திருமணமாகி, பிள்ளைகளும் பெற்று, குடும்ப வாழ்வை அது வழங்கும் அழுத்தங்களோடு ஈடு கொடுத்து வாழ்ந்து வரும் Phil [Steve Carell], Claire [Tina Fey] தம்பதியினர், தம் வாழ்வில் சலிப்பின் தாக்கத்தை முழுமையாக உணர்ந்து கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.
அவர்கள் இருவரிற்கிடையிலுமான கணவன் மனைவி உறவென்பது கடமைக்கு அனுசரிக்கப்பட வேண்டிய ஒரு சடங்காக மாறி விட்டிருக்கிறது. இந்நிலையில் பில் மற்றும் கிளேர் தம்பதிகளின் குடும்ப நண்பர்களாக இருந்து வரும் ஒரு ஜோடி விவாகாரத்து செய்து கொள்ளும் முடிவிற்கு வருகிறது. மிகவும் மகிழ்ச்சியான ஜோடியாக வெளியுலகிற்கு தம்மைக் காட்டிக் கொண்ட அந்த ஜோடியின் முடிவு பில்லினால் நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது.
தங்களது வாழ்வும் இவ்வகையான ஒரு முடிவை எட்டக் கூடாது என விரும்பும் பில்லும், கிளேரும் தமது வழக்கங்களை மாற்றிக் கொள்ள விரும்புகிறார்கள். இதன் ஆரம்பமாக வாரந்தோறும் அவர்கள் இரவுணவு அருந்தச் செல்லும் உணவகத்தை தவிர்த்து விட்டு, மன்ஹாட்டன் நகரில் அமைந்திருக்கும் மிகப் பிரபலமான உணவகம் ஒன்றிற்கு செல்வதென தீர்மானிக்கிறார்கள்.
பிரபலமான அந்த உணவு விடுதிக்கு பில்லும், கிளேரும் மிகவும் தாமதமாக வந்து சேர்வதால் அவர்களிற்கு அங்கு உணவருந்த இடம் கிடைக்காமல் போகிறது. இருப்பினும் சிறிது நேரம் காத்திருந்து ஏதாவது மேசை காலியாகுமா எனப் பார்ப்பது என முடிவெடுக்கிறார்கள் பில், கிளேர் தம்பதியினர்.
உணவகத்தின் பாரில், குடி பானங்களை அருந்தியவாறு காத்திருக்கும் பில்லும், கிளேரும், அந்த உணவகத்தில் பணியாற்றும் ஒரு பெண் ட்ரிப்பிள்ஹார்ன் எனும் ஜோடியை தேடுவதைக் காண்கிறார்கள். இந்தக் கணத்தில் பில்லின் மூளை சுறுசுறுப்பாக இயங்க, தாமே அந்த ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதி என உணவு விடுதிப் பெண்ணிடம் ஒரு பொய்யைக் கூறி, ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதி பதிவு செய்திருந்த இடத்தில் சென்று அமர்ந்து கொள்கிறார்கள் பில் தம்பதியினர்.
உணவகத்தில் பரிமாறப்பட்ட ருசியான உணவு வகைகளை பில் தம்பதியினர் சுவைத்து உண்டு கொண்டிருக்கும் தருணத்தில், அந்த உணவு விடுதிக்குள் நுழையும் இரு முரட்டு நபர்கள், பில் தம்பதியினர் உணவருந்திக் கொண்டிருக்கும் மேசையை அண்மித்து ட்ரிப்பிள்ஹார்ன் என்பவர்கள் நீங்கள்தானா என வினவ, வரவிருக்கும் விபரீதத்தை அறியாது நாங்கள்தான் ட்ரிப்பிள்ஹார்ன் எனக்கூறி விடுகிறார்கள் பில் தம்பதியினர்.
பில்லையும், கிளேரையும் ட்ரிப்பிள்ஹார்ன்கள் என நம்பிக் கொண்ட இரு முரட்டு நபர்களும் அவர்களை உடனடியாக உணவு விடுதிக்கு வெளியே வருமாறு மிரட்ட ஆரம்பிக்கிறார்கள். வேறு வழியில்லாத நிலையில் பில்லும், கிளேரும் அந்த இரு முரடர்களுடனும் உணவு விடுதிக்கு பின்பாக அமைந்திருக்கும் சந்தொன்றிற்கு செல்கிறார்கள்.
ஆள் நடமாட்டமில்லாத அந்தச் சந்தில், துப்பாக்கி சகிதம் பில்லையும், கிளேரையும் மிரட்டுவதை தொடரும் முரடர்கள், ஜா மிலேட்டோ என்பவனிடமிருந்து அவர்கள் திருடிய பிளாஷ் ட்ரைவ்வை மரியாதையாக தம்மிடம் திருப்பித் தந்து விடும்படி கேட்கிறார்கள். பில் தம்பதியினர் தாங்கள் ட்ரிப்பிள்ஹார்ன்கள் அல்ல என்ற உண்மையை எடுத்துச் சொன்னாலும் முரடர்கள் அவர்களை நம்புவதாக இல்லை. நிலைமை எல்லை மீறிச் செல்கிறது என்பதை உணர்ந்து கொள்ளும் பில், பிளாஷ் ட்ரைவ்வை தான் ஒரு பூங்காவில் மறைத்து வைத்திருப்பதாக இன்னுமொரு பொய்யைக் கூறி இரு முரடர்களையும் கிளேர் சகிதம் பூங்காவொன்றிற்கு அழைத்துச் செல்கிறான்.
பூங்காவில் இரு முரடர்களினதும் கவனம் வேறுபக்கம் திரும்பிய வேளையில் அவர்களை தாக்கி விட்டு, தன் மனைவி கிளேருடன் பூங்காவிலிருந்து தப்பி ஓடுகிறான் பில். பின் பொலிஸ் நிலையம் ஒன்றை அடைந்து தமக்கு நிகழ்ந்த மோசமான அனுபவங்கள் குறித்து முறையிடும் பில் தம்பதியினர், தம்மை உணவகத்தில் தேடி வந்து மிரட்டிய இரு முரட்டு நபர்களும் அந்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரு பொலிஸ் அதிகாரிகளே என்பதை தெரிந்து அதிர்ச்சி அடைகிறார்கள்.
இக்காரணத்தினால் பொலிஸ் நிலையத்திலிருந்து தந்திரமாக நழுவுகிறார்கள் பில் தம்பதியினர். பில் தம்பதியினரை பொலிஸ் நிலையத்தில் கண்டு கொள்ளும் இரு கேடிப் பொலிஸாரும் அவர்களைப் பின் தொடர ஆரம்பிக்கிறார்கள். தங்களிற்கு நிகழ்ந்து கொண்டிருக்கும் விபரீதங்களிற்கு எல்லாம் காரணம் ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதியினரின் பெயரை தாம் உபயோகித்ததே எனும் முடிவிற்கு வரும் பில்லும், கிளேரும் நிஜமான ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதிகளை தேடி தம் வேட்டையை ஆரம்பிக்கிறார்கள்….
சலிப்பின் ராஜ்ஜியத்திற்குள், தம் உறவின் எந்தவிதமான மகிழ்சிகளையும் இழந்து வாழ்ந்திருந்த பில் தம்பதியினர், ஒரு இரவினுள் அவர்கள் எதிர் கொள்ளும் எதிர்பாராத அதிரடிச் சம்பவங்கள் வழி, தங்கள் மனங்களில் மறைந்திருந்த அழுத்தங்களையும், ஏக்கங்களையும் பகிர்ந்து, அவர்களை கிடுக்கிப் பிடி போடும் அபாயங்களை ஜோடியாக வெற்றி கண்டு, இனிமையான உறவின் கதவைத் திறக்கிறார்கள் என்பதனை நகைச்சுவை கலந்து சொல்ல முயன்றிருக்கிறது Date Night எனும் இத்திரைப்படம். இதில் உள்ள சின்ன சிக்கல் என்னவெனில் படத்தில் நகைச்சுவையைத் தேடி நாம் பில் தம்பதியினரை விட வேகமாக ஓட வேண்டியிருக்கிறது என்பதுதான்.
இரு கேடிப் பொலிஸாரிடமிருந்தும் பில் தம்பதியினர் தப்பிச் செல்லும் வேளைகளில் அவர்கள் எதிர் கொள்ளும் நிகழ்வுகளை இயக்குனர் நகைச்சுவையாக காட்ட முயன்று இருக்கிறார் ஆனால் சிரிப்புத்தான் வரமாட்டேன் என்கிறது. பில் ஆக வேடமேற்றிருக்கும் ஸ்டீவ் கேரலும், கிளேர் ஆக நடித்திருக்கும் டினா ஃபேயும், நகைச்சுவைக் கற்பனை வறட்சி ஓங்கிய திரைக்கதையிலிருந்து ரசிகர்களிற்கு சிரிப்பை வரவழைக்க தங்கள் முக மற்றும் உடல் அசைவுகளை நம்பியிருக்கிறார்கள். போதாதென்று பாலியல் நகைச்சுவை சிரிக்க வைக்கிறது என்ற பெயரில் இம்சை தருகிறது.
துப்பறிவாளராக வேடமேற்றிருக்கும் நடிகர் Mark Whalberg, மேல் சட்டை அணியாது, வெற்று மார்புடன் தன் கட்டு மஸ்தான உடலுடன் வலம் வரும்போது கிளேர் அதனைப் பார்த்து ரசிப்பதை விரும்பாத பில் எரிச்சலுற்று, மார்க் வேல்பெர்க்கிடம் சட்டையைப் போடுடா எனக் கதறும் போதும், ஆடை அவிழ்ப்பு நடன விடுதியில் நடனம் எனும் பெயரில் பில் தம்பதியினர் அடிக்கும் கூத்தும் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கிறது. பிற காட்சிகளிற்கு சிரிப்பை ரசிகர்கள் வலிய வரவழைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஒரு காரை ஒரு கார் தள்ளிக் கொண்டு செல்லும் நம்பவே முடியாத ஒரு கார் சேஸிங்கும் உண்டு.
பிளாஷ் ட்ரைவ்வில் அப்படி என்ன மறைந்திருக்கிறது? தாதா ஜோ மலேட்டோ அதனை ஏன் அவசரமாக கைப்பற்ற விரும்புகிறான்? ட்ரிப்பிள்ஹார்ன் தம்பதியினரின் உண்மையான திட்டம் என்ன என்பதை விறுவிறுப்பாக காட்டத் தவறியிருக்கிறார் இயக்குனர். அதிலும் திரைப்படத்தின் உச்சக்கட்டக் காட்சியைப் போல் ஒரு அபத்தமான காட்சியை அண்மைக் காலத்தில் நான் திரையில் கண்டதில்லை.
The Pink Panther, Night at the Museum ஆகிய திரைப்படங்களை சிறப்பாக இயக்கிய இயக்குனரான Shawn Levy, நகைச்சுவை குறித்த மாறுபட்ட கருத்துக்களை இத்திரைப்படத்தை உருவாக்கியபோது கொண்டிருந்தார் போலும். இதில் கொடுமை என்னவென்றால் அரங்கில் சில ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து என் நகைச்சுவை ரசனையின் மீது என்னையே சந்தேகம் கொள்ள வைத்ததுதான். Date Night; உங்களை சுறாவிற்கு கோவில் கட்டிக் கும்பிட வைக்கும். [*]
ட்ரெயிலர்
மீ த ஃபர்ஸ்ட்டு !! அக்காங் !! :-) நைட்டு கருத்து எழுதப்படும் :-)
ReplyDeleteஎன்ன கொடுமை சார் இது? பின்னூட்ட சதி.
ReplyDeleteஇருந்தாளும்கூட மீ தி செகண்டு.
//இதில் கொடுமை என்னவென்றால் அரங்கில் சில ரசிகர்கள் விழுந்து விழுந்து சிரித்து என் நகைச்சுவை ரசனையின் மீது என்னையே சந்தேகம் கொள்ள வைத்ததுதான்//
ReplyDeleteஅந்த சிலர் எங்களைப் போல (நான், ஒலக காமிக்ஸ் ரசிகர், லக்கி - யுவக்ருஷ்ணா) படங்களை உண்மையாக பார்க்கும் முறையை அறிந்தவர்கள் போலும்.
காதலர் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்யவேண்டிய நேரம் வந்து விட்டதோ?
// Date Night; உங்களை சுறாவிற்கு கோவில் கட்டிக் கும்பிட வைக்கும்//
ReplyDeleteஉங்களுக்கு ஐ லவ் சுறா டீம் சார்பாக வக்கீல் நோட்டிஸ் அனுப்பி உள்ளோம். பிரபஞ்ச சினிமாவை கிண்டல் செய்வதை எப்போதுதான் நிறுத்தப் போகிறீர்களோ?
விமர்சனம் சூப்பர்
ReplyDeleteபோட்டோக்களில் உள்ள வசனங்கள் கூட காமெடியாக காணப்படுவதற்கு காரணம் இந்த படமே என்பதை காதலர் ஒப்புக் கொள்வாரா?
ReplyDeleteநண்பர் கருந்தேள், பின்னூட்டா ஜாக்குவார் விஸ்வாவை நீங்கள் முந்தியதால் நீங்கள் இன்று முதல் பின்னூட்டப் பெரும்புலி என்று அறியப்படுவீர்கள். இது சுறா பாண்டியின் உத்தரவு. முதன்மைக் கருத்திற்கு நன்றி.
ReplyDeleteவிஸ்வா, பெங்களுர் பயணம் உங்களை களைப்படைய செய்து விட்டது போலும்:))
//அந்த சிலர் எங்களைப் போல (நான், ஒலக காமிக்ஸ் ரசிகர், லக்கி - யுவக்ருஷ்ணா) படங்களை உண்மையாக பார்க்கும் முறையை அறிந்தவர்கள் போலும்.// இதில் என்ன சந்தேகம் நண்பரே. அரங்கில் இருந்தவர்கள் நீங்களாகவே கூட இருந்திருக்கலாம்.
ஐ லவ் சுறா டீமிற்கு, சுறா படத்தை நல்லது என்று கூறினால் நோட்டீஸ் அனுப்பி வைக்கிறீர்களே இது நியாயமா!
டேட் நைட் படத்தைப் பார்த்த உணர்வில் போட்டோவில் வரிகளை எழுதினால் அவை இவ்வாறு இருக்கும்..
- டாக்டர் விஜயா , தெரியாத்தனமா இந்தப் படத்தில நடிக்க ஒத்துக்கிட்டேன் சார் இப்ப எங்க ஓடுறதுன்னு தெரியலையே
-இந்தா இந்த கண்ணாடி ஒட்டைக்குள்ள பாய்ஞ்சு தற்கொலை செய்ஞ்சுக்கலாமா..
-ஏம்பா நான் மட்டும் தனியா பேபி பாடியா நிக்கிறேனே, நீயும் கொஞ்சம் ரீலாக்ஸாகிறது....
தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
உதயன், தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.
ஹா ஹா....காதலர் இஸ் பாக் இன் பார்ம்.....
ReplyDeleteபோட்டோல எல்லாம் செம கமென்ட்....படம் எப்படியோ?ஆனா,போஸ்ட் நல்லா இருக்கு.By the by,பிகரு நல்லா இருக்கு. :)
//துப்பறிவாளராக வேடமேற்றிருக்கும் நடிகர் Mark Whalberg, மேல் சட்டை அணியாது, வெற்று மார்புடன் தன் கட்டு மஸ்தான உடலுடன் வலம் வரும்போது//
ReplyDeleteஇவரு எப்பவுமே இப்படித்தான்! இவரு ஒரு ஹாலிவுட் சல்மான் கான்!
தலைவர்,
அ.கொ.தீ.க.
கதை படிக்கும் போது சுவாரசியமாத்தான் இருக்கு! மேக்கிங்குல சொதப்பீட்டாங்களோ?!!
ReplyDeleteதலைவர்,
அ.கொ.தீ.க.
படத்தோட தலைப்ப பார்த்ததுமே என்னடா இது அப்படீன்னு நெனச்சேன் அப்புறம்
ReplyDeleteபொசுக்குன்னு போச்சு பாசு ......
போட்டோக்களில் உள்ள வசனங்கள் சும்மா நச்சுன்னு இருக்கு
// உங்களை சுறாவிற்கு கோவில் கட்டிக் கும்பிட வைக்கும்.///
ReplyDeleteஇது.. மிகப்பெரிய வெளிநாட்டுச் சதி!!! இதுவரைக்கும் கோவில் கட்டலைன்னு, நீங்க ஜாடையா சொல்லுறது.. உங்க உடம்புக்கு நல்லதில்லை.
பார்த்து...!!!!!!!!!!!!!!
இந்தப் படம் எனக்கு ஜஸ்ட் மிஸ். நல்லவேளை தப்பிச்சேன் போல.!! :)
அட,ஹாலிபாலா போல மரணமொக்கை படத்திலிருந்து எல்லோரையும் காப்பாத்துறீங்க நண்பரே
ReplyDelete//ஹாலிபாலா போல//
ReplyDeleteயாருங்க அவரு? எங்க அப்பாரு காலத்துல பிளாக் எழுதுனாராமே? எங்க அப்பாரு சொன்னாரு.
அப்போ ஹாலிபாலா போஸ்ட் போடும்போது எங்க அப்பாரு தான் போய் மீ த பரஸ்ட் போடுவாராம்.
நம்ம ஜெனரேஷன் டைம்ல அவர காணல.
// யாருங்க அவரு? எங்க அப்பாரு காலத்துல பிளாக் எழுதுனாராமே? எங்க அப்பாரு சொன்னாரு. //
ReplyDeleteஹா ஹா...
செம கலாய்.... :)
நல்ல வேளை நான் பிழைத்து கொண்டேன். இன்னிக்குத்தான் இந்த படததை டவுன்லோடு பண்ணலான்னு நினைச்சேன். தேங்ஸு.
ReplyDeleteநீங்களே சொல்லிட்டீங்க, சத்தியமா பாக்க மாட்டேன். இருந்தாலும் சுறாவ விட மொக்கையான படத்துக்கு இவ்வளவு சிறப்பான விமர்சனமா காதலரே?
ReplyDeleteநண்பர் இலுமினாட்டி, பிகரு நல்லா இருக்கா!! பிகரை அருகே பார்த்தால் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள்- இப்படிக்கு ஜொள்ளு விடப் போய் மரண அடி வாங்கிய சங்கத் தோழர். தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
ReplyDeleteதலைவர் அவர்களே, நான் எதிர்பார்த்து போனதால் இந்த அடி கிடைத்தது. அதிக எதிர்பார்புகள் இன்றி டைம்பாஸுக்கு பார்க்க நினைத்தால் ஒ.கே. ஹாலிவுட் சல்மான்கான் வேல்பேர்க்தானா!! பாலா இல்லையா :))
நண்பர் சிபி, எனக்கும்தான் பொசுக்கென்று போனது என்ன செய்வது..அடுத்த ஜொள்ளிற்கு தயார் ஆக வேண்டியதுதான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் ஹாலிவுட் பாலா, ஏற்கனவே ஐ லவ் சுறா அமைப்பு என்னை மிரட்டியிருக்கிறது, இதில் கோவில் கட்டவில்லை என்று வேறு கூறி என் நிலையை மோசமாக்கி விடாதீர்கள்.. இந்தப் படத்தின் விளம்பரத்தில் ஒரு புண்ணியவான் ஹேங் ஓவரிற்கு பின் இப்படிச் சிரித்ததில்லை என்று ஒரு பிட்டை போட்டிருந்தார் அவர் மட்டும் என் கையில் மாட்டினால் அவரிற்கு சுறா பிரியாணிதான். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் கார்திகேயன், தங்கள் கருத்தின் பின் ஒரு புன்னகை ஒளிந்திருக்கிறது :) வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.
நண்பர் ராமசாமி கண்ணன், வேறு படங்கள் ஏதும் இல்லையெனின் இது உங்கள் கடைசித் தெரிவாக அமைந்திடட்டும். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்பர் சரவணன், இது சிறப்பான விமர்சனம் இல்லை. சிறப்பான மனவேதனை.தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.
தங்களது விமர்சனத்தை விட, படங்களும் அதற்கு நீங்கள் இடும் கமெண்டுகளும் தான் அதி அற்புதம் நண்பரே...வழக்கம் போல அருமையான விமர்சனம்.
ReplyDelete//பிகரை அருகே பார்த்தால் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள் //
ReplyDeleteநமக்கு எங்க காதலரே அந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் கெடைக்குது? அது உங்கள மாதிரி பெரிய ஆட்களுக்கு மட்டுமே முடியுது. :)
//பிகரை அருகே பார்த்தால் கருத்தை மாற்றிக் கொள்வீர்கள் //
ReplyDeleteநமக்கு எங்க காதலரே அந்த மாதிரி வாய்ப்பு எல்லாம் கெடைக்குது? அது உங்கள மாதிரி பெரிய ஆட்களுக்கு மட்டுமே முடியுது. :)
Me also repetu...........
அப்புடி என்னய்யா இந்தப்படத்துல மொக்க? அத தெரிஞ்சிக்க இந்தப் படத்த எடுத்துப் பார்த்தா தான் என்ன? :-) நாம எல்லாரும் ஏன் இந்த ரீதில சிந்திச்சி, இந்தப் படத்த எடுத்துப் பார்த்து, இதோட சிறப்பியல்புகளப் பத்தி ஆளுக்கு ஒரு பதிவு போடக்கூடாது? இது எப்புடி இருக்கு !!
ReplyDelete//யாருங்க அவரு? எங்க அப்பாரு காலத்துல பிளாக் எழுதுனாராமே? எங்க அப்பாரு சொன்னாரு.
அப்போ ஹாலிபாலா போஸ்ட் போடும்போது எங்க அப்பாரு தான் போய் மீ த பரஸ்ட் போடுவாராம்.
நம்ம ஜெனரேஷன் டைம்ல அவர காணல//
அடப்பாவிகளா . . ஃபேமிலியே மீ த ஃபர்ஸ்ட்டு தானா . . இருக்கட்டும்... நானும் என்னோட (வருங்கால) வாரிச அப்புடியே ட்ரெயின் பண்ணுறேன் . . அப்ப பின்னூட்டப்புலி கிங் விஸ்வாவோட வாரிசா இல்லே என்னோட வாரிசான்னு பார்த்துருவோம்ன்னேன் !! :-)
அப்பறம், அல்லாரும் சுறாவத் திட்டிக்கினு கீறாங்கோ . . இதோ காவக்காரன் வரப்போவுதுன்னு தெரிஞ்சிக்காமயே . . சிரிங்க சிரிங்க நல்லா சிரிங்க . . அந்தப்படம் மட்டும் வந்துச்சு.. மக்கா அண்டவெளில ஒருபய சிரிக்க முடியாது . .
- ஐ லவ் சுறா கிளப் மெம்பர்
காதலரே,
ReplyDeleteதமிழில் வந்த சுறாவை பற்றி பதிவிடுவது சரி, மலையாளத்தில் வந்த சுறா - സുരാ பற்றி உங்களுக்கு தெரியுமா?
//- ஐ லவ் சுறா கிளப் மெம்பர்//
ReplyDeleteSuper.
This comment has been removed by the author.
ReplyDeleteவெடிகுண்டு,
ReplyDeleteநமக்கு தண்ணி கொடுக்காத பசங்களுக்கு கூட நாம (வாய்க்கு) அரிசி கொடுக்கிறோம் பாத்திங்களா,அங்க நிக்கான் தமிழன்.
குறிப்பு: இதில் சுறாவையோ, கடத்திச் செல்லப்படும் ரேசன் அரிசியையோ பற்றி நான் எதுவும் குறிப்பிடவில்லை.... :)
நண்பர் இல்லுமினாட்டி தன்னுடைய கருத்தை ஆழமாக பதித்துள்ளார்.
ReplyDeleteநண்பர் கருந்தேள், அருமையான யோசனை, எல்லா நண்பர்களும் வார இறுதியில் இப்படத்தை பார்த்து ரசிக்கும் படி வேண்டுகோளை ஐ லவ் சுறா கிளப் சார்பாக நான் முன் வைக்கிறேன் :) காவக்காரன் பிரபஞ்ச சராசரக் கோபக்காரன்..வாட்ச்மேன் கண்ட்ரோல்ஸ் த டைம்.. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
ReplyDeleteநண்பர் வெடிகுண்டு வெங்கட், மலையாளப் போஸ்டர் ஆனால் தமிழில் படமா. மலையாளக் கரையோரம் சுறாவின் அட்டகாசம் ஸ்டார்ட். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
இலுமினாட்டி, பின்னி விட்டீர்கள் நண்பரே. விஸ்வாவின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்.
எவ்ரிபாடி லிஸ்ஸின் லிஸ்ஸின் லிஸ்ஸின்
ReplyDeleteசிங்கம் சிங்கம் ஈஸ்வர சிங்கம்
இவன் நடந்தால் போதும் சுறாவும் வணங்கும்
ஒகோ ஒகூ ஒகூ ஒகோஒ
ஒ யா பேபி
காதலரிடம் ஒரு சின்ன ரிக்வெஸ்ட்: அப்படியே நம்ம தலைவரோட "பெண் சிங்கம்" எப்படி இருக்குன்னு பார்த்துட்டு சொன்னா தேவலாம்.
ReplyDeleteசூர்யாவின் "சிங்கம்" வெர்சஸ் கலைஞரின் "பெண் சிங்கம்" - வாவ், வாட் எ மேட்ச் பேபி.
ReplyDeleteஓயா, லெட்ஸ் வாட்ச் இட் வித் காதலர்ஸ் விமர்சனம்.
நண்பர் வெடிகுண்டு, சிங்கம் விமர்சனமா.. ஹாஹாஹா :))
ReplyDeleteமுதல் முறை வருகிறேன்.
ReplyDeleteநீண்ண்ண்ண்ண்ட பதிவு..
நன்றாக உள்ளது.
அது சரி நண்பரே..
இல்லுமினாட்டி என்றால் என்ன?
கிறுக்கல்கள் அன்பரே, வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி. இல்லுமினாட்டி என்றால் ஞானம் நிறைந்தவர்கள் என அர்த்தம் கொள்ளலாம். ஆனால் நீங்கள், இங்கு தன் கருத்துக்களை பதிந்திருக்கும் நண்பர் இலுமினாட்டி பற்றிக் கேட்டீர்களானால் உங்களிற்கு சனி பகவான் கடாட்சம் கிட்டி விட்டது என்று கொள்ளலாம் :)
ReplyDelete//ஆனால் நீங்கள், இங்கு தன் கருத்துக்களை பதிந்திருக்கும் நண்பர் இலுமினாட்டி பற்றிக் கேட்டீர்களானால் உங்களிற்கு சனி பகவான் கடாட்சம் கிட்டி விட்டது என்று கொள்ளலாம் :) //
ReplyDeleteபோங்க தல.என்னைய போய் புகழ்ந்துகிட்டு....எனக்கு கூச்சமா இருக்கு.... :)