Wednesday, May 18, 2011

இளமையின் ஊற்று


pirates-des-caraibes-la-fontaine-de-jouvence-17560-1415865127அஞ்செலிக்கா [Penélope Cruz] எனும் தன் முன்னாள் காதலியின் தந்திரத்தால் கொடுங்கடற்கொள்ளையனான BlackBeard [Ian Macshane] ன் கப்பலில் அடிமையாக்கப்படுகிறான் பிரபல கடற்கொள்ளையனான கேப்டன் Jack Sparrow [Jhonny Depp]. ஜாக் ஸ்பாரோ நீண்ட காலம் உயிர்வாழ வேண்டுமெனில் நித்திய வாழ்வை மனிதர்களிற்கு வழங்கக்கூடிய இளமையின் ஊற்றை நோக்கி தன்னை இட்டுச் செல்ல வேண்டுமென அவனை மிரட்டுகிறான் கடற்கொள்ளையன் கருந்தாடி…..

சிறுவயது முதலே கடற்கொள்ளையர்களின் மீதான மோகம் மனதை பீடித்த அன்பர்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்பட வரிசையின் நான்காம் பாகம் வந்தே விட்டது. கடற்கொள்ளையர்களின் ரசிகர்கள் அனைவரினதும் மனதுகளை பூரணமாக திருப்திப்படுத்தும் வகையில் Pirate of The carribean: On Stranger Tides அமைந்திருக்கிறது எனலாம். Tim Powers அவர்கள் எழுதிய ஒரு நாவலை உசாத் துணையாக கொண்டு இத்திரைப்படத்திற்கான கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. படத்தை சிறப்பாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் Rob Marshall.

படம் ஆரம்பித்த கணம் முதலே விறுவிறுப்பும் பற்றிக் கொள்கிறது. இளமையின் ஊற்றை நோக்கி ஸ்பானியர்கள், ஆங்கிலேயர்கள், கருந்தாடி என மூன்று குழுக்கள் போட்டி போட்டுக்கொண்டு வேகவேகமாக பயணிக்க ஆரம்பிக்க திரைப்படத்திலும் வேகம் தொற்றிக் கொள்கிறது. நாயகன் ஜாக் ஸ்பாரோ வித்தியாசமான கெட்டப்பில் தோன்றும் ஆரம்பக் காட்சியே அமர்க்களம். அது முதல் கொண்டு படம் நிறைவு பெறும் வரையில் அடி வெளுத்து வாங்கியிருக்கிறார் ஜாக் ஸ்பாரோவான நடிகர் ஜானி டெப். அவரின் உடல் மொழி, வசனங்களை வழங்கல், சேஷ்டையான முகபாவங்கள் என்பவற்றை சேர்த்து அவர் வழங்கியிருக்கும் நடிப்பு இதுவரை வந்த பாகங்கள் அனைவற்றிலும் அவர் காட்டியிருக்ககூடிய திறமையை இலகுவாக பின்னடையச் செய்து விடுகிறது. ஜானி டெப்பின் ரசிகர்கள் அனைவரும் மிகவும் விரும்பி ரசிக்கும் ஒரு படைப்பாக இது அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை. உனக்கு ஒரு தங்கையும் அவளிற்கு ஒரு நாயும் இருந்தால் என் தேர்வு நாயாகவே இருக்கும் என நாயகி அஞ்செலிக்காவிடம் கூறுவதற்கு சிரிப்பு வெடிக்கிறது எனில் ஒரு நீர் வீழ்ச்சியில் இருந்து அவர் குதிக்க வேண்டிய தருணத்தில் அவர் அடிக்கும் கூத்திற்கு அரங்கமே குமுறிக் குமுறிச் சிரிக்கிறது. ஜாக் ஸ்பாரோ தனியனாக நின்று படத்தை சுவைக்க செய்திருக்கிறார். Bravo Jhonny Depp.

ஜாக் ஸ்பாரோ இப்படியென்றால் அவருடன் போட்டி போடும் பாத்திரமாக மின்னுபவர்கள் கடற்கொள்ளையர்களான கருந்தாடியும், Barbosa [Geoffry Rush] வும். அமானுஷ்ய சக்திகளின் உதவிகளுடன் திகில் கடற்கொள்ளையனாக கருந்தாடி. இப்பாத்திரத்தை ஏற்றிருக்கும் நடிகரான இயான் மக்‌ஷேன் தன் கம்பீரமான நடிப்பால் திரையை ஆக்கிரமிக்கிறார். கருந்தாடி சிரித்தாலே பயங்கரமாகத்தான் இருக்கிறது. அருமையான நடிகர் தேர்வு என்றால் அது மிகையாகாது. தன் மனதில் பழிதீர்க்கும் வஞ்சம் ஒன்றை ரகசியமாக ஏந்திக் கொண்டு தன் ஒரு காலையும், கருமுத்தையும்- Black Pearl - பறிகொடுத்த நிலையில் இங்கிலாந்து மன்னரின் கடற்படையில் இணைந்து கொள்ளும் கேப்டன் பார்போசா தன் பங்கிற்கு நகைச்சுவையில் பின்னி எடுத்திருக்கிறார். அவர் அரச ஊழியத்தில் இருப்பதால் அணிந்து கொள்ளும் டோப்பாவும், முகவலங்காரமும் சிரிப்போ சிரிப்பு. ராஜ விசுவாசத்தை ஊட்டி துவண்டிருக்கும் கடற்படையினரை உற்சாகமூட்டும் தருணம் நிச்சயமாக கடற்கொள்ளையர்களால் விசிலடிக்கப்படும் தருணமாக அமையும்.

pirates-des-caraibes-la-fontaine-de-jouvence-2011-17560-1925004355நடிகர்கள் ஒரு புறம் பின்னி எடுக்கிறார்கள் எனில் மறுபுறம் கதை இது எப்படி சாத்தியம் எனும் கேள்விகளிற்கு விடை தேட நேரம் தராத வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கிறது. திருப்பம் மாறி திருப்பமாக கதை ஓடிக் கொண்டே இருக்கிறது. கடற் கன்னிகள் குறித்த தொன்மத்தில் மாற்றங்கள் செய்து உருவாக்கப்பட்டிருக்கும் கடற்கன்னிகளிற்குரிய பகுதி அட்டகாசம். கடற்கன்னிகளை பிடிக்கும் அந்தக் காட்சி அருமையான விறுவிறு ஆக்‌ஷன். அதேபோல் பாதிரிக்கும் ஒரு கடற்கன்னிக்கும் இடையில் உருவாகும் காதல், தனித்த ஒரு சிறு கவிதையாக உருக்கொண்டுவிடுகிறது. உண்மையிலேயே மனதை கலங்க வைக்கும் சில தருணங்களை அந்த சிறுகாதல் திரையில் விரித்து செல்கிறது. இதே வேளையில் கடற்கன்னிகளை இடுப்பிற்கு கீழே மீன் வடிவில் உருவாக்கிய கலைஞர்களிற்கும், அவர்களில் இளமையான மார்புகளை பலவிதமான தந்திரங்களால் காட்டாமல் செய்த படக்குழுவினர்க்கும் பாரிஸ் கடற்கன்னிகள் ரசிகர் மன்ற சார்பில் வன்மையான கண்டணங்களை நாம் தெரிவித்துக் கொள்கிறோம்.

புதிய நாகரீகங்களையும், விடயங்களையும் மதம் எனும் பெயரில் அழித்தொழித்த ஸ்பானிய ஆக்கிரமிப்பின் நீட்சியாகவே இப்படத்தில் ஸ்பானியர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். படத்தின் இறுதிப்பகுதி, ஆக்‌ஷன், நகைச்சுவை, எதிர்பாராத திருப்பம் என ரசிகர்களை வியக்கவைத்துக் கொண்டே செல்கிறது. படத்தின் முடிவில் இத்திரைப்பட வரிசை தொடருவதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதற்கான நம்பிக்கை ரசிகர்கள் மனதில் விதைக்கப்படுகிறது. இவ்வகையான தொடர்ச்சிகளாக அவை இருக்கும் பட்சத்தில் அத்தொடர்ச்சிகளை ஏற்றுக்கொள்ள நான் தயார்.

அடடா, இதுவரையில் படத்தின் நாயகியான அஞ்செலிக்கா குறித்து இப்பதிவில் எழுதவில்லையே என சில பெனிலோப்பே க்ருஸ் அம்மிணி ரசிகர்கள் விசனமுறலாம். இதோ! ச்வீட் நெத்தலி கெய்ரா க்னைட்லி இனி தான் கடற்கொள்ளையர்களின் கப்பலில் ஏறப்போவதில்லை என மறுத்துவிட அவரிற்கு பதிலாக ஸ்பானிய வதங்கல் பூசணி பெனிலோப்பே க்ருஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இவ்வளவு சுவையான அம்சங்கள் இருக்கிறதே என்பதற்கு திருஷ்டிப் பரிகாரமாக அவர் இருக்கிறார் என்பது என் தாழ்மையான கருத்து. உற்சாகமும், இளமையும், கவர்ச்சியும், நளினமும் பொங்கோ பொங்கெனப் பொங்கி, கடற்கொள்ளையர் கப்பல் தளத்தில் சசரஸா நடனமாட வேண்டிய பாத்திரத்தில் மூக்கு முட்ட ஒரு பிடி பிடித்து விட்டு தூக்கத்திற்கு தயாரானவர் போல் தன் திறமையை காட்டியிருக்கும் பெனிலோப்பே க்ருஸை என்னவென்பது. பெனிலோப் தயவு செய்து அடுத்த பாகம் என ஒன்றிருந்தால் அதில் நடிக்காதீர்கள். மேனியலங்காரத்தையும் மீறி உங்கள் தளர்ந்த மார்புகளும், சுருக்கம் விழ ஆரம்பித்த விழிகளும் வன் கவிதை பாடுகின்றன அம்மிணி.

மிக அரிதாகவே ஒரு திரைப்படத்தின் தொடர்ச்சியாக வரும் பாகங்கள் அதன் முதல் பாகத்தை விஞ்சக்கூடும், இத்திரைப்படம் அந்த நிலையை எட்டவில்லை எனிலும் அதன் அருகாமையில் வந்து நிற்கிறது. வழமை போலவே ஹான்ஸ் ஸிம்மர் தன் இசையால் பின்னி எடுத்திருக்கிறார். ஒளிப்பதிவு, காட்சி மற்றும் அரங்க அலங்காரங்கள், நடிகர்களின் உடையலங்காரங்கள், நகைச்சுவை கலந்த வசனங்கள் என்பன கடற்கொள்ளையர் உலகில் எம்மை பிணைத்துக் கொள்ள சிறப்பாக உதவுகின்றன. கடற்கொள்ளையர்களின் ரசிகர்களை எல்லாம் இளமை ஊற்றில் ஒரு முக்கு முக்கி எடுப்பதில் இத்திரைப்படம் ஜாலியான வெற்றி காண்கிறது. [***]

ட்ரெயிலர்

25 comments:

  1. நண்பரொருவர் IMAX 3-D யில் படம் பார்த்துவிட்டு ரொம்பவும் உதார் விட்டது ஏன் என்று உங்கள் விமர்சனம் படித்த பின்தான் தெரிகிறது.

    ReplyDelete
  2. முத்துவிசிறி அவர்களே, உங்கள் நண்பர் விட்டது உதார் அல்ல அது உண்மை. நீங்களும் இப்படத்தை தவறவிடாதீர்கள். ஆனால் இப்படம் 3Dயில் உருவானது என்பது கயமைத்தனம், அப்படி எந்த சிறப்பையும் 3D இப்படத்திற்கு வழங்கிடவில்லை. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. என்ன.............ஒரேநாள்ல ரெண்டு பதிவா.....என்னடா இது கலைஞருக்கு வந்த சோதன......

    ReplyDelete
  4. Jurassic park - Terminator - Spiderman - Transformers இந்த மாதிரி தொடர்கள் மொக்க ஆனதுனால....இந்த தொடர் படங்களின் மேல எரிச்சல் தான் எனக்கு இருக்கு...நீங்க எவ்வளவு சொல்லியிருக்கீங்க...பாத்திருவோம்...

    ReplyDelete
  5. // ஸ்பானிய வதங்கல் பூசணி பெனிலோப்பே க்ருஸ் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்//

    ஆ...ஆ.....ஆஹ்ஹா.....ஆஆஅ....

    ReplyDelete
  6. நாளைக்கு நைட் தான் சத்யம் தியேட்டரில் இதன் சிறப்பு காட்சியே இருக்கு. வெள்ளிகிழமை அன்றுதான் இங்கே ரிலீஸ் ஆகிறது. அப்படி இருக்க, நீங்கள் இன்றே பார்த்து விட்டது மகிழ்ச்சி. இதன் ஸ்பெஷல் காமிக்ஸ் வேறு வந்துள்ளது.

    இருந்தாலும் நம்ம நிலைமை - என்ன வாழ்க்கைடா இது (வானம் சொம்பு ஸ்டைலில் படிக்கவும்).

    ஒரு வழியாக தமிழ் சினிமா உலகம் என்ற நம்ம சினிமா பிளாக் இன்று முதல் ஆரம்பம் ஆகிறது. ஒரு பத்து நிமிடத்தில் அதனை பார்க்கலாம்.

    கிங் விஸ்வா

    கலைஞரின் பொன்னர் சங்கர் காமிக்ஸ்

    ReplyDelete
  7. காதலரே,
    வெகு நாட்களாக திட்டமிடப்பட்டு செயல்படுத்தாத தமிழ் சினிமா உலகம் என்ற தளம் இன்று முதல் இயங்க ஆரம்பித்து இருக்கிறது. நீங்கள் விமர்சனம் செய்த ப்ரீஸ்ட் காமிக்ஸ் கதையை மைய்யமாக கொண்டு வந்த திரைப்படமே முதல் விமர்சனம்.

    கிங் விஸ்வா

    தமிழ் சினிமா உலகம் - ப்ரீஸ்ட் - கல்லறை உலகம் விமர்சனம்

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. //உனக்கு ஒரு தங்கசியும் அவளிற்கு ஒரு நாயும் இருந்தால் என் தேர்வு நாயாகவே இருக்கும் என நாயகி அஞ்செலிக்காவிடம் கூறுவதற்கு சிரிப்பு வெடிக்கிறது//

    அவன் கிடக்கான் கிறுக்குப் பய. :)
    Penelope, அவன் வேணாம்.நீ இங்க வாம்மா. ;)


    //ஒரு நீர் வீழ்ச்சியில் இருந்து அவர் குதிக்க வேண்டிய தருணத்தில் அவர் அடிக்கும் கூத்திற்கு அரங்கமே குமுறிக் குமுறிச் சிரிக்கிறது.//

    trailer இல் வந்தது தானே? அருமையான டயலாக் டெலிவரி. :)

    Penelope குறித்து..
    Belle epoque,jamon jamon,open your eyes ஆகிய படங்களில் பட்டையைக் கிளப்பியவர்.குறிப்பாக ஓபன் யுவர் ஐஸ்.இதில் சொதப்பி விட்டார் என்கிறீர்.சீக்கிரமே மொக்கை பீஸாகிக் கொண்டிருக்கும் penelopeஐ கண்டிக்கிறேன்.
    காதலரே கவனிக்க, அது கண்டிக்கிறேன். கண்னடிக்கிறேன் அல்ல.உமக்கு இருக்கும் மயக்கத்தில் மாற்றிப் படித்தாலும் படிப்பீர். ;)

    ReplyDelete
  10. // அவன் கிடக்கான் கிறுக்குப் பய. :)
    Penelope, அவன் வேணாம்.நீ இங்க வாம்மா.//

    என்னாது......இலுமி எங்க அளவுக்கு யூத் இல்லைனாலும் கொஞ்சமாவது யூத்தாயிருப்பார்ன்னு நெனச்சிருந்தா.........மேல உள்ள கமெண்ட் அத பரிசீலனை பண்ண வெச்சிருச்சு

    ReplyDelete
  11. நண்பர் கொழந்த, பெரியவரிற்குதான் இனி ஓய்வுகாலம் வந்து விட்டதே இனி அவர் செய்வது எல்லாம் இலக்கிய சாதனைகளாக எம்மை வந்தணைக்கும் என்பதை நினைத்தாலே என் கண்கள் ஆனந்தக் கண்ணீர் சொரிகின்றது. வாய்ப்புக் கிடைக்கும்போது படத்தைப் பாருங்கள் நன்றாகவே இருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.[ இலுமி இன்னமும் உங்கள் கருத்தை படிக்கவில்லை என்றே எண்ணுகிறேன் சபாஷ் சரியான அடி]

    விஸ்வா, உங்கள் புதிய வலைத்தளத்திற்கு வாழ்த்துக்கள். இன்று பார்த்துவிட்டு உங்கள் தளத்தில் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் இலுமி, பெனிலோப்பேயை இங்க வாம்மா எனக் கூப்பிடும் அளவிற்கு உங்கள் நிலை வந்து விட்டதா வெரி வெரி சேட் சிச்சுவேஷன். ட்ரெய்லரில் வந்ததும், இன்னது ஒன்றும் :) ஏன் நான் கண்ணடிக்ககூடாதா, அதில் அப்படி என்ன குற்றம் கண்டீர், அப்படி மயக்கத்தில் நான் மாற்றிப் படித்தாலும் நீர் செய்வது பற்றி அது சரியாகத்தானே கூறுகிறது :) வாலிபக் கலைஞர் இலுமி வாழ்க, வாழ்க! தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  12. பெனோலோப் என்ற பேரிளம் பெண்ணை இவ்வளவு வாரியிருக்க வேண்டாம்.ஒரு காலத்தில் அது ஒரு ஸ்பெசல் ஸ்பானிஷ் தக்காளி.காதலரே கொஞ்சம் பழைய விசுவாசம் காட்டக்கூடாதா?

    ReplyDelete
  13. //கருந்தாடி சிரித்தாலே பயங்கரமாகத்தான் இருக்கிறது// - அப்படியென்றால், கருந்தேள் சிரித்தால்?

    ReplyDelete
  14. இந்தப் பட வரிசை, எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், கோர் வெர்பின்ஸ்கி இல்லாததால், பார்க்கவேண்டாம் என முடிவு செய்திருந்தேன். ஆனால் என் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டேன்.

    ReplyDelete
  15. //இலுமி எங்க அளவுக்கு யூத் இல்லைனாலும் கொஞ்சமாவது யூத்தாயிருப்பார்ன்னு நெனச்சிருந்தா.........மேல உள்ள கமெண்ட் அத பரிசீலனை பண்ண வெச்சிருச்சு //

    @ குழந்தை: நீரு குழந்தையா இருக்கும் போது நான் யூத்தா இருக்க கூடாதா?
    எல்லோரும் நல்லா குழம்புங்கய்யா. :)

    @ உலக சினிமா ரசிகன்: நீர் என் செல்லம்யா. ;)

    ReplyDelete
  16. This comment has been removed by the author.

    ReplyDelete
  17. //
    //கருந்தாடி சிரித்தாலே பயங்கரமாகத்தான் இருக்கிறது// - அப்படியென்றால், கருந்தேள் சிரித்தால்? //

    ஒரு டயலாக் தான் நினைவுக்கு வருகிறது.
    அவன் பயங்கர கருப்பா இருப்பான்.நீ கருப்பா.. ;)

    ReplyDelete
  18. நான்காம் பாகம் சொதப்ப போகிறார்கள் என நினைத்தேன் ,,,, நல்ல வேலை .

    ReplyDelete
  19. உலக சினிமா ரசிகரே, பழைய விசுவாசம் காட்டுவது என்றால், நதியா, அமலா, குஷ்பு, நல்லெண்ணெய் சித்ரா ஆகியோர்க்கும் காட்ட வேண்டி வருமே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் கருந்தேள், நீங்கள் சிரிக்கவே வேண்டாம் :)) திரையில் காணும் வாய்புக் கிடைத்தால் தவறவிடாதீர்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் லக்கி லிமட், மூன்றாம் பாகத்தைவிட நான்காம் பாகம் சிறப்பாக இருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  20. அன்பு நண்பரே,

    படம் முழுவதும் ஜானி டெப்-ன் ஆட்சிதான். Fantastic Screen Presence. வெகு சில நடிகர்களுக்கே அமையும்.

    க்ரூஸ் முகத்தில் ஏதோ ஒரு சோகம் படம் முழுவதுமே இருக்கிறது. பாத்திரத் தேர்வில் கோட்டை விட்டுவிட்டார்.

    மலையூச்சியில் வூடு பொம்மையை தூக்கி போட்டவுடன் ஜானி டெப் அலறும் காட்சியில் தியேட்டரே அவருடன் சேர்ந்து அலறியது.

    உற்சாகமான படம்.

    ReplyDelete
  21. ஜோஸ், க்ருஸ் முகத்தில் இருக்கும் சோகத்திற்கு காரணம் வாலிபக் கலைஞர் அல்லது வருங்கால கலைஞர் இலுமினாட்டி அவர்கள் அவருடன் ஜிமெயில் உரையாட மறுத்ததே :) ஆனால் நான் ஏமாந்து போனேன் end credits க்கு பின்பாக ஒரு நறுக்கு காட்ச்சி இருக்கிறதாம், அதை நான் பார்க்கவில்லையே இதற்காக நான் மறுபடியும் படத்தை பார்க்க வேண்டுமே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

    ReplyDelete
  22. //ஆனால் நான் ஏமாந்து போனேன் end credits க்கு பின்பாக ஒரு நறுக்கு காட்சி இருக்கிறதாம், அதை நான் பார்க்கவில்லையே இதற்காக நான் மறுபடியும் படத்தை பார்க்க வேண்டுமே //

    சைட் அடிக்கப் போறத எவ்வளவு நாசூக்கா சொல்றாணுக! ;)

    ReplyDelete
  23. NAN PADAM PARTHUTTEN SUPERB... EPPAVUME JOHNY DEPP IN OPENING SCENE KALAKKALAA IRUKKUM. INTHA PADAMUM VITHI VILAKKALLA.. JOHNY JUDJE-A VARUMPOTHU KUPEER SIRIPPU... APPURAM ANTHA KINNANGALAI PANNI MELA KATTI POTTU "DEAL" PANNUVATHU SEMA THAMAASU.... -SARAVANAKUMAR.

    ReplyDelete
  24. நண்பர் இலுமியின் கருத்துக்களை நம்ப வேண்டாம் என வாசக சமூகத்தை கேட்டுக் கொள்கிறேன்.

    நண்பர் சரவணக்குமார், படம் உங்களையும் கவர்ந்திருப்பது மகிழ்ச்சியே, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete