Sunday, October 24, 2010

ஐநூறு மில்லியன் நண்பர்கள்


Mark Zuckerberg, உலகின் மிகவும் இளவயது கோடீஸ்வரன். இன்னமும் சிகரங்களை வெல்லப்போபவன். பில்கேட்ஸையை தூக்கி சாப்பிட்டு ஏப்பம் விடப்போபவன். இன்று ஐநூறு மில்லியன் அங்கத்தினர்களை எட்டிவிட்ட ஃபேஸ்புக்கை உருவாக்கிய கர்த்தா!! The Social Network திரைப்படத்தை David Fincher இயக்குகிறார் என்பதை நான் அறிந்திராவிடில் மார்க் ஸுக்கர்பெர்க் என்பது எனக்கு பரிச்சயம் ஆகாத ஒரு பெயராகவே நீடித்திருக்கக்கூடும்.

The Social Network திரைப்படமானது இன்றைய காலத்தின் தவிர்க்க முடியாத இணைய சமூக உறவாடல் வலை அமைப்பான ஃபேஸ்புக் எவ்வாறு உருவானது என்பது குறித்தும், அதன் உருவாக்கத்தின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய மனிதர்கள் குறித்தும் பேசுகிறது.

பல்கலைக்கழக இணையத்தளங்களினுள் அத்துமீறி நுழைந்து, மாணவிகளின் போட்டோக்களைத் திருடி அவற்றை தன் வலைப்பூவில் இட்டு கவர்ச்சிக் கன்னி யார் எனும் போட்டி நடாத்திய இளம் மாணவன் மார்க் ஸுக்கர்பெர்க் [Jesse Eisenberg] எவ்வாறு உலகின் இளம் கோடிஸ்வரன் எனும் நிலையை அடைந்தான் என்பதை பிரம்மாண்டங்கள் ஏதுமின்றி அருமையான ஒரு திரைக்கதையின் வழியாக சலிப்பின்றி திரையில் விரிக்கிறது தேர்ந்த இயக்குனர் டேவிட் பின்ச்சரின் சிறப்பான இயக்கம். Ben Mezrich என்பவர் எழுதிய The Accidental Billionaires எனும் நூலைத் தழுவி திரைக்கதையானது உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஃபேஸ்புக் என்பது மார்க் ஸுக்கர்பெர்க்கின் மனதில் உதித்த கருவா இல்லை அதை அவன் வேறு யாரிடமாவது இருந்து திருடிக் கொண்டானா? ஃபேஸ்புக்கை உருவாக்குவதில் ஆரம்பநிலைகளில் மார்க் ஸுக்கர்பெர்க்கிற்கு உறுதுணையாக நின்ற அவன் ஒரே நண்பன் Eduardo Saverin [Andrew Garfield] க்கு மார்க் துரோகம் இழைத்தானா? மார்க் ஸுக்கர்பெர்க் என்பவன் எவ்வாறான ஒரு மனிதன்? எனும் கேள்விகளை திரைக்கதையின் ஓட்டமானது மனதில் எழவைக்கிறது. அதற்கேற்ப திரைப்படமானது, சட்டவல்லுனர்களும், முக்கிய கதாபாத்திரங்களும் கூடியிருக்கும் ஒரு விசாரணை அறையிலிருந்து காலத்தில் பின்னோக்கி பாய்ந்து மனதில் எழுந்த கேள்விகளிற்கு விடைதர விழைகிறது.

the-social-network-2010-17423-365668668 தங்கள் சிந்தனையில் உதித்த கருவை மார்க் ஸுக்கர்பெர்க் திருடிவிட்டான் என குற்றம் சாட்டும் Winklevoss சகோதரர்கள், தனக்கு துரோகம் இழைத்து ஏமாற்றி விட்டான் என மார்க்கை குற்றம் சாட்டும் அவன் முன்னை நாள் நண்பன் எடுவார்டோ, இவர்களின் குற்றச்சாட்டுக்களை அமைதியாக எதிர்கொள்ளும் மார்க் என பாத்திரங்கள் அனைத்தும் தமது பக்க நியாயங்களிற்காகவும், உண்மைகளிற்காகவும் போராடுபவர்களாகவே காட்டப்பட்டிருக்கிறார்கள். இவன் நல்லவன், இவன் மோசமானவன் என யாரையுமே இயக்குனர் சுட்டிக் காட்டவில்லை. ஒவ்வொருவரும் தத்தமது கதைகளை கூறுவதன் மூலம் ஃபேஸ்புக்கின் வரலாறு சுவையான வகையில் பார்வையாளனுடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்கிறது. இந்த இளம் கதாபாத்திரங்கள் வழி இன்றைய சக்தி மிகுந்த புத்திசாலித்தனம் நிரம்பிய இளம் தலைமுறையின் வெற்றிப் போட்டியையும், அதற்காக அவர்கள் செல்லக் கூடிய எல்லைகளையும் காணக்கூடியதாகவிருக்கிறது.

முக்காடுபோட்ட குளிர் மேலங்கியுடனும், காலில் அணிந்த செருப்புக்களுடனும் வலம் வரும் மார்க் ஸுக்கர்பெர்க், ஹர்வார்ட் மாணவ சமூகத்திலிருந்து சற்று ஒதுங்கியவனாக, கேளிக்கைகளை பெரிதும் தவிர்த்து தன் லட்சியத்திற்காக இரவு பகல் என்று கடுமையாக உழைக்கும் ஒருவனாகவே சித்தரிக்கப்படுகிறான். சமூகத்திடமிருந்து முற்றிலுமாக தொடர்பை துண்டித்து விட்ட ஒருவனாக இப்பாத்திரப் படைப்பு இல்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. தன் மனதில் உறவிற்கு இடம் ஒன்றை வைத்திருப்பவனாகவே மார்க் ஸக்கர்பெர்க்கை உணர்ந்துகொள்ள முடிகிறது. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் இளம் நடிகர் ஜெஸ் ஐஸன்பெர்க் மிகவும் சிறப்பான ஒரு நடிப்பை வழங்கியிருக்கிறார்.

the-social-network-2010-17423-341819701 ஃபேஸ்புக்கினை மார்க் ஸுக்கர்பெர்க்குடன் இணைந்து உருவாக்கியவனாக அறியப்படும் எடுவார்டோ சேவரின் பாத்திரம் நட்பு, துரோகம், தோல்வி என அனைத்தையும் சுமந்து நின்று மனதை தொடுகிறது. எடுவார்டோவின் பாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் Andrew Garfield தன் திறமையால் ரசிகர்களை கலங்கடிக்க வைக்கிறார். ஃபேஸ்புக்கின் எல்லைகளை விரிவிப்பதில் பெரிதும் முன்னின்ற தொழில் முனைவனான Sean Parker பாத்திரத்தை ஏற்றிருக்கும் பிரபல பாடகர் Justin Timberlake அலட்டிக் கொள்ளாத நடிப்பில் அசத்துகிறார். எடுவார்டோவிற்கும் ஷோன் பார்க்கரிற்குமிடையில் உருவாகும் பொறாமை கலந்த வெறுப்பும், மார்க் ஸுக்கர்பெர்க்கின் அருகில் தான் மட்டுமே நெருங்கியிருக்க வேண்டும் எனும் அவர்களின் விருப்பும் இயல்பான முறையில் திரைப்படத்தில் டேவிட் பின்ச்சரால் படமாக்கப்பட்டிருக்கிறது. மூன்று இளம் நடிகர்களிடமிருந்தும் அட்டகாசமான விளைவுகளை பெறுவதில் இயக்குனர் தவறவேயில்லை.

படத்தின் திரைக்கதையோடு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றொரு அம்சம் பின்னணி இசை. அருமை என்பதை தவிர சொல்ல வேறொன்றுமில்லை. வழமைபோலவே டேவிட் பின்ச்சரின் இயக்கம் திரைப்படத்தை ஒரு த்ரில்லர்போல் நகர்த்தி செல்கிறது. உரையாடல்கள் அதிகம் நிரம்பிய இத்திரைப்படத்தின் இரண்டு மணிநேரம் கடந்து செல்வதை உணர முடியாத வகையில் அவரின் இயக்கம் கச்சிதமாக அமைந்திருக்கிறது.

The Social Network திரைப்படம் போரடிக்குமா? இல்லவே இல்லை. பிரமிக்க வைக்குமா? நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு தரமான படத்தை பார்த்த திருப்தி மனதை நிச்சயமாக ஆக்கிரமிக்கும்.

திரைப்படத்தின் இறுதிக் காட்சிகள் இளம் கோடிஸ்வரன் மார்க் ஸுக்கர்பெர்க்கை சுற்றியிருக்ககூடிய ஒரு தனிமையை மெளனமாக உணர்த்துகிறது. ஐநூறு மில்லியன் நண்பர்கள் நிறைந்த ஃபேஸ்புக்கில் மார்க்க்கிற்கு ஒரு உயிர் நண்பனாவது இல்லாமலிருந்தால் அது பரிதாபமான ஒன்றுதான். [****]

ட்ரெயிலர்

27 comments:

  1. // The Social Network திரைப்படத்தை David Fincher இயக்குகிறார் என்பதை நான் அறிந்திராவிடில் மார்க் ஸுக்கர்பெர்க் என்பது எனக்கு பரிச்சயம் ஆகாத ஒரு பெயராகவே நீடித்திருக்கக்கூடும்//

    தல..நீங்களும் Fincherன் ரசிகரா....same pinch

    ReplyDelete
  2. எனக்கும் இந்தப்படம் Fincherன் இயக்கம் என்று தான் தெரிய வந்தது...

    இன்னும் இங்க வரல..வந்தவுடன் பார்த்திருவேன்..

    நெட்ல் முதல்முதலாக இப்படத்திற்கு விமர்சனம் எழுதிய காதலர் வாழ்க..வாழ்க.....

    ReplyDelete
  3. நண்பர் கொழந்த, டேவிட் பின்ச்சரை எனக்குப் பிடிக்கும் ஆரம்பகாலத்தில் அவருடயை 7வென், ஃபைட் கிளப் என்பன பிடித்தன ஆனால் அவர் இயக்கிய ஸோடியாக் அருமையான ஒரு த்ரில்லர் துரதிர்ஷ்டவசமாக அது அதிகம் கவனிக்கப்படாமல் போய்விட்டது என்பதில் எனக்கு வருத்தமுண்டு. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  4. 'டேனியின் டேஞ்சர் இரவுகள்' படத்தை டேவிட் 'பங்சர்' எப்போது வெளியிடுவார் என்று கேட்டு சொல்லவும். ;)

    ReplyDelete
  5. மார்க் 'சக்'கர்பெர்க் தனி மனித விவரங்களை ஐடி கம்பனிகளிடம் ஒப்புதல் இல்லாமல் விற்று 'சேவை' செய்த விவரங்கள் படத்தில் இருந்தனவா என்று அறிய ஆவல். :)

    ReplyDelete
  6. //பல்கலைக்கழக இணையத்தளங்களினுள் அத்துமீறி நுழைந்து, மாணவிகளின் போட்டோக்களைத் திருடி அவற்றை தன் வலைப்பூவில் இட்டு கவர்ச்சிக் கன்னி யார் எனும் போட்டி நடாத்திய இளம் மாணவன் மார்க் ஸுக்கர்பெர்க் [Jesse Eisenberg] எவ்வாறு உலகின் இளம் கோடிஸ்வரன் எனும் நிலையை அடைந்தான் //

    இதுல எதுனா உள் குத்து உண்டா? ;)

    ReplyDelete
  7. நண்பரே இலுமி, டேனியின் டேஞ்சர் படத்தில் நீர்தான் ஹீரோ, உமக்காகத்தான் வெயிட்டிங். இல்லை படம் பேஸ்புக்கின் ஆரம்ப நிலைகளை மட்டுமே பேசுகிறது நீங்கள் கூறும் விவகாரங்கள் படத்தில் இல்லை. என்ன உள் குத்து ஒரு கோபத்தில் ஸக்கர்பெர்க் கொஞ்சம் எல்லை மீறிவிடுகிறார் ஆனால் அதுவேதான் பின்பு பேஸ்புக்கை உருவாக்க காரணமாக இருக்கிறது.

    ReplyDelete
  8. //டேனியின் டேஞ்சர் படத்தில் நீர்தான் ஹீரோ//

    கால்ஷீட் இல்லாததால்,அன்பர் "தானே வந்து தலையைக் கொடுக்கும் ஆடு" ரபிஃக்கை அணுக கேட்டுக் கொள்கிறேன்.(கவனிக்க, அது தலை ;)).

    ReplyDelete
  9. //கால்ஷீட் இல்லாததால்// பூட்ஸ் எல்லாம் பேட்டாவில வான்கி தருகிறோம். உம்மிடம்தான் அந்த டெரர் லுக் இருக்கிறது. இல்லாவிடில் கொழந்தய ஹீரோவாக்கி விடுவோம்..இது ஒரு எச்சரிக்கை

    ReplyDelete
  10. 'அடி'தாஸ் கொடுத்தாலும் முடியாது.

    //இல்லாவிடில் கொழந்தய ஹீரோவாக்கி விடுவோம்..இது ஒரு எச்சரிக்கை//

    தயவு செய்து,டயலாக் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும். ;)

    ReplyDelete
  11. டேனி இருக்கும் போது டயலாக் பற்றிய கவலை இல்லை என்றே எண்ணுகிறேன்.

    ReplyDelete
  12. //'அடி'தாஸ்// நைக் மாஸ் நீங்கதான் பாஸ்.

    //தயவு செய்து,டயலாக் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும்// கொழந்த வரும் தருணங்களில் எல்லாம் AC/DC பாடல்கள் பொறி பறக்கும் :)

    ReplyDelete
  13. //டேனி இருக்கும் போது டயலாக் பற்றிய கவலை இல்லை என்றே எண்ணுகிறேன்.// ஆம் டேனியின் வாய் ஓயாமல் இயங்கிக் கொண்டேயிருக்கும் என்பதால் டயலாக் பற்றி கவலை இல்லைத்தான்:)

    ReplyDelete
  14. தல....
    நம்புறீங்களோ..இல்லையோ...Zodiac படம் பத்திதான் அடுத்து ஒரு பதிவ ரெடி பண்ணிக்கிட்டு இருக்கேன்..
    வலைத்தளத்தில...யாரும் mention பண்ணலயேனே நினச்சேன்....

    நா தேடிப் பிடிச்சு பார்த்த படம்...ஒருமாதிரி open ending இருந்தாலும் ரொம்பவே gripping
    ஆ இருந்த மாதிரி தோணும்

    ReplyDelete
  15. இணையதளங்கள் பற்றியும் இப்போது படம் வருகின்றது! நன்றாக உள்ளது விமர்சனம்!
    இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கூகுள் பற்றியும் Ken Auletta என்பவர் எழுதிய Googled: The End of the World as We Know என்ற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு
    படம் வரப்போகிறது!!

    ReplyDelete
  16. u forgot the heroine. she is the main subject in mark's creation
    Mai

    ReplyDelete
  17. நண்பர் Mai, அவரது பெண் நண்பியை நான் மறக்கவில்லை மாறாக பதிவில் நான் அவரைக் குறிப்பிடவில்லை. அவர்தான் ஸக்கர்பெர்க்கின் படைப்பின் பிரதான அம்சம் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்நண்பி அவரை விலக்கியதால் ஏற்படும் கோபத்தில் அவரிற்கு தோன்றிய ஒரு ஐடியா பின்பு விரிவானது வேறுவிதமாக. உறவு[அதில் இணைந்திருத்தல்] என்பதுதான் ஸக்கர்பெர்க்கின் படைப்பின் பிரதானமான அம்சம் என்பது என் கருத்து. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  18. நண்பர் கொழந்த, எழுதுங்க, அப்படத்தின் அந்த முடிவு. இரு மனிதர்களின் பார்வைகளும் சந்திக்கும் அந்தக் கணம் மறக்க முடியாதது.

    நண்பர் எஸ்.கே, திரைப்படம் வெற்றி என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. கூகிள் குறித்தும் படமா, ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்திரைப்படத்தைப் போலவே அதனையும் விறுவிறுப்பாக உருவாக்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  19. வெற்றி பெற்ற வாழ்க்கையை பார்க்க மிகவும் பிடிக்கும்.நல்ல அறிமுகம்.நன்றி நண்பரே

    ReplyDelete
  20. கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களில் ஒன்று இது.

    ReplyDelete
  21. நண்பர் உலக சினிமா ரசிகரிற்கு என் நன்றிகள்.

    நண்பர் பின்னோக்கி, ஆம் தவறாமல் பாருங்கள். வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  22. நானு டேவிட் ஃபின்ச்சர் ஃபேன்... சேம் பின்ச் :-)

    ReplyDelete
  23. ஸோடியாக்குக்கும் ஃபேன் நான் :-) அடுத்த சேம் பின்ச்

    ReplyDelete
  24. என்னாது ஸோடியாக் பதிவு கொழந்த போடப்போகுதா? கொழந்த ரேப் டிராகன் ரேஞ்சில் உள்ள எதாவது பிட்டுப் படத்துக்குப் பதிவு போடுமா?

    ReplyDelete
  25. நண்பர் கருந்தேள், கொழந்த, ஞானக் கொழந்தயாக்கும் :) கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  26. arumaiyana padam, vimarsanam....thanks boss 4 sharing

    ReplyDelete