நாசக்குத்து நாவலன்
குத்து நகர் இன்பக் குத்துக்களிற்கும், கேளிக்கைகளிற்கும் மட்டும் பெயர்பெற்றது அல்ல. அங்கு பல கில்லாடிகளும் தமது சாகச வாழ்க்கைகளை ஓட்டிக் கொண்டிருந்தார்கள். இந்தக் கில்லாடிகளில் சிறந்தவர்களில் ஒருவனாக நாசக்குத்து நாவலன் குத்து நகர குடிசனங்களினால் கணிக்கப்படுகிறான்.
நாவலன் குடும்பத்தில் சந்ததி சந்ததியாக ஆண் வாரிசுகள் அனைவரிற்கும் நாவலன் என்ற பெயரே நிலைத்து நின்றது. நாவலனின் முன்னோர்களில் ஒருவர் நாவல் மரம் ஒன்றின் கீழ் எடுத்த சபதத்தின் பின்பாக ரவுடித்தனம் செய்வதே அவர்கள் குல வழக்கமாகி விட்டிருந்தது.
நாவலன்களின் சிறப்பம்சம் அவர்கள் தம் உடல் மேல் பூசியிருக்கும் வண்ணப் பூச்சு ஆகும். தலையை முழு மொட்டை போட்டுக் கொண்டு உடல் பூராவும் நாவல் வண்ணத்தைப் பூசியிருப்பார்கள். கண்கள் இருக்குமிடத்தில் வெள்ளை வண்ணம் இட்டிருப்பார்கள். வெள்ளை வண்ணத்தை ஒரு கறுப்புக் கோடு நீள் வட்டமாக சூழ்ந்திருக்கும்.
உடலின் நாவல் வண்ணப் பூச்சிற்கேற்ப இடுப்பில் ஒரு கறுப்புக் கச்சையை நாவலன்கள் அணிந்திருப்பார்கள். கச்சையின் முன் பக்கத்தில் அங்கே!! ஆம் அங்கேதான்.. ஒரு நாவல்பழ இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கும். கச்சையின் இரு புறமும் உள்ள உறைகளில் இரு குறுவாள்கள் அபாயமாக தொங்கியவண்ணம் இருக்கும். சில வேளைகளில் தொலைவில் இருந்து பார்ப்பவர்களிற்கு மூன்று குறுவாள்கள் தோற்றமளிக்குமாற்போல் இருக்கும். ஆனால் அருகில் வருகையில் குறுவாள்கள் இரண்டுதான் என்பதை அறிந்து தெளியலாம்.
தம் உடலின்மீது பூசப்பட்ட வண்ணப்பூச்சிற்கு சேதம் ஏற்படும் எனும் காரணத்தால் நாவலன்கள் தம் உடல்மீது நீர் படுவதை வெறுத்து வந்தார்கள். ரவுடித்தனம் செய்தாத நாட்களில், நாவலன்கள் அழகான மேலங்கியும், தலைப்பாகையும் அணிந்து நகரில் சீமான் போல் வலம் வருவதும் உண்டு.
நாவலன்கள் தங்குமிடம் நாவற்பழ வடிவில் அமைந்திருக்கும். அதேபோல் நாவலன்கள் விரலில் அணிந்திருக்கும் மோதிரங்களிலும் நாவற்பழ சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். யாராவது நபர்களின் வதனங்களில் நாவற்பழ முத்திரை பதிந்து இருப்பதைக் கண்டால் அவர்கள் நாவலன்களிற்கு முகம் கொடுத்தவர்கள் என்பது புரிந்துவிடும். இதனால் நாவற்குத்து நாவலன்கள் என்ற பட்டப்பெயர் இவர்களிற்கு கிடைத்திருந்தது. இதுவே கால ஓட்டத்தில் மருவி நாசக்குத்து நாவலனாகியது.
நாவற்பழ மரங்களால் சூழ்ந்திருந்த தனது நாவல்பழ வடிவ தங்குமிடத்தில், சமகால நாவலன் தனது புரவி கேசரியோடும், தனது கடிநாய் உப்புமாவுடனும் நாவற்பழ ஆசனத்தில் அமர்ந்திருந்தபோது அவனது உதவியாளன் நாவல் குள்ளன், இளவரசன் இலுமினாட்டியிடமிருந்து வந்திருந்த ஓலையை நாவலனிடம் பவ்யமாகத் தந்தான்.
இளவரசன் இலுமினாட்டியிடம் இருந்து வந்த ஓலையைப் படித்த நாவலன், தன் ஆசனத்திலிருந்து துள்ளி எழுந்தான். தனது உடலை அப்படியும் இப்படியுமாக அசைத்து சில அப்பியாசங்களை நாவலன் செய்தான். அவன் நாவல் வண்ண உடலில் தசைகள் விம்மின. தன் எஜமானன் நாவலனின் உடல் அழகை பார்த்து பெருமிதம் கொண்ட நாவல் குள்ளன், மத்தளம் ஒன்றை எடுத்து தட்ட ஆரம்பித்தான். டம்மு டம்மு டம்மு என்ற ஓசை நாவல் மரங்களை அணைக்க ஆரம்பித்தது.
நாவல் குள்ளனின் மத்தள வாசிப்பிற்கேற்ப தன் உடலை ஆட்டியும் அசைத்தும் நாவலன் தன் தேகப் பயிற்சியை தொடர்ந்தான். கால்களை உதைத்தான். கைகளால் வெட்டினான். மத்தள ஓசைக்கு பக்கவாத்தியம்போல் கடிநாய் உப்புமா வவ்வவ்வவ் என்றது. நடந்து கொண்டிருக்கும் களேபரத்தைக் கண்ட புரவி கேசரி… அய்யோ வேலை வரப் போகிறதே என துணுக்குற்று அங்கிருந்து ஓட ஆரம்பித்தது. இதைக் கண்ட நாவலன் காற்றில் குத்துக்களை விட்டவாறே கேசரியை துரத்த ஆரம்பித்தான். அவன் வாய்லிருந்து உய்ய்ய் என்ற சீழ்க்கை ஒலி தொடர்ந்து ஒலித்தவண்ணம் இருக்க, கேசரி காது கேட்காதது போல் வேகமாக ஓடிச் சென்றது.
[நாவலன் குத்து... நாசக்குத்து]
haiya me the 1st................
ReplyDelete// சமகால நாவலன் தனது புரவி கேசரியோடும், தனது கடிநாய் உப்புமாவுடனும் //
ReplyDeleteஎதெது அடுத்து மாயாவி வந்து விடுவார் போல இருக்கிறதே
அன்பு நண்பரே,
ReplyDeleteமூன்று குறுவாள்கள்............இன்னமும் சிரித்துக் கொண்டிருக்கிறேன்.
//யாராவது நபர்களின் வதனங்களில் நாவற்பழ முத்திரை பதிந்து இருப்பதைக் கண்டால் அவர்கள் நாவலன்களிற்கு முகம் கொடுத்தவர்கள் என்பது புரிந்துவிடும்//
ReplyDeleteஅட நாசக்குத்து நாவலன்களா.. அனேகமா, நம்ம வேதாள மாயாவியின் மூதாதையர் யாராவது ஆப்பிரிக்காவிலிருந்து குத்து நகரத்தின் பக்கம் ஒதுங்கியிருந்தாரோ ? ;-)
//கச்சையின் இரு புறமும் உள்ள உறைகளில் இரு குறுவாள்கள் அபாயமாக தொங்கியவண்ணம் இருக்கும்//
அட பார்த்து !! ஏதாவது வாள் ஒன்று, ஏதாவது தொங்கும் காயை அறுத்துவிடப்போகிறது ;-) (நான் சொன்னது மரத்தில் தொங்கும் காய்)
கடைசியில் அது யாரென்றே சொல்லாமல் ஏமாற்றி விட்டீர்களே ! அது யாராக இருக்கும்? ஹ்ம்ம்ம்ம்
நண்பர் சிபி, நீங்கள் எந்த மாயாவியைக் குறிப்பிடுகிறீர்கள் :)முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteஜோஸ், மூன்று குறுவாள்கள்.. :)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
நண்பர் கருந்தேள், நடமாடும் மயாத்மாவிற்கும் நாவலர்களிற்கும் தொடர்பு இருந்திருப்பதாக வரலாறு கூறுகிறது :)) கத்தியையும், காயையும் பக்கத்தில் வைக்காதே என்று சும்மாவா சொன்னார்கள் குத்து நகர முன்னோர்கள். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
நாசகுத்து நாவலனுக்கு மட்டும் 3 குறுவாள்களா... சரி சரி குறுவாள்களா இருக்குற வரை நோ ப்ராப்ளம் :)
ReplyDeleteநாசகுத்து நாவலன் பண்ணும் அலம்பல்கள் தாங்க வில்லை... அவரிடம் முத்திரை வாங்க முகங்கள் தானாக வருமாமே....... பெங்காலி காட்டில் இருக்கும் மாயாத்மா ஒருவர், இவரின் மீது தனது நடை உடை பாவனை மட்டும் இன்ன பிற இளவல்களை காப்பி அடித்து அதை கவர்ச்சியாக மாற்றி கொண்டதற்காக காப்பிரைட் கேஸ் போட போவதாக கேள்வி.
ஆனாலும், கடைசி வரைக்கும் அந்த நாசகுத்து நாவலன் யாருன்னு சொல்லாமலே உட்டு புட்டீங்களேப்பு.... அவ்வ்வ்வ்............
ரஃபிக், குறுவாள்கள் ஒன்று இரண்டு கூடுதலாக இருந்தால் வசதிதானே :)) பெங்காலி காட்டில் உலா வருபவர்க்கும் நாவலனிற்கும் இடையில் உறவு முறை இருக்கிறது என குத்து நகர கல்வெட்டு தெரிவிக்கிறது :) நாசக்குத்து நாவலந்தான் நாசகுத்து நாவலன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.
ReplyDelete//நாசக்குத்து நாவலந்தான் நாசகுத்து நாவலன். //
ReplyDeleteஉமக்கு குசும்பு அதிகமாயிடிச்சு.சீக்கிரமே ஒரு பொங்கலைப் போட்டு,படையல முடிசுற வேண்டியது தான்.டேய்,யார் அங்கே? அந்த மஞ்ச தண்ணிய எடுத்து வை. :)