Monday, December 22, 2008

லார்கோ வின்ச் -விமர்சனம்








லார்கோ வின்ச்

இயக்கம்- JEROME SALLE

திரைக்கதை- JEROME SALLE,JULIEN RAPPENEAU

நடிப்பு- TOMER SISLEY(LARGO), KRISTIN
SCOTT THOMAS(ANN FERGUSON), MIKKI MANOJLOVIC(NERIO),GILBERT MELKI(FREDDY KAPLAN)


தயாரிப்பு- பிரான்ஸ்-WILD BUNCH, PAN EUROPEAN











நண்பர்களே,

அ.கொ.தீ.க தலைவரான பயங்கரவாதி டாக்டர் செவென், எனக்கிட்ட கட்டளை உங்களிற்கு நினைவில் இருக்கலாம். தலைவர் நமீதாவோடு தலைமறைவாகி விட்டார் என்பதற்காக நான் திரிஷாவோடு குளிர் காய முடியாது. தலைவர் எனக்கிட்ட பணியை நான் செய்து முடிக்காவிடில் , என்

தொலைபேசியின் மீதுள்ள, ஒளிர்ந்து ஒளிர்ந்து அணையும் சிகப்பு பல்பில் ஒர் குண்டு வைத்து என் கதையை முடித்து விடுவார்,தலைவர். இது எனக்கு தேவையா. ஜெனிலியாவுடன் , தலைவரிற்கு தெரியாது, நான் ஆடப்போகும் ஆட்டங்களை ஒர் திரைப்படத்திற்காக இழப்பதா. எனவே இன்று திரைப்படத்தினை ஓடிச்சென்று பார்த்தேன். விமர்சனம் இதோ.




விமர்சனத்திற்குள் செல்லு முன், லார்கோவைப் பற்றி விரிவாக அறிய விரும்பும் நண்பர்களிற்கு, பின் வரும் இரண்டு வலைப்பூக்களின் வாசத்தில் திளைக்க வேண்டுமென, தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.



லார்கோ வின்ச்சின் கதை திரைப்படமாக தயாராகிறது என்பதனை அறிந்தபோது எனக்குள் கொப்பளித்த உற்சாகம், அது ஒர் பிரான்ஸ் தாயாரிப்பு என்பதை நான் அறிந்து கொண்ட போது மிக வேகமாக வடிந்து போனது. மிகப் பிரபலமான சொதப்பல்களை அவர்கள் சினிமா உலகிற்கு சளைக்காது வழங்கியிருக்கிறார்கள். உ-ம் 1- BLUEBERRY, 2-5th ELEMENT, 3-BABYLON AD. விதிவிலக்காக சில அருமையான படங்கள் வந்ததும் உண் டு உ-ம் 1- CRYING FREEMAN, 2-MESRINE 1&2

என்னிடம் மிஞ்சியிருந்த எதிர்பார்ப்பும் லார்கோவின்ச் திரைப்படத்தின் ட்ரெயிலரை, நான் பார்க்க நேர்ந்த போது காலியானது.பாவம்,லார்கோ வின்ச் என நினத்துக்கொண்டேன். ஆனால் இன்று திரையரங்கில் படத்தினை பார்த போது, என் முன்கூட்டிய முடிவுகள் யாவும் தவிடு பொடியாகியது.
லார்கோ வின்ச்சே கண்ணீர் விடும்படியாக, அருமையான ஒர் படத்தினை தந்திருக்கிறார் இயக்குனர்.

HONGKONGல் தனது சொகுசுக்கப்பல் அருகில், நீரில் மூழ்கி இறந்த நிலையில் நீரியோ வின்ச்சின் உடல் கண்டுபிடிக்கப்படுகிறது. இதே சமயம் போதைப் பொருள் கையிருப்பு குற்றத்திற்காக பிரேசிலில் சிறையிலடைக்கப்படுகிறான் லார்கோ. வின்ச் குழுமத்தின் தலைமயேற்று அதனை தங்கள் உரிமையாக்கி கொள்ள, மறைமுகமாக செயற்படுகின்றன, சில சக்திகள். இச் சாவால்களை எவ்வாறு லார்கோ எதிர் கொள்கிறார் என்பதை விறுவிறுப்பாக காட்டியிருக்கிறார்கள்.

லார்கோ வின்ச்சின் ,முதல் 4 ஆல்பங்களைத் தழுவி அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையில், மூலக்கதையின் முக்கியமான கருவிலிருந்து விலகாமல், புதிய பாத்திரங்களை அறிமுகப்படுத்தியும், லார்கோ வின்ச்சின் ரசிகர்களிற்கு நன்கு பழகிப்போய்விட்ட கதாபாத்திரங்களை நீக்கியும், கதை நடைபெறும் சில இடங்களை மாற்றியும், லார்கோ வின்ச்சின் DIE HARD ரசிகர்களிற்கு வித்தியாசமான விருந்து படைத்திருக்கிறார்கள் இயக்குனரும், திரைக்கதையாசிரியரும்.

லார்கோவை இதுவரை படித்திராதவர்கள்,அறியாதவர்கள் கூட, லார்கோவை விரும்பக்கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் கதை நகர்த்தப்படுகிறது. மிக நிதானமான வேகத்துடன் , அதே சமயம் தொய்வே ஏற்பாடத வகையில் உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதையை பாராட்டியே ஆகவேண்டும். லார்கோவின் கடந்த காலங்கள் திரையில் வரும் போதெல்லாம் மனம் நெகிழ்ந்து விடுகிறது. TOMER SISLEY, லார்கோவின் பாத்திரத்தில் என்னை மயக்கி விட்டார், கதையில் PHLIP FRANCQ வரைந்த சில காட்சிகளை , எங்கள் கண்முன் தன் ஒளிப்பதிவால் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர்க்கு ஒர் ஸ்பெஷல் ஷொட்டு. லார்கோவின் கிண்டல் கலந்த உரையாடல்களிற்கு, அரங்கில் சிரிப்பு வெடி வெடிக்கிறார்கள். லார்கோவின் பிரத்தியேகப் பணியாளனாக வரும் GAULTIER பாத்திரம் கனகச்சிதம். ஏற்கனவே கதைகளை படித்த வாசகர்களிற்கு முதலில் ஒர் அதிர்ச்சி, பின் பிறிதொரு அதிர்ச்சி என ஆழமாகவும், அழகாகவும் சஸ்பென்ஸை தக்க வைத்திருக்கிறார்கள்.

படத்தினை JEAN VAN HAMME பார்த்தால் நிச்சயம் மனம் நெகிழ்வார். 2010ல் வெளிவரப்போகும் 2ம் பகுதிக்கான ஆயத்த வேலைகள் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டன. படத்தில் அதிரடி ஆக்‌ஷன்கள் குறைவு தான். ஆனால் அதிரடி மட்டும் தான் லார்கோவின்ச் அல்ல. ஒர் உள்ளம் கொண்ட மனிதனாக லார்கோவை சித்தரித்து எங்கள் உள்ளங்களை கொள்ளை கொண்ட JEROME SALLE க்கு வழங்குகிறேன் ஒர் மலர்க்கொத்து.

செல்லமாக நவாஜோ மதகுரு என்று என்னால் அழைக்கப்படும், என் துணைவியாரின் கருத்து- QOS ஜேம்ஸ்பாண்ட் படத்தைவிட நன்றாக இருந்தது

என் மதிப்பீடு *****
போட்டோக்களில் - TOMER SISLEY & KRISTIN SCOTT THOMAS

6 comments:

  1. ப்ரெஞ்ச் படங்களில் ஹாலிவுட் அளவிற்கு பிரமாண்டம் இருக்காது என்பதால், இந்த படத்தை பற்றி ஆர்வம் காட்டாமல் இருந்தேன். அது மட்டுமல்லாமல், கதையில் படித்துவிட்டு திரைப்படத்தில் பார்க்கும்போது ஏதோ ஒன்று கண்டிப்பாக குறைகின்றது. விதி விலக்குகள் வெகு சில படங்களே.

    இந்த படத்தில் அவ்வாறான ஏமாற்றம் உங்களுக்கு ஏற்படவில்லை என எழுதியிருக்கிறீர்கள். கண்டிப்பாக பார்த்து விடுகிறேன்.

    அகொதீக தலைவரை பற்றிய உப தகவல்களை அடுத்த பதிவுகளில் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். கழக இரகசியங்கள் வெளியே சொல்லக்கூடாது.

    நமீதா, ஜெனிலியா - ஜேம்ஸ்பாண்ட் செய்ய வேண்டிய வேலைகளையெல்லாம் நீங்களே செய்தால் ஜேம்ஸ்பாண்டுக்கு என்னதான் வேலை?

    ReplyDelete
  2. Hi, In my small days I used to read comic stories. Specially James bond's stories. After long time i read your stories. I like your writing style ( mozi nadai). Its simple with deep meaning. It’s induced my reading thirst again. I read you comments on largo winch film. its great. I'm anxious to watch that film. Eagerly waiting for your next issue.

    Cheers,
    Tharani david

    ReplyDelete
  3. அருமையான பதிவு, ஒரு கவிஞருக்கே உண்டான மொழி அமைப்பில் வெற்றி நடை போட்டு இருகிறீர்கள். ஒரு ஐரோப படம் இவ்வளவு நேர்த்தியாக எடுத்து இருப்பார்கள் என்பதே வெற்றியின் முதல் அடையாளம். படம் பார்க்கும் ஆவல் அதிகம் பண்ணி விடீர்கள். பார்த்து விட்டு மீண்டும் கருத்தை பதிகிறேன். இதற்க்கு முன் கடைசியாக நான் மிகவும் ரசித்த படம் Take அவே. நமது கலாசாரத்துக்கு ஒத்து போன ஒரு படம், ஏற்பது பார்த்து உள்ளீர்களா ?. இப்போது அந்த வரிசையில் இன்னும் ஒரு படம் என்று நினைக்கிறேன்.

    நவஜோ மதகுரு, என்ன ஒரு அருமையான அடைமொழி. அவர்கள் கூறியது மிக சரி. QOS உண்மையிலேயே எல்லாரையும் ஏமாற்றிய ஒரு படம்.

    ஒரு கருத்து, உங்கள் பதிவுகளுக்கு இடையே சிறிது கால இடைவெளி விட்டால், தாமதமாக வரும் அன்பர்களும் தங்கள் கருத்துக்களை முழுவதுமாக சேர்க்க உதவும். நல்ல பதிவு, வெறும் 1,2 பின்னோடங்களுடன் பிரதிபலிப்பது நன்றாக இல்லை. ஒரு கால வரையை வகுத்து கொண்டு, உங்கள் படைப்புகளை background ல் தயாராக்கி வைத்து கொள்வது இது வரை பதிந்தது மூலம் நான் கற்று கொண்ட பாடம்.

    நமீதா, ஜெனிலியா, ஓவராக இல்லை. எங்களுக்கும் சில பேரை விட்டு வையுங்கள் அயல் நாட்டு தலைவரே :).

    கடைசியாக, உங்கள் பதிவினூடே என்னுடைய வலை பதிவுக்கு சுட்டி அமைததர்க்கும் நன்றி. :)

    தொடரட்டும் உங்கள் வித்தியாசமான பதிவுகள்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  4. ஜோஷ், தயங்காது படத்தினை பாருங்கள்,இயலுமான வரை என் ஜேம்ஸ்பாண்ட் வேலைகளை குறைத்துக் கொள்கிறேன்.கருத்துக்களிற்கு நன்றி.உங்கள் ஆதரவை தொடருங்கள்.

    டேவிட் ,வருகைக்கும், கருத்து பதிவிட்டதிற்கும் நன்றி. தொடர்ந்து தயங்காது உங்கள் கருத்துக்களை பதிவீர்கள் என எதிர்பார்க்கிறேன்.

    ரஃபிக், மாதத்தில் ஒருஅல்லது இரு காமிக்ஸ் பற்றிய பதிவை இடுவதாக தீர்மானித்துள்ளேன். நான் ரசித்து பார்த்த திரைப்பட விமர்சனங்களையும் பதிவதாக உள்ளேன். உங்கள் தொடர்ந்த ஆதரவிற்கும், கருத்துக்களிற்கும் என் நன்றி

    ReplyDelete
  5. கனவுகளின் காதலரே,

    அற்புதமான பதிவுகளை தொடர்ந்து வழங்கி எங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டீர்கள். தொடர்ந்து எழுதுங்கள். அதற்காக நீங்கள் மாதம் இரண்டு என்று உங்கள் கவிதைகளை (பதிவுகளை) குறைத்து கொள்ள வேண்டாம்.

    நான் (பல பிரச்சினைகள்), செழியன் (பணியில் மூழ்கி விட்டார்), மருத்துவர் சின்ன அய்யா (மனித நட மாட்டம் இல்லாத காட்டுக்கு இட மாற்றம்), ஜோஸ் (ஊர் பயணம் மற்றும் இணைய இணைப்பு தடை), அய்யம்பாளையம் (இணைய இணைப்பு தடை) போன்ற காரணங்களால் பின்னுட்டம் இட இயலவில்லை. அதனால் மனம் தளர வேண்டாம்.

    தொடர்ந்து எழுதுங்கள். நாங்கள் அனைவரும் முடிந்தால் ஒவ்வொரு வாரமும் ஒரு பதிவை இட முடிவு செய்து உள்ளோம். நீங்களும் அவ்வாறு செய்தால் நாங்கள் மனம் மகிழ்வோம். பிறகு ஜோஸ் அவர்களின் "இதயம் இனிக்கும், கண்கள் பணிக்கும்".

    இப்போது இந்த பதிவிற்கு வருவோம்:

    //தலைவர் நமீதாவோடு தலைமறைவாகி விட்டார்// இது உண்மையா? தலைவர் இதனை கடுமையாக மறுக்கிறார்.

    //ஜெனிலியாவுடன் , தலைவரிற்கு தெரியாது, நான் ஆடப்போகும் ஆட்டங்களை ஒர் திரைப்படத்திற்காக இழப்பதா// நவஜோ மதகுருவின் துணைவிக்கு இந்த வார்த்தைகள் அனுப்ப பட்டு விட்டன. அடுத்த வாரம் உங்களை மருத்துவ மனையில் சந்திக்கிறேன்.

    //மிகப் பிரபலமான சொதப்பல்களை அவர்கள் சினிமா உலகிற்கு சளைக்காது வழங்கியிருக்கிறார்கள். உ-ம் 1- BLUEBERRY, 2-5th ELEMENT, 3-BABYLON AD. விதிவிலக்காக சில அருமையான படங்கள் வந்ததும் உண் டு உ-ம் 1- CRYING FREEMAN, 2-MESRINE 1&௨// உண்மை. உண்மை.

    //லார்கோ வின்ச்சே கண்ணீர் விடும்படியாக, அருமையான ஒர் படத்தினை தந்திருக்கிறார் இயக்குனர்// ஆவலுடன் காத்து இருக்கிறோம்.

    //லார்கோவை இதுவரை படித்திராதவர்கள்,அறியாதவர்கள் கூட, லார்கோவை விரும்பக்கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும் கதை நகர்த்தப்படுகிறது// இதைத்தான் சினிமா ரசிகர்கள் எதிர்பார்கிறார்கள்.

    கூடிய விரைவில் இந்த படத்தை பார்த்து விட்டு நானும் ஒரு விமர்சனம் (ஆங்கிலத்தில் தான்) இடுகிறேன்.

    நன்றியுடன்,
    கிங் விஸ்வா.

    ReplyDelete
  6. Hi i need ur review of ONEDAY English movie i thought u heard abt that movie
    kindly u have give is possible
    gm_dinesh@yahoo.com

    ReplyDelete