டக்ளஸ் மக்ரேயும் [Ben Affleck], அவனது சகாக்களும், வங்கிக் கொள்ளைகளிலும், பணத்தை பாதுகாப்பாக எடுத்து செல்லும் கவசவாகனக் கொள்ளைகளிலும் நிபுணர்கள். ருசுக்கள் எதையும் விட்டுவிடாது இவர்கள் நிகழ்த்தும் கொள்ளைகளால், FBI யும், பாஸ்டன் காவல்துறையும் இவர்களை கைது செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்படுகின்றன.இந்நிலையில் வங்கிக் கொள்ளை ஒன்றில் டக்ளஸ் மக்ரே குழுவினரால் பணயக்கைதியாக்கப்பட்டு சில மணி நேரங்களில் விடுவிக்கப்படும் பெண்னான கிளேய்ர் [Rebecca Hall], சட்டத்தின் காவலர்களிடம் ஏதேனையும் உளறிக் கொட்டிவிடுவாள் எனும் அச்சத்தில், அவளைக் கண்காணிக்கும் பொறுப்பை டக்ளஸ் தான் ஏற்றுக் கொள்கிறான். ஆனால் கிளேய்ரை கண்காணிக்க சென்ற டக்ளஸ் மெல்ல மெல்ல தன் மனதை அவள் கொள்ளையடிப்பதை உணர ஆரம்பிக்கிறான்….நடிகர் பென் அஃப்லெக், சூப்பர் ஹீரோ வேடம் முதல் சிஐஏ எஜென்ட் வேடம் வரை பல வேடங்களில் திரையில் தோன்றியிருக்கிறார். ஆனால் பிரபலத்திற்கும் அவரிற்குமிடையிலான இடைவெளி பிடிவாதமாக சுருங்க மறுத்துக் கொண்டிருக்கிறது. அவர் சிரத்தையுடன் நடிக்கும் போதெல்லாம் அந்த நடிப்பிலிருந்து ரசிகர்களின் கவனத்தைக் குலைக்கும் அவரது நீண்ட கீழ்தாடையை இதற்கு காரணமாக சொல்லலாமா.ஆனால் நடிகர் பென் அஃப்லெக்கிற்குள் ஒரு திறமையான இயக்குனர் இருக்கிறார் என்பதனையே The Town திரைப்படம் தெளிவாக்குகிறது. நட்பு, குடும்பம், காதல், வஞ்சம் என த்ரில்லர் திரைப்படங்களின் மரபான பாதையிலிருந்து விலகாது தரமான ஒரு த்ரில்லரை தந்திருக்கிறார் இயக்குனர் பென் அஃப்லெக். அதேபோல் இயக்குனர் பென் அஃப்லெக், நடிகர் பென் அஃப்லெக்கிற்கு அவரது திரைவாழ்க்கையின் முக்கிய பாத்திரத்தை வழங்கியிருக்கிறார் என்றால் அது மிகையாகாது. அவரது முதல் இயக்கமான Gone Baby Gone திரைப்படமானது டெனிஸ் லுகேன் எழுதிய நாவலை தழுவி உருவாக்கப்பட்டது. இம்முறை நாவலாசிரியர் Chuck Hogan எழுதிய Prince of Thieves நாவலைத் தழுவி The Town உருவாக்கப்பட்டிருக்கிறது. [சக் கோஹனுடன் இணைந்து பிரபல இயக்குனர் Guillermo del Toro, காட்டேரி நாவல்களை எழுதி வருகிறார்.]
பாஸ்டன் நகரின் புறநகர் பகுதியான சார்ல்ஸ்டவுனில் வாழ்ந்து வரும் சில அயர்லாந்து சந்ததியினரின் பரம்பரை தொழிலாக கொள்ளை அடித்தல் இருந்து வருகிறது. சார்ல்ஸ்டவுனில் இருக்கும் இந்த குற்ற சமூகத்தின் மீதான மேலோட்டமான ஒரு பார்வையை இத்திரைப்படம் முன்வைக்கிறது. ஆட்டுவிப்பவர்கள், ஆடுபவர்கள், பலியாபவர்கள், பரிதாபமான பெண்கள், சிதைந்துபோன குடும்ப அமைப்பு என உலகில் எங்குமிருக்ககூடிய ஒரு குற்ற சமூகத்தின் கூறுகளை சார்ல்ஸ்டவுன் குற்ற சமூகமும் தன்னுள் கொண்டிருக்கிறது. திரைப்படத்தின் பிரதான பாத்திரமான டக்ளஸ் மக்ரே குற்ற சமூகத்தின் சராசரி மனிதனிலிருந்து சற்று வேறுபட்டவனாக சித்தரிக்கப்படுகிறான். இதனையே ஒரு குற்றச் சாட்டாக, டக்ளஸ் மக்ரேக்கு ஒரு சகோதரனாக இருக்கும் ஜேம்ஸ் [Jeremy Renner ] பாத்திரமும் படத்தின் முக்கியமான ஒரு தருணத்தில் அவன் முன் வைக்கிறது.
திரைப்படத்தின் ஆரம்பத்தில் பணயக்கைதியாக கொண்டு செல்லப்பட்டு பின் விடுவிக்கப்படும் கிளேய்ரின் பயம் பீடித்த கண்ணீர் தருணங்களினுள் ஆறுதல் காற்றாக நுழையும் டக்ளஸ், பின் படிப்படியாக கிளேய்ரின் குணாதிசயங்களில் தன்னை மயக்கி கொள்ள ஆரம்பிக்கிறான். கிளேய்ரிடம் அவன் நிகழ்த்தும் உரையாடல்கள் வழியாக அவன் கடந்த காலத்தின் கதை சுருக்கமாக விபரிக்கப்படுகிறது.
சிறுவயதில், தன்னையும், தன் தந்தையும் தவிக்க விட்டு பிரிந்து சென்ற தன் தாய் குறித்த ஏக்கம் டக்ளஸில் ஒட்டிக் கொண்டே இருக்கிறது. அதேபோல் இளம் பருவத்தில் அவன் கண்ட எதிர்காலக் கனவுகள் சிதைந்து போனதால் அவன் குற்ற வாழ்க்கைக்குள் நுழைந்தது அவனுடன் ஆறாத வெப்பமாகவே பயணிக்கிறது. கிளேய்ருடன் சேர்ந்து ஒரு புதிய வாழ்வை ஆரம்பிக்க விரும்பும் டக்ளஸ், கொள்ளை அடிப்பதை நிறுத்துவது எனும் முடிவிற்கு வருகிறான்.
கிளேய்ரிற்கும், டக்ளஸிற்கும் இடையிலான காதல் காட்சிகளில் மிகைத்தன்மை என்பது இல்லை ஆனால் அக்காட்சிகளில் பதிக்க வேண்டிய உணர்ச்சிகளை வெளிப்படுத்த பென் அஃப்லெக் சிரமப்படுகிறார். இவர்கள் இருவரிற்கும் இடையில் நிகழும் உரையாடல்கள் மனதை நெகிழ்ச்சியோடு தொட்டாலும் அவற்றில் போதிய உணர்ச்சிகள் இல்லையே என்ற ஒரு உணர்வு. மாறாக கொள்ளை அடிப்பதை நிறுத்தி விட்டு சார்ல்ஸ்டவுனையே விட்டு தான் கிளம்பி செல்லப்போவதாக டக்ளஸ் தன் நண்பனான ஜேம்ஸிடம் தெரிவிக்கும் தருணத்தில், ஜேம்ஸ் பாத்திரம் ஏற்றிருக்கும் நடிகர் ஜெரெமி ரென்னெரும், நடிகர் பென் அஃப்லெக்கும் பின்னி எடுத்திருக்கிறார்கள். பென் அஃப்லெக் ஒரு நல்ல நடிகன்கூட என்று உரத்துச் சொல்லும் தருணம் அது. துரதிர்ஷ்டவசமாக முரட்டுச் சுபாவம் கொண்ட ஒரு கொள்ளையனாக மிரட்டுவதை தவிர ஜெரெமி ரென்னெரிற்கு தன் திறமையைக் காட்ட தகுந்த வாய்ப்பு படத்தில் இல்லை.
சிறு பாத்திரங்களில், சிறு கணங்களே வந்தாலும் டக்ளஸின் தந்தையாக வரும் நடிகர் Chris Cooper ம், பூக்கடைக்கார மிரட்டல் தாதாவாக வரும் நடிகர் Pete Postlethwaite ம் சிறப்பான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். ரோஜா தண்டுகளை வெட்டியவாறே நடிகர் பீட் பொஸ்தில்த்வெய்ட், தன் வார்த்தைகளால் பென் அஃப்லெக்கிற்கு போடும் போடு, அட்டகாசம்.
டக்ளஸ் கூட்டத்தை கைது செய்வதற்காக எந்த வழியையும் கையாள தயங்காத FBI, கிளேய்ரின் உயிரிற்கு ஆபத்தை விளைவிப்போம் என மிரட்டி டக்ளஸை வலுக்கட்டாயமாக இணைத்து நடாத்தப்படும் ஒரு கொள்ளை, தன் தாய் பிரிந்து சென்றதற்கான உண்மைக் காரணத்தை அறிந்து கொள்ளும் டக்ளஸ் என படத்தின் பின்பகுதி வேகம் பிடிக்கிறது.
அசர வைக்கும் சஸ்பென்ஸ், எதிர்பாராத திருப்பங்கள், அதிரடி துப்பாக்கி மோதல்கள், நெகிழ வைக்கும் முடிவுகள் என திரைப்படத்தின் இறுதி 30 நிமிடங்களிலும் தேர்ந்த அனுபவம் கொண்ட ஒரு இயக்குனர்போல் பார்வையாளனை அணுங்கவிடாது திரைவசியம் செய்கிறார் இயக்குனர் பென் அஃப்லெக். ஒரு நல்ல நடிகன் என்பதைவிட ஒரு சிறந்த இயக்குனராக அவர் வழங்கியிருக்கும் The Town கண்ணியமான ஒரு படைப்பு ஆகும். டக்ளளஸ், கிளேய்ரை ஏதாவது ஒரு கரையில் காண்பானோ இல்லையோ, பென் அஃப்லெக்கின் அடுத்த இயக்கத்தின் வரவிற்காக ரசிகர்கள் நிச்சயம் காத்திருப்பார்கள். [***]
ட்ரெயிலர்
ணா..
ReplyDeleteஒரே சமயத்தில எப்படி ரெண்டு பேர் ஒரே படத்திற்கு விமர்சனம் எழுதுகிறீர்கள்? ஆச்சரியமாக இருக்கிறது..
Ben Affleck - சுத்தமா பிடிக்காத ஒரு நடிகர்..ஆனா GoodWill Hunting பிடித்திருந்தது (ராபின் வில்லியம்சும் ஒரு காரணம்). இத்தன பேர் சொல்றீங்க...பார்த்துற வேண்டியதுதான்.
நண்பர் கொழந்த, ஒரு பரீட்சையை பலபேர் எழுதுவதில்லையா :) உங்களிற்கு மட்டும்தானா பென் அஃப்லெக்கை பிடிக்காது, அவர் ஒரு துரதிர்ஷ்டசாலியாகவே இருக்கவேண்டும். கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteBen Affleck எனக்குத் தெரிந்து ஒரு சிறந்த கதாசிரியன். Matt damon உடன் இவர் சேர்ந்து எழுதி,நடித்துக் கலக்கிய Good will hunting எனக்குப் பிடித்த கதைகளில் ஒன்று.
ReplyDeleteஇவருக்கு காமெடி நன்றாக வரும்.அதைவிட கதை சொல்லுதல் மிக நன்றாகவே வரும்.
பேங்க் கொள்ளை என்றதும் உடனே பார்க்கவேண்டும் என்று எண்ணினேன். இந்தியாவில் இது எப்பொழுது ரிலீஸ் ?
ReplyDeleteவிமர்சனம் நன்றாக உள்ளது. பார்க்க முயற்சிக்கிறேன். பரிந்துரை செய்ததற்க்கு நன்றி!
ReplyDeleteசில நாட்களுக்கு முன்பு டிரைலரைப் பார்த்தவுடன் படத்தைப் பார்த்து விட வேண்டுமென்று தோன்றியது. 'பேங்க் ராபரி' வேறு. இங்கு ரிலீஸ் ஆன்வுடன் பார்க்க வேண்டும். வழக்கம் போல் விமர்சனம் அருமை...
ReplyDeleteநண்பர் இலுமினாட்டி, நீங்கள் என்ன சொன்னாலும் ஜெனிபர் லோபேஸிற்கு கதை சொல்வது போல் வருமா :) அந்த வகையில் அஃப்லெக் அதிர்ஷ்டசாலிதான். அவர் இயக்கிய முதல் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை ஆனால் இந்த படத்தில் அவர் என்னை கவர்ந்துவிட்டார். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் பின்னோக்கி, வங்கிக் கொள்ளைகள் விபரமாக படத்தில் காட்டப்படவில்லை எனினும் படம் திருப்தியை தருகிறது. கொரியாவில் எப்போது வெளியாகிறது என்றால் எங்கள் இளவரசர் இலுமியைக் கேட்டு விடலாம் ஆனால் இந்தியாவில் வெளியாகும் நாளை நண்பர்கள்தான் தெரிவிக்க வேண்டும் :) தங்கள் கருத்துக்கு நன்றி.
நண்பர் எஸ். கே, நன்றி, வாய்புக் கிடைத்தால் பார்த்து ரசிக்கத் தவறாதீர்கள்.
நண்பர் பேபி ஆனந்தன், தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
பென் அப்லக் எனக்கு பிடிக்கும்..தங்கள் எழுத்தின் வலிமை படம் பார்க்க தோன்றுகிறது
ReplyDeleteதுரதிர்ஷ்டவசமாக முரட்டுச் சுபாவம் கொண்ட ஒரு கொள்ளையனாக மிரட்டுவதை தவிர ஜெரெமி ரென்னெரிற்கு தன் திறமையைக் காட்ட தகுந்த வாய்ப்பு படத்தில் இல்லை.
ReplyDelete//
என்ன காதலரே!! இப்பிடி சொல்லிட்டீங்க. சொல்லப் போனால் அஃப்லெக்கை காட்டிலும், ஜெரெமி ரென்னர் தான் நன்றாக நடித்து இருந்தார்...
நல்ல பதிவு.. நன்றி காதலரே
ReplyDeleteஉங்கள் பதிவு படம் பார்க்கத் தூண்டுகிறது
ReplyDeleteநச் !
ReplyDeleteஇச் !
ReplyDeleteகுச் !
ReplyDeleteJennifer Lopez said...
ReplyDeleteபென் ஆஃப்லேக் மூஞ்சைப் பார்த்தாலே, அன்று நாள் விளங்காது ... போங்கைய்யா யோவ் !
கவுண்டமணி said...
ReplyDeleteடேய் நரி... எங்க ஊளையிடு...
Ben Affleck - ஊஊஊஊஊ...
கவுண்டர் - அப்பாடா.. என் பணம் கிடைச்சிரும்... டேய் வடக்குப்பட்டி ராமசாமி... எடுத்து வைடா என் பணத்த...
மூன்று நட்சத்திரம். பார்க்காமல் இருப்பேனா .. அவசியம் பார்த்துவிடுகிறேன் நண்பரே, பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteநண்பர் உலக சினிமா ரசிகரே, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் பிரசன்னா ராஜன், இளைஞர்களை விட கிறிஸ் கூப்பரும், பீட் பொஸ்தில்த்வெய்ட்டும் என் மனதிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள். ரெய்ன்னெரின் பாத்திரம் குறித்த என் கருத்தில் மாற்றம் இல்லை :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் கருந்தேள், நல்ல ஜாலி மூடில் இருக்கிறீர்கள். எந்திரன் ப்ரீவியுவிற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியிருக்கலாம் என்கிறார் சோசியர். ஆனாலும் பென் அஃப்லெக்கின் மேல் ஏன் இந்தக் கொலைவெறி :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் வேல்கண்ணன், நன்றி. பார்த்து மகிழுங்கள்.
gone baby gone that was good too
ReplyDelete