தன் உயிர் அவள் கைகளால் நீங்கினால் அது ஒரு பாக்யம் என்று வேண்டிய ரஃபிக்கின் கலங்கரை விளக்கில் தன் நீண்ட வேட்டைப் பற்களைப் பதித்து அவன் குருதியை உறிஞ்ச மென்னிக்கடி மொனிக்கா தயாரான தருணத்தில், பலத்த ஓசையுடன் அறையின் கூரைகளைச் சிதைத்த வண்ணம் தரையில் வந்து விழுந்து வெடித்து திறந்த பாதுகாப்புக் கவசங்கள் கபிலவிழியாளின் கவனத்தை ரஃபிக்கிடமிருந்து திசை திருப்பின.
ஆனால் பாதுகாப்பு கவசங்களிலிருந்து முதலில் வெளியேறிய அந்த உருவத்தைக் கண்டதும் மொனிக்காவின் கரங்கள் அந்த உருவத்தின் தலையை உடனடியாக கொய்து வீச பரபரக்க ஆரம்பித்தன. மேலும் தான் அந்த அறையில் இருப்பதை அவதானிக்காது தம் உடல் அழகை வெட்கம் ஏதுமின்றி உலகிற்கு காட்டி நின்ற இரு அழகுகளையும் தன் கண்களால் மேய்ந்தவாறே அந்த உருவம் நாடக பாணியில் செய்த சலாமும் மொனிக்காவினை எரிச்சல்படுத்தவே சற்றுக் கடூரமான குரலில்…அடேய், மொட்டைத்தலை சீனா என்று கத்தினாள் அவள்.
அழகுப் பதுமைகளை நோக்கி நளினமாக சலாம் வைத்த நிலையில் மொனிக்காவின் கடூரமான குரல் எதிர்பாராமல் வந்து தாக்கவே சற்று அதிர்ந்துபோன சீனன், நிமிர்ந்தான். திரும்பினான். மென்னிக்கடி மொனிக்காவை அங்கு கண்ட சீனனின் விழிகள் அச்சம் கலந்த வியப்புடன் விரிந்தன. தன் மொட்டைத்தலையில் எஞ்சியிருந்த நுரையை தடவிய சீனன்… வந்தனம் மொனிக்கா, உன்னை என் கண்கள் கண்டு காலங்கள் ஆகிவிட்டன என்றான்.
- அது உன் அன்னை செய்த புண்ணியம்… கபிலவிழியாளிடமிருந்து பதில் வெடுக்கென வந்தது…. டேய் சீனா, என் காதலை நிறைவேறாமல் செய்தது மட்டுமல்லாது என் காதலனையும் தவறான பாதையில் இட்டு செல்ல தூபம் போடுகிறாயாமே…தொடர்ந்தாள் கபிலவிழியழகி.
- உன் காதலை நான் நிறைவேறமால் செய்தேனா! இது என்ன புதுக்கதை மொனிக்கா.
- படுபாவி, நானும் அவரும் மாலைமாற்ற வேண்டிய வேளையில் நீ என் காதலரை கடத்தி செல்லவில்லையா.
- நீ உன் காதலனிடம் ஒரு முக்கிய உண்மையை தெரிவிக்காது மாலை மாற்றத் துணிந்தாய், மேலும் உன் காதலன் என் நண்பன்.
- என்ன உண்மையை நான் மறைத்தேன் சண்டாள மொட்டைப் புழுவே.
- நீ ஒரு ரத்தக்காட்டேரி எனும் உண்மையை..
சீனனின் பதில் கூரிய கட்டையாய் மொனிக்காவின் இதயத்தில் பாய்ந்தது. சீனனிற்கு எதிர் பதில் ஏதும் தர இயலாத ஒரு வெளிக்குள் தான் அடைபடுவதை கபிலவிழியாள் உணர்ந்தாள்.
- ரத்தம் உறிஞ்சும் உயிரற்ற பிறவியுடன் என் நண்பன் வாழ்ந்திருக்க நான் அனுமதியேன்… இன்றும், அன்றும், என்றும்… தன் முகத்தில் ஏளனப் புன்னகை ஒன்றை தவழ விட்டான் மொட்டைத் தலை சீனன்.
- ஏன்…ஏன்.. காதல் எனும் உணர்வை நீ எனக்கு மறுக்கிறாய். அதனைப் பருகுவதற்கு எனக்கு உரிமையில்லையா. என் காதலிற்கு குறுக்கே நிற்கும் உன்னை இன்றுடன் ஒழித்துக்கட்டுகிறேன்… ஆவேசமாக கத்திய மொனிக்கா தன் கால்களை தரையில் ஓங்கி அடிக்கவே அவள் அதி குட்டைப் பாவாடைக்குள் இருந்து சில வவ்வால்கள் அரண்டு வெளியே பறந்து சென்றன.
- ஹாஹாஹா…. உன் காதல் கோவிலில் வவ்வால்கள் வாழ ஆரம்பித்து விட்டனவா. சபாஷ், உன் காதலை நீ கோட்டை கட்டி பாதுகாத்திருக்கிறாய் மொனிக்கா.
- என் உடலும், உள்ளமும் என் காதலரிற்கு மட்டும்தான் சொந்தம்.
- அப்படியானால் உன் உயிர் யாரிற்கோ… சீனனின் இந்தக் கேள்வியால் மீண்டும் நிலைகுலைந்தாள் மொனிக்கா.
- அற்ப பதரே, என் மரணம்கூட என் காதலரிற்காகவே இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள். ஆனால் அதன் முன்பாக உன்னை நடைபிணமாக அலைய வைக்கிறேன். நள்ளிரவு வேளைகளில் உன்னை ரத்தப் பிச்சை எடுக்க செய்கிறேன். மொட்டைப் பேயாக உலாவ பண்ணுகிறேன். என் மீது விழுந்த இந்த சாபத்தின் வேதனையின் ஒரு கூறை உன்னை உணர வைக்கிறேன்… இதனைக் கூறியவாறே சீனனின் மீது வெகுவேகமாகப் பாய்ந்த மொனிக்கா, சீனனின் கால்களைப் பிடித்து அவனை தலை கீழாக தூக்கி எறிந்தாள்.
அறையின் குறுக்கே வல்லூறு பாய்ச்சலில் பறந்து சென்ற சீனன் சுவரொன்றில் பலமாக மோதி கீழே விழுந்தான். கீழே வீழ்ந்த சீனனின் மீது தாமதிக்காது பாய்ந்த மொனிக்கா, தன் கரங்களால் சீனனின் தலையை அழுத்தியபடியே அவளது கூரான பற்களை சீனன் மேல் அழுத்திப் பதித்தாள்.
சுவரில் மோதியதால் கலங்கிப்போன சீனன் தன்னால் இயன்றவரை மொனிக்காவின் அசுரப்பிடியிலிருந்து தன்னை விடுவிக்க திமிறினான். ஆனால் மொனிக்காவின் பலத்தின் முன் அவன் திமிறல்கள் பஸ்பமாகின. தன் கழுத்தில் ஊசியாக ஏறிய மொனிக்காவின் பற்களை உணர்ந்தான் சீனன். தன் முடிவு நெருங்கிவிட்டதை அறிந்த சீனன், வாழ்கையில் தான் கண்ட அழகான பெண்களை நினைவில் கொண்டுவர முயன்றான். ஆனால் அந்த வேளையில்…. மொனிக்கா, அவனை விட்டுவிடு எனும் சொற்கள் அறையில் ஒலித்தன.
அந்த அறை கொண்டிருந்த வன்மத்தையெல்லாம் போக்கிவிடும் மென்மையுடன் எழுந்த அந்தக் குரலில் வாழ்ந்திருந்த இனிமை அறையிலிருந்த பெண்களின் இதயங்களை எல்லாம் ஆதுரமாக வருடிக் கொடுத்தது. அக்குரலைக் கேட்ட மாத்திரத்தில் ஒரு கணம் உறைந்தாள் மொனிக்கா. சீனனை தன் தலைக்கு மேல் தூக்கி அப்பால் வீசியெறிந்தாள். சிட்டுக்குருவிபோல் பறந்தான் சீனன்.
தன் நீண்ட கூந்தலை அழகாக கோதிவிட்ட மொனிக்கா, இனிமையான அந்தக் குரல் வந்த திக்கில் திரும்பினாள். குரலிற்கு சொந்தமான உருவத்தைக் கண்டாள். அந்த உருவத்தின் முன் மண்டியிட்டாள். தன் தலையை தாழ்த்தியவாறே அந்த உருவத்தின் பாதங்களை நோக்கி நகர்ந்து அவற்றை தன் இதழ்களால் முத்தமிட்டாள். அவள் இதயத்தின் ஆழமான ஊற்றுக்களிலிருந்து பீறிட்டு பொங்கி அவள் விழிகள் வழி வழிந்த கண்ணீர், அப்பாதங்களை செங்கண்ணீர் முத்துக்களால் குளிப்பாட்டியது.
- நலம்தானா என்னுயிர் காதலரே….. காமா ஜோஸின் பாலைவன இதயத்தை நோக்கி காதல் மழை அம்புகளாக பாய்ந்தன மொனிக்காவின் வார்த்தைகள்.
Friday, October 29, 2010
ரேப் ட்ராகன் - 25
சீனன் சம்ஹாரம்
ஆதிஜோக்களின் பிரதிநிதியும் பிங்பிங் மன்மதக்கலையில் வல்லவருமான மொட்டைப்பருந்து சீனன் அவர்களின் கும்மாங்கு குத்து
அருமை நண்பரே.
ReplyDeleteஎன் அருமை சீனா, சப்பை மூக்கு தேசத்தின் தவப்புதல்வனே, என் ஆணியம் காக்க வந்த தேவனே, நீர் வாழீர் கோடி கோடி ஆண்டுகள்.
ReplyDeleteமென்னிக்கடி மொனிக்கா என்ற அந்த கபட கபிலவிழியாளிடமிருந்து என்னை காப்பாற்றி, அந்த கொடூர வவ்வால்கள் அடங்கிய குட்டைபாவாடை ரத்தக்காட்டேரியிடம் மாட்டி நீ சிக்கி தவித்த நொடியில் நான் என் உயிரை காப்பாற்ற ஓடியே போய் இருந்தாலும் என் இதய வானில் நீ சிறகடித்து பறக்கிறாய், என் நண்பா.
கவலை படாதே காமா ஜோஸ் என்ற நம் விரோதி வந்து சேர்ந்து விட்டான். இனி அவனே அந்த வவ்வால்களை ஓட்டி கொள்ளட்டும். வாடா என் செல்லம், பறந்தோடுவோம்.
இந்த சந்தோஷ கட்டத்தில், மற்றவர்களுக்கு பரிசாக இதோ XIII Collector's Special is Here
நண்பர் LK, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteரஃபிக், வந்துவிட்டதா சேகரிப்பாளர்களின் சிறப்பு பதிப்பு :) வார இறுதியில் பதிவுகள் கொட்டித் தள்ளப்போகின்றன. படித்து மகிழுங்கள். அடுத்த எபிசோடைப் படிப்பதற்குள் பறந்தாட என்ன அவசரம் :)செந்தமிழில் போட்டு துவம்சம் செய்கிறீர்களே அரசியல் கட்சியில் சேர்ந்திருக்கிறீர்களா[ பாண்டி மைனர் முன்னேற்றக் கழகம் ]தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
அன்பு நண்பரே,
ReplyDeleteகாட்டேறிகளும் களத்தில் இறங்கி விட்டனவா? அய்யகோ, சிறிது நேரம் கழித்து அவன் வரக்கூடாதா? :)
இந்த கதை எனக்கு "How to kill a mocking bird with guns and eat later" என்ற பிரபலமான நாவலை நினைவூட்டுகிறது. இதன் ஆரம்பம் "Hundred Years of Solitude and How to end that by drinking Whisky" போல் இருந்தாலும் கூட.
ஹ ஹா... உயிருக்கு பயந்து ஓடிய கட்டத்திலும், ரிஸ்க் எடுத்து அந்த கண்கொள்ளா காட்சியை படம் எடுத்தது எவ்வளவு உதவியாக இருக்கிறது.
ReplyDeleteகாமா ஜோஸை இதை விட அழகாக வேறு யாராலும் காட்ட முடியாது... ஏதோ நம்மால் முடிந்த உதவி.
படத்தை பதிவேற்றிய காதலருக்கு ஜே. :)
ஜோஸ், //சிறிது நேரம் கழித்து அவன் வரக்கூடாதா?// சிரிப்பை அடக்க முடியவில்லை :) இப்படி ஒரு தோஸ்த் கிடைக்க சீனன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். புரட்சிக்காரர் எடுத்த போட்டோவை இணைத்திருக்கிறேன் :)) நீங்கள் நான் காப்பியடித்து எழுதிய நூல்களை எவ்வளவுமுறை சுட்டிக் காட்டினாலும் காமா ஜோஸிற்கு இத்தொடரில் ஒரே ஒரு காதலிதான். அடுத்த அத்தியாயத்தில் உங்களை கண்ணீர் விட வைக்கிறேன். இது சவால் அல்ல சபதம் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
ReplyDeleteரஃபிக், தங்கள் தயாரிப்பில் போட்டோவும் கமெண்டும் அட்ட்ட்ட்ட்ட்டகாசமுங்கோவ்வ்வ்வ் :)) போட்டோவை பகிர்ந்தமைக்கு நன்றி அன்பு நண்பரே.
நல்லா இருக்கு!
ReplyDeleteநண்பர் ஆர். ராமமூர்த்தி, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDelete