தன் தாயின் மரணத்தின் பின், அவள் விட்டுச் சென்ற சொத்துக்களிற்காக ஆசைப்படும் தன் வளர்ப்பு தந்தையால் மனநலம் குன்றியோர்க்கான விடுதி ஒன்றில் சேர்க்கப்படும் ஒரு இளம் பெண், அங்கிருந்து தப்பிக்கும் முயற்சிகளில் இறங்குகிறாள்….
300 திரைப்படத்தின் வெற்றியின் பின்பாக இயக்குனர் ஸாக் ஸ்னெய்டர் இயக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் ஆர்வத்தை தூண்டிவிடுவதில் தோற்றதில்லை. அவரின் சமீபத்திய திரைப்படமான Sucker Punch ம் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி விட்டிருந்தது. அந்த எதிர்பார்ப்புகளையெல்லாம் எதிர்பாராத குத்து மூலம் நாக் அவுட் ஆக்கியிருக்கிறார் இயக்குனர் திலகம் ஸாக் ஸ்னெய்டர் அவர்கள்.
தனக்கு எதிராக மனநலம் குன்றியோர் விடுதியில் ஒரு சதி நிகழப்போகிறது என்பதை அறியும் இளம் பெண்னான பேபி டால், அங்கிருந்து தப்பித்து செல்ல எடுக்கும் முயற்சிகளை இரு வேறு கற்பனை அடுக்குகளில் திரையில் அடுக்குகிறார் இயக்குனர். யதார்த்தம் என்பதற்கு அல்லது உண்மையான நிகழ்வு என்பதற்கு மெலிதான ஸாடோ மாச்சோ அலங்காரப் பூச்சு பூசி, வீடியோ விளையாட்டுகளை விஞ்சிவிடும் வகையிலான அபத்த ஆக்ஷன்களையும்--- கற்பனையே என்றாலும் கூட--- திரையரங்கில் மென்மையான பூமி அதிர்ச்சி ஒன்றின் உணர்வை வழங்கக் கூடிய இசையையும் அதனுடன் கோர்த்து, தன் வழமையான மென்னசைவு ஆக்ஷன்களையும் கலந்து அடுக்கியிருக்கிறார் இயக்குனர்.
ஆனால் யதார்தத்தினை கற்பனையின் மூலம் அழகூட்டல் என்பது எல்லா நேரங்களிலும் எதிர்பார்த்த விளைவுகளை வழங்கி விடுவதில்லை. உலக யுத்தக் காலம், மத்திய காலம், எதிர்காலம், ஜப்பானிய பூதகணங்களின் காலம் என ரசிகர்களை வெவ்வேறு காலப்பகுதிகளில் ஆக்ஷன் விருந்துக்காகவும், சஸ்பென்ஸிற்காகவும் இட்டுச் செல்ல விரும்பிய இயக்குனரின் முயற்சியானது திரைப்படத்தின் இளம் நாயகிகளைப் போலவே அயர்ச்சியையும், களைப்பையும் உருவாக்குகிறது. அந்த இளம் நாயகிகள் போலவே ஸாக் ஸ்னெய்டரின் இப்படைப்பும் விரைவில் கவர்ச்சியை இழந்து ரசிகனை சலிப்பின் உச்சத்தில் நெளிய வைக்கிறது. பயங்கரமான ஆக்ஷன்களை புரியும் இளம் நாயகிகளின் முகபாவங்களையும் நடிப்பையும் உடல்மொழியையும்!! பார்த்து அழுவதா சிரிப்பதா அல்லது தலையை முன்னால் இருக்கும் ரசிகனுடன் மோதுவதா எனும் நிலை உருவாகிறது.
மொத்தத்தில் ஸாக் ஸ்னெய்டரிற்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்களை எல்லாம் அழித்து விடும் அளவில் குத்தாட்டம் போடுகிறது Sucker Punch. திரைப்படத்தில் குட்டைக் கால்சட்டைகள், பாவாடைகளுடன் வரும் நாயகிகளையும் சேர்த்து இத்திரைப்படம் ஒரு கொடூரமான வன்கனவாகவே திரையில் உருப்பெறுகிறது. மொக்கை எனும் சொல்லிற்கு இத்திரைப்படம் அட்டகாசம் எனும் அர்த்தத்தை வழங்குவதில் பெரு வெற்றி கொள்கிறது.
ட்ரெய்லர் [இதுவே போதும்]
//பயங்கரமான ஆக்ஷன்களை புரியும் இளம் நாயகிகளின் முகபாவங்களையும் நடிப்பையும் உடல்மொழியையும்!! பார்த்து அழுவதா சிரிப்பதா அல்லது தலையை முன்னால் இருக்கும் ரசிகனுடன் மோதுவதா எனும் நிலை உருவாகிறது//
ReplyDeleteதலையை முன்னால் இருக்கும் ரசிகனுடன் மோதுவதா..என்ற வரியை படிக்கும் போது சிரிப்பு வெடித்துக்கொண்டு கிளம்பியது.எழுத்தில் இந்த பாணியில் வல்லவர்கள் சுஜாதா மற்றும் அ.முத்து லிங்கம்.ஒரு மோசமான படத்திற்க்கு ஆகச்சிறந்த பாணியில் ஒரு விமர்சனம்.
என்னுடைய நீண்ட நாள் கோரிக்கை இது.தமிழ் படத்திற்க்கு எழுதுங்கள்....நண்பரே.
ஆழ்ந்த அனுதாபங்கள்.
ReplyDeleteபடத்தின் குறியீட்டை எண்ணிக்கையில் கொள்ள நினைத்த என் நண்பரொருவர், கடுப்பாகி விட்டார்.
//எழுத்தில் இந்த பாணியில் வல்லவர்கள் சுஜாதா மற்றும் அ.முத்து லிங்கம்.ஒரு மோசமான படத்திற்க்கு ஆகச்சிறந்த பாணியில் ஒரு விமர்சனம்.
ReplyDeleteஎன்னுடைய நீண்ட நாள் கோரிக்கை இது.தமிழ் படத்திற்க்கு எழுதுங்கள்//
உ.சி.ரசிகரை எழுத்துக்கு எழுத்து வழிமொழிகிறேன். விரைவில் தமிழ் படத்திற்கு உங்கள் விமர்சனம் தேவை - இப்படிக்கு ஒரு ரசிகக் கண்மணி
அப்பிடியே தமிழ் படங்களுக்கான விமர்சனத்தை வரலாற்றுக் காவியமான பொன்னர் - சங்கர் படத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டுகிறேன்.
ReplyDeleteபொன்னர் - சங்கர், ஆங்கிலத்தில டைட்டில் வெச்சா இப்படி வெக்கலாம்: Punch of a sucker (கலைஞர் வசனத்தை சொல்லலப்பா.......)
ஸாக் ஸ்னெய்னர்.. பெரிய ஷாக் கொடுத்துவிட்டாரே. எனிவே மீ எஸ்கேப் காதலரே..
ReplyDelete//மோசமான படத்திற்க்கு ஆகச்சிறந்த பாணியில் ஒரு விமர்சனம்.//
நண்பரை வழிமொழிகிறேன். இருப்பினும் பொன்னர் சங்கரிலிருந்து அவரைத் தமிழ்பட விமர்சனங்களையும் துவங்கச் சொல்வது ரொம்பவே ஓவர். பாவம் காதலர் பயந்து ஓடப்போகிறார்.
ஆகவே காதலர் நண்பரே கலங்கவேண்டாம். இந்த தண்டனை உங்களுக்கு வழங்கப்படாமல் தடுப்பதற்கு ஆவண செய்யப்படும்.
நண்பரே. . தமிழ்ப்படத்தின் விமர்சனம், பொன்னர் சங்கர் படத்திலிருந்து ஆரம்பிப்பது குறித்து எனக்கு மகிழ்ச்சியே. அப்படத்தில், காவிய நாயகன் க்ரசாந்தைப் பார்க்கும்போது, ரேப் டிராகன் தொடரின் இளவரசன் இலுமியைப் பார்ப்பது போலும், வசனம் எழுதிய குருணாநிதியைப் பார்க்கும்போது, அதே தொடரின் புரட்சிவீரன் ரபீக்கைப் பார்ப்பதுபோலும் இருக்கிறது. ஆகவே, ரேப் டிராகன் தொடரின் இரண்டாம் பகுதிக்கு ஒரு முன்னோட்டம் கொடுத்தமாதிரியும் இருக்கும். எனவே, அடிக்கத் துவங்கட்டும் உமது விரல்கள். எழுதப்படத் துவங்கட்டும் ஒரு காவியம். ஆரம்பியுங்கள் !
ReplyDeleteநண்பர் உலக சினிமா ரசிகரே, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. அயல்மொழிப் படங்கள் பார்க்கவே தற்போது ஓய்வு நேரம் கிடைப்பது அரிதாகிவிட்டது, தமிழ் படங்களை ஒரு அரை மணி நேரத்திற்கு பின்பாக பார்க்க முடிவதில்லை :) தாராளமாக ஓய்வு கிடைக்கும் வேளையில் எழுத முயற்சிக்கிறேன் நண்பரே.
ReplyDeleteவிஸ்வா, அனுதாபங்களிற்கு நன்றி. குறியீடுகளை எண்ணியிராவிடிலும் கடுப்பாவது மட்டும் உறுதி :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
நண்பர் கொழந்த, ஏன் ஏன் இப்படி :) பொன்னர் சங்கர் வேண்டாமே வேறு ஏதாவது பார்க்கலாம் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
நண்பர் சரவணக்குமார், மிக்க நன்றி நண்பரே.
நண்பர் கருந்தேள், நீங்களுமா :)) பார்க்க மாட்டேன் பொன்னர் சங்கர் இது உறுதி. காவியம் எல்லாம் இனி இலுமிதான் எழுதுவார் :) ஐ ஆம் த எஸ்கேப்பு... தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
கொடுமை!
ReplyDeleteஇந்தப் படம் செய்த புண்ணியத்தால் அடுத்து ஸாக் ஸ்நைடர் இயக்கவிருந்த சூப்பர்மேன் திரைப்படம் ப்ரீ-ப்ரொடக்ஷன் நிலையிலேயே ஊத்திமூடப்படும் வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
இது நல்லதுக்கா? கெட்டதுக்கா? தெரியலையே?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
காதலரே,
ReplyDelete300 படத்திற்கு பிறகு இப்படி ஒரு மொக்கை காவியத்தை படைக்கவா ஸ்னைடர் காத்திருந்தார் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை தானே கதை எழுதி இயக்கிய முதல் படம் என்பதால், சற்று தடுமாறி விட்டார் போலும். பேசாமல் வழக்கம் போல சூப்பர் ஹீரோ காமிக்ஸ் கதைகளை அவர் இயக்க சென்று விடலாம், அதற்கு தான் கதையில் வேலை செய்ய பல கர்த்தாக்கள் கிடைக்கிறார்களே.
வேளைபளு தங்களையும் ஆடகொண்டு விட்டது போலிருக்கிறதே. பதிவுகளின் நீளம் மட்டும் விகிதம் குறைந்து வருவதை வைத்து சொல்கிறேன். Hard Work Does Not Kill என்று பொன்மொழியை விட்டு சென்ற அந்த நபரை தான் தற்போது தெடி கொண்டிருக்கிறேன்.
பிகரை சைட் அடிக்க மொக்கை படம் பார்க்க சென்ற காதலருக்கு எனது இரங்கல்கள்....
ReplyDeleteஎதுக்கா? கூட கூட்டிட்டு போனது யாரன்னு எனக்கு தான ஓய் தெரியும். ;)
// மொத்தத்தில் ஸாக் ஸ்னெய்டரிற்கு இதுவரை கிடைத்த பாராட்டுக்களை எல்லாம் அழித்து விடும் அளவில் குத்தாட்டம் போடுகிறது Sucker Punch. திரைப்படத்தில் குட்டைக் கால்சட்டைகள், பாவாடைகளுடன் வரும் நாயகிகளையும் சேர்த்து இத்திரைப்படம் ஒரு கொடூரமான வன்கனவாகவே திரையில் உருப்பெறுகிறது. மொக்கை எனும் சொல்லிற்கு இத்திரைப்படம் அட்டகாசம் எனும் அர்த்தத்தை வழங்குவதில் பெரு வெற்றி கொள்கிறது. //
ReplyDeleteசூப்பரப்பு :))
காதலரைத் தவிர வேறு யாரும் இப்படி சொல்லியிருக்க முடியாது மிக்க நன்றி காதலரே ;-)
.
The sucer punch waste movie
ReplyDeleteதலைவர் அவர்களே, சூப்பர்மேன் பாத்திரமோ, திரைப்பட வரிசைகளோ என்னை கவர்ந்ததில்லை எனவே வராமல் போனால்கூட நல்லதுதான்... ஆனால் காசு பார்க்க ஒரு வழி இருக்கும்போது அதை தயாரிப்பாளர்கள் தவறவிடுவார்களா, இயக்குனரையே மாற்றி விடுவார்களே. கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteரஃபிக், ஆம் அதிக நேரம் முன்பைபோல் இல்லை :) என்னைக் கேட்டால் ஸ்னெய்டர் நல்ல ஓய்வில் செல்லல் நலம் என்பேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
நண்பர் இலுமி, என் மனைவி உம் கமெண்டை படித்துவிட்டு விழுந்து விழுந்து வில்லச் சிரிப்பு சிரித்தார். ஒரு வாலிப மனதை துன்புறுத்தி பார்க்கும் மாந்தர்கள் வையத்தில் கோடி கோடி. கருத்துக்களிற்கு நன்றி இல்லை :))
நண்பர் சிபி, நன்றி அய்யா நன்றி.
எண்டெய்ர்டெய்ன்மென்ட், நீங்க்ள் சொல்வது சரிதான் கருத்துப் பதிந்தமைக்கு நன்றி நண்பரே.
காதலரே,நீர் இவ்வளவு கடுப்பாக பேசும் போது தான் புரிகிறது. தலைப்பில் இருக்கும் "மரண அடி வாங்குதலின்" அர்த்தம். ;)
ReplyDelete