Saturday, June 5, 2010

ரேப் ட்ராகன் - 6


நவராவா

குத்து நகர அரண்மனையின் நீண்ட தாழ்வாரங்களில் குளிர் காற்று தவழ்ந்து விளையாடியது. பல நாட்டுக் கலைப்பொருட்களின் அலங்காரங்களும், ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நானாவித செடி கொடிகளும் அந்த அரண்மனையின் ரம்யத்தை மேலும் அதிகரிக்க செய்தன.

தான் ஆசையுடன் வளர்த்து வரும் கன்னி மாதுளைகளை ஆதரவுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார் அரண்மனை வைத்தியர் அய்யா ஏழு. அரண்மனை பணிப் பெண்கள் தங்கள் வேலைகளைப் பார்பதற்காக அங்கும் இங்கும் விரைந்து கொண்டிருந்தார்கள். பணிப் பெண்களின் நவ நளின அங்க அசைவுகளை தூணிற்கு அருகில் நின்ற ஒரு செடியின் பின்பாக மறைந்திருந்து பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது ஒரு உருவம்.

செடிக்கு பின்னால் மறைந்திருந்த அந்த உருவத்தின் உதடுகளிலிருந்து ஆகா, பலே, அருமை, சூப்பர், இப்போதே கை வைக்க வேண்டும் போலிருக்கிறதே போன்ற சொற்கள் வந்து வீழ்ந்தபடியே இருந்தன.

உருவம் நின்றிருந்த தூணின் பக்கமாக தன் அழகிய உடலை ஒய்யாரமாக அசைத்தபடி நடந்து வந்து கொண்டிருந்தாள் பணிப்பெண் கிம். கிம் ஒரு லட்டு, அவள் கொரிய நாட்டுச் சிட்டு. சிட்டின் உடலோ தாய்லாந்தின் பட்டு. உருவம் மறைந்திருந்த செடியை கொரிய அழகி கிம் நெருங்கிய வேளையில், அதற்காகவே காத்து நின்றதைப்போல் அந்த உருவம் தன் கையிலிருந்த குறுவோலை ஒன்றை கிம்மை நோக்கி வீசியது.

காற்றில் உருண்டு சென்ற அந்தக் குறுவோலை கொரிய நாட்டு அழகி கிம்மின் மார்க்கச்சைக்குள் சென்று கச்சிதமாக விழுந்தது. இந்த செயலின் கச்சிதமே அந்த உருவத்திற்கு இந்தக் குறுவோலை எறியும் விடயத்தில் உள்ள அனுபவத்தின் முதிர்ச்சியை தெளிவாகக் காட்டியது. தன் இலக்கை குறுவோலை அழகாக சென்று சேர்ந்ததைக் கண்ட அந்த உருவம் “மச்சம்டா உனக்கு’’ என்று தன்னைத்தானே பாராட்டிக் கொள்ளவும் செய்தது.

ஒய்யாராமாக நடந்து சென்று கொண்டிருக்கையில் தன் மார்புகளிற்குள் ஒரு வண்டு வந்து வீழ்ந்து விட்டதே என்று எண்ணிய கொரிய அழகி கிம், “மொட்டுக்கள் இருக்கும் இடத்தில் வண்டுகள் வந்து வீழ்வது சகஜம்தானே” என்று தெளிந்து க்ளுக் என்ற ஒரு சிரிப்பை உதிர்த்தாள். அழகிய இளம் மொட்டுக்களிற்கிடையில் சிக்கியிருந்த வண்டையும் அவள் வெளியில் எடுத்தாள். அது வண்டல்ல ஆனால் ஒரு குறுவோலை என்பதைக் கண்டு கொண்ட கிம், அவ்வோலையைப் பிரித்தாள். அதில் “நவராவா” என்று எழுதியிருந்தது.

ஆகா, இது அவரல்லவா. தன் பள்ளியறையை கொரிய நாட்டு அழகிகளின் ஓவியங்களால் அலங்கரித்திருப்பவர். தன் பஞ்சணையின் தலைப் பக்க சுவரில் “இது என் பஞ்சணை, இதன் மீது நான் செய்வதில்லை வஞ்சனை” என்று எழுதி வைத்திருப்பவர். இன்ப சித்ரவதைகளின் சித்தர். அவரின் கைகளில் இன்று தான் படப்போகும் பாட்டை எண்ணிய கொரிய அழகி கிம்மின் உடலில் ஒரு இன்ப நடுக்கம் ஓடியது.

அந்த தருணத்தை எண்ணிய அந்த அழகியின் முகம் நாணிச் சிவந்தது. அந்த தேவதையின் உடலில் நாணம் கிளித்தட்டு விளையாடியது. தன் தலையை அழகாக சாய்த்தவாறே அவ்விடத்திலிருந்து அகன்றாள் அழகி கிம். அழகி கிம்மின் ரியாக்‌ஷன்களை தன் கண்களால் அளவெடுத்த அந்த உருவம், வெற்றி! வெற்றி! இன்று கும்மாங்கு குத்துதான் என்று மகிழ்ந்தது.

அத்தருணம் அந்த உருவத்திற்கு பின்னால் வந்து நின்ற அரண்மனை வீரன், “இளவரசே உங்கள் தந்தை உங்களை அழைக்கிறார்” என்றான். கண்களில் கொப்பளிக்கத் தொடங்கிய வெறுப்புடன் அவ்வீரனை நோக்கிய குத்து நகர இளவலான இலுமி எனும் இலுமினாட்டி, “அபசகுனம்! அபசகுனம்” என்றவாறே அங்கிருந்து கிளம்பினான்.

[நவராவா]

  • நவராவா என்றால் என்ன என்பதை சரியாகக் கூறுபவர்களிற்கு இளவல் இலுமியின் பஞ்சணையில் ஒரு இரவு இலவசம்.
  • கன்னி மாதுளை மதன புஷ்டி லேகியம், விய்யகாரா குளிகைகள்... நீண்ட நேரம், அதீத சக்தி, பரிபூரண திருப்தி... இளவல் இலுமி உபயோகிக்கும் அற்புத ஒளடதங்கள் இப்போது உங்களிற்கும்... தொடர்புகளிற்கு...வெவெவெ.அரண்மனைவைத்தி.கும்

14 comments:

  1. haiya again me the 1st

    Thanks to viswa's Tata photon

    ReplyDelete
  2. // கிம் ஒரு லட்டு, அவள் கொரிய நாட்டுச் சிட்டு. சிட்டின் உடலோ தாய்லாந்தின் பட்டு. //

    இன்றிரவு இலுமி பாடப் போகிறார் ஒரு பாட்டு


    // குத்து நகர இளவலான இலுமி எனும் இலுமினாட்டி, //

    அடுத்து வருபவர் யாரோ ..........!!!!!!!!!!!??????

    கிர்ர்ர்ருன்னு சுத்துதுடா சாமி


    // நவராவா என்றால் என்ன என்பதை சரியாகக் கூறுபவர்களிற்கு இளவல் இலுமியின் பஞ்சணையில் ஒரு இரவு இலவசம் //

    இந்த விளையாட்டுக்கு நான் வரலடா சாமி என்ன விட்டுடுங்கோ

    ReplyDelete
  3. நண்பர் சிபி, மீண்டும் உங்கள் முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி. இலுமினாச்சி கச்சேரி ஸ்டார்ட்ஸ்.

    ReplyDelete
  4. அப்பாடா,எங்க நம்மள ஆட்டயில சேத்துக்காமலே போயிடுவானுங்கலோன்னு நெனச்சுகிட்டே இருந்தேன்...

    ஆஹா,இலுமி வந்துட்டேன்... :)

    //கிம் ஒரு லட்டு, அவள் கொரிய நாட்டுச் சிட்டு.//

    ஆஹா,ஆஹா....

    அவளொரு மொட்டு....

    அவளைத் நான் தொட்டு.....

    இன்னிக்கு ஓடப் போகுது ஒரு பிட்டு.... :)

    க.கா அவர்களே,

    உண்மையில ஒரு பிகர் கூட ஏறெடுத்தும் கூட பாக்காத என்ன,இத்தனை பிகர் கூட கும்மி அடிக்க வச்சு இருக்கீங்களே அய்யா...

    உம்ம என்னன்னு சொல்ல? (சத்தியமா,டபுள் மீனிங் கிடையாது.... :) )

    ReplyDelete
  5. //செடிக்கு பின்னால் மறைந்திருந்த அந்த உருவத்தின் உதடுகளிலிருந்து ஆகா, பலே, அருமை, சூப்பர், இப்போதே கை வைக்க வேண்டும் போலிருக்கிறதே போன்ற சொற்கள் வந்து வீழ்ந்தபடியே இருந்தன.
    //

    க.கா அவர்களே....

    நீங்கள் மாதுளையை பற்றி சொல்லவில்லை அல்லவா?
    சொல்லி இருந்தா கும்மிடுவேன்....

    // “இது என் பஞ்சணை, இதன் மீது நான் செய்வதில்லை வஞ்சனை” என்று எழுதி வைத்திருப்பவர். இன்ப சித்ரவதைகளின் சித்தர்.//

    சபாஷ்.....பேசாம இந்த பேர்ல புது ப்ளாக் ஆரம்பிச்சுடலாம் போல இருக்கே!! என்ன பேரு,என்ன டயலாக்..... :)

    ரசிகன் இலுமி வாழ்க!
    ஹிஹிஹி...ஒரு விளம்பரம் தான்...

    // நவராவா என்றால் என்ன என்பதை சரியாகக் கூறுபவர்களிற்கு இளவல் இலுமியின் பஞ்சணையில் ஒரு இரவு இலவசம்.//

    ஆமாம்,பெண்களுக்கு மட்டும்.... :)
    இவங்க விட்டா ஆட்டைய குளறுபடி ஆக்கிருவானுங்க போலயே!!!!

    // அடுத்து வருபவர் யாரோ ..........!!!!!!!!!!!??????

    கிர்ர்ர்ருன்னு சுத்துதுடா சாமி//

    நண்பர் ஆசையா கேக்காரு இல்ல....காதலரே,கொஞ்சம் கவனிங்க.....

    நீங்க வாங்க சிபி... :)

    ReplyDelete
  6. \\அந்த உருவம், வெற்றி! வெற்றி! இன்று கும்மாங்கு குத்துதான் என்று மகிழ்ந்தது.\\

    வாழ்த்துக்கள் இலுமினாட்டி நண்பரே.

    ReplyDelete
  7. //வாழ்த்துக்கள் இலுமினாட்டி நண்பரே. //

    காதலரே,இன்னொரு ஆடு ரெடி.... :)
    இதையும் சீக்கிரம் கவனிங்க.
    அப்புடியே கடைசி ஆசைய கேட்டுருங்க. :)

    ReplyDelete
  8. //செடிக்கு பின்னால் மறைந்திருந்த அந்த உருவத்தின் உதடுகளிலிருந்து ஆகா, பலே, அருமை, சூப்பர், இப்போதே கை வைக்க வேண்டும் போலிருக்கிறதே போன்ற சொற்கள் வந்து வீழ்ந்தபடியே இருந்தன//

    :-) காதலர் கூறியபடி, இது உண்மைச்சம்பவங்களின் தொகுப்பு . . :-)

    // தன் பள்ளியறையை கொரிய நாட்டு அழகிகளின் ஓவியங்களால் அலங்கரித்திருப்பவர். தன் பஞ்சணையின் தலைப் பக்க சுவரில் “இது என் பஞ்சணை, இதன் மீது நான் செய்வதில்லை வஞ்சனை” என்று எழுதி வைத்திருப்பவர். இன்ப சித்ரவதைகளின் சித்தர். அவரின் கைகளில் இன்று தான் படப்போகும் பாட்டை எண்ணிய கொரிய அழகி கிம்மின் உடலில் ஒரு இன்ப நடுக்கம் ஓடியது//

    :-) இல்யூமி ‘நாட்டி’ :-) - இந்தப் பெயர் மிகப் பொருத்தமாகத் தெரிகிறதே . . ;-) நடத்து நடத்து. . :-)

    //உண்மையில ஒரு பிகர் கூட ஏறெடுத்தும் கூட பாக்காத என்ன,இத்தனை பிகர் கூட கும்மி அடிக்க வச்சு இருக்கீங்களே அய்யா...

    உம்ம என்னன்னு சொல்ல?//

    என்னாது? உட்ட ரீலுல காது அந்து போச்சு . . :-)
    நம்பிட்டோம் . . :-) ரைட்டு . .

    //நவராவா என்றால் என்ன என்பதை சரியாகக் கூறுபவர்களிற்கு இளவல் இலுமியின் பஞ்சணையில் ஒரு இரவு இலவசம்//

    அடப்பாவி இதுல ‘கே’ வெளையாட்டு வேறயா ? :-)

    நவராவா - நா(ன்) வரவா (ராவுல) . . :-) இது தான் இலுமி,கிம்மின் மொட்டுகள் மீது வீசிய ஓலைக்கு அர்த்தம் :-)

    ReplyDelete
  9. //நம்பிட்டோம் . . :-) ரைட்டு . .//

    நம்பித்தான் ஆகணும் கருந்தேள் அவர்களே!!
    Playboy மாதிரி இருக்குற நீங்க கன்னி கழியாதவர்னு சொன்னப்போ நாங்க சும்மா இல்ல... :)

    //நவராவா - நா(ன்) வரவா (ராவுல) . . :-) இது தான் இலுமி,கிம்மின் மொட்டுகள் மீது வீசிய ஓலைக்கு அர்த்தம் :-) //

    இப்ப தெரியுதா யாருக்கு அனுபவம் அதிகம் னு!!
    :)

    ReplyDelete
  10. // தான் ஆசையுடன் வளர்த்து வரும் கன்னி மாதுளைகளை ஆதரவுடன் தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார் //

    ஆமா.. இது ட்ரிபிள் மீனிங் இல்லதானே?

    ReplyDelete
  11. அய்யா ஏழு தான்!!!

    அப்ப என்ன வேணுமனா சொல்லிக்கங்க... :)

    ReplyDelete
  12. நண்பரே இலுமினாட்டி, ஒரு பிகர்கூட ஏறெடுத்துப் பார்க்காத என்னை... என் இதயம் உருகிவிட்டது :) இருந்தாலும் குத்து நகர மம்முதன் இலுமி வாழ்க, வாழ்க. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் சிவ், உங்களுடன் சேர்ந்து நானும் இளவரசரை வாழ்த்துகிறேன். வாழ்த்துக்களிற்கு நன்றி.

    நண்பர் கருந்தேள், அந்த உண்மைச் சம்பவங்கள் குறித்த ஆதாரங்களை எனக்கு அனுப்பி வைத்தமைக்கு முதற்கண் என் நன்றிகள் :)) பெயரிற்கேற்ற பிள்ளை என்பது இளவரசர் விடயத்தில் சரியாகவே இருக்கிறது. நவராவாவின் சொற்கள் சரியாக அமையவில்லை எனினும் அர்த்தம் நீங்கள் தந்துள்ள பதிலுக்கு நெருக்கமாகவே வருகிறது எனவே நீங்கள் இளவரசரின் பள்ளியறையை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு உங்களிற்கு பரிசாக வழங்கப்படுகிறது. வாழைப்பழத்தோல்களை பார்த்து நடந்து கொள்ளுங்கள் :)) கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் ஜெய், நான் எழுதியபோது எந்த ட்ரிபிளும் இல்லை, இப்போது எனக்கே அதிர்ச்சியாகவிருக்கிறது :) வருகைக்கு நன்றி.

    ReplyDelete
  13. // அருமை, சூப்பர், இப்போதே கை வைக்க வேண்டும் போலிருக்கிறதே போன்ற சொற்கள் வந்து வீழ்ந்தபடியே இருந்தன. //

    ஹா ஹா... என்ன ஒரு அருமையான நிகழ்ச்சி நிரல்..... அந்த கலா ரசிக கூட்டத்தில் எனக்கும் ஒரு சீட் போடுங்கப்பா

    // இது என் பஞ்சணை, இதன் மீது நான் செய்வதில்லை வஞ்சனை //

    கல்வெட்டுகளில் பொறிக்க வேண்டிய சொற்தொடர்.... இப்பவே இடம் ரிசர்வ் செஞ்சிடனும்

    // சித்ரவதைகளின் சித்தர் குத்து நகர இளவலான இலுமி எனும் இலுமினாட்டி //

    வந்துட்டாருல்ல சின்ன தம்பி... இனி கலைகட்டட்டும்.....

    நவராவா னா... நவரச வாலிபனின் ராவுகள் வாழ்க் அர்த்தம் வருமோ

    ReplyDelete
  14. ரஃபிக், நவராவாக்கு நீங்கள் கூறியிருப்பது அட்டகாசமான அர்த்தம், இது எனக்க்கு தோன்றவில்லையே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete