கறையற்ற சந்திரர்கள்
வெகுசனங்களின் சந்திரன் ரஃபிக் சாகஸம்
ஒரு கவரிமான் தன் முடிகளில் ஒன்றைக்கூட இழந்துவிடும் நிலையில் தன் இன்னுயிரை ஈய்த்துவிடும் என்பது தமிழ் வெகுசன இலக்கியங்களின் மூலம் பதிவு செய்யப்பட்ட ஒரு கருத்தாகும். அப்படிப்பட்ட கவரிமான் வம்சத்திலே உதித்த புரட்சிக்காரன் ரஃபிக், தனது ஆடைகள் அனைத்தையும் இழந்த நிலையில், தன் இயற்கை அழகு மேனியுடன், குந்தவி, டேனி ஆகிய இரு கொடிய வேங்கைகள் முன் கையறு நிலையில் நின்றான்.
அவன் அழுதிருப்பான் ஆனால் அவனை அழவிடாது மீண்டும் வெகுசன தமிழ் இலக்கியங்கள் தடுத்தன. அழுவது ஆணிற்கு அழகில்லை என்பதும் அந்த இலக்கியங்களால் பரப்பப்பட்ட ஒரு கருத்தல்லவா. எனவே அழவும் முடியாது, வேங்கைகளிடமிருந்து தப்பவும் முடியாத நிலையில் புரட்சி மாதாவை வேண்ட நினைத்தான் ரஃபிக். ஓ.. இது என்ன வன்கொடுமை… என்று தன் மனதில் விம்மினான். அறையிலிருந்த சாளரத்தின் வழியே வெளியே பாய்ந்து தப்பி ஓடிவிடலாம் என்று நினைத்த அந்த புரட்சிக்காரன் அந்த சாளரத்தை நோக்கி ஓடவும் செய்தான்.
ஆனால் பெண் வேங்கை டேனி, ரஃபிக்கிற்கு முன்பாக குறுக்கே பாய்ந்தாள். பாய்ந்ததோடு மட்டுமல்லாது ரஃபிக்கின் இரு கரங்களும் கூடி நின்ற இடத்தையும் தன் விரல்களால் சுட்டிக் காட்டி…புரட்சிக்காரரே கலங்கரை விளக்கை மறைப்பது நியாயமானது அல்ல. கப்பல்கள் பாறைகளில் மோதிடும், திசை தவறி பாதாளத்தில் அமிழ்ந்திடும். எங்கே உங்கள் கரங்களை சற்று விலக்குங்கள் பார்க்கலாம் என்றாள்.
- காமம் உன் கண்களை மறைத்து இருள் திரையை போர்த்துகிறது. உனக்கு தேவை பக்தியின் விளக்கு, அடக்கத்தின் ஒளி, பெண்மையின் பிரகாசம். டேனி மரியாதையாக எனக்கு வழிவிடு இல்லையேல்.. முரட்டுத்தனமாக பேசினான் ரஃபிக்.
- இல்லையேல்…என்ன செய்வீர்கள் பதிலிற்கு ரஃபிக்கை மேலும் சீண்டினாள் டேனி
- பெண்களே, என் விருப்பத்திற்கு மாறாக நீங்கள் என்னை அனுபவிக்க முடியாது, ஆணாள இயலாது. தானே கனிந்த பழம் இனிக்கும். கசக்கிக் கனிந்த பழம் தன் சுவை இழக்கும். மேலும் நான் ஒத்துழைக்காவிடில்… கலங்கரை விளக்கு ஒளி தராது.. எனவே… என்று இழுத்தான் ரஃபிக்.
- எனவே.. ம்.. மிகுதியையும் கூறுங்கள் என்றாள் குந்தவி.
- ஹாஆ… ஒளி தராத கலங்கரை விளக்கைக் கொண்டு எந்தக் கப்பலுமே அது செல்ல வேண்டிய உச்சத்தை அடைய முடியாது அழகுகளே… ஏளனமாக இதனைக் கூறிய புரட்சிக்காரன்… ஹாஹாஹாஆஆ என்று ஒரு வெற்றிச் சிரிப்பை உதிர்த்தான்.
- டேனி..
- என்ன இளவரசி?
- கலங்கரை விளக்கை இவர் கரங்கள் மறைக்கலாம் ஆனால் இந்த பாதிச் சந்திரன்களை அவை மறைக்கவியலுமா என்ற குந்தவி, ரஃபிக்கின் பின்னழகுகளை சுட்டிக் காட்டினாள்.
- ஆஹா..ஆஹா. இளவரசி..என்னே ஒரு கலை ரசனை. இந்த இரு பாதிச் சந்திரன்களின் அழகுகளும் வானத்து முழுநிலவின் வதனத்தையும் சிவக்கச் செய்யுமே.. என்ற டேனி, ரஃபிக்கின் பின்னால் ஓடிவந்து அவனின் சந்திரன்களை ரசிக்கவும் செய்தாள். முழு நிலவில்கூட கறை இருக்கிறது. ஆனால் இந்தச் சந்திரன்களின் அழகில் களங்கமில்லை. கறைபடாத சந்திரன்கள் இவை இளவரசி என்று மேலும் இழுத்தாள்.
- இந்தப் பாதிச் சந்திரன்களில் நாம் எம் தடங்களைப் பதிக்கலாம், களங்கத்தை கருக்கொள்ள வைக்கலாம் டேனி. கால்தடம், கைத்தடம், பற்தடம், நகத்தடம் என்று பல தடங்களை இன்று இந்த சந்திரன்களில் நாம் பதிந்திடும் பாக்யம் நமக்கு கிடைக்கப்போகிறது.
இரு அழகிகளினதும் இவ்வகையான விபரீதமான பேச்சுக்களும் புரட்சிக்காரனை சிறிது நிலைகுலைய வைத்தன. கலங்கரை விளக்கைக் காப்பதா, பாதிச் சந்திர அழகுகளை காப்பதா என்ற போராட்டத்தில் அவன் மனம் குதித்தது. ஒரு நீண்ட மனப் போராட்டத்தின் பின்பாக ஒரு கரத்தால் கலங்கரை விளக்கையும், மறுகரத்தால் சந்திரர்களையும் பாதுகாப்பது என்ற முடிவிற்கு வந்த ரஃபிக், அதனை நிகழ்த்தவும் செய்தான். இதற்காகவே காத்திருந்ததைப்போல் இரு பருவச் சிட்டுக்களும் அவன் முன்னால் ஓடி வந்து நின்றார்கள்.
- ஆஹா.. என்ன அழகான கலங்கரை விளக்கம். என்ன கம்பீரம். என்ன பிரம்மாண்டம். இரு பாறைகளிற்கு நடுவில் நின்று அது எழுந்து நிற்கும் அழகே என்னை கவிழ்க்கிறதே. இந்தக் கலங்கரை விளக்கு இனியும் இருண்டிருக்கக்கூடாது. பெண்கள் வீட்டின் விளக்குகளை ஏற்றுபவர்கள், ஒளியை உருவாக்குபவர்கள் என்று கூட தமிழ் வெகுசன இலக்கியத்தில் உண்டு என இந்தக் கதையை எழுதுபவன் எழுதக்கூடும். எனவே இருண்டிருக்கும் இந்த கலங்கரை விளக்கில் ஒளியை ஏற்றுவோம், அதன் பிரகாசம் எங்கள் கப்பல்களை நிரப்பட்டும். தானாகக் கனிந்த கனியைவிட கல்லால் எறிந்து வீழ்த்திய காயின் சுவையும் அதிகம் என்பதை புரட்சிக்காரரிற்கு உணர்த்துவோம். இவ்வாறு கூறிய குந்தவி, ரஃபிக்கை நோக்கி வேகமாக நகர்ந்தாள்.
எங்க இருந்துய்யா இந்த போட்டோவ எல்லாம் பிடிக்கீங்க? :)
ReplyDeleteஅன்பு நண்பரே,
ReplyDelete//அவன் அழுதிருப்பான் ஆனால் அவனை அழவிடாது மீண்டும் வெகுசன தமிழ் இலக்கியங்கள் தடுத்தன.//
பிரமாதமான வரிகள். சிருங்காரத்தை எவ்வளவு அழகாக கசக்கி பிழிந்து எழுதியுள்ளீர்கள்.
கலங்கரை விளக்கில் ஒளி நிரம்பியதா, இருள் சூழ்ந்ததா என்ற நெருக்கடியில் அத்தியாயத்தை நிறுத்தியுள்ளீர்கள்.
அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்நோக்கி டார்ச் லைட்டுடன் காத்திருக்கின்றேன்.
எப்பத்தான்... இந்த கயிறு கட்டாத படமெல்லாம் உங்க கண்ணுல படப்போகுதோ???
ReplyDeleteகடவுளுக்கே வெளிச்சம்.
பெண்ணின் காமத்தையும் , ஆணின் அழகையும் ரெம்ப நேர்த்தியா, அழகா சொல்லி இருக்கீங்க
ReplyDelete//பாய்ந்ததோடு மட்டுமல்லாது ரஃபிக்கின் இரு கரங்களும் கூடி நின்ற இடத்தையும் தன் விரல்களால் சுட்டிக் காட்டி…புரட்சிக்காரரே கலங்கரை விளக்கை மறைப்பது நியாயமானது அல்ல. கப்பல்கள் பாறைகளில் மோதிடும், திசை தவறி பாதாளத்தில் அமிழ்ந்திடும். எங்கே உங்கள் கரங்களை சற்று விலக்குங்கள் பார்க்கலாம் என்றாள்.//
ReplyDeleteஆவ்வ்வ்வ்வ்
விரைவில் ஆசியாவின் சிறந்த இலக்கியவாதி என்று அழைக்கப்படுவீர்களாக ..
//இந்தப் பாதிச் சந்திரன்களில் நாம் எம் தடங்களைப் பதிக்கலாம், களங்கத்தை கருக்கொள்ள வைக்கலாம் டேனி. கால்தடம், கைத்தடம், பற்தடம், நகத்தடம் என்று பல தடங்களை இன்று இந்த சந்திரன்களில் நாம் பதிந்திடும் பாக்யம் நமக்கு கிடைக்கப்போகிறது.//
யோவ் சூப்பருன்னு மட்டும் சொல்லிக்கிறேன்!
உங்கள் சொல்நடை மிக மிக நன்றாக உள்ளது.
ReplyDeleteநண்பர் இலுமினாட்டி, உங்களிற்கு தெரியாத இடமா :))
ReplyDeleteஜோஸ், எதற்கும் ஒரு பக்கத்துணையாக ஒரு தீப்பந்தத்தையும் வைத்திருங்கள் :)) அன்பு நண்பரே.
நண்பர் ஹாலிவூட் பாலா, கயிறு இல்லாமல் போட முயற்சிக்கிறேன் :))
நண்பர் பிரபாகரன், கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் ப்ரியமுடன் வசந்த் அவர்களே நன்றி.
நண்பர் எஸ்.கே, மிக்க நன்றி.
நான் இரவினில் வருவேன் ;-) .. கமெண்ட்டுகளைத் தருவேன் ;-)
ReplyDeleteநண்பர் கருந்தேள், நள்ளிரவில் வருக, கமெண்ட்டுக்களை தருக :))
ReplyDeletekarpanai abaaram!
ReplyDeleteநண்பர் செல்வா, நன்றி.
ReplyDelete