“எனக்கு அந்தப் பணம் வேண்டியிருந்தது” நீதிமன்றத்தில் நீதிபதி கேட்ட கேள்விக்கு குற்றவாளிக் கூண்டில் நின்றிருந்த Edward Pierce தந்த பதில் நகைப்புக்குரியதான எளிமையை கொண்டிருந்தது. ஆனால் அந்தப் பணத்தை கவர்வதற்கு அவன் சென்றிருக்ககூடிய எல்லைகள் எளிமை கொண்டவை அல்ல.
1854ல் ரஷ்யாவிற்கு எதிராக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்ற தன் நேச நாடுகளின் துணையுடன் யுத்தத்தில் இறங்கியிருந்தது. இந்த யுத்தம் Crimean War என்றழைக்கப்படுகிறது. களமுனையில் போரிட்ட இங்கிலாந்து வீரர்களிற்கு சம்பள பட்டுவாடா பணமானது அக்காலப்பகுதியில் மிக வேகமான போக்குவரத்து முறையாகவிருந்த புகையிரதம் வழியாக தங்கப்பாளங்கள் வடிவில் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டது.
London Bridge புகையிரத நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் தென்கிழக்குகரைகளில் அமைந்திருக்கும் Folkestone ஐ நோக்கி பயணிக்கும் ரயிலில், பொதிகளிற்கான தனி ரயில்பெட்டியில் நிறுவப்பட்டிருந்த இரண்டு பாதுகாப்பான, நம்பத்தகுந்த, Chubb நிறுவனத்தின் தயாரிப்பான பாதுகாப்பு பெட்டகங்களில், அக்கால பெறுமதிப்படி 12000 £ மதிப்பு கொண்ட இந்த தங்கப்பாளங்கள் அசம்பாவிதங்கள் ஏதுமின்றி எடுத்து செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.
அந்த இரு பாதுகாப்பு பெட்டகங்களையும் தகுந்த முறையில் திறப்பதற்கு நான்கு சாவிகள் உபயோகிக்கப்பட்டன. இந்த நான்கு சாவிகளும் மூன்று வெவ்வேறான நபர்களின் பாதுகாப்பான பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டு இருந்தன. இந்த இரு பாதுகாப்பு பெட்டகங்களையும் திறப்பதற்கு சாவிகளை பயன்படுத்துவதைத் தவிர வேறு வழி இல்லை என்ற நிலையில், அசாத்தியமான கொள்ளை ஒன்றை மேற்கொள்ள திட்டம் வகுக்கும் சூத்திரதாரியான எட்கார் பிய்யர்ஸின் முதல் நகர்வானது, வெவ்வெறு நபர்களிடம் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவிகளை கவர்ந்து கொள்வது என்பதாகவே Michael Crichton எழுதியிருக்கும் The Great Train Robbery நாவல் ஆரம்பமாகிறது.
1855ல் இங்கிலாந்தில் இடம்பெற்ற Great Gold Robbery ன் தகவல்களை ஆதாரமாக கொண்டு தன் மெச்சத்தகுந்த கற்பனையினால் இக்கற்பனைக் கதையை உருவாக்கியிருக்கிறார் மைக்கேல் கிரைட்டன். உண்மையான சம்பவத்துடன் தொடர்புடைய கொள்ளையர்களின் பெயர்களில் சிறிய மாற்றங்களை அவர் உருவாக்கியிருக்கிறார். ஆனால் கதையில் இடம்வகிக்கும் பெரும்பாலான தகவல்களும், நிகழ்வுகளும் அக்கால வரலாற்றில் இடம் வகிப்பவையே.
பியர்ஸ், பாதுகாப்பு பெட்டக சாவிகளை அணுகிச்செல்ல எடுத்துக்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒவ்வொரு தருணத்திலும் நாவலாசிரியர் மைக்கேல் கிரைட்டன், விக்டோரியா காலத்து இங்கிலாந்து சம்பந்தமான தகவல்களை தாரளமாக ஆனால் கதையானது தன் பாதையிலிருந்து நழுவிக் கொள்ளாத வகையில் சுவையாக பரிமாறுகிறார்.
மதுபான விடுதிகளில் இடம்பெறும் நாய்-எலிச் சண்டைகள் முதல், கவுரவமான குடும்பங்களில் திருமண வயதை எட்டியும் தகுந்த மணமகன் கிடைக்காத பெண்கள் வரை, பாலின நோய்கள் முதல், சிறுவர் விபச்சாரம்[ அக்காலப்பகுதியில் சகஜமான ஒன்று] மற்றும் விக்டோரியா காலப்பகுதியில் உயர்மட்ட சமூகத்தின் பெருமைமிகு புழங்குமிடங்களை தைரியமாக ஆக்கிரமிப்பு செய்த மேல்தட்டு விலைமாதர்கள் மேலும் அதற்குரிய காரணங்கள் வரை, தப்பிச் செல்ல முடியாதென கருதப்பட்ட இங்கிலாந்து சிறைகள், பாடல்கள் பாடி வேடிக்கையான கேளிக்கையாக பொதுமக்களால் ரசிக்கப்பட்ட மரணதண்டனைகள், குறுகிய கழிவறைகளில் தம் உடல்களை ஒடுக்கி படுத்துறங்கிய மனிதர்கள், லண்டனின் நகரமயமாக்கம், புகையிரத சேவையின் அறிமுகம், அதன் அபரித வளர்ச்சி. ஸ்காட்லாண்ட்யார்ட்டின் வளர்ச்சி, இறக்கும் மனிதர்களின் உடல்களை சிறிது காலம் காக்க வைத்து பின்பாக புதைக்கும் வினோதமான வழக்கம் என விக்டோரியா கால இங்கிலாந்தின் சமூக, பொருளாதார, வரலாற்று பார்வையாகவும் கிரைட்டனின் நாவல் இருக்கிறது. கிரைட்டனின் அடிக்க முடியாத கதைசொல்லும் பாங்கிற்கு இந்நாவல் ஒரு மிகச்சிறந்த சான்று.
தங்கப் பாளங்களை கொள்ளை அடிக்கும் நிகழ்வைவிட அதனை நிறைவேற்றுவதற்காக எட்வர்ட் பிய்யர்ஸ் இயற்றும் திட்டங்களே நாவலின் பெரும் விறுவிறுப்பாக அமைகின்றன. ஒவ்வொரு திட்டத்திற்கும் எதிர்பாராதவிதமாக தடைகள் வந்து சேரும்போதும் அவற்றை எட்வர்ட் பிய்யர்ஸ் சமயோசிதமாக எதிர்கொள்ளும் விதம் அப்பாத்திரத்தின் மீதான கவர்ச்சியை கதை நெடுகிலும் அதிகரித்தபடியே செல்கிறது. ஒவ்வொரு சாவியையும் அணுகுவதற்காக பிய்யர்ஸ் ஆற்றும் செயல்கள் பரபரப்பின் உச்சம். அதுவும் லண்டன் பிரிட்ஜ் புகையிரத நிலையத்தில் இருக்கும் பாதுகாப்பு பெட்டக சாவிகளை அணுகுவதற்காக நடாத்தப்படும் திட்டம்போல் திக்திக் தருணத்தை சமீபகாலத்தில் நான் படித்துணர்ந்ததில்லை.
கொள்ளையின் சூத்திரதாரியான எட்வார்ட் பிய்யர்ஸ், அவனது சகா Agar, புகைபோக்கிகளை துப்புரவு செய்பவனாக இருந்த Clean Willy, வங்கி அதிகாரிகளான Henry Fowler, Trent, பிய்யர்ஸின் ஆசைநாயகி Miriam, புகையிரதக் காவலன் Burgees, வங்கி அதிகாரி Trentன் மகளான Elizabeth போன்ற பாத்திரங்களை கதையில் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் கிரைட்டன். இப்பாத்திரங்கள் நாவலில் மிகவும் உயிர்ப்புடன் உலாவருகின்றன.
எட்வார்ட் பிய்யர்ஸ் தன் தேவைகளிற்காக அணுகும் விளிம்பு நிலை மனிதர்கள் வழி அவர்களின் வாழ்க்கை குறித்த ஒரு சித்திரத்தை நாவலில் இலகுவாக கிறுக்குகிறார் கிரைட்டன். வங்கி அதிகாரிகளான ட்ரெண்ட் மற்றும் ஃபவுலர் வாயிலாக மேல்தட்டு சமூகம் குறித்த பார்வை நாவலில் முன்வைக்கப்படுகிறது. இந்த இரு வேறுபட்ட சமூக நிலையிலிருந்த மனிதர்களையும் சரியாக புரிந்து கொண்ட நிலையில் அவர்களை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட ஒருவனாகவே எட்கார் பிய்யர்ஸை காணமுடிகிறது.
ஒரு சமூகமானது தன் வளர்ச்சிக்கான அடிகளை நவீனத்துவத்தை நோக்கி எடுத்துச் செல்லும்போது அந்த சமூகத்தினுள் ஒரு கூறாக உறையும் குற்றசமூகமானது அவ்வளர்ச்சியால் ஒடுக்கப்பட்டு அழிவை எட்டிவிடாது தானும் நவீனத்துவத்தை நோக்கி தன் வளர்சியை கொண்டுசெல்கிறது என்பதும் நாவலால் உணர்த்தப்படும் ஒன்றாகும்.
குற்றங்களும், குற்றவாளிகளும் விளிம்பு நிலை சமூகத்தின் உற்பத்தியாக மட்டுமே இருக்கக்கூடும், கல்வியறிவு பெற்ற, மேல்தட்டு மக்களிடமிருந்து அவை உருவாவதில்லை என்று அக்காலத்தில் நிலவியிருந்த ஒரு கருத்தை உலுக்கிப் பார்ப்பதாகவும் கதையில் எட்கார் பிய்யர்ஸின் பாத்திரம் அமைந்திருக்கிறது.
கிரைட்டனின் Sphere, Next, State of Fear ஆகிய நாவல்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆரம்பித்து நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி முடிவில் அந்த எதிர்பார்ப்பை மங்கவைப்பதாக நிறைவுபெறும். ஆனால் இதற்கு மாறாக இந்நாவல் ஆரம்பம் முதல் இறுதிவரை தன் சுவையையும் விறுவிறுப்பையும் சிறப்பாக தக்கவைத்துக் கொள்கிறது.
தெளிவான, நகைச்சுவையை சற்று கலந்த கிரைட்டனின் கதைசொல்லல் , சுவையான தகவல்கள் என்பன நாவலை எந்த தருணத்திலும் தொய்வின்றி விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கின்றன. நாவலின் இறுதிப் பக்கம்வரை சஸ்பென்ஸை கடத்திச் செல்வதில் பெரும் வெற்றி காண்கிறார் கிரைட்டன். இதுவரை நான் படித்த கிரைட்டனின் நாவல்களிலேயே The Great Train Robbery எனக்கு மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. உண்மையான நிகழ்வு ஒன்றின் பின்னனியில் இவ்வளவு ரசமான நாவலைத் தர முடியுமா என பிரம்மிக்க வைக்கிறார் கிரைட்டன். நாவல் வெளிவந்து இன்று 35 வருடங்கள் ஓடிச்சென்ற பின்பாகவும் அருமையான ஒரு த்ரில்லரின் வாசிப்பனுபவத்தை நாவல் முழுமையாக தருகிறது. கிரைட்டனின் நாவல்களில் தவறவிடக்கூடாத ஒன்றாகவே இந்நாவலை என்னால் பார்க்க முடிகிறது.
1979ல் இந்நாவல் The First Great Train Robbery எனும் பெயரில் திரைப்படமாக வெளியாகியது [அமெரிக்காவில் இத்திரைப்படம் நாவலின் தலைப்பிலேயே வெளியாகியது]. பிரபல நடிகர்களான Sean Connery, Donald Sutherland ஆகியோர் முறையே எட்கார் பிய்யர்ஸ் மற்றும் ஆகார் ஆகிய பாத்திரங்களை திரையில் ஏற்க நாவலாசிரியர் மைக்கல் கிரைட்டனின் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் இத்திரைப்படம் உருவானது. [***]
Haiya me the 1st
ReplyDeleteafter long time
// குற்றங்களும், குற்றவாளிகளும் விளிம்பு நிலை சமூகத்தின் உற்பத்தியாக மட்டுமே இருக்கக்கூடும், கல்வியறிவு பெற்ற, மேல்தட்டு மக்களிடமிருந்து அவை உருவாவதில்லை என்று அக்காலத்தில் நிலவியிருந்த ஒரு கருத்தை உலுக்கிப் பார்ப்பதாகவும் கதையில் எட்கார் பிய்யர்ஸின் பாத்திரம் அமைந்திருக்கிறது. //
ReplyDeleteமிக சரியாக சொன்னீர்கள் காதலரே
.
இலுமி சொல்லி ஆரம்பிச்ச Prey இன்னும் பாதி கூட வர மாட்டேங்குது. அதுக்குள்ள இன்னொன்னா???
ReplyDeleteமீத செகண்ட் - 1 = ஃபர்ஸ்ட்
டெக்னிகல் ஃபால்ட்
ReplyDeleteமீ த தேர்ட் - 2*சிபி = ஃபர்ஸ்ட்
என்ன கொடுமை சார் இது? இந்த படத்த நான் பார்த்து இருக்கேன். இப்போ இருக்குறத விட இன்னும் சின்ன வயசுல.
ReplyDeleteஆனா, நம்ம ஹாலிபாலா மாதிரி படம் ரிலீஸ் ஆகும்போது எல்லாம் பாக்கல.
விஸ்வாவிற்கு கடுமையான பதில் அளிக்கப்படும்; தற்போதைக்கு எதுவும் தோணாததால்.
ReplyDeleteகாட் இட்!!
ReplyDeleteமீ த ஃபர்ஸ்ட் போட முடியாத விஸ்வா, ஆத்திரத்தில் பேசுகிறார்.
ணா..
ReplyDeleteஇதே பேருல 1902ல் ஒரு 11 நிமிட படம், முதல் முறையாக ஒரு சின்ன கதையம்சத்துடன் எடுக்கப்பட்டதாக படித்த ஞாபகம். உங்களின் இந்த நல்ல பதிவு அதை ஞாபகப் படுத்த கூகிளில் தேடியதில் அப்படமே கிடைத்தது. முடிந்தால் பார்த்து விட்டு கருத்துக் கூறவும்
http://video.google.com/videoplay?docid=-7949193416885414135#
நல்ல த்ரில்லர் படம். நாவலைப் படிக்க முடியாவிட்டாலும், படத்தை மறுபடியும் பார்க்கத்தூண்டியது உங்கள் விமர்சனம்.
ReplyDeleteநானும் இந்தப் படத்த சமீபத்துலதான் DVDல பார்த்தேன்!
ReplyDeleteஅந்த கடைசி வசனம் உண்மையிலேயே அட்டகாசம்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
// படத்தை மறுபடியும் பார்க்கத்தூண்டியது உங்கள் விமர்சனம்//
ReplyDeleteஅதாவது பின்னோக்கி ஏற்கனவே பார்த்துட்டாராம். இதை நான் 33-ஆவது கமெண்ட்டா ஆட் பண்ணிக்கிறேன்.
சரியா பின்னோக்கி!! :) :) :) (ஒரு நாளைக்கு என்னை பெடலெடுக்கப் போறீங்க. சரிதானே? :) )
அன்பு நண்பரே,
ReplyDeleteநீண்ட இடைவெளிக்கு பிறகு புத்தக விமர்சனம். கிரைட்டனின் சிறப்பான நாவல்களில் இதுவும் ஒன்று. எட்வர்ட் பியர்ஸ் கதாபாத்திரம் சிறப்பான முறையில் அவரால் சித்தரிக்கப்ப்டடிருக்கும்.
லண்டன் நகரில் எல்லா வட்டங்களிலும் புகுந்து புறப்படக்கூடிய வசீகரமான வில்லன்(?) அவன்.
திரைப்படத்தில் எனக்கு முழுமையான திருப்தியில்லை. நாவலின் ஏதோ ஒன்று குறைந்தது போல தோன்றியது. அவரின் நண்பர் கோல்ட்ஸ்மித் வழக்கம்போல் பின்னணி இசைக்கோர்ப்புகளில் அற்புதமாக இசையமைத்திருப்பார்.
சிறப்பான பதிவு. அடிக்கடி இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கின்றேன்.
உங்கள் விமர்சனம் படம் பார்க்கத் தூண்டுகிறது ;-)
ReplyDeleteநல்ல விமர்சனம். நன்றி காதலரே ;-)
ReplyDeleteமீ த தேர்ட்டீன் - ஆல் கமெண்ட்ஸ் பிஃபோர் திஸ் = மீ த ஃபர்ஸ்ட்
ReplyDeleteஎழுத்துக்கு மரியாதை குடுங்க
ReplyDeleteஷான் கானரி said:
ReplyDeleteஇந்தப் படத்தின் ஹீரோயின் மிக அழகு. அவர்... அந்தப் படத்தில் மிக அருமையாக திறமை காட்டியிருப்பார்.
படிக்குறவங்களுக்கு பரியாதை குடுங்க
குத்தலகேசி said:
ReplyDeleteநண்பரே.. தங்களுக்கு தமிழில் நன்கு காமெடி வருகிறது. இதை தக்க விதத்தில் பயன்படுத்தினால் நல்ல எதிர்காலம் உண்டு.
நாசக்குத்து நாவலன் said...
ReplyDeleteபடத்தில் வரும் ஆக்ஷன் காட்சிகளைப் பற்றி ஒன்னுமே சொல்லலையே நீங்க?
ஸிங்ஸிங் said...
நாவலரே... உங்களை நம்பி இப்பொழுதுதான் இந்தப் படத்தை பார்த்தேன். பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன்.
தயவுசெய்து மப்பில் படம் பார்க்கச் செல்லாதீர்கள்.
மைக்கேல் க்ரைட்டன் said...
ReplyDeleteஉங்கள் விமர்சனம் நாவல் படிக்கத் தூண்டுகிறது...
//விக்டோரியா காலத்து இங்கிலாந்து சம்பந்தமான தகவல்களை தாரளமாக ஆனால் கதையானது தன் பாதையிலிருந்து நழுவிக் கொள்ளாத வகையில் சுவையாக பரிமாறுகிறார்.//
ReplyDeletecrichton னின் ஸ்டைல் அது தானே..:)
//கிரைட்டனின் Sphere, Next, State of Fear ஆகிய நாவல்கள் ஆரம்பத்தில் விறுவிறுப்பாக ஆரம்பித்து நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கி முடிவில் அந்த எதிர்பார்ப்பை மங்கவைப்பதாக நிறைவுபெறும்.//
sphere ? ஒத்துக்க மாட்டேன். :)
நெக்ஸ்ட்,அது ஒரு மொக்கை கதை.
பிய்யர்ஸின் கதாப்பாத்திரம் மிக அருமையாக இருக்கும்.
உயர்ந்தவன் தாழ்ந்தவன்னு சமூகம் வகைப்படுத்தி இருந்தாலும்,இருவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை , இல்லாதவனின் அழுக்கை ஓட்டைத் துணி காண்பிக்க,இருப்பவன் அதை அலங்கரித்து மறைக்கிறான் என்பதை எள்ளலுடன் சொல்லி இருப்பார் crichton.அவரது சிறந்த கதைகளில் ஒன்று இது.அப்புறம்,eaters of the dead கூட இதே மாதிரி நல்லா இருக்கும்.படிச்சுப் பாருங்க.
--
ILLUMINATI
http://illuminati8.blogspot.com/
ப்ளாகுக்கு மரியாதை கொடுங்க..
ReplyDeleteகமெண்டுக்கு மரியாதை குடுங்க..
எழுத்துக்கு மரியாதை குடுங்க..
விமரிசனத்துக்கு மரியாதை குடுங்க..
நண்பரே... ஷான் கானரி நடித்து இன்னொரு படம் உண்டு. அதில் படம் ஆரம்பித்தவுடன் பெயர் போடுவார்கள். ஷான் கானரியின் பெயரும் அதில் வரும். கலர் படம். ஹீரோயின் ஒரு பெண். வில்லன் ஒரு கெட்டவன். அந்தப் படத்தையும் பாருங்கள். நன்றாக இருக்கும்.
ReplyDeleteஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteநண்பரே.. அவரது விமரிசனம் படித்துவிட்டு, படம் போகவேண்டாம் என்றிருந்தேன்.. ஆனால் உங்கள் விமரிசனம் படித்துவிட்டு, கட்டாயம் போகவேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.. இன்னொரு விமரிசனம் படித்துவிட்டு, மண்டையில் உள்ள முடியைப் பிய்த்தும் கொள்ளுவேன் என்றும் சொல்லிக் கொள்கிறேன்
ReplyDeleteநண்பரே... சும்மா, சில டெம்ப்ளேட் பின்னூட்டங்கள் போட்டால் என்ன என்று தோன்றியது... அதுதான் இப்படி ;-) .. மற்றபடி, உங்கள் விமர்சனம் சூப்பரோ சூப்பர் !! கலக்குங்கள் (இது ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல)
ReplyDeleteநண்பர் சிபி, தங்களின் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் ஹாலிவூட் பாலா அவர்களே, இலுமினாட்டி பதிவிட்ட நாவலைவிட இது அட்டகாசமாக இருக்கும் என்பது என் கருத்து :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
விஸ்வா தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே. வயதில் மூத்தவர் நீங்களா ஹாலி பாலா அவர்களா விளக்கவும் :)
நண்பர் கொழந்தை, நீங்கள் தந்த சுட்டியை இன்னமும் உபயோகப்படுத்தவில்லை :) பார்த்துவிட்டு பின் என் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறேன். தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் பின்னோக்கி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
தலைவர் அவர்களே, நான் இத்திரைப்படத்தை பார்க்கவில்லை. கதையிலேயே அந்த வசனம் அட்டகாசமாகத்தான் இருக்கும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ஜோஸ், புத்தகங்கள் அளிக்கும் உணர்வுகளை பல திரைப்படங்கள் தர தவறிவிடுகின்றன. பிய்யர்ஸ் வசீகரமான வில்லன் என்பது உண்மை :)) புத்தகங்களை படித்து முடித்தால்தானே எதையாவது எழுதமுடியும். பெண்களின் இன்பங்கள்..புதிய ரகசியங்கள் என்ற ஒரு நூல் குறித்த கட்டுரையைப் படிக்கவேண்டும் என்பதில் மிகுந்த ஆவலாக இருக்கிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
நண்பர் கருந்தேள், வேலைப் பளு ஓடிப் போய்விட்டது என்பதை உங்கள் கருத்துக்கள் காண்பிக்கின்றன. டெம்பிளேட் கருத்துக் கலாச்சாரத்தை வளர்த்துவிட்டவர்களை என்னவென்பது :)) விரைவில் பதிவுகளில் கருத்திடல் ஒரு எளிய அறிமுகம் எனும் நூல் வெளியாகும் வாய்ப்பிருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
இலுமினாட்டி, Sphere நல்ல நாவல் என்பதை நீங்கள் அந்நாவல் குறித்த பதிவு மூலமாக விளக்க வேண்டுமென வேண்டுகிறேன் :)) ஈட்டர்ஸ் ஆஃப் த டெட், காங்கோ போன்றவை படிக்க வேண்டிய லிஸ்டில் இருக்கின்றன. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி. பெண்களின் இன்பங்கள்.. புத்தகத்தை படித்துவிட்டு ஒரு பதிவைப் போடவும் :))
ஆஹா.. இன்னிக்கு.. கும்மில இடம் பிடிக்க முடியாது!! ஸாரி!!
ReplyDeleteசூப்பர் படம்.நெம்ப வருசம் முன்னாடி ப்ளாக் அண்ட் ஒயிட்ல பாத்தது...
ReplyDeleteநண்பர் மயில்ராவணன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDelete