மன்னன் குத்தலகேசியிடமிருந்து சோகமாக வெளிவந்தது.

- மந்திரியாரே, இந்த குத்து நகரில் என் மகள் குந்தவியால் கற்பழிக்கப்படாது எஞ்சியிருக்கும் ஆண்கள் வெகு சிலரே. அவள் தொலைந்தாள் எனில் இந்நகரம் அவள் கொடும் பிடியிலிருந்து விடுபடும். என் மனமும் வேதனைகள் சிலவற்றிலிருந்து விடைபெறும். மன்னரின் மனதின் சோகங்களை மது, வார்த்தைகளாக மாற்றி வெளியே தள்ளியது.

- மன்னா, நீங்கள் கூறுவது உண்மைதான் ஆனாலும் இது எங்கள் கவுரவப் பிரச்சினை. குந்தவியை காப்பாற்ற நாம் முயற்சிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கடத்தியவன் இந்நாட்டின் முன்னாள் வீர கவி, ஆயனச் சிற்பி ரஃபிக். முன்பு ஒரு காலத்தில் உங்கள் மகள், அவனை உயிராக காதலித்தாள். ஆனால் அதனை நீங்கள் தடுத்தீர்கள். ரஃபிக்கிற்கு நீதியற்று தண்டனை வழங்கினீர்கள். இன்று அவன் புரட்சி எனும் பெண்ணைக் காதலிக்க ஆரம்பித்து விட்டான். உங்கள் மகள் அதனால் மனம் வெம்பி… வார்த்தைகளை முடிக்காது விட்டார் மந்திரி குத்துப்பிடி.

- என்னிலும் தவறிருக்கிறது மந்திரியாரே, குந்தவியின் இஷ்டப்படி ரஃபிக்கையே அவள் மணமுடிக்க நான் சம்மதித்திருக்க வேண்டும், ஆனால் ரஃபிக்கிற்கு ஏற்கனவே மூன்று மனைவியர் எனும் அந்தக் காரணம் என் மதியின் குறுக்கே பாய்ந்த காட்டாறு ஆகி விட்டதே.. ஹாஆஆஆ மன்னன் குத்தலகேசியின் வேதனைக்குரல் மந்திரியின் மனதைப் பிசைந்தது.

- மன்னா, நடந்தது நடந்து விட்டது இனியும் நாம் தாமதித்தல் ஆகாது. இளவரசி குந்தவியின் பள்ளியறையில் கிடைத்த கைக்குட்டையில் ட்ராகன் இலச்சினை இருக்கிறது. புரட்சி நகரின் இலச்சினை அது. பிரபஞ்ச புரட்சிக்காரர்களின் குருகுலம் அது. நாம் விரைந்து செயல்பட வேண்டும். இந்நிலையில் எமக்கு எம் ஒற்றர்கள், வீரர்களைத் தவிர நம்பிக்கையாக உதவி செய்யக்கூடியவர் ஒருவர்தான்… மந்திரி வார்த்தைகளை வேகமாகக் கொட்டினார்.

- யார் அந்த ஒருவர் மந்திரியாரே ?

- ராஜ மந்திரவாதி மன்னர் பெருமானே, எம் ராஜ மந்திரவாதி.

[தொடரும்]

Sunday, May 30, 2010

ரேப் ட்ராகன் - 2


மாடத்தில் ஒரு சுறா

பஞ்சணையில் மயங்கிய பைங்கிளி குந்தவியை, மென்மையான ரோஜாவைத் தாங்குவது போல் ஏந்திக் கொண்டு பள்ளியறையை விட்டு மாடத்தை நோக்கி ஓடியது அவ்வுருவம். அவ்வுருவம் மாடத்தை நெருங்குவதற்கும் அந்தப்புர ராஜலேடிகளின் பாதுகாப்பிற்கு பொறுப்பான அதிரடிப்படையின் தலைமை வீரன், தன் வீரர் குழுவோடு பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் சரியாக இருக்கிறதா எனப் பார்த்தவாறே அதே மாடத்தை நெருங்குவதற்கும் சரியாகவிருந்தது.

இளவரசியின் பள்ளியறையிலிருந்து ஒரு உருவம் தன் கைகளில் இளவரசியுடன் ஓடி வருவதைக் கண்ட தலைவனும் வீரர்களும் உஷாரானார்கள். அடடா ஒரு பெரும் தொல்லை இன்றுடன் தீர்ந்ததே என்று அவர்கள் தங்களிற்குள் நினைத்து மகிழ்ந்தாலும் குத்து நகர மன்னனின் தண்டனைக்கு அஞ்சி, மர்ம உருவத்தை தடுத்து நிறுத்துவது எனும் முடிவிற்கு வந்தார்கள்.

- ஏய்ய்ய்ய், யாரங்கே ஓடாதே நில். வீரர் தலைவனின் குரல் மாடமெங்கும் மோதியது. மாடத்தினைக் கடந்து கீழே பாய எத்தனித்த மர்ம உருவமோ இக்குரலால் சற்று நிதானித்தது. குத்து நாட்டு அந்தப்புர அதிரடிக் காமாண்டோக்களை நோக்கி ஒரு ஏளனப் புன்னகையையும் அது வீசியது.

- என்னையா யாரென்று கேட்கிறீர்கள் ? உருவத்தின் குரலில் இடியின் வலிமையும், சிங்கத்தின் கர்ஜனையும் கலந்திருந்தது. அந்தப்புர காமாண்டோகளிற்கு இந்தக் குரலை முன்பு எங்கோ கேட்ட உணர்வு தோன்றி மறைந்தது.

- ஆம், யார் நீ? காமாண்டோக்களின் தலைவன் குரலில் உறுதி அதிகரிக்க எத்தனித்து, தோற்றது.

- என்னை நன்றாகப் பாருங்கள் வீரர் தலைவனே, என் கண்களைப்பாருங்கள், முறுக்கேறிய இந்த உடலைப் பாருங்கள், உளி ஏந்திய இந்தக் கரங்களைப் பாருங்கள், கவிதை படைத்த இந்த விரல்களை பாருங்கள். ம்ம்.. நன்றாகப் பாருங்கள். வன்முறையும், மதுவும், காமமும் மறைத்து திரையிட்டிருக்கும் உங்கள் நினைவுகளை அவை விழித்தெழச் செய்கின்றனவா என்று பார்க்கலாம்

மாடத்தில் ஒளிர்ந்த விளக்குகளின் பிரகாசம் அந்த உருவத்தின் முகத்தை தெளிவாக பார்த்தறிய உதவவில்லை என்பதால் வீரர் தலைவன் அந்த உருவத்தை சற்று நெருங்கி இரு அடிகள் எடுத்து வைத்தான். அந்த உருவத்தின் முகம் இப்போது அவனிற்கு தெரிந்தது. பேரிடி அவன் மேல் வீழ்ந்தது. அவன் குரல் திக்கியது.

- நீயா? என்ற வீரர் தலைவன் குரலில் நடுக்கம் சேர்ந்திருந்தது

-ஆம், நானேதான். ஆனால் முன்பு போல் உங்களைக் கண்டு இந்த மாடத்தில் நடுங்கி, ஒடுங்கி உறையும் புறா அல்ல நான், உங்கள் உயிர்களெல்லாம் மறுபிறப்பே வேண்டாம் எனக் கதற வைக்கும் வகையில் உங்களைக் கூறு போடும் சுறா நான். இளவரசி குந்தவியை நான் உங்கள் முன் கடத்திச் செல்கிறேன் வீரம், திறமை இருந்தால் காப்பாற்றிக் கொள்ளுங்கள் என்றவாறே மர்ம உருவம் மாடத்திலிருந்து கீழே மின்னல் வேகத்தில் பாய்ந்தது.

- ஆயன சிற்பி, வீரக் கவி, புரட்சிக்காரன் என்ற சொற்களை வீரர் தலைவன் உதடுகள் திகிலுடன் முனுமுனுத்தன. மாடத்திலிருந்து கீழே குதித்து குதிரை வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த உருவத்தை நோக்கி விற்களையும், அம்புகளையும் எய்ய முனைந்த வீரர்களை தடுத்த வீரர் தலைவன்,

- ஆயுதங்கள் குறி தவறிப் பாயட்டும், உங்கள் மேல் பொய்க் காயங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள், இங்கு பெரும் மோதல் நிகழ்ந்ததாக காட்டிக் கொள்ளுங்கள். குந்தவி எனும் தொல்லை இன்றுடன் ஒழிந்தது. ரஃபிக், எங்களைக் குந்தவியிடமிருந்து காப்பாற்றிய தெய்வமே உனக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்வோம். இது குருஜி குத்தானந்தா மேல் சத்தியம் என்று உணர்ச்சிவசப்பட்டான்.

வீரர்கள் விட்ட அம்புகள், விற்கள் என்பன அந்தப்புர பூங்காவனத்தின் செடி, கொடிகளை தாக்கிக் கொண்டிருக்க, சளைக்காத வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான் அவன். ஆம் முன்பொருகாலத்தில் அவன் ஆயனச் சிற்பி, வீரக் கவி, இன்று குத்து நகரமே அஞ்சும் புரட்சிக்காரன். குத்து நகர மன்னன் மகள் குந்தவியின் முன்னாள் காதலன். இன்று காதலை இழந்து அவளையே கடத்திச் செல்லும் கயவன். அவன் பெயர் ரஃபிக். அவனிற்கு பிடித்த வார்த்தை குவிக்.

- யாரங்கே?

- நாங்கள் மட்டும்தான் நிற்கிறோம் வீரர் தலைவரே

- குத்து நகர மன்னனிற்கு இந்த மகிழ்ச்சியான அதிர்ச்சியான செய்தியை உடனே தெரிவியுங்கள்

- ஒகே ..பாஸ்

- அதன் பின்பு இந்த மகிழ்சியான தருணத்தைக் கொண்டாட ஒரு குளிர் பீர் விருந்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்.

- ஜெய் ஜக்கம்மா ஜாலியோ ஜாலி பாஸ்

- அது மட்டுமல்ல, துகிலுரி நடன அழகிகளின் ஆட்டம் தூள் பறக்க வேண்டும். ராஜ மந்திரவாதிக்கும் அழைப்பு வையுங்கள்.

- அவரில்லாமாலா…. .ஏய் டண்டனக்கா டனக்கு னக்கா டனக்கு டனக்கு டன்கு டங்கா…..

[ இன்னும் வேணுமா!]

Friday, May 28, 2010

ரேப் ட்ராகன் - 1


பட்டுக் கைக்குட்டை

குத்து நகரில் இரவு தியானித்துக் கொண்டிருந்தது. நகரின் கேளிக்கைகளிற்கு அடிமையாகிவிட்ட நீசர்களின் போதை கலந்த குரல்கள் மட்டும் இரவின் தியானத்தைக் கலைத்தபடியே இருந்தன. பிரபஞ்சம் எங்கும் புகழ் பெற்ற குத்து நகர அழகிகளின் மோகம் கலந்த க்ளுக் சிரிப்பொலிகள் இரவின் குளிரை ஊதிப் போக்கின. ஆஹா!! அழகிகளின் சிரிப்பொலிகளில்தான் எத்தனை ராஜ்யங்கள் புதையுண்டு கிடக்கின்றன.

நகரின் அழகான பகுதியில் கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது குத்து நகர அரண்மனை. புரட்சிக்காரர்களின் புண்ணியத்தால் நகரில் காவல் கெடுபிடிகளிற்கு பஞ்சமில்லாது இருந்தது. அரண்மனையைச் சுற்றி சுற்றி கடுங்காவல் உடுக்கடித்தது.

அரண்மனையின் மேற்குப்புறத்தில் ராஜலேடிகள் தங்கும் அந்தப்புரம் அமைந்திருந்தது. அழகிய பூங்காவனம், நீச்சல் தடாகம், அல்லி, செந்தாமரை, நீர் மல்லி போன்ற பூக்கள் மிதக்கும் சிறு வாவிகள் , பள்ளியறைகள், பஞ்சணைகள், அனுபவசாலிகளின் கண்களிற்கு மட்டுமே தெரிந்திடும் வியாக்ரா குளிகைகள்.

அந்தப்புரத்தின் அந்த அழகான பூங்காவனத்தினுள் ஒளிர்ந்த விளக்குகளின் மந்தமான பிரகாசத்தைக் கிழித்துக் கொண்டு அந்த உருவம் வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது. அதன் வேகத்தில் ஒரு அழகு ஒட்டியிருந்தது. தன் வேகமான நகர்வால் அந்தப்புரக் கட்டிடத்தை நெருங்கிய அந்த உருவம், அந்தப்புரத்தின் தூண் ஒன்றைப் பற்றி பரபரவென உடும்பு ஸ்டைலில் தூணில் ஏற ஆரம்பித்தது.

அந்தப்புர மாடமொன்றில் குதித்து இறங்கிய அவ்வுருவம், சத்தம் எழுப்பாது மாடத்தின் அருகே அமைந்திருந்த பள்ளியறையை நோக்கி நகர்ந்தது. பள்ளியறையின் உள்ளே கிடந்த பஞ்சணை மீது அழகெல்லாம் ஒன்றாய் சேர்த்து செய்த சிலையென உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிறாள் குத்து நகர இளவரசி குந்தவி.

பஞ்சணையில் மலர்ந்து குலுங்கும் பூந்தோட்டமாக உறங்கும் இளவரசி குந்தவியின் அழகை அந்த உருவம் ஒரு கணம் ரசிக்கவே செய்தது. ஆனால் அதன் மனம் இது நல்லதல்ல என்று உருவத்திற்கு சுட்டிக்காட்டியது. தன் மனதை திட்டிக் கொண்டே இளவரசி குந்தவியின் மயக்கடிக்கும் அழகிலிருந்து விடுபட்ட அந்த உருவம் உடனடியாக செயலில் இறங்க ஆரம்பித்தது.

பைங்கிளி குந்தவியின் பஞ்சனையை பூனைப் பாதங்களில் நெருங்கிய அவ்வுருவம், அவள் மார்புகள் அலைகள் போல் ஏறி இறங்குவதைக் கண்டு ஏங்கியது. குந்தவி தன் வாளிப்பான தேகத்தில் பூசியிருந்த வாசனைத் திரவியங்களின் கிறங்க வைக்கும் நறுமணம் உருவத்தை உன்மத்தம் கொள்ளவைத்தது. சிறிதும் தயங்காது அவ்வுருவம் குந்தவியின் முகத்தின் மேல் ஒரு பட்டுக் கைக்குட்டையை மென்மையாக விரித்தது.

அப்பட்டுக் கைக்குட்டையில் தடவியிருந்த மயக்கமருந்தானது இளவரசி குந்தவியின் சுவாசத்தோடு கலந்து அவள் உடலினுள் பரவ ஆரம்பித்தது. குந்தவியின் சுவாசம் பட்ட அப்பட்டுக் கைக்குட்டையில் ஒரு விசித்திர உருவம் புலனாக ஆரம்பித்தது. குந்தவி முழு மயக்க நிலையை அடைந்தபோது பட்டுக் கைக்குட்டையில் புலனாகிய உருவம் தெளிவாக தெரிந்தது. தன் சிறகுகளை தூக்கி மடக்கியபடி நின்றிருந்த ஒரு ட்ராகனின் உருவம் பட்டுக் கைக்குட்டையில் முழுமையாகியிருந்தது.

பஞ்சணையில் மயங்கிய நிலையில் கிடந்த குந்தவியை தன் கைகளில் அள்ளிக் கொண்ட மர்ம உருவம், மாடத்தை நோக்கி விரைவாக ஓடத் தொடங்கியது.

[தொடரும்]