1933களின் அமெரிக்கா. சிறையிலிருந்து வெளியேறிய ஜான் டிலிஞ்சர் [ Jhonny Depp ], தன் சகாக்கள் சிலரையும், ஒர் சிறை மீட்பின் மூலம் துணைக்கு சேர்த்துக் கொண்டு, சிக்காகோ பகுதிகளிலுள்ள வங்கிகளை கொள்ளையடிக்க ஆரம்பிக்கின்றான்.
பெடரல் அதிகாரியான எட்கார் கூவர், டிலிஞ்சரை மக்கள் எதிரி நம்பர் 1 ஆக அறிவித்து, அவனைக் கைது செய்வதற்கு பொறுப்பாக மெல்வின் பெர்விஸ் [Christian Bale] எனும் கண்டிப்பான பொலிஸ் அதிகாரியை நியமிக்கிறார்.
அமெரிக்காவின் மோசமான பொருளாதார சரிவிற்கு காரணமான வங்கிகளிற்கும், நிலைமையை சரிவரக் கையாளமலிருந்த அரசின் காவல் துறைக்கும் சவால் விட்டதன் மூலமாக மக்களின் மனதில் சிறிதளாவது இடம்பிடித்துக் கொண்ட குற்றவாளியாக இருக்கிறான் ஜான் டிலிஞ்சர்.
ஒர் சாதாரணக் குற்றவாளியிலிருந்து அவனை வேறுபடுத்திக் காட்ட முயன்று அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர் Michael Mann. பொலிசாரின் டிலிஞ்சர் தேடல் வேட்டையை, 1930களின் அமெரிக்காவை அப்படியே நுணுக்கமாக, கார்கள் முதல் துப்பாக்கிகள் வரை, எங்கள் கண்முன் கொண்டு வந்து காட்டியிருக்கிறார் அவர்.
டிலிஞ்சர் மனித உயிர்கள் மேல் மதிப்பு கொண்டவனாகவும், கொடுத்த வாக்கை காப்பாற்றுபவனாகவும் சித்தரிக்கப் பட்டிருக்கிறான். வங்கி கொள்ளை ஒன்றின் போது, அங்கு பணம் வைப்பிலிட வந்த ஆசாமியைப் பார்த்து நான் வங்கியின் பணத்தை கொள்ளையிடுபவன், உன் பணத்தை பத்திரமாக்கு என்று கூறும் காட்சி அவன் எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒர் சிறு உதாரணம்.
காவல் துறையால் தேடப்படும் ஒர் குற்றவாளியின் காதல் வாழ்க்கை கூட விரைவாக இருக்க வேண்டும் என்பது போல் டிலிஞ்சர், வில்லி [ Marion Cotillard ] இருவரிற்கும் இடையில் மலரும் காதல் வேகமானது. நம்பமுடியாதது. ஆனால் தன் இறுதி வரை தன்னுடன் அக்காதலை எடுத்துச் செல்லும் டிலிஞ்சரும், வில்லியும் நெகிழ வைக்கிறார்கள்.
வில்லி பாத்திரம் ஆரம்பத்தில் பெரிதாக தோன்றாவிடிலும், இறுதிக் கட்ட பொலிஸ் விசாரணைக் காட்சிகளில் அடி மேல் அடி வாங்கி சித்தரவதையுறும் அவர், தன்னை அடித்த பொலிஸ்காரனை கண்களில் பார்த்து பேசும் வசனங்களில் எங்கோயோ போய் விடுகிறார்.
மெல்வின் பெர்விஸ் என்ற கண்டிப்பான பொலிஸ் அதிகாரி பாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல், இறுகிய முகம், குறைவான பேச்சு என சிறப்பாக செய்திருக்கிறார். சட்டத்திற்கு புறம்பான முறைகளை கையாள வேண்டிய நிர்ப்பந்தங்களில் அவர் மெளனமாக உள்ளுக்குள் முறிவதை சிறப்பாக காட்டியிருப்பார். அடிவாங்கி நடக்க முடியாமல் இருக்கும் வில்லியை கழுவல் அறைக்கு அவர் தூக்கி செல்லும் தருணம் அற்புதம். கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் டிலிஞ்சரை நேரில் சந்திக்கும் தருணத்தில் கூட மிக அமைதியாக பண்பட்ட நடிப்பை வழங்குகிறார் பேல். தன் சக அதிகாரியை சுட்டுக் கொன்ற குற்றவாளியை ஒர் துரத்தலின் பின் துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுட்டுக் கொல்லும் காட்சியும், அதற்கு முன்பான மோதலும் உறைய வைக்கும்.
ஜான் டிலிஞ்சர் பாத்திரத்தில் ஜானி டெப், அருமையாக செய்திருக்கிறார். வங்கிக் கொள்ளைகள், கைது செய்யப்படும் போது நிருபர்களிற்கு தரும் கூலான பேட்டி, தன் காதலி வில்லியை பொலிசார் கைது செய்து விடும் போது எதுவும் செய்ய இயலாமல் தவிக்கும் காட்சி. தன்னை கைது செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் விசேட பிரிவின் அலுவலகத்திற்குள் நுழைந்து, பேஸ் பால் ஸ்கோர் கேட்கும் காட்சி, இறுதியில் திரை அரங்கில் ஒர் படத்தின் வசனங்களில் ஆழ்ந்து போகும் காட்சி என அவர் வித்தியாசமான டெப்.
காவல் துறையின் பல வெற்றிகளிற்கு பின்னாக இருப்பது துரோகம் போலும். படத்தின் இறுதிக் காட்சியில் தெருவில் வீழ்ந்து கிடக்கும் அவ்வெற்றியை பார்த்தவாறே ஒர் துரோகம் மெளனமாக நடந்து செல்கிறது. உயிர் பிரியும் கடைசித் தருணத்தில் தன் காதலிக்காக டிலிஞ்சர் சொன்ன வார்த்தைகளை ,சிறையில் இருக்கும் வில்லியிடம் டிலிஞ்சரை சுட்ட பொலிஸ் அதிகாரி கூறுவதுடன் நிறைவடைகிறது படம். கண்களில் சற்று ஈரம் எட்டிப்பார்க்கும் முடிவு அது.
மைக்கல் மானின் மிகச்சிறந்த படம் எனக் கூற முடியா விடிலும் கூட, பாதிப் படம் கடந்த பின்னும் ஒர் பார்வையாளனை கதையுடன் ஒன்ற வைக்க முடியும் என்பதை நிருபித்திருக்கிறார் அவர். Heat க்கு பின்பாக அவரின் சிறந்த படம் இது என்பது என் கருத்து. ( *** )
நண்பரே,
ReplyDeleteஹாலிவூட்டில் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் அழகான முகவெட்டு கூடிய நடிகர்களும் தங்கள் கதாபாத்திரம் உணர்ந்து நடிப்பார்கள். வெறும் வசன உச்சரிப்பு மற்றும் அழகினை வைத்து மட்டுமே படத்தினை எடுத்து விடமாட்டார்கள்.
ப்ராட் பிட் நடித்த ஜெஸ்ஸி ஜெம்ஸ் திரைப்படம் பார்த்தீர்களா? அழகிய நடிகர்களெல்லாம் மோசமான கதாபாத்திரத்தை ஏற்கவே ஆசைப்படுகின்றார்கள்.
மைக்கல் மான் படங்கள் அனைத்தையும் நான் பார்த்ததில்லை என்றாலும், எனக்கு பிடித்தது லாஸ்ட் ஆப் த மொஹிகன்ஸ். அதில் ஒரு பாலத்தை ஒளிப்பதிவாளர் படம் பிடித்து காட்டியிருப்பார். மறக்க முடியாத காட்சி அது.
நிறைவான விமர்சனம்.
நண்பர் ஜோஸ்,
ReplyDeleteநீங்கள் கூறிய ஜெஸி ஜேம்ஸ் எனும் படத்தை நான் பார்க்கவில்லை. மொஹிகன்ஸ் படம் மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதில் வரும் இசை கூட சிறப்பான வரவேற்பை பெற்றது. படத்தை முழுமையாக நான் பார்க்கவில்லை. ஆனால் டானியல் டே லூயிஸிற்கு பெயர் வாங்கி தந்த படங்களில் இதுவும் ஒன்று.
பப்ளிக் எனிமிஸ் படத்தில், எட்கார் கூவர் FBI அமைப்பை தோற்றுவிப்பதற்கான முயற்சிகளில் இறங்குவதையும் காட்டியிருக்கிறார்கள்.
எட்கார் கூவரிற்கு ஆரம்பத்தில் அம்முயற்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டு விட்டாலும், அமெரிக்காவில் குற்றங்களிற்கு எதிராக,நவீன முறைகளைப் பயன் படுத்துவதில் முழுமூச்சாக அவர் இறங்கினார்.
தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டல் மூலம், குற்றவாளிகளை மடக்கல் போன்றன அவரின் கைங்கர்யங்களே. மொத்தத்தில் விசாரணை முறைகளில் நவீனங்களை அவர் எவ்வளவு புகுத்தினாரோ அதே அளவிற்கு மனித உரிமை மீறல்களையும் அவர் அனுமதித்தார், என்பதையும் மிகச் சிறப்பாக படத்தில் காட்டியிருப்பார்கள்.
காவல்துறைக்கு, மீடியாக்களின் ஆதரவு முக்கியம் வாய்ந்தது என்பதை அவர் நன்கு உணர்ந்தவராக இருந்தார்.
கார்களின் மோட்டார் சத்தங்கள் முதல், துப்பாக்கி வேட்டுச் சத்தம் வரை 1930களின் ஓசையையே கொண்டு வந்திருக்கிறார்கள். மைக்கல் மான் மிகவும் நேர்த்தி பார்ப்பவர் என்பது தெளிவு.
ஹாலிவூட் ஆக்டர்கள் வேடத்தை பார்க்கிறார்கள், அழகு என்பது ஒர் அலங்காரம் என்பதை அவர்கள் நன்கே உணர்ந்திருக்கிறார்கள். கத்தரிக் கையன் எட்வர்ட்டாக ஜானி டெப் நடித்த படம் உங்கள் மனதினை நெகிழ வைத்ததிற்கு காரணம் ஜானி டெப்பின் அழகல்ல என்பது நிச்சயம்.
ஹீட் படத்தை உங்கள் நேர வசதிக்கேற்ப ஒர் முறை பாருங்கள். உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
Hi, Thank you for your introduction to the Public Enemies. You gave it in a brief and induced to watch the film. I'll be back after watching the film. Keep it up.
ReplyDeleteகனவுகளின் காதலன்,
ReplyDeletehere is the download links fort this movie:
Rapidshare:Public.Enemies.RARFIX.SFVFIX.REPACK.TELESYNC.XviD-ORC
http://rapidshare.com/files/254329697/Public.Enemies.TELESYNC.XviD-ORC.CD1.part1.rar
http://rapidshare.com/files/254329358/Public.Enemies.TELESYNC.XviD-ORC.CD1.part2.rar
http://rapidshare.com/files/254330239/Public.Enemies.TELESYNC.XviD-ORC.CD1.part3.rar
http://rapidshare.com/files/254328937/Public.Enemies.TELESYNC.XviD-ORC.CD1.part4.rar
http://rapidshare.com/files/254330849/Public.Enemies.TELESYNC.XviD-ORC.CD2.part1.rar
http://rapidshare.com/files/254330431/Public.Enemies.TELESYNC.XviD-ORC.CD2.part2.rar
http://rapidshare.com/files/254329986/Public.Enemies.TELESYNC.XviD-ORC.CD2.part3.rar
http://rapidshare.com/files/254329649/Public.Enemies.TELESYNC.XviD-ORC.CD2.part4.rar
NO PASS, Enjoy.
here is the rarfix
RarFix
Code:
http://rapidshare.com/files/254293524/rarfix.rar
http://hotfile.com/dl/8304276/64bef7c/rarfix.rar.html
http://netload.in/dateiryJLxcjx5O/rarfix.rar.htm
rar fixes for both cds
http://rapidshare.com/files/254304051/index.php_download_orc-pubes1.r47
http://rapidshare.com/files/254303988/index.php_download_orc-pubes2.r47
finally,
http://d01.megashares.com/dl/8c7620b/orc-pubes1cd1_www.movieinfo.blog.com_.avi
http://d01.megashares.com/dl/177f0db/orc-pubes2cd2_www.movieinfo.blog.com_.avi
or
http://www.storage.to/get/JW6DDMXl/orc-pubes1cd1_www.movieinfo.blog.com_.avi
http://www.storage.to/get/HCB71ki8/orc-pubes2cd2_www.movieinfo.blog.com_.avi
or
http://ezyfile.net/6hrbswaofhy6/orc-pubes1cd1_www.movieinfo.blog.com_.avi.html
http://ezyfile.net/dic8paqhwosy/orc-pubes2cd2_www.movieinfo.blog.com_.avi.html
டேவிட் அவர்களே, உங்கள் கருத்துக்களிற்கு நன்றி, தொடருங்கள் உங்கள் அன்பான ஆதரவினை.
ReplyDeleteநண்பர் ரவீந்தர் அவர்களே படங்களை டவுன்லோட் செய்வதற்கு உதவியாக நீங்கள் வழங்கியுள்ள லிங்குகளிற்கு நன்றி. தொடருங்கள் உங்கள் மகத்தான சேவையை.
காதலரே,
ReplyDeleteஎன்ன ஒரே பட மழையாக இருக்கிறது உங்களது பதிவில்? தொடர்ந்து ஹாட்ரிக் அடித்து உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
இந்த படத்தின் கதையை நான் காமிக்ஸ் வடிவில் படித்த நினைவு இருக்கிறது. ஆனால் தமிழிலா, அல்லது ஆங்கிலத்திலா என்று சரியாக நினைவில்லை. உங்களில் யாருக்காவது நினைவிருக்கிறதா?
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
புலா சுலாகி - தமிழ் காமிக்ஸ் களஞ்சியம்
நண்பர் புலா சுலாகி அவர்களே, மைக்கல் மானின் படத்தின் கதை Bryan Burrough என்பவர் எழுதி 2004ல் வெளிவந்த ஒர் நூலைத் தழுவியது.
ReplyDeleteதமிழ் காமிக்ஸ் வல்லுனர்கள் மட்டுமே உங்கள் கேள்விக்கு விடை அளிக்க முடியும் என்று எண்ணுகிறேன்.
இணையத்தில் தேடியதில் கிடைத்த ஒர் பக்கத்தின் சுட்டி கீழே.
http://www.comicvine.com/john-dillinger/29-32248/
உங்கள் வாழ்த்துக்களிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி.
கனவுக் காதலரே,
ReplyDeleteஇப்படத்தை நான் இன்னும் பார்க்க வில்லை .நானும் ஜானி டெப்பின் ரசிகன் தான். மேலும் இதில் Christian Bale வேறு நடித்துள்ளார். கண்டிப்பாக பார்க்க வேண்டும்.
- Limat
நண்பர் Tamil K அவர்களே, கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteகாதலரே, தற்போதைய ஹாலிவுட் சினிமாவின் சிறந்த நடிகர்களின் வரிசையில் முதன்மையான கிரிஸ்டியன் பேல் மற்றும் ஜானி டெப்பின் கூட்டணியில் ஒரு படம், அதுவும் அமெரிக்க நாகரிகத்தின் முன்னோடி வருடங்க்ளில் திரைக்கதை அமைப்பு என்று இந்த படத்தின் முன்னோட்டத்தை பார்த்ததில் இருந்து பார்க்க ஆவலாக காத்திருக்கிறேன். இப்போது உங்கள் நடையில் அந்த படத்தின் சிறப்பம்சங்களை கூறி அந்த ஆசையை மேலும் துளிர்க்க செய்து விட்டீர்கள்.
ReplyDeleteஅன்பர் ஜோஷ் கூறியபின்புதான் இந்த இயக்குனர் லாஸ்ட் மொஹிகன் படத்தின் கர்த்தா என்று இப்போதுதான் நியாபகம் வருகிறது. அருமையான ஒரு படம், கூடவே இசையின் தாலாட்டு என்று ரம்மியமாக எடுத்து சென்றிருப்பார். அனேகமாக சரித்திர பிண்ணணி கொண்ட படங்கள் தான் இந்த இயக்குனரின் கை வந்த கலை போல.
இன்னும் இதன் டிவிடி பிரதி இங்கு கடைகளில் வெளியாகவில்லை. வெளியானவுடன் பார்த்து விட்டு கருத்து பதிகிறேன்.
ரஃபிக் ராஜா
காமிக்கியல்
ரஃபிக், தரமான பிரதியில் தரமான படங்களைப் பார்க்க வேண்டும் எனும் உங்கள் பிடிவாதமான ரசனையை நான் ஏற்றுக் கொள்கிறேன். நல்ல திரையரங்குகளில் படங்கள் பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. அது இன்றும் தொடர்கிறது. கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDelete