டேவிஸ், புட்ச், ஏஞ்சல் எனும் மூன்று இளைஞர்களும் அவர்கள் இழைத்த வெவ்வேறு குற்றச் செயல்களிற்காக தண்டனை பெற்று, எனொலா வேல் இளைஞர் சீர்திருத்தச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.
எனொலா வேல் சீர்திருத்த சிறையின் கண்டிப்பான சட்டதிட்டங்களிற்கு மட்டுமன்றி, சிறையினுள் பசுத்தோல் போர்த்திய புலிகளாக வலம் வரும் முரட்டுக் கோஷ்டி ஒன்றின் தொல்லைகளையும் புதியவர்களான அம்மூன்று இளைஞர்களும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இவ்வாறான ஒரு நிலையில், தமக்கு விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்தை எந்தவித சிக்கல்களும் இல்லாமல் கழித்து சிறையிலிருந்து விரைவில் வெளியேறுவதற்கு தொல்லைகளை தாங்கிக் கொண்டு அடங்கிப் போவது ஒரு வழி. திருப்பி மரண அடி அடித்து யார் தலைவன் என்று காட்டுவது இன்னொரு வழி. புட்ச், திருப்பி அடிக்க ஆரம்பிக்கிறான்….
இளைஞர் சீர்திருத்தச் சிறை ஒன்றில் அனுமதிக்கப்படும் மூன்று இளைஞர்களின் வாழ்க்கை சில வார இடைவெளிகளில் எவ்வாறு முற்றிலுமாக மாறிப்போகிறது என்பதை அந்தச் சிறையின் சூழலுடன் கூற விழைகிறது Dog Pound திரைப்படம். பிரெஞ்சு இயக்குனர் Kim Chapiron ஆங்கில மொழியில் இத்திரைப்படத்தை உருவாக்கியிருக்கிறார்.
பொதுவாக இவ்வகைத் திரைப்படங்களில் சிறை அதிகாரிகள் ஊழல் எலிகளாகவும், மோசமானவர்களாகவும் சித்தரிக்கப்படுவார்கள். அவ்வகையான சித்தரிப்பு இப்படத்தில் கிடையாது. சிறை அதிகாரிகள் தமது கடமையை சிறப்பாக செய்ய முயல்பவர்களாக காட்டப்பட்டிருக்கிறார்கள். சிறையில் தம் வாழ்வைக் கழிக்கும் இளம் கைதிகளின் வாழுலகை பிரதானமான ஒன்றாக முன்வைக்கிறது திரைப்படம்.
படத்தின் ஆரம்பம் முதல் இறுதிவரை பார்வையாளர்களை அதிரவைப்பது அதில் இடம்பெறும் வன்முறை. தமக்கு அன்னியமான சிறைச் சூழல் ஒன்றிற்குள் நுழையும் இளம் கைதிகள் முகம் கொடுக்கும் வன்சூழலை அப்படியே உணர்த்த விழைந்திருக்கிறார் இயக்குனர் கிம் சாபிரோன்.
தம் மீது வலிந்து திணிக்கப்படும் வன்முறைகளை மறுபேச்சு பேசாது ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை. சிறை அதிகாரிகளிடம் அது குறித்து முறையிடுவது என்பது ஆண்மையற்றதனமாக கருதப்படும் மனோபாவம். ஆரம்பத்தில் சிறையின் தாதாவான பேங்ஸிடம் அடி வாங்கும் புட்ச், பொறுமையுடன் காத்திருந்து பதிலடி கொடுக்கும் தருணங்களில் வன்முறை திரையைக் கிழிக்கிறது.
பதிலடி தந்து பேங்ஸை வீழ்த்தியபின் புட்ச்சின் பாதுகாப்பின்கீழ் டேவிஸும், ஏஞ்சலும் வந்து விடுகிறார்கள். போதைப்பொருள் விற்றதற்காக தண்டனை பெற்ற டேவிஸ் கலகலப்பான இளைஞன். பெண்கள் பற்றி சிருங்காரக் கதைகள் கூறி இளம் கைதிகளை மகிழ்விப்பவன். கார் திருட்டிற்காக தண்டனை பெற்ற ஏஞ்சல் அதிகம் பேசாதவன். இவர்கள் போல் வேறுபட்ட குற்றங்களிற்காக தண்டனை பெற்ற இளைஞர்களின் வேறுபட்ட குணங்களையும், உணர்வுகளையும் இயல்பாக திரையில் கொணர்ந்திருக்கிறார் இயக்குனர்.
சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்களின் ரகசிய பாவனைகள், வேறுபட்ட இனங்களிற்கிடையில் படிந்திருக்கும் துவேஷங்கள், எந்தப் பயனும் அளிக்காது விரயமாகும் உளவியல் ஆலோசனைகள், கத்திமேல் நடப்பது போன்ற பணியை ஆற்றும் சிறை அதிகாரிகள், அந்த அதிகாரிகள் தம் வாழ்வில் எதிர் கொள்ளும் அழுத்தங்கள் என நகர்கிறது படம்.
தாம் இழைத்த குற்றங்கள் குறித்து எந்த மனக்கிலேசமும் இல்லாது, சிறைவாழ்க்கையை நல்லபடியாக முடித்து வெளியேற துடிக்கும் அந்த இளைஞர்களின் உலகம் வேறுபட்டது. வன்முறையாலும், வலியாலும் சூழப்பட்டது. அவற்றை மீறியும் தாம் அடைபட்டிருக்கும் வெளியில் சிரித்து வாழ முயல்கிறார்கள் அவர்கள். ஒரு இளம் கைதியின் நியாயப்படுத்த முடியாத மரணத்தின்பின் தமக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, அவர்கள் புரட்சியில் இறங்கும் தருணம் இத்திரைப்படத்தின் எரிமலைத் தருணம்.
பேங்ஸை வீழ்த்தியபின் சிறையின் ரகசிய உலகை தன் விருப்பத்திற்கேற்ப புட்ச் மாற்ற முனையும்போது நிகழ்வுகள் தறிகெட்டு போக ஆரம்பிக்கின்றன. ஒரு நல்ல சிறை அதிகாரிகூட குறித்த ஒரு தருணத்தின் அழுத்தத்தில் தன் அதிகாரத்தில் சற்று எல்லை மீறும்போது அதன் தாக்கங்கள் பல வாழ்க்கைகளை கொத்திப் போட்டு விடுவதாக படத்தின் இறுதிப் பகுதி அமைகிறது. அந்த தருணங்கள் அதிர்ச்சி அலைகளாக பார்வையாளனை தாக்குகின்றன.
இளம் கைதிகளாக நடித்திருக்கும் நடிகர்களின் சிறப்பான நடிப்பு படத்தின் மிகப்பெரிய பலம். குறிப்பாக புட்ச் வேடத்தில் நடித்திருக்கும் இளம் நடிகர் Adam Butcher உக்கிரமான தருணங்களில் அசத்தியிருக்கிறார். டேவிஸாக வரும் Shane Kippel, ஏஞ்சலாக வரும் Mateo Morales ஆகிய நடிகர்களும் சிறப்பாக செய்திருக்கிறார்கள். அவர்களின் முடிவுகள் மனதை நெகிழ வைக்கும். சிறை அதிகாரி குட் இயராக நடித்திருக்கும் நடிகர் Lawrence Bayne பண்பட்ட நடிப்பை வழங்கியிருக்கிறார்.
இருப்பினும் மூன்று இளம் கைதிகளினதும் பாத்திரங்களின் ஆழமற்றதன்மை அவர்களின் உணர்வுகளுடன் பார்வையாளனை முழுமையாக நெருங்க விடாது செய்து விடுகிறது. படத்தின் வன்முறைக் காட்சிகளின் ஆக்கிரமிப்பு படத்தை உணர்வுபூர்வமாக அணுகத் தடையாகவிருக்கிறது. வன்முறைக்காட்சிகள் தரும் அதிர்ச்சியே மனதில் காலூன்ற விரைகிறது. திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகள் Un Prophet படத்தை நினைவிற்கு எடுத்து வருகின்றன.
கூட்டிலிருந்து வெளியேறிய வெறி கொண்ட நாயை, எவ்வாறு மூர்க்கமாக கைப்பற்றி, கூட்டின் உள்ளே தூக்கி எறிந்து கதவை மூடுவார்களோ, அவ்வளவு மூர்க்கமாக புட்சை அடித்து, சிறையினுள் தூக்கி எறிந்து, பார்வையாளன் முகத்தில் கதவை அறைந்து சாத்தி நிறைவடைகிறது திரைப்படம். அந்தக்காட்சியில் புட்ச் எழுப்பும் அழுகுரல், பார்வையாளன் மனதில் அடைபட்ட குரலாக சிறு கணம் பயணித்து செல்கிறது. [**]
ட்ரெயிலர்
மீ த ஃபர்ஸ்ட்டு !!! ;-)
ReplyDeleteஆனா, பதிவ நைட்டு தான் படிக்கமுடியும்... நைட்டு வந்து விரிவா பின்னூட்டம் போடுறேன் . . ;-)
ReplyDeleteநண்பரே உங்களின் Double star - ஐ நான் எச்சரிக்கை மணியாகத்தான் கருதுகிறேன். நேரம் கிடைக்குமாயின் இந்த படத்தை பார்க்கிறேன்
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி
Right தல.வழக்கம் போலவே உங்க நடை அருமை.அது ஏனோ,சிறைச்சாலையில் ஒரு joyful கேரக்டர் என்றால்,shawsank இல் வரும் அந்த இளைஞன்(tommy) நினைவுக்கு வருகிறான்.
ReplyDeleteபடத்தின் போஸ்டரே வலியை தெளிவாகக் காட்டுகிறது.அப்படியானால் படம்? பார்க்கலாம்.
ReplyDeleteரொம்ப வயலன்ஸ்னு சொல்றீங்களே .... அது தான் பார்க்க பயமா இருக்கு..
ReplyDeleteஎனக்கொரு சந்தேகம்?!!
ReplyDeleteபட்டின்னா மலையாளத்துல நாய் தானே?!! என்ன நான் சொல்றது?!!
தலைவர்,
அ.கொ.தீ.க.
காதலரே,
ReplyDeleteநம்மூரில் சிறுவர்கள் சீர்த்திருத்த பள்ளி பற்றி கேள்விபட்டிருக்கிறேன். வெளிநாடுகளில் எல்லாம் அறிந்த இளைஞர்களை கூட நல்வழிபடுத்த முனைகிறார்கள் என்று அறிய ஆச்சரியமாக இருக்கிறது.
படத்தின் விமர்சனத்தை உங்கள் நடையில் படிக்கும்போது, சில்வஸ்டர் ஸ்டாலோனின் லாக்அப் காட்சிகள் மீண்டும் மனதில் வந்து போகிறது. அதன் தாக்கம் கிட்டதட்ட அனைத்து சிறை காட்சிகள் நிறைந்த படங்களிலும் காண முடிகிறது. ஒரே வித்தியாசம் இங்கு சிறையதிகாரிகளை கெட்டவர் கும்பலாக காட்டவில்லை.
வன்முறை காட்சிகள் இல்லாமல் சிறை கதைகளை காட்டும் வாய்ப்பிருக்கிறதா என்று தெரியவில்லை. கிட்டதட்ட எல்லா சிறைச்சாலை படங்களிளும் அந்த காட்சிகளை எதிர்பார்த்துதான் வடிவமைக்கிறார்களோ என்று தோன்றுகிறது.
நீங்கள் அளித்த ட்ரெயிலரில் அடாம் புட்சரின் நடிப்பை பார்த்து அசந்து போய் விட்டேன். 20 வயது பாலகனின் கண்களில் இவ்வளவு குரூரத்தையும், முகத்தில் கோபத்தையும் எப்படி அவரால் வடிவமைக்க முடிகிறது. மனிதருக்கு சிறந்த எதிர்காலம் ஹாலிவுட்டில் காத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
நாய் பட்டி, அருமையான தலைப்பு...... 2 ஸ்டார் படம் தான் என்பதால் பொருமையாகவே பார்க்க முயல்கிறேன்.
//படத்தின் விமர்சனத்தை உங்கள் நடையில் படிக்கும்போது, சில்வஸ்டர் ஸ்டாலோனின் லாக்அப் காட்சிகள் மீண்டும் மனதில் வந்து போகிறது. அதன் தாக்கம் கிட்டதட்ட அனைத்து சிறை காட்சிகள் நிறைந்த படங்களிலும் காண முடிகிறது. ஒரே வித்தியாசம் இங்கு சிறையதிகாரிகளை கெட்டவர் கும்பலாக காட்டவில்லை.//
ReplyDeleteஆஹா... சூப்பர்.. லாக் அப் எனக்கும் மிகப்பிடித்த படம்... ;-)
//ஏனோ,சிறைச்சாலையில் ஒரு joyful கேரக்டர் என்றால்,shawsank இல் வரும் அந்த இளைஞன்(tommy) நினைவுக்கு வருகிறான்//
ReplyDeleteரிப்பீட்டு !! எனக்குமே அப்புடித்தான் . . . ஜெயில் படம்னாலே எனக்கும் ஷஷான்க் ரிடெம்ப்ஷன் தான் நினைவுக்கு வருது... மேலும், இவ்விமரிசனத்தில் நீங்கள் கூறும் பல விஷயங்கள், ஷஷான்க்கை ஒத்திருக்கின்றன ...
இரண்டு ஸ்டார்கள் என்பதால், இதை குய்யூவில் (ஹீஹீ) வைக்கிறேன் ;-)
நண்பர் கருந்தேள், தங்கள் நேரவசதிப்படி பார்த்து மகிழுங்கள், முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteநண்பர் வேல்கண்ணன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் இலுமினாட்டி, இந்தப் படத்திற்கு முன்னுரிமை வழங்காதீர்கள்- பிட் காட்சிகள் இல்லை :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் பின்னோக்கி, தங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.
தலைவர் அவர்களே, உங்கள் குறும்பை ஆரம்பித்து விட்டீர்களா :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ரஃபிக், உலகில் வன்முறை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சாதாரண நாளில் காதில் விழும் ஒரு வசவைக் கேட்காது வீடு திரும்ப முடிகிறதா! 20 வயதுப் பாலகனா, அப்படியானால் நான் :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
வழக்கம் போல மிக அருமையாக விவரித்து உள்ளீர்கள்
ReplyDelete.
நண்பர் சிபி, தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDelete