Thursday, August 19, 2010

ஒதுக்கப்பட்டவர்கள்


“எந்தப் பிரபல இயக்குனரும் என்னுடன் பணியாற்ற விரும்பியதில்லை. அது என் சாபம். எனவே மற்றவர்களைவிட நான் அதிகமாக பாடுபடவேண்டியிருந்தது. மற்றவர்களைவிட நான் அதிக தோல்விகளை சந்திக்க வேண்டியுமிருந்தது”…ஸ்டாலோன் ஒரு பேட்டியில்.

எக்ஸ்பெண்டபில்ஸ் திரைப்படத்தைப் பார்க்கும் வேளையில் என்னை மிகவும் உலுக்கியது என்னவெனில் நடிகர் சில்வெஸ்டர் ஸ்டாலோனின் முகத்தில் குடிகொண்டிருந்த அந்த சோகமான அயர்ச்சியே ஆகும். அந்த அயர்ச்சியை தன்னால் இயலுமானவரை பார்வையாளர்களிடம் கடத்திவிடாதவகையில் அவர் போராடியிருக்கிறார். இது அவரின் நடிப்பிற்கும், இயக்கத்திற்கும் பொருந்தும்.

இன்றைக்கு 25 வருடங்களிற்கு முன்பாக ஆக்‌ஷன் திரைப்படங்களின் தீவிர ரசிகனாக இருந்த என்னை தன் பங்கிற்கு மகிழ்வித்த அதே ஸ்டாலோனை இன்று திரையில் எதிர்பார்ப்பது நியாயமற்ற ஒன்று. ஸ்டாலோன் மட்டுமல்ல ROCKY 4ல் அவருடன் தன் உயிரிற்காக மோதிய Dolph Lundgren கூட மாறித்தான் போய்விட்டார். ராக்கி 4ல் இந்த இரு நடிகர்களிற்குமிடையில் நிகழும் அந்த உச்சக்கட்ட மோதலிற்காகவே அத்திரைப்படத்தை நான் பலதடவை திரையரங்கில் பார்த்திருக்கிறேன்.

என்பதுகளின் இறுதியிலும் தொன்னூறுகளின் ஆரம்பத்திலும் என்னை ஆக்கிரமிப்பு செய்த ஆக்‌ஷன் நாயகர்களான Chuck norris, Carl Weathers, Dolhp Lundgren, Steven Segal, Jean-Claude Van Damme போன்ற நடிகர்கள் இன்றைய ஹாலிவூட் ஆக்‌ஷன் படைப்புக்களிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார்கள். அவ்வகையில் அவர்கள் எக்ஸ்பெண்டபில்கள்தான். அதனை எனக்கு நினைவுபடுத்துவதாக இந்தப்படம் அமைந்திருந்தது. நடிகர் ஸ்வார்ஸ்னேகர் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால் அவரைப்போல் புகழ் பெற்றிராத ஏனைய நாயகர்களின் நிலை என்னவாக இருக்கும் என்பதை என்னால் கேள்வியாக மட்டுமே ஆக்க முடிகிறது.

சில வருடங்களிற்கு முன்பு வெளியாகிய ராக்கி மற்றும் ராம்போ ஆகிய திரைப்படங்களின் இறுதிப்பாகங்கள்! தந்த நம்பிக்கை தரும் வெற்றியே ஸ்டாலோனை எக்ஸ்பென்டபில்ஸ் திரைப்படத்தை இயக்கத் தூண்டியது எனலாம். எக்ஸ்பெண்டபில்ஸ் திரைப்படம் சமகால ஆக்‌ஷன் திரைப்படங்களின் தரத்துடன் எந்த வகையிலும் போட்டி போடுவதற்காக உருவாக்கப்படவில்லை. என்பதுகளில் கோலோச்சிய ஒருவகை மிகைத்தன்மை வாய்ந்த ஆக்‌ஷன் சினிமா குறித்த ஒரு நினைவூட்டலாக இந்தப்படம் இருக்கிறது. அந்தவகை சினிமாவின் ரசிகர்களை மீள வெல்ல முடியுமா என்ற ஒரு கேள்வியாகவும் திரைப்படம் அமைகிறது.

தென் அமெரிக்காவின் ஒரு சிறு தீவில் சர்வதிகாரியாக செயற்படும் ஒரு ராணுவ ஜெனரலையும், அவனிற்கு பக்கபலமாக இருக்கும் ஒரு முன்னைநாள் CIA ஏஜெண்ட்டையும், ஒரு இளம் பெண்ணிற்காக வேரறுக்கிறது ஒரு கூலிப்படை குழு. இங்கு பெண்ணிற்காகவென்பது காதல் அல்லது இரக்கம் என்பதனைத் தாண்டி கையறு நிலையில் உள்ளவர்கள் குறித்த அறம் சார்ந்ததாகவும், கூலிப்படையினரின் சபிக்கப்பட்ட ஆன்மாக்களிற்கு ஒரு தற்காலிக விமோசனத்தை வழங்கும் காரணியாகவும் உள்ளது என்று கொள்ளப்படலே பொருத்தமானதாக இருக்கும்.

திரைப்படத்தின் முதல் ஆக்‌ஷன் காட்சியே அது எப்படி இருக்கும் என்பதை தெளிவாக காட்டிவிடுகிறது. அதற்குப் பின்பாக மனதில் உருக்கொண்ட அதீத எதிர்பார்ப்புக்களை உதறிவிட்டே படத்தை பார்க்க வேண்டும். இல்லையேல் ஏமாற்றம் என்பது திரைப்படத்தின் முடிவில் நிச்சயமான ஒன்றாகவிருக்கும்.

ஸ்டண்ட் நடிகர் பொன்னம்பலம்போல் முகச்சாயல் கொண்ட ஒரு கடற்கொள்ளையனை ரத்தப் பஸ்பமாக்குவதுடன் கோலாகலமாக ஆரம்பமாகும் திரைப்படம், அத்திரைப்படத்தில் பங்கேற்றிருக்கும் அனைத்து நடிகர்களிற்கும் தமது திறமையைக் காட்ட சமமான வாய்ப்பை தந்திருக்கிறது என்று கூறிவிட முடியாது. ஜேசன் சாட்ஹேம் மாத்திரமே நடிகர் கும்பலில் மிகவும் சிறந்த முறையில் வெளிப்படுத்தப்படுகிறார். சில வேளைகளில் ஸ்டாலோனையும் விட என்றால் அது மிகையல்ல.

expendables-unite-speciale-2010-17756-2065527183 திரைப்படத்தின் பாத்திரங்களில் ஸ்டாலோனிற்கும், ஜேசன் சாட்ஹேமிற்குமிடையில் உள்ள பொருத்தம் இயல்பிற்கு மிகநெருங்கியதாக இருக்கிறது. திரைப்படத்தின் எந்த ஒரு தருணத்திலும் அந்தப் பொருத்தமானது வலிய திணிக்கப்பட்ட ஒன்றிற்கான உணர்வை அளிக்கவில்லை. ஜேசன் சாட் ஹேமிற்கு திரைப்படத்தின் சில சிறப்பான அதிரடி ஆக்‌ஷன்களை தூக்கி தந்திருக்கிறார் ஸ்டாலோன். ஆனால் ஜேசன் சாட்ஹேம் இன்றைய தலைமுறைக்குரிய ஆக்‌ஷன் ஹீரோ என்பதை நாம் மறந்துவிடலாகாது. புதிய தலைமுறைக்கு வழிவிட்டு தான் ஒதுங்கி கொள்வதாகக்கூட ஸ்டாலொனின் இந்த ஆக்‌ஷன் தியாகங்களை அர்த்தம் செய்து கொள்ளலாம்.

தனது வயது குறித்தும், குறைந்துவரும் தன் வேகம் மற்றும் ஆற்றல் குறித்தும் ஸ்டாலோன் திரைப்படத்தில் வெளிப்படையாக ஒப்புக் கொள்கிறார். அடியாள் ஸ்டீவ் ஆஸ்டினிடம் சரமாரியாக அடிகளை வாங்கிவிட்டு “என்னைப் பின்னி எடுத்துவிட்டான்” என்று கூலாகச் சொல்கிறார். இவைதான் இத்திரைப்படத்தில் ஸ்டாலோனை யதார்த்தத்தை உணர்ந்த ஒரு நாயகனாக முன்னிலைப்படுத்துகிறது.

பெரும்பாலும் தனிமையான வாழ்க்கை கொண்ட கூலிப்படையினரின் அவலநிலை குறித்தும் திரைப்படம் பேசுகிறது. எல்லோராலும் கைவிடப்பட்ட ஒரு தனி இனமாக அவர்கள் இருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. இதுவே தொழில் முறை நட்பு என்பதை மீறி தமக்கு எதிராக செயற்பட்டவர்களைக்கூட மன்னித்து, அரவணைத்து அவர்கள் தங்களிற்கிடையில் பேணும் நட்பின் ஆதாரமாக இருக்கக்கூடும். இந்தக் கூலிப்படையினரின் வாழ்க்கையின் சில கூறுகளாவது ஒதுக்கப்பட்ட ஆக்‌ஷன் நாயகர்களின் வாழ்வில் பிரதிபலிக்காமல் இருக்க முடியுமா என்ன.

மொட்டை மாமா ப்ரூஸ் வில்லிஸ், கவர்னர் ஸ்வார்ஷ்னேகர், ஸ்டாலோன் ஆகிய மூவரும் திரைப்படத்தில் தோன்றும் தருணம் மிக சொற்ப நேரமே திரையில் நீடிக்கிறது. ஆனால் அவர்கள் மூவரும் தமக்குள் ஒருவர் குறித்து ஒருவர் பரிமாறிக் கொள்ளும் கிண்டல்கள் அபாரம். இந்த தருணத்தை நான் மிகவும் ரசித்தேன். இவன் ஜனாதிபதியாக விரும்புகிறான் என்று ஸ்வார்ஷ்னேகரைப் பார்த்து ஸ்டாலோன் அடிக்கும் கிண்டல் சூப்பர்.

படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை ஆக்‌ஷன் விருந்து தடையின்றி தொடர்கிறது. திகட்ட திகட்ட பார்வையாளனிற்கு ஆக்‌ஷன் ஊட்டப்படுகிறது. திரைப்படமும் சரி உச்சக்கட்ட ஆக்‌ஷன் காட்சிகளும் சரி எந்தவித கேள்விகளுமின்றி பார்க்கப்பட வேண்டியவையாகும். திரைப்படத்தை நோக்கி தர்க்கரீதியான கேள்விகளை முன்வைப்பதை விடுத்து இருபது வருடங்களிற்கு முன்பாக எப்படி ஒரு ஆக்‌ஷன் படத்தை ரசித்திருப்பேனோ அவ்வாறே இத்திரைப்படத்தை நான் ரசித்தேன்.

திரைப்படத்தில் இறுதித் தருணங்களில் “நீங்கள் மீண்டும் வருவீர்களா” எனக் கேட்கப்படும் கேள்விக்கு ஸ்டாலோன் தரும் பதில் “நான் உன்னை விட்டு அதிக தொலைவில் இருக்கமாட்டேன்” என்பதாகவிருக்கும். ஸ்டாலோனின் உண்மையான ரசிகர்களிற்கு அந்த வார்த்தைகளின் அர்த்தம் புரிந்திருக்கும். [**]

37 comments:

  1. பார்ட் டூ விரைவில் என்று நியூஸ் பார்த்தேன்

    ReplyDelete
  2. மீ த செகண்ட்!!

    ReplyDelete
  3. ரெண்டு ஸ்டார் கொடுத்த வள்ளல் காதலன் ஒழிக.

    ReplyDelete
  4. பாஸ்...//ஆக்‌ஷன் நாயகர்களான Chuck norris, Carl Weathers, Dolhp Lundgren, Steven Segal, Jean-Claude Van Damme போன்ற நடிகர்கள் இன்றைய ஹாலிவூட் ஆக்‌ஷன் படைப்புக்களிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்டார்கள்.//
    அவர்கள் ஒதுக்கப்படாவிட்டால்தான் ஆச்சரியம் என்று எனக்குத் தோன்றுகிறது. கொஞ்சம் கூட வித்தியாசமில்லாம ஒரே மாதிரி முக பாவனைகளோட இருந்தா எப்படி நிலைத்து நிற்க முடியும்?

    ReplyDelete
  5. ஆனா.. இப்ப ஸ்டீவன் ஸெகால் டிவி-ல கலக்குறாருங்கோவ்.

    நிஜத்திலும் இவர் செம ஷார்ப் ஷூட்டர் போல. துப்பாக்கில விளையாடுறாரு.

    ReplyDelete
  6. தங்கள் பதிவு, படிக்காமலேயே படத்தை பார்க்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  7. நண்பர் பின்னோக்கி,உண்மையாகவா!! அதில் ஸ்டாலோன் நடிப்பாரா :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் ஹாலிவூட் பாலா, 3 ஸ்டார் வழங்காத கஞ்சப் பயல் காதலன் வாழ்க என்று எழுதியிருக்கலாமே :)) கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கொழந்த, அந்த ஆக்‌ஷன் நாயகர்களின் முகபாவங்கள் ஒரே மாதிரியாகவா தோன்றுகிறது :) சரி அதில் யார் புன்னகை புரிந்தால் அழகாக இருக்கும் என்று கூறுங்கள்.கார்ல் வெத்தர்ஸின் புன்னகை என் தெரிவு :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  8. இந்தப் பதிவைப் படிக்காததால்தான் நான் படத்தைப் பார்க்க தூண்டப்பட்டேன்.

    ReplyDelete
  9. நண்பர் ஹாலிவூட் பாலா, ஸீகால் முன்பு அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் மெய்ப்பாதுகாவலர் படையில் இருந்ததாக கூறினார்களே:)) இசைக் கருவி ஒன்றையும் இசைத்து மேடை நிகழ்ச்சிகள் நடாத்துவதாக கேள்விப்பட்டேன்.

    ReplyDelete
  10. அண்ணே.. ஸ்டெலோந்தான் என்னோட தானைத்தலைவன் ஜெட்லிய கைப்புள்ளையாக்கி அலைய விட்டுட்டாருன்னா, நீங்க கூட அவரப்பத்தி இரண்டு வரி கூட எழுதாம விட்டுட்டீங்களே..:-(((

    ReplyDelete
  11. நண்பர் கார்திகைப் பாண்டியன், ஜெட்லீக்கு திரைப்படத்தில் சிறிதான ஒரு வேடம் என்பதை தவிர என்ன சொல்ல முடியும் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  12. ணா..
    இவுங்க எந்த படத்தையும் நா தியேட்டர்ல பார்த்தது கிடையாது.தனிப்பட்ட முறையில் எனக்கு இவுங்க யார் மேலயும் ஈடுபாடு கிடையாது. நா முக பாவங்கள்ன்னு சொல்ல வந்தது, தனித்தனியா. Van Damme ஒரு படத்திலயாவது வேற மாதிரி பாவனைகள் காமிச்சு நான் பார்த்ததில்லை (Hard Target மட்டும் எனக்கு பிடிக்கும் அதுவும் John wooக்காக).Dolhp Lundgren, Chuck Norris இவுங்க படங்கள் ரெண்டோ முணு பார்த்துருக்கேன். அதுக்கப்பறம் அவுங்க படத்த பார்க்குற ஆசையே போயிருச்சு. Carl Weathersணா இந்த predator, rockyல எல்லாம் வருவாரே..அவரு சிரித்த முகமா இருப்பார் என்பது உண்மை. நெறைய இந்தியத்தன்மை அவர் முகத்தில தெரியும். Michael Jackson "Bad" ஆல்பத்தில "Liberain Girl" பாட்டுக்கு வருவார். அப்ப டைட்டில் போடுறப்பதான் இவரு தான் Carl Weathersன்னு தெரியும். எனக்கு எப்பவுமே பிடிச்ச martial arts starணா அது ப்ருஸ் லீ மட்டும்தான் (பெரும்பாலானவர்களுக்கு அப்படித்தான்னு நினைக்கிறேன்). அந்த கண்ணு ஒண்ணே போதும். அந்த அளவிற்கு intensityயோட இன்னொரு ஆக்சன் நடிகர நான் படத்தில் பார்த்ததில்லை.

    ReplyDelete
  13. நண்பர் கொழந்த, டபுள் ட்ரபுள் என்று ஒரு படம் வாண்டேம் இரட்டை வேடம். சும்மா நடையிலேயே வித்தியாசம் காட்டியிருப்பார் :)) சக் நொரிஸ் அவர்கள் கூட ப்ரூஸ் லீயுடன் மோதியிருக்கிறார் வே ஆஃப் த ட்ராகன் படத்தில். ப்ருஸ் லீ ஒரு தனி வரலாறு. அவரைப் பிடிக்காத ஆக்‌ஷன் படப் பிரியர்கள் இருக்கமுடியுமா என்ன.

    ReplyDelete
  14. Just missu

    // மொட்டை மாமா ப்ரூஸ் வில்லிஸ், கவர்னர் ஸ்வார்ஷ்னேகர், ஸ்டாலோன் //

    Soopper title

    ReplyDelete
  15. ணா..
    //"டபுள் ட்ரபுள்"//
    அப்ப double impactன்னு ஒரு ரெட்டை வேடப் படம் வந்துச்சே..ரெண்டும் ஒண்ணா? வேறு வேறா?

    ReplyDelete
  16. நண்பர் கொழந்த, நீங்கள் கூறியிருப்பதுதான் சரியான பெயர். நான் சொன்னதுபோல் டபுள் ட்ரபுள் அல்ல. பிழை பொறுத்தருள்க.

    ReplyDelete
  17. இளம் சிட்டுக்களின் மனதை கொள்ளை கொள்ளும் காதலரே,

    இந்த படத்தை ஒருமுறையாவது தமிழில் பாருங்கள். (வாய்ப்புகள் குறைவே என்றாலும் முயற்சி செய்யுங்கள்).

    தமிழில் வசனங்கள் அபாரம். குறிப்பாக அர்னால்டும் ஸ்டால்லனும் நேருக்கு நேர் சந்திக்கும் காட்சிகளின் வசனங்கள் படு பயங்கர நக்கல்.

    அர்னால்ட்: என்ன ஒடம்பு சரியில்லையா என்ன? இவ்வளவு இளைச்சிருக்க?
    ஸ்டால்லேன்: ஆமாம், நீ எவ்வளவு குண்டாயிருக்கியோ நான் அவ்வளவுக்கு அவ்வளவு இளைச்சிருக்கேன்.

    ReplyDelete
  18. நண்பர்கள் கூறியிருப்பது போல இரண்டாம் பாகமும் வருகிறது. சிலரை கழட்டி விட்டுவிட்டு, மேலும் சிலரை சேர்க்க இயக்குனர் முயல்கிறாராம்.

    ReplyDelete
  19. காதலரே... இந்தப்படம் என்னால் மறக்கவீயலா படங்களில் ஒன்று.. காரணம் மிகவும் சிம்பிள்: ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் !

    ReplyDelete
  20. இந்தப்படம் என்னால் மறக்கவீயலா படங்களில் ஒன்று.. காரணம் மிகவும் சிம்பிள்: ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் ! ஸ்டாலோன் !

    அப்பாடா,

    நாந்தான் கருந்தேள விட பெரிய ஸ்டாலோன் ரசிகன் என்பதை நிரூபித்து விட்டேன்.

    அவரு ஸ்டாலோன் என்று டைப் செஞ்சது : 69 தடவ.

    நான் ஸ்டாலோன் என்று டைப் செஞ்சது : 70 தடவ.

    எப்புடி?

    ReplyDelete
  21. இதுக்காக வேற யாராவது 71 தடவ டைப் செய்யாதீங்க மக்களே.

    ReplyDelete
  22. விஸ்வா, இளம் சிட்டுக்கள் மனதை கவர மட்டுமல்ல :)) தமிழில் கிடைத்தால் பார்க்கிறேன். ஆங்கிலத்திலும் நன்றாகவே இருக்கிறது. படத்தின் வசூலைப் பொறுத்தே இரண்டாம் பாகம் வருவது குறித்து அறியமுடியும் என்கிறார்கள். பார்க்கலாம். நண்பரே ஸ்டாலோனின் ரசிகர்களிற்கிடையில் நடக்கும் போட்டியில் கீ போர்ட்டுகள் சிதறாமல் இருந்தால் போதும். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், தீவிரமான ஸ்டாலோன் ரசிகர்தான் நீங்கள். விஸ்வாதான் போட்டிக்கு தயாராக நிற்கிறார். கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  23. கிங் விஸ்வாவை நான் முதன் முதலில் சந்தித்த போது அவர் ஏகப்பட்ட பில்ட்-அப்புடன் ராக்கி பல்போவா பட டிவிடியை கையில் கொடுத்து பார்க்கச் சொன்னார்!

    அன்று முதல் அவர் ரெகமெண்ட் செய்யும் எந்தவொரு படத்தையும் நான் பார்ப்பதைத் தவிர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன்! அதையும் மீறி பார்த்த சில பல படங்களும் படு மொக்கையாகி விட்டதால் இப்போதெல்லாம் அவர் பரிந்துரைக்கும் எந்தவொரு படத்தையும் அன்-செலெக்டட் என்று ஒதுக்கி விடுகிறேன்!

    அவர் வாங்கிக் கொடுத்த ரேம்போ 5 டிவிடி இன்னும் கவர் பிரிக்காமல் அப்படியே இருக்கிறது!

    JOKES APART... ஸ்டாலோனை சிறு வயதில் ரசித்த எனக்கு இப்போது அவரின் கிழடு தட்டிய உருவம் பரிதாபத்தையும் சில சமயம் வெறுப்பையும் ஏற்படுத்துகிறது! ஆகையால் பழைய பசுமையான நினைவுகளுக்கு களங்கம் ஏதும் ஏற்படாமல் இருக்க இது போன்ற படங்களை தவிர்ப்பதே மேல் என்பது எனது கருத்து!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

    ReplyDelete
  24. //அவர் வாங்கிக் கொடுத்த ரேம்போ 5 டிவிடி இன்னும் கவர் பிரிக்காமல் அப்படியே இருக்கிறது!//

    கொய்யால, நாளைக்கு அனுப்புற டிவிடி செட் கேன்சல்.

    ReplyDelete
  25. //ஸ்டால்லேன்: ஆமாம், நீ எவ்வளவு குண்டாயிருக்கியோ நான் அவ்வளவுக்கு அவ்வளவு இளைச்சிருக்கேன்//

    இங்க்லீசுலயும் இதேதானுங்கோவ்.

    உடம்பு சரியில்லையான்னு கேட்க மாட்டாங்க.

    ReplyDelete
  26. காதலரே!பழைய action பட ரசிகர்களுக்கு இது ஒரு விருந்தாக அமையும் என்றே கேள்விப்பட்டேன்.stallone நல்ல நடிகர்.


    //அந்த அளவிற்கு intensityயோட இன்னொரு ஆக்சன் நடிகர நான் படத்தில் பார்த்ததில்லை. //

    try tony jaa... :)

    ReplyDelete
  27. மேலும்,stallone முகத்தில் தெரியும் அயர்சியானது அவருடைய சமீபத்திய ராம்போ படத்திலேயே தெரிந்தது.

    ReplyDelete
  28. பகிர்வுக்கு நன்றி நண்பரே இந்த வாரம் பார்த்து விடுவேன்.

    ReplyDelete
  29. தலைவர் அவர்களே, விஸ்வா அனுப்பவிருந்த டிவிடி பார்சலை கேன்சல் செய்ய வைத்து விட்டீர்களே :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமினாட்டி, ஸ்டாலோன் நினைவில் நிற்கும் ஒரு நடிகர். காமெடியும், குணச்சித்திரமும் அவரிற்கு வருவது சற்று சிரமமானது. ஆக்‌ஷன்களால் ரசிகர்களைக் கவர்ந்தவர். அதுவே அவரின் பலவீனமாகவும் இருக்கிறது இல்லையா :)டானி ஜாவை அந்த உயரத்தில் வைக்க மனது ஒப்பவில்லை நண்பரே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் வேல்கண்ணன் அவர்களே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  30. Tony jaa is an emerging phenomenon. :)
    Neither bruce lee nor jackie went up the roof overnight. What this guy needs is to come to hollywood and do some really serious action movies. :)
    For all his hard work and talent,he would be world renowned soon.

    ReplyDelete
  31. நண்பர் இலுமினாட்டி, காலம் பதில் சொல்லட்டும் ஆனால் உங்கள் கல்லறைக்கு மேலாக நான் அழகிகள் சகிதம் பூக்கள் வைக்கும் நாளை நினைக்க கண்களில் இப்போதே கண்ணீர் வருகிறது.

    ReplyDelete
  32. இந்த மாதிரி பெரிய ஆளுங்க சேர்ந்து நடிக்கிற படங்கள் எப்படி இருந்தாலும் பார்க்க தூண்டும்.

    ReplyDelete
  33. நண்பர் எஸ்.கே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  34. நண்பரே,

    விமர்சனதிற்குநன்றி! ஆர்னால்டு, ஸ்டாலோன் 2பேரையுமே எனக்கு பிடிக்கும், ஆனால் டெர்மினேட்டர்2,ராம்போ1 போன்ற சில படங்களே அவர்கள் புகழ் என்றும் மங்காது ரசிகனின் மனதில் நிலைநிறுத்திவிட்டது. அவர்களின் மொக்கை படங்கள் தவிர்த்துவிடுவோம்.(ராம்போ 3 :அல்கய்தாவுக்காக ராம்போ, ரஷ்ய ஜெனரலுடன் போர் புரிவார்??!)

    ReplyDelete
  35. நண்பர் cap tiger அவர்களே, வளர்த்த கடா மார்பில் பாய்ந்து விட்டது :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  36. உங்களின் விமர்சனம் நன்றாக இருக்கிறது...., மற்ற பதிவுகளையும் படிக்கிறேன்...

    ReplyDelete