Thursday, January 7, 2010

விபத்து


accident-2009-19048-318566964 ஹாங்காங்கில் இயங்கும் தொழில்முறைக் கொலைகாரர் குழுவொன்றின் தலைவனாக செயற்பட்டு வருகிறான் Ho. ஹோவின் குழு தாங்கள் செய்யும் கொலைகளை எதிர்பாரமல் அல்லது தற்செயலாக நிகழ்ந்த ஒரு விபத்து போல் அரங்கேற்றி, நடாத்தி முடிப்பதில் கைதேர்ந்த கில்லாடிகளாகத் திகழ்கிறது.

கொலைகளைத் திட்டமிடுவதிலும், அதற்கான ஆயத்தங்களிலும், ஒத்திகைகளிலும், பின் அக்கொலைகளை செயற்படுத்துவதிலும் மிக நுணுக்கம் கொண்ட அவதானிப்புக்களும், எச்சரிக்கைகளும் நிறைந்ததாக அவர்கள் நடைமுறைகள் காணப்படுகின்றன.

கொலை நடக்கும் இடத்தில், தங்களை அக்கொலையுடன் தொடர்பு படுத்திவிடக்கூடிய எந்தவித தடயங்களையும் விட்டு வைக்காது, அது ஒரு விபத்து என்று பொலிஸ் விசாரணையை மூடி விடும்படி பார்த்துக் கொள்கிறது ஹோவின் குழு.

இவ்வாறான நேர்த்தியான ஹோவின் கொலைச் சேவையை நாடி வருகிறான் Wong எனும் நபர். முடமான நிலையில் இருக்கும் தன் தந்தையை தீர்த்துக் கட்டும் பணியை ஹோ குழுவிடம் ஒப்படைக்கிறான் அவன்.

வொங் ஏன் தன் தந்தையை தீர்த்துக் கட்ட விரும்புகிறான் எனும் கேள்வி ஹோவின் மனதில் எழுகிறது. இருப்பினும் பணியை ஏற்றுக் கொண்ட ஹோ, தன் குழுவினரோடு வொங்கின் தந்தையை எவ்விதமாக இல்லாமல் ஆக்குவது என்று திட்டம் ஒன்றை உருவாக்க ஆரம்பிக்கிறான்.

வொங், தினந்தோறும் தன் தந்தையை சக்கர நற்காலியில் வைத்து தள்ளியவாறே உலவச் செல்வதை ஹோவின் குழு அவதானிக்கிறது. அவர்கள் செல்லும் பாதையின் சூழல் கூர்மையான கவனிப்புக்கு உள்ளாகிறது. வொங்கின் நடவடிக்கைகளையும் அவர்கள் கண்காணிக்கிறார்கள். வொங் தன் தந்தையை உலவ அழைத்துச் செல்லும் பாதையில் நிகழும் ஒரு திட்டமிட்ட விபத்தில், அவன் தந்தையை எவ்விதம் இரையாக்கலாம் என்பதை அவர்கள் தங்கள் அவதானிப்புக்களைக் கொண்டு திட்டமிடுகிறார்கள்.

accident-2009-19048-1389085322 மழைநாள் ஒன்றில், வொங் செல்லும் வழியில் ஓடும் ட்ராம் வண்டிக்கு மின் சக்தியை வழங்கும் கம்பியில் ஒரு நூலைத் தொங்க வைத்து, அந்த நூலை சக்கர நாற்காலியில் இருக்கும் வொங்கின் தந்தையின் உடல்மேல் பட வைத்து, அவர் மின்சாரம் தாக்கி இறந்ததாக பிறர் எண்ணும் வகையில் ஓர் விபத்தை ஜோடனை செய்கிறது ஹோவின் குழு.

விபத்து போன்ற அந்தக் கொலையினை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்கான சாத்தியங்களை ஆராய்ந்து பார்த்தபின், ஒரு நல்ல நாளில் அத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார்கள் அவர்கள். ஆனால்….

அக்கொலையை முடித்து விட்டு கிளம்பிச் செல்லும் ஹோவை நோக்கி பாய்ந்து வருகிறது தெருவிலிருந்து விலகிய ஒரு பஸ். தன்னை நோக்கி வரும் பஸ்ஸிலிருந்து மயிரிழையில் விலகித் தப்பிக்கிறான் ஹோ. ஆனால் அவன் சகாவான குண்டு பஸ்ஸில் மோதி சாகும் நிலையில் தெருவில் துடிக்கிறான்.

தெருவில் சாகக் கிடக்கும் தன் சகாவை நெருங்கும் ஹோ, அவனிடமிருந்து பொலிஸ் கைப்பற்றி விடக்கூடிய பொருட்களை தான் எடுத்துக் கொள்கிறான். வலியில் துடிக்கும் குண்டு, ஈனமான குரலில் ஹோவைப் பார்த்து இது ஒரு விபத்து என்கிறான். ஆனால் ஹோவின் மனதிலோ இது தன்னைத் தீர்த்துக் கட்டுவதற்காக திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட ஒரு விபத்து எனும் சந்தேகம் பூதாகரமாக எழுகிறது.

accident-2009-19048-1589339923 தன் குழுவினர் மேல் கூட நம்பிக்கை கொள்ளாது இந்த விபத்தின் பின்னிருக்கும் சதியை தானே தனியாக தேட ஆரம்பிக்கிறான் ஹோ. அவன் சந்தேகங்கள் அவனை இட்டுச் செல்லப் போகும் பொறி குறித்து அவன் அறிந்திருக்கவில்லை….

புத்திசாலியும், எச்சரிக்கை நிறைந்தவனும், நுட்பமான விதத்தில் செயல்படுபவனுமான ஒரு கொலையாளி, அவனிற்கு ஏற்படும் ஒரு சந்தேகம் காரணமாக, தன்னைச்சுற்றி நிகழும் ஒவ்வொரு அசைவையும், நிகழ்வையும் எவ்விதமாக மொழிபெயர்க்கிறான் என்பதை அருமையாகக் கூறுகிறது Accident எனப்படும் இந்த ஹாங்காங் திரைப்படம். திரைப்படத்தை தயாரித்திருப்பவர் பிரபல இயக்குனரான Johnnie To. இயக்கியிருப்பவர் Soi Cheang.

பெரும்பாலான ஹாங்காங் தயாரிப்புக்களில் தவறாது இடம்பிடிக்கும், நிற்காமல் வெடிக்கும் துப்பாக்கிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்‌ஷன், இவற்றை ஒரு அழகிய நடனம் போல் மெல்லசைவில் காட்டும் நுட்பம், அதிலும் இயக்கம் ஜான் வூவாக இருந்தால் குறுக்கே பறக்கும் வெள்ளைப் புறாக்கள் என பின்னி எடுத்து இருப்பார்கள். ஆனால் சொய் ச்சீன், உறுதியான திரைக்கதையுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.

மூன்று வருடங்களாக செப்பனிட்ட இத்திரைக் கதையை பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளால் நிரப்பாது, ஒரு கிளாசிக் த்ரில்லர் போன்ற அழகுடன் திரைக்கு எடுத்து வந்திருக்கிறார் இயக்குனர்.

accident-2009-19048-1734012294 படத்தில் ஹோ குழுவினர் ஆற்றும் இரு கொலைகள் இடம் பெறுகின்றன. அவற்றை விபத்து போல் காட்டுவதற்கு அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்கள் எங்களை இருக்கைகளுடன் ஒட்டிக் கொள்ள வைக்கின்றன. விபத்து என்பதற்கு உங்கள் அகராதியில் இனி அர்த்தமே வேறு என்ற படத்தின் பஞ்ச் வரிகளிற்கேற்ப நுட்பத்துடன் அமைந்து சிலிர்க்க வைக்கின்றன அக்காட்சிகள்.

தன் சகாவான குண்டு இறந்தபின், யாரையும் நம்பாத நிலையில் பித்துப் பிடித்தவன்போல் ஹோ நிகழ்த்தும் தேடல்களும், நடவடிக்கைகளும் பார்வையாளனை ஹோ அகப்படப்போகும் பொறிக்குள் அழகாக அழைத்துச் செல்கின்றன.

Accident Photocall 66th Venice Film Festival groE2jNSlmFl அழகாக அமைக்கப்பட்டிருக்கும் காட்சிகளும், அலட்டிக் கொள்ளாத ஒளிப்பதிவும், தெளிவான கதை சொல்லலும் ஹோ பாத்திரத்தில் வேடமேற்றிருக்கும் Louis Kooன் இயல்பான நடிப்பும் படத்தின் பலம். ஹோவின் குழுவில் இடம்பெறும் மாமா எனும், தான் செய்யும் செயல்களை மறந்துவிடும் பாத்திரமும் மனதை தொடுகிறது.

ஹோவின் கடந்தகாலம் பற்றிய தகவல் உறுதியாக மனதைப் பற்ற மறுக்கிறது. திரைப்படத்தின் இறுதியில் ஏற்படும் திருப்பங்களும், உச்சக்கட்டமும் படத்தின் ஆரம்பக் காட்சிகள் ரசிகனிடம் தூண்டிவிட்ட எதிர்பார்ப்பினை முழுமையாக தீர்க்கவில்லை, இருப்பினும் தரமான, வேறுபட்ட த்ரில்லர்கள் வகையில் எளிதாக இடம்பிடித்துக் கொள்கிறது இத்திரைப்படம். சிக்கல் நிறைந்த ஒரு கதையை எவ்விதம் தெளிவாக பார்வையாளனிடம் கொண்டு சேர்ப்பது என்பதற்கு நல்லதொரு உதாரணம் இத்திரைப்படம்.

சந்தேகமும் விபத்தைப் போல் கொல்லும். [**]

ட்ரெயிலர்

22 comments:

  1. இங்கிலீஷ் படமில்லாத இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் டி.வி.டி ?

    கதைக் களன் நிறைய திட்டமிடல் நிறைந்ததாக இருக்கும் என நம்புகிறேன்.

    பகிர்தலுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நண்பர் பின்னோக்கி,

    எல்லாம் எனக்குத் தெரிந்த கொஞ்சம் பிரெஞ்சு மொழியை வைத்துதான். திரையரங்கில் படம் பார்க்கவே மிகவும் பிடிக்கும், அரங்கில் பார்க்கும் படங்களிற்கு மட்டுமே விமர்சனம் எழுதி வருகிறேன். தயங்காது படத்தைப் பாருங்கள். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  3. சிறப்பான பதிவு. தமிழ் சினிமாவும் சீக்கிரம் இது போல மாறும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  4. just now witnessed an accident in pondicheri (9.35 pm) and started the journey back to chenai. and opened the blog, voila, you have posted on accident.

    what an coincidence.

    will comment elaborately in the morning.

    ReplyDelete
  5. a Lorry collided with the Govt Bus and the bus fell upside down on the downhill road. fortuntely all the passengers were alive. the lorry driver escaped.

    that's the latest update on this. got someexclusive footage on this. willl send as a mail attachment. it is tough to type in tamil while travelling. so, excuse comment in english.

    ReplyDelete
  6. நண்பர் காப் டைகர் அவர்களே, தமிழ் சினிமா நிச்சயம் மாறும், இல்லாவிடில் ரசிகர்கள் மாறிவிடுவார்கள். கருத்துக்களிற்கு நன்றி.

    விஸ்வா, அது நம் பாண்டி மைனர் இல்லையே :))[இருந்தால் ஜலசாவின் கதி என்னாவது]. கருத்துக்கு நன்றி நண்பரே.

    ReplyDelete
  7. நண்பரே . . வாவ் . . உங்கள் விமரிசனமே அவ்வளவு விறுவிறுப்பாகச் செல்கிறது . .பார்க்க வேண்டிய படங்களில் இன்னுமொரு முத்து . .அதிலும், இந்த தெற்காசிய இயக்குனர்கள், பட்டையைக் கிளப்பும் படங்களைச் சமீப காலமாக இயக்கி, உலக அரங்கில் இடம் பிடித்து வருகின்றனர். இதை நினைக்கும்போது, நம் இந்திய இயக்குனர்கள் பற்றிய ஆற்றாமை எழுவதைத் தவிர்க்க இயலவில்லை . . காலம் மாறுமா?பார்ப்போம் . .

    ReplyDelete
  8. கனவுகளின் காதலனே,

    வணக்கம். நேற்று இரவு சந்தித்த அந்த விபத்தின் பின்னர் சில மணித்துளிகளில் இந்த பதிவினை படிக்க நேர்ந்தது. (சீருந்தில் டைப்பிங் அடிப்பதில் நான் இன்னும் எக்ஸ்பர்ட் ஆகாததால் சில பல எழுத்துப் பிழைகள் அந்த பின்னூட்டங்களில் இருக்கும், பொறுத்தருள்க).

    கிளைமாக்சை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் படித்த உடனே வந்து விட்டது. கடந்த சில மாதங்களாக (பழைய கருப்பு வெள்ளை தமிழ் படங்களை தவிர) படங்களையே பார்க்காததால், புதிய படங்களை பற்றி உங்கள் தளம் மூலமே தெரிந்து கொள்கிறேன். Thanks.

    ஷெர்லக் ஹோம்ஸ் படத்தை இன்று இரவு பார்க்கவிருக்கிறேன். நீங்கள் பார்த்தாயிற்றா?

    ReplyDelete
  9. காதலரே,

    உங்கள் விமரிசனமே இத்தனை த்ரில்லாக உள்ளதே, இந்த படத்தில் கொலைகளை எப்படி விபத்துகளாக மாற்றுகிறார்கள் என்று பார்க்க ஆவலாக இருக்கிறது. உடனே,

    வழக்கமாக ஹாங்காக் படங்களில் தெரியும், கத்தி, மர்மக்கலை தாக்குதல்களில் இருந்து வித்தியாசமான படங்களை பார்ப்பதே ஒரு பெரிய காரியம் தான். உங்கள் தயவில், அப்படிபட்ட படங்களக்கும் அறிமுகம் கிடைத்து விடுகிறது. எனவே, மத்த படங்களை பார்த்து நொந்து போவதில் இருந்து எஸ்கேப் :)

    பின்னால் ட்ராம் வண்டி வருகை தரும் வேளையில், ஒன்றும் தெரியாத அப்பாவி போன்ற முகத்துடன் ஹோ நிற்கம் போசே, பல கவிதை சொல்கிறதே.

    அறிமுகத்துக்கு நன்றிகள் காதலரே.

    ReplyDelete
  10. காமிக்ஸ் நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல், வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல், அரிசிப் பொங்கல், வீட்டுப் பொங்கல், ஹோட்டல் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நண்பர் கருந்தேள், தமிழ் இயக்குனர்களை மட்டும் குறை சொல்ல முடியாது, ரசிகர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் என எல்லாருமே தங்கள் ரசனையை உயர்த்திக் கொள்ளும்போது வேண்டுமானால் மாற்றங்கள் நிகழலாம் இருப்பினும் வணிகத்தில் லாபத்தை மட்டுமே அதிகம் எதிர்பார்க்க முடியும் என்பதை நாம் தெரிந்தே வைத்திருக்கிறோம். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    விஸ்வா, ஷெர்லாக் ஹோம்ஸ் படம் இங்கு அடுத்த மாதமே வெளியாகிறது அடுத்த மாதம்தான் பார்க்க முடியும். மீண்டும் வந்து கருத்துப் பதிந்தமைக்கு நன்றிகள் நண்பரே.

    ரஃபிக், இணையத்தில் தேடிப்பாருங்கள் படம் கிடைத்தால் பாஅர்த்து விடுங்கள் அழகாக கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    செழி, இப்போதே பொங்க ஆரம்பித்து விட்டீர்களா, மெகான் ஃபாக்ஸ் பொங்கல், தமன்னா பொங்கல், இலியானா இடியாப்ப பொங்கல், கேட் மொஸ் வெண்பொங்கல், ஸ்கார்லாட்டா ஜோஆன்சன் சர்க்கரைப் பொங்கல், என் வீட்டில் பூரிக்கட்டைப் பொங்கல். பொங்கலோ பொங்கல். வேட்டைக்காரன் வந்தால் இண்டர்நேஷனல் இம்சைப் பொங்கலுங்கோ.

    ReplyDelete
  12. ரொம்ப அற்புதமா எழுதி இருக்கிங்க....நல்ல விவரிப்பும் கூட...

    ReplyDelete
  13. நண்பர் ஜாக்கி சேகர் அவர்களே உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  14. பிரமாதமா இருக்கு. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  15. காதலரே,
    இப்போது தான் டவுன்லோட் செய்து முடித்தேன் பார்த்து விட்டு வருகிறேன்.

    ReplyDelete
  16. நண்பர் அண்ணாமலையான் அவர்களே உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.

    நண்பர் லிமட், பார்த்து விட்டு வாருங்கள்.

    ReplyDelete
  17. நண்பரே
    இன்று தான் படிக்க முடிந்தது உங்களின் பதிவை
    //சிக்கல் நிறைந்த ஒரு கதையை எவ்விதம் தெளிவாக பார்வையாளனிடம் கொண்டு சேர்ப்பது என்பதற்கு நல்லதொரு உதாரணம் இத்திரைப்படம். // இது பெரிய விஷயம். இந்த தெளிவு எளிய மக்களிடமும் பல கருத்துகளை பகிர்ந்து கொள்ள முடியும்.கண்டிப்பாக பார்த்து விடுகிறேன். பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  18. // நிற்காமல் வெடிக்கும் துப்பாக்கிகள், பிரம்மிக்க வைக்கும் ஆக்‌ஷன், இவற்றை ஒரு அழகிய நடனம் போல் மெல்லசைவில் காட்டும் நுட்பம், அதிலும் இயக்கம் ஜான் வூவாக இருந்தால் குறுக்கே பறக்கும் வெள்ளைப் புறாக்கள் என பின்னி எடுத்து இருப்பார்கள். ஆனால் சொய் ச்சீன், உறுதியான திரைக்கதையுடன் களத்தில் இறங்கியிருக்கிறார்.//

    நல்ல அவதானிப்பு.நொம்பக் காலமா நல்ல சினிமாவா பாத்திருக்கிறீர்கள் என்று தெரிகிறது.நானெல்லாம் அப்ரசெண்டி...:)அவசியம் பாத்துடறேன்.பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  19. நண்பர் வேல்கண்ணன் அவர்களே,நீங்கள் கூறுவது சரியே. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

    நண்பர் மயில்ராவணன் அவர்களே, சிறு வயது முதலே காமிக்ஸ், புத்தகம், சினிமா என்று ஒன்றையும் விடுவதில்லை. எல்லாவகையான படங்களையும் பார்ப்பேன். ஆனால் இப்போது எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும் என்ற ஆசையிருந்தும் நேரம் கிடைப்பதில்லை. கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete
  20. this is really nice post... good review....

    ReplyDelete
  21. நண்பர் மகா உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.

    ReplyDelete