பூமியில் பனி யுகம் தன்னாதிக்கத்தை செலுத்திக் கொண்டிருக்கிறது. மனியின் [MANNY] ஜோடியான எலி [ELLIE] கர்ப்பமான நிலையில் பிரசவ காலத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. பிறக்கப் போகும் குட்டிக்காக ஒர் அழகிய பனிப்பூங்காவை உருவாக்குகிறான் மனி.
மனியின் நண்பனான டியாகோ, குடும்ப வாழ்க்கை என்பது தனக்கு ஒத்துப் போகாது என்று கூறி, தனியே தன் வாழ்வை தான் தொடரப் போவதாகக் கூறி பிரிந்து செல்கிறான்.
இவர்களின் நண்பனான சிட், தானும் ஒர் குடும்பத்தை உருவாக்கி மகிழ்வாக வாழ வேண்டும் என ஏங்குகிறான். பனிக்குகை ஒன்றில் தவறுதலாக விழும் சிட், அங்கு தனியே விடப்பட்டிருக்கும் மூன்று ராட்சத முட்டைகளை தன் குழந்தைகள் எனக் கூறி எடுத்து வந்து விடுகிறான்.
முட்டைகளை பாதுகாப்பாக தன்னிடத்திற்கு எடுத்து செல்லும் சிட் முட்டைகளுடன் செல்லம் கொஞ்சி விட்டு உறங்கிப் போகிறான். அவன் கண் விழிக்கும் போது முட்டைகள் பொரித்து வெளிவந்த மூன்று அழகிய டைனோசார் குட்டிகள் சிட்டை தங்கள் தாய் என எண்ணி பாச மழை பொழிகின்றன. அக்குட்டிகளை பொறுப்பாக வளர்க்க முடிவு செய்கிறான் சிட்.
இதற்கிடையில் மறைவிடத்தில் தான் இட்ட முட்டைகளை தேடி வருகிறது மம்மி டைனோசார். தான் முட்டைகளை இட்ட இடத்திலிருந்து அவை காணாமல் போனது கண்டு மம்மி டைனோசார் கோபம் கொள்கிறது. தன் வாரிசுகளைக் களவாடிய களவாணி யாரென்று அக்கம் பக்கத்தில் தேட ஆரம்பிக்கிறது மம்மி டினோசார்.
தேடல் வேட்டையின் போது சிட்டையும், மூன்று டைனோசர் குட்டிகளையும் கண்டு கொள்ளும் மம்மி டைனோசார், அவர்களை தன் வாயில் கவ்விக் கொண்டு தான் வாழும் பிரதேசத்திற்கு சென்று விடுகிறது.
தங்கள் அன்பு நண்பன் சிட்டைக் காப்பாற்ற நிறைக் கர்ப்பமாகவுள்ள எலியுடன் கிளம்புகிறார்கள் மனியும், டியாகோவும். அவர்களிற்கு அறிமுகமில்லாத டைனோசார்களின் புதிய உலகில் நுழையும் அவர்களிற்கு உதவிக்கு வந்து சேர்கிறான் பக் [BUCK].
வழமை போன்றே கூரான பற்கள் கொண்ட அணிலான ஸ்கிராட் ஒர் பருப்பை கைப்பற்றுவதற்காக எடுக்கும் பிரம்ம பிரயத்தனங்களுடன் ஆரம்பமாகிறது படம். இதில் அவரிற்கு போட்டியாக ஒர் பெண் அணிலை சேர்த்திருக்கிறார்கள், இவர்களிற்கிடையிலான மோதல்களும் பின்னர் அது காதலாக மாறுவதும் தனி டிராக். அவர்களின் டாங்கோ நடனம் செம சூடு.
குடும்பம், நட்பு, தாய்ப்பாசம் என செண்டிமெண்ட் பனியை அள்ளித் தூவியிருக்கிறார்கள். சிட் பாத்திரம் குடும்பத்திற்காக ஏங்கி, டைனோசார் குட்டிகளை பாசத்துடன் வளர்ப்பதும், மம்மி டைனோசாருடன் தன் வளர்ப்பு குழந்தைகளின் நற் பழக்கங்களிற்காக மோதுவதும், குட்டி டைனோசார்களின் மனதைக் கொள்ளை போட அவர்கள் இருவரும் போட்டி போடுவதும் அருமை. தன் குட்டிகளுடன் சேர்த்து சிட்டையும் தன் அரவணைப்பில் உறங்க வைக்கும் மம்மி டைனோசார் நெகிழ வைக்கிறார்.
படத்தில் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விடும் பாத்திரம் பக். இலையால் மூடிய ஒற்றைக் கண், ருடி எனும் வெள்ளை டைனோசாரின் பல்லில் செய்த வாள் என ஜாக் ஸ்பாரோ கெட்டப்பில் கிறுக்குத்தனமான சேஷ்டைகளில் கதற அடிக்கிறார். காப்டன் ஆஹாப் மொபிடிக்கின் மேல் கொண்ட வஞ்சம் போல், முன்பு நடந்த ஒர் மோதலின் போது தன் ஒரு கண்ணை வாங்கி விட்ட கொடூர வெள்ளை டைனோசாரான ருடியின் மேல் பக் கொண்டுள்ள வஞ்சம், ருடியின் குரலைக் கேட்கும் போதெல்லாம் பக் தரும் ரியாக்ஷன் என தன் தனி ஸ்டைலால் மிகச்சிறந்த பாத்திரமாக மிளிர்கிறார் அன்பு நைனா பக்.
கிளைமாக்ஸ் காட்சிகளில் பிரசவ வேதனையில் துடிக்கும் எலி, அவளை கொன்று தின்று விட முன்னேறும் கொடிய சிறிய டைனோசார்கள், அவற்றினை தடுத்து தாக்கும் மனி, டியாகோ, எரிமலைக் குழம்பு ஆற்றில் தன் உயிரிற்காக போராடும் சிட், அவனைக் காப்பாற்ற, பறக்கும் டைனோசாரில் தன் எடுபிடி சிஷ்யர்களுடன் பறக்கும் பக் என இப்படியான ஒர் அசத்தல் ஆக்ஷனை சமீப காலத்தில் நான் பார்க்கவில்லை. அந்த பறக்கும் டைனோசார்கள் சேஸிங் காட்சி தூள்.
புதிதாகப் பிறக்கும் அந்த மமூத் யானைக்குட்டி அழகோ அழகு. பக் எடுக்கும் ஒர் கலக்கலான முடிவுடன் டைனோசார்கள் உலகை விட்டு தாங்கள் வாழும் பகுதிக்கு நண்பர்கள் திரும்புவதுடன் நிறைவடைகிறது படம். மகிழ்சியாலும், களிப்பாலும் எங்கள் மனமும் நிறைவடைகிறது. படத்தை சிறப்பாக இயக்கியிருப்பவர் CARLOS SALDANHA. பனி யுகத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிய அதே இயக்குனர்.
நண்பர்கள் யாவரும் பார்த்து மகிழ வேண்டிய சிறப்பான சித்திரம். (****)
கெட்ட ஆட்டம் போட
அன்பு நண்பரே,
ReplyDeleteகடந்த பனியுகம் திரைப்படங்களையும் பார்த்துள்ளேன். சிறப்பான கதையம்சம், சரியாக வடிவமைக்கப்பட்ட கதாபாத்திரங்கள் (குறிப்பாக அந்த அணில்), நல்ல செறிவான திரைக்கதை என புகுந்து விளையாடி இருப்பார்கள்.
இது போன்று இரண்டு ஹிட்டுகள் கொடுத்து விட்டால் மூன்றாவது பெரும்பாலும் சொதப்பலாகதான் இருக்கும். ஸ்டார் வார்ஸ் முதலாக இதனை பார்த்து வருகிறோம்.
உங்கள் விமர்சனத்தை பார்க்கும்போது இதிலும் பின்னி எடுத்திருக்கிறார்கள் போல.
கண்டிப்பாக பார்த்து விடுகிறேன். இதுபோன்ற திரை விமர்சனங்கள் மற்றும் புத்தக விமர்சனங்களும் தொடர வேண்டும் என்பது என் அவா.
உங்கள் விமர்சனமே படம் பார்க்க தூண்டுகிறது.
ReplyDeleteஅழகிய நடை.
வாழ்த்துக்கள்!!
காதலரே,
ReplyDeleteபனிக் காலத்தின் முதல் இரண்டு பாகங்களையும் ரசித்து பார்த்திருக்கிறேன்.... அன்பர் ஜோஸ் கூறியதுபோல, வழக்கமாக இப்படி பட்ட படங்களை பாகங்கள் என்ற பெயரில் சிதைத்து கொண்டே செல்வது தான் பாணி, ஆனால் அதை மிஞ்சி பனிக் காலம் 3 ஐ அருமையாக அதே காமடி நடையில் எடுத்துள்ள இயக்குனருக்கு ஒரு பாராட்டு.
என்னடா பனிக்காலக் கதையில் டைனோசார்களை கொண்டு வந்திருக்கிறார்களே என்று ட்ரயிலரை பார்த்து எண்ணி கொண்டிருந்தேன். ஆனால், அதுவே கதையில் ஒரு வித்தியாசத்தை புகுத்தி இருக்கிறது என்று உங்கள் விமரிசனம் மூலம் தெரிகிறது.
வழக்கமாக தன்னந்தனியாக பருப்புடன் ஒரு போரே நடத்தும் ஸ்கிராட்டுக்கு கூட ஜோடி என்று கூறியபின் படத்தில் எப்படிபட்ட கதையம்சம் இருக்கும் என்பதை உணர முடிகிறது.... மொத்தத்தில் எல்லா விஷயங்களையும் கலந்த ஒரு அற்புமான அனிமேஷன் படமாக உருவாகி இருக்கும் போல.
உங்கள் பதிவு, படத்தை பார்க்க வேண்டும் என்ற என் ஆர்வத்தை இரட்டிப்பாக்கியிருக்கிறது. விரைவில் பார்த்து விட்டு மீண்டும் பிரசன்னமாகிறேன். :)
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
காதலரே,
ReplyDeleteToy Strory I & II க்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த படம் ICE AGE முதல் பாகம் . இதை பார்த்த பிறகு தான் அனைத்து Animation படங்களையும் தேடி பிடித்து பார்க்க ஆரம்பித்தேன் .
ICE AGE இரண்டாம் பாகம் முதல் பாகத்தை போல் வெற்றி அடையவில்லை என நினைக்கிறேன் . ICE AGE படங்கள் வெற்றிக்கு ஸ்கிராட் கதாபாத்திரம் முக்கிய பங்கு வகிக்கும் .ஸ்கிராட் கதாபாத்திரத்தின் சேட்டைகளை Trailor மற்றும் Clips பார்த்து விட்டு படம் பார்த்தவர்கள் ஏராளம் .ஸ்கிராட் கதாபாத்திரத்தின் சேட்டைகளை பார்த்து விட்டால் யார்க்கும் படம் பார்க்காமல் இருக்க தோன்றாது.
ICE AGE 3 இன் Trailor ரே அமர்க்களமாக இருந்தது . உங்கள் விமர்சனத்தை பார்க்கும்போது இந்த பாகம் அருமையாக உள்ளது என்பது தெரிகிறது . படங்களுடன் படத்தில் உள்ள கதாபத்திரங்களை பற்றி அளித்த விமர்சனம் இதற்கு முன் இப்படங்களின் பாகங்களை பார்க்காதவர்களுக்கு கண்டிப்பாக பார்க்க தூண்டும் .
காமிக்ஸ் போலவே Animation படங்களையும் சிலர் விரும்புவதில்லை . இத்தகைய விமர்சனத்தால் அவர்கள் எண்ணங்கள் மாறக்கூடும்( Josh அவர்களின் Manga Cartoon விமர்சனத்திற்கு பின் நான் Manga ரசிகனாக ஆனது போல ) .
அருமையான பதிவு காதலரே ! நான் இன்னும் படம் பார்க்கவில்லை பார்த்து விட்டு மீண்டும் வருகிறேன்
நண்பர் ஜோஸ் அவர்களே, இது வரை வந்த பனியுகம் படங்களில் மிகச்சிறப்பானதாக இப்பாகத்தை நான் கருதுகிறேன். காப்டன் விஜயகாந்த் நடித்த ஒர் படம் கூட இரு பாகங்களாக வந்த்து அதில் எது சிறந்தது என்று ஒரு நாள் முழுதும் யோசித்தும் விடையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பர் ரங்கன் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கும், வாழ்த்துக்களிற்கும் நன்றி, தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.
ரஃபிக், நிச்சயமாக நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும், குடும்பம்,பிள்ளை குட்டி, காதல் என நிறைய விடயங்கள் உண்டு :))), வருகைக்கும், கருத்துக்களிற்கும் நன்றி அன்பு நண்பரே.
நண்பர் Tamil k அவர்களே, நீங்கள் கூறுவது உண்மையே, பனியுகம் படங்கள் யாவும் ஸ்கிராட் சம்பந்தப்பட்ட ட்ரெயிலர்களுடனேயே முதல் அறிமுகப்படுத்தப்படும். இந்தப் பாகம் முதலிரு பாகங்களையும் விட எனக்குப் பிடித்திருக்கிறது.
நண்பர் ஜோஸ் அவர்களின் பதிவுகள் நிச்சயமாக பல ரசிகர்களை உருவாக்கியுள்ளன. அதில் ஐயமில்லை. ஆனால் உங்களைப் போன்று முன்வந்து கருத்துக்கள் பதிபவர்கள் அதிகமில்லையே.
உங்கள் மனம் திறந்த கருத்துக்களிற்கு நன்றி நண்பரே, தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவை.
கனவுகளின் காதலன்,
ReplyDeletehere are the download links for this movie:
rapidshare links:
http://rapidshare.com/files/251814013/ce.Age.Dawn.Of.The.Dinosaurs.TS.XviD-Fatal.part1.rar
http://rapidshare.com/files/251814009/ce.Age.Dawn.Of.The.Dinosaurs.TS.XviD-Fatal.part2.rar
http://rapidshare.com/files/251816404/ce.Age.Dawn.Of.The.Dinosaurs.TS.XviD-Fatal.part3.rar
http://rapidshare.com/files/251814085/ce.Age.Dawn.Of.The.Dinosaurs.TS.XviD-Fatal.part4.rar
http://rapidshare.com/files/251815359/ce.Age.Dawn.Of.The.Dinosaurs.TS.XviD-Fatal.part5.rar
no password
hotfile links:
http://hotfile.com/dl/7986711/f3c8e6c/IceAge.3-Fatal.part1.rar.html
http://hotfile.com/dl/7986742/012c5b5/IceAge.3-Fatal.part2.rar.html
http://hotfile.com/dl/7986812/ea3884e/IceAge.3-Fatal.part3.rar.html
http://hotfile.com/dl/7986847/dfbc150/IceAge.3-Fatal.part4.rar.html
http://hotfile.com/dl/7986875/f79988f/IceAge.3-Fatal.part5.rar.html
netload links:
http://netload.in/dateiFqzDNrWygF/IADOTD.part1.rar.htm
http://netload.in/dateiPhI3xz5SbO/IADOTD.part2.rar.htm
http://netload.in/dateiz8UlPSHT2W/IADOTD.part3.rar.htm
http://netload.in/dateiUz0A2r90B0/IADOTD.part4.rar.htm
http://netload.in/dateigNV4qMXT69/IADOTD.part5.rar.htm