வறண்ட, கண்களைக் கூசச் செய்யும், வெண்மனற் கடலாக விரியும் ஒர் பாலைவனத்தில், கரிய ஆடை அணிந்த தன் எதிரி ஒருவனைத் துரத்திச் செல்லும் இத்துப்பாக்கி வீரனின் தேடலின் கதை, அவன் இளைஞனாக இருக்கும் போது ஆரம்பமாகிறது.
ஜிலாட் எனும் நகரின், நெடிய கோட்டையின் முன்னே பரந்திருக்கும் பசுமையான புல்வெளி, அது பனித்துளிகளின் கவிதை வெளி. இலைகளை உதிர்த்து விட்டு, கிளைகள் போதும் என நிற்கும் மரங்கள். அங்கு குழுமியிருக்கிறது இளைஞர்கள் குழுவொன்று. அவர்கள் நிற்கும் தோரனையின் பிம்பம், மரணத்தை கெக்கலிக்கிறது. அவர்களின் கையுறை அணிந்த கரங்களின் மீது கம்பீரமாக, அரசர்கள் போல் வீற்றிருக்கின்றன ராஜாளிகள். ரோலண்ட், கத்பேர்ட், அலன் என்பவர்களுடன் இன்னும் சில இளைஞர்களும் தயார் நிலையில் நிற்கிறார்கள். அவர்களின் குருவான கோர்ட், உரத்த குரலில் அறிவுறுத்தல்களை உரைத்துக் கொண்டிருக்கிறான். தன் மாணக்கர்கள் போர் நுணுக்கங்களை கற்றுத் தேர்ந்தது போல், வேட்டையாடல் தந்திரங்களையும் கற்று தேர்ந்துள்ளார்கள் என்பதனை தனக்கு நீருபித்துக் காட்டும் படி இளைஞர்களை உறுத்துகிறான் கோர்ட். தனக்குச் சேர வேண்டியது தன்னை வந்தடையும் எனக் காத்திருப்பது முட்டாள்களின் நம்பிக்கை எனக்கூறும் கோர்ட், தன் அருகில் இருந்த , பறவைகள் நிரம்பிய கூடையொன்றின் மேல் மூடியை தன் நீண்ட கத்திக் கோலால் தட்டி விட, விடுதலையின் காற்றை சுவாசிக்க வேகமாக மேலே பறக்கின்றன வெண்புறாக்கள்- மரணம் கூட சில சமயங்களில் விடுதலையே-.
ரோலண்டின் கையில் இருந்த டேவிட் எனும் பெயர் கொண்ட ராஜாளி, மற்ற ராஜாளிகளைக் காட்டிலும் வேகமாகப் பாய்ந்து சென்று ஒர் வெண்புறாவைக் கொத்தி, பின் அதனை தன் கால்களில் அடக்கி தன் நண்பன் ரோலண்டை நோக்கி அம்பெனப் பாய்ந்து வருகிறது. ரோலண்டின் கைகளில் டேவிட் அமர்ந்து விட்ட பின்னும் கூட ஏனைய ராஜாளிகள் காற்றில் மேலே பறந்து கொண்டிருகின்றன. அந்த ராஜாளிகளின் எஜமானர்களாகிய இளைஞர்களைக் கடிந்து கொள்கிறான் கோர்ட். தங்களை இம்முறை மன்னித்தருளும் படி இளைஞர்கள் கோர்ட்டிடம் வேண்டுகிறார்கள். இரவுணவும், காலை உணவும் அவர்களிற்கு இல்லை என உத்தரவிடுகிறான் கோர்ட். இதன் பின் ரோலண்டைப் பார்க்கும் கோர்ட், நான் புழுக்களாகிய உன் நண்பர்களுடன் நடந்து கொள்ளும் முறை உனக்கு கடினமாக இருக்கிறதா? உன் அதிருப்தியை ஆண்மகன் போல் என்னிடம் வெளிப்படுத்த விரும்புகிறாயா என வினவுகிறான். அதற்கு நீ தயாராகி விட்ட தருணத்தில், எம் பரம்பரை வழக்கத்தின் படி நீ என்னுடன் மோதி என்னை வெற்றி கொள்வாய் எனில் நீ ஒர் துப்பாக்கி வீரன் ஆகலாம் இல்லையேல் இந் நகரை விட்டு, உறவுகளை அறுத்து நீ வெளியேறலாம் எனக் கூறியவாறே புல்வெளியை விட்டு விலகிச் செல்கிறான் கோர்ட்.
நகரின் நிழல் உறங்கும் வீதிகள் வழியே தன் வீடு திரும்புகிறான் ரோலண்ட். அவன் தந்தை ஸ்டிவன், துப்பாக்கி வீரர்களின் தலைவர்களில் ஒருவன், முக்கிய புள்ளி. அவன் நகரை விட்டு நீங்கி இரண்டு வருடங்களாகி விட்டது. எல்லா மனிதர்களிடமும் பலவீனங்கள் உண்டு. ஸ்டிவனிற்கு அவன் ஆலோசகனும், மாந்திரீகனுமான, மார்ட்டென். ஸ்டிவன் தன் மேல் கொண்டுள்ள நம்பிக்கைக்கு பதிலாக ரோலண்டின் தாயை தன் இஷ்டத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறான் மார்ட்டென். ரோலண்ட் தன் வீட்டு வாசலை நெருங்குகிறான், வாசல் கதவு திறக்கப் பட அங்கு நிற்கும் மார்ட்டென் ரோலண்டை உள்ளே அழைகிறான், ரோலண்டின் தாய் அவனுடன் பேச விரும்பியதையும் தெரிவிக்கிறான். தாயின் அறையில் நுழையும் ரோலண்ட், தாயின் நிர்வாணத்தைக் காண்கிறான், அவள் கழுத்தில் ரத்தம் உறிஞ்சப்பட்டதால் ஏற்பட்டுள்ள தழும்புகளை அவதானிக்கிறான். ரோலண்டின் உள் மனதில் தாய் மீதான ஒர் வெறுப்பு எழுகிறது. தாய் அவனிடம் அன்பும் அக்கறையுமாக கேட்ட கேள்விகளிற்கு பதிலளித்து விட்டு அவ்வறையை விட்டு நீங்குகிறான் அவன். ரோலண்டிடம் மன்னிப்பு கேட்க விரும்பும் தாயை அடிக்க ஆரம்பிக்கிறான் மார்ட்டென்.
மார்ட்டென் மீதுள்ள வன்மம், தாய் மேல் கொண்ட வெறுப்பு ஆகியவையால் உந்தப்பட்ட நிலையில் கோர்ட்டின் வீட்டிற்கு செல்லும் ரோலண்ட், வீட்டின் கதவுகளை தன் காலால் உதைத்து உடைக்கிறான். தான் இது வரை கற்றது போதும் என கோர்ட்டிடம் கூறும் அவன், கோர்ட்டை தன்னுடன் மோதும் படி அழைப்பு விடுக்கிறான். ரோலண்ட் தனக்குரிய ஆயுதங்களை தெரிவு செய்து கொள்ளலாம் எனக் கூறும் கோர்ட், சரியாக ஒரு மணி நேரத்தில் அவனைச் சந்திப்பதாக கூறுகிறான்.
கோர்ட்டின் இல்லத்திலிருந்து ராஜாளிகளின் கூடு நோக்கி செல்கிறான் ரோலண்ட். கத்பேர்ட்டும், அலனும் அவனை தொடர்ந்து செல்கிறார்கள். ராஜாளிகளின் கூட்டை அடையும் ரோலண்ட், தன் ராஜாளியான டேவிட்டை தன் கையில் அமர்த்திக் கொண்டு நீண்ட நேரமாக உரையாடுகிறான். அவன் பேச்சை மெளனமாக கேட்கிறது விசுவாசமான அப்பறவை. ராஜளியைக் கையில் ஏந்திக்கொண்டு கோர்டை எதிர் கொள்ள கிளம்புகிறான் ரோலண்ட். உன் ஆயுதம் எங்கே, ஆயுதத்தை எடுத்துக் கொள்ள மறந்து விட்டாயா என அவனிடம் கேட்கிறான், கத்பேர்ட். என்னிடம் ஆயுதம் உண்டு என விடையளிக்கிறான் ரோலண்ட். நகரத்தின் வெளியிலிருக்கும் புல் வெளியில் கோர்ட்டை சந்திக்கிறான் ரோலண்ட். உன் ஆயுதம் என்ன என ரோலண்டிடம் கேட்கிறான் கோர்ட். தன் ராஜாளியே தன் ஆயுதம் எனக் கூறுகிறான் ரோலண்ட். கோர்ட் தன் நீண்ட கத்திக் கோலை தயார் படுத்திக் கொள்ள, மோதல் ஆரம்பமாகிறது.
கோர்ட் சகல போர் முறைகளையும் கற்றவன், தேர்ந்தவன். ஆனால் கற்றவை யாவும் புதிதான ஒன்றின் முன்பாக சில வேளைகளில் பலமிழந்து விடும் தருணங்கள் உண்டு. ராஜாளி தான் தன் ஆயுதம் என என ரோலண்ட் கூறிய போதே கோர்ட் உஷார் அடைந்திருக்க வேண்டும். மெளனமான ஒர் தோட்டாவைப் போல் கோர்ட்டை தாக்கியது ராஜாளி,அது அவன் முகங்களில் தன் கூரிய நகங்களால் கீறி ரத்தத்தை வரவழைக்க, ரோலண்டும் கோர்ட் மீது பாய்கிறான். தொடரும் உக்கிரமான மோதலில், கோர்ட்டின் காதொன்றினை பிய்த்தெடுக்கிறது ராஜாளி. ராஜாளியை தன் கரங்களினால் கிழித்துக் கொல்கிறான் கோர்ட், கோர்ட்டின் நீண்ட கத்திக் கோலின் மூலமாகவே, அவன் தோல்வியை ஒப்புக் கொள்ள வைக்கிறான் ரோலண்ட்.
கோர்ட்டினை வீழ்த்தியதன் மூலம் ரோலண்ட்டிற்கு துப்பாக்கி வீரன் தகுதி கிடைக்கிறது. காயமடைந்து கிடக்கும் கோர்ட்டின் மருத்துவ சிகிச்சைகளிற்கு தேவையான ஏற்பாடுகளை செய்கிறான் ரோலண்ட். பின் தன் வீடு திரும்பும் அவன் தங்கள் பரம்பரையின் ஆயுதக்கிடங்கினுள் நுழைகிறான். தன் தந்தையின் சந்தன மரப் பிடி கொண்ட துப்பாக்கியை மெதுவாக தடவிப் பார்க்கும் ரோலண்ட் பின் தனக்கென சில துப்பாக்கிகளை எடுத்துக் கொள்கிறான். ஆயுதக் கிடங்கிலிருந்து வெளியேறும் ரோலண்ட்டை துப்பாக்கிகளுடன் காணும் மார்ட்டென், அவன் துப்பாக்கி வீரனாகி விட்டதை தெரிந்து கொள்கிறான். அவன் மனதில் சிறிய பயமும், ஆச்சர்யமும் ஒருங்கே எழுகின்றன. வீட்டிலிருந்து கிளம்பிச் செல்லும் ரோலண்ட், தன் நண்பனின் உதவியுடன் புதைகுழி ஒன்றில் தன் ராஜாளியைப் புதைக்கிறான். வரும் வருடங்களில் இதே நாளில் தன் ராஜாளியின் நினைவாக அவன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிப்பான். அது அவன் தன் நண்பனான ராஜாளிக்கு தந்த கடைசி வாக்கு.
நகர் நோக்கி திரும்பும் ரோலண்ட் வெற்றி இரவைக் கொண்டாட விலை மாதரை தேடிச் செல்கிறான். பெண் உடல் ரகசியங்கள், அவள் தரக் கூடிய இன்பத்தின் ஒர் சிறிய பகுதியினை அனுபவித்து விட்டு, ஒர் பெண்ணுடன் நிம்மதியாக உறங்கிப் போகிறான். உறக்கத்தின் மத்தியில் அறையின் கதவு திறக்கும் சத்தம் கேட்டு விழிப்படைந்து விடும் ரோலண்ட் வேகமாக தன் துப்பாக்கியை கைகளில் எடுக்கிறான். கதவருகில் நிற்கும் உயர்ந்த உருவத்தை குறி பார்த்த தருணத்திலேயே அவன் துப்பாக்கி அவன் கைகளில் சிதறுகிறது. உன் தகப்பனின் முகம் உனக்கு மறந்து விட்டதா என வினவிய படியே ரோலண்ட்டை நெருங்கும் அவன் தந்தை ஸ்டிவன், ரோலண்ட் முட்டாள் தனமாக நடந்து கொள்வதாக கடிந்து கொள்கிறான். ரோலண்டின் ஆத்திரத்தை சாந்தப்படுத்தும் ஸ்டிவன், அவனிடம் சில விடயங்களை விளக்க ஆரம்பிக்கிறான்.
விஷப் பொருட்களினாலும், அகோரமான மனிதக் கருப் பிண்டங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட தன் அறையில் இருந்து, ஒர் தீய சக்தியுடன் தொடர்பு கொள்கிறான் மார்ட்டென். அந்த தீய சக்தி வேறு யாருமல்ல சிலந்திகளின் ஆண்டகை எனப்படும் செவ்வேந்தன் [Crimson King]. அவனை சுற்றி சுழல்கின்றன ஆறு தரிசனக் கோளங்கள். அதில் அவனிற்கு அருகில் எப்போதும் காணப்படும் கரிய நிறக் கோளத்தில் மார்ட்டெனின் முகம் தெரிகிறது. ஸ்டிவன் நகரிற்கு திரும்பி விட்டதையும், துப்பாக்கி வீரர்களையும், பிரபுக்களின் கூட்டணியையும் ஒழிக்கும் திட்டம் தயார் நிலையில் உள்ளதையும், ரோஜா வண்ணத் தரிசனக் கோள் செவ்வேந்தனின் விருப்பத்திற்கிணங்க உரிய நபரிடம் சேர்பிக்கப் பட்டு விட்டதையும் மார்ட்டென் செவ்வேந்தனிடம் தெரிவிக்கிறான். ரோலண்ட் பற்றி கூறப்பட்டுள்ள தீர்க்க தரிசனம் நிறைவேறாத படிக்கு செய்ய வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் கையாளும் படி மார்ட்டெனை மிரட்டி விட்டு மறைகிறான் செவ்வேந்தன். இவ்வேளையில் ஸ்டிவனின் வேண்டுதலை முன்னிட்டு மார்டெனின் துரோகத்திற்காக அவனைக் கைது செய்ய வரும் அதிகாரிகளை தன் மந்திர சக்தியால் நாய்களாக உருமாற்றி விட்டு, கற்பாறை ஒன்றில் மாயக் கதவு ஒன்றினை உருவாக்கி அதன் வழியே தப்பிச் சென்று விடுகிறான் மார்ட்டென்.
ஹாம்ப்ரே எனும் நகரத்திற்கு, ரோலண்ட், கத்பேர்ட், அலன் ஆகிய மூவரையும் போலி அடையாள அட்டை, பொய்ப் பெயர் சகிதமாக பிரபுக்களின் கூட்டணிக்கு குதிரை வாங்குபவர்கள் போல் அனுப்பி வைக்க தயாராகிறான் ஸ்டிவன். கூட்டணியின் எதிரியான ஃபார்சனுடன் அந்நகரத்தின் அதிகார அமைப்பு இணைந்து செயற்படுகிறதா என்பதனை ஒற்றறிதலே இப் பயணத்தின் உண்மையான நோக்கம். டெல்காடோ எனும் பெயர் கொண்ட குதிரை வளர்ப்பவனை அணுகும் இளைஞர்கள், அவன் ஃபார்சனிற்காக பெட்ரோல் சுத்திகரிப்பு செய்கிறானா என்பதனையும் வேவு பார்த்தல் வேண்டும். ஃபார்சன் பெட்ரோலைப் பயன்படுத்தி முன்னோரின் ஆயுதங்களை பயன் படுத்த முயற்சித்தால், அப் பெட்ரோலியக் கிணறுகள் அழிக்கப் பட வேண்டும் எனவும் அவர்களிற்கு அறிவுறுத்தல் வழங்கப் படுகிறது. தகவல்களை பரிமாறிக் கொள்ள புறாக்கள் பயன்படும் எனவும் தெரிவிக்கப் படுகிறது. பல ஆபத்தான சுழல்கள் நிறைந்த அப் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள் இளைஞர்கள்....
கூஸ் எனும் பகுதியில் இருக்கும் சூன்யக்கார கிழவியிடம் செவ்வேந்தனின் ரோஜா வண்ணக் கோளம் ஏன் வந்து சேர்ந்தது?
ஹாம்ப்ரே நகர மேயர் தொரினின் ஆசை நாயகியான சூசானிற்கும், ரோலண்டிற்கும் இடையில் அரும்பு விட்ட காதலின் நிலை என்ன?
சவப் பெட்டி வேட்டையர்கள் என தம்மை அழைத்துக் கொள்ளும், ஹாம்ப்ரே நகர ஷெரீப்களான ஜோனாஸ், டுபாப், ரெனோல்ட்ஸ், இவர்களிற்கும், அழிவையே தன் உயிர் மூச்சாக கொண்ட கூட்டணியின் எதிரியான ஃபார்சனிற்கும் இடையில் உள்ள தொடர்பு என்ன? நகரத்தில் இவர்களுடன் உரசிக் கொண்டு விட்ட இளைஞர்களின் கதி என்ன?
ஃபார்சனை சென்றடையும் மார்டெனின் புதிய திட்டங்கள் என்ன?
இக் கேள்விகளை எல்லாம் வாசகர் மனதில் எழுப்பி நிறைவடைகிறது The Gunslinger born எனும் தொடரின் முதல் நான்கு அத்தியாயங்களை உள்ளடக்கிய தொகுப்பு. கதை, திகில் கதை மன்னனின் கதை. அவர் உருவாக்கிய ஒர் கற்பனை உலகு. அங்கு நிகழும் சம்பவங்களை தொய்வே ஏற்படாத வண்ணம் கொண்டு சென்றுள்ளார் காமிக்ஸின் கதை ஆசிரியர். கதை ஒர் புறமிருக்க, அக் கற்பனை உலகிற்கு உயிர் தந்து வாழ விட்டிருப்பவர்கள் ஓவியர்கள். ஒவ்வொரு பக்கமும் அற்புதமாக இருக்கிறது. சித்திரங்களை மீண்டும், மீண்டும் பார்க்க வைக்கும் அளவிற்கு சிறப்பாக அமைந்துள்ளன ஒவியங்கள். ராஜாளி வேட்டை, கோர்டுடனான மோதல், கூஸ் சூன்யக்காரியின் பிரதேசம், ரோலண்ட், சூசான் ஆகியோரின் முதல் சந்திப்பு என சொல்லிக் கொண்டே போகலாம்.
இத்தொகுப்பை முதலில் பத்து பக்கங்கள் படிக்கலாம் எனத்தான் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் ஒரே வீச்சில் ஆல்பத்தினை படித்து முடித்தேன், ஆல்பம் என்னை மயக்கி விட்டது.
பிரபல திகில் நாவலாசிரியர் ஸ்டிஃபன் கிங்கின் The Dark Tower எனும் நாவல் தொடரினைத் தழுவி இக்காமிக்ஸ் கதை உருவாக்கப் பட்டுள்ளது. கிங் இக் காமிக்ஸ் தொடரின் படைப்பாக்க மற்றும் நிர்வாக இயக்குனராக செயற்படுகிறார்.
ஐந்து பாகங்களையும் மொத்தமாக 31 அத்தியாயங்களையும் கொண்டது இக் காமிக்ஸ் தொடர். ஆங்கில மொழியில் இதன் முதல் அத்தியாயம் பிப்ரவரி 7, 2007ல் நள்ளிரவு வெளியீடாக வெளி வந்தது. பிரென்ஞ்சு மொழியில் ஃப்யூசன்காமிக்ஸ் இத்தொடரை சிறப்பாக வெளியிடுகிறது.
கதையின் திட்ட அமைப்பை Robin Furth அமைக்க Peter David கதாசிரியராகச் செயல் படுகிறார். ஆளை அசத்தி அடிக்கும் ஒவியங்களிற்கு சொந்தக்காரர்கள், Jae Lee மற்றும் Richard Isonove ஆவார்கள். தொகுப்பின் பின் இணைப்பாக சில அத்தியாயங்கள் கதைக் களத்தினை மேலும் தெளிவாக்குகின்றன. இக்காமிக்ஸ் தொடரைக் கையில் எடுத்தால் அதை உடனே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என தோன்றும் சபலத்திலிருந்து பூங்காவனம் எங்களை காப்பாற்றட்டும்.
ஆல்பத்தின் தரம் *****
நண்பர்களே பதிவைக் குறித்த மேலான உங்கள் கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லும்படி வேண்டுகிறேன்.
ஆர்வலர்களிற்கு
நண்பரே,
ReplyDeleteஇந்த தொடர் நாவலாக வெளிவந்து கொண்டிருந்தபோது மரணப்படுக்கையில் இருந்த ஒரு பெண் இந்நாவலாசிரியரை இத்தொடர் எப்படி முடியும் என தன் கடைசி ஆசையாக கேட்டதற்கு ஸ்டீபவன் கிங் தனக்கும் தெரியவில்லை என பதிலளித்ததாக படித்திருக்கிறேன்.
அமெரிக்காவில் அவ்வளவு பிரபலமான தொடர். சித்திரத் தொடராகவும் வந்து பிரபலமாகி இருக்கிற்தென்றால் சித்திரக் காரர்களை பாராட்ட வேண்டியதுதான். ஸ்டீபன் கிங் வர்ணிக்க ஆரம்பித்தால் ஏகப்பட்ட பக்கங்களை அதற்கென ஒதுக்கி விடுவார். அதையெல்லாம் கிரகித்துக் கொண்டு சித்திரங்கள் தீட்ட வேண்டுமானால் மேதையாக தான் இருக்க வேண்டும்.
போதாக்குறைக்கு நீங்களும் 4 ஸ்டார்கள் கொடுத்திருக்கிறீர்கள். உங்களிடம் அதிக ஸ்டார்கள் வாங்கிய ஆல்பம் இதுவரையில் எது என்பதை பகிர்ந்து கொள்ள முடியுமா?
இந்நாவலின் ஆரம்ப வரிகளை மட்டும் முதலில் எழுதிய ஆசிரியர். அதன் பின் கதை தன்னால் வர ஆரம்பித்தது என்கிறார். நல்ல அருமையான வரிகளும் கூட.
இவர் ரிட்டயர்மென்ட் வாங்கிக் கொண்டு போனாற்போல் இருக்கிறது. ஹாலிவூட்டை கலக்கிய ஹாரர் படங்களில் இவரின் படங்களுக்கும் கண்டிப்பாக ஒரு இடம் உண்டு.
எனக்கு பிடித்த ஹாரர் படமென்றால் அது The Exorcist தான். கதையும் சரி, படமும் சரி அட்டகாசமாக இருக்கும்.
நல்ல தொடரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள்.
காதலரே, அருமையான பதிவு. ஸ்டீபன் கிங்கின் டார்க் டவரை அடிப்படையாக கொண்டு ஒரு காமிக்ஸ் தொடரே வெளியிட்டிருக்கிறார்கள் என்று இப்போது தான் அறிந்தேன்.
ReplyDeleteஇந்த நாவலை இது வரை படித்தது இல்லை (வழக்கமான காரணம் தான்), ஆனால் சித்திர வடிவில் இப்போது அது வெளியாகி இருப்பதால் தாரளமாக படிக்கலாம். மார்வல் பதிப்பாளர்கள் சில சமயம் இப்படி அரிய காரியமும் செய்வார்கள்.
உங்களிடம் கூறியிருந்த படி வேதாளர் பற்றிய பதிவில் இன்னும் வேலை பாக்கியியுள்ளது. உங்கள் பதிவை படித்த குஷியில், தமிழ் புத்தாண்டான (கலைஞர் மன்னிக்கவும்) இன்று விடுமுறை எடுத்தாவது அந்த பதிவை முடிக்க எண்ணி உள்ளேன். பார்க்கலாம். பதிவை முடித்து விட்டு பிறகு வந்து ஆர அமர உங்கள் பதிவை மீண்டும் ஒரு முறை படிக்கிறேன். முக்கியமாக அந்த சித்திரங்களுக்காக.
கூடவே காதலரிடம் 4 நட்சத்திர தேர்வு பட்ட சித்திர தொடர் ஆயிற்றே.... மீண்டும் வருவேன்.
ஜோஸ், முதன்மைக் கருத்துக்களிற்கு முதலில் என் நன்றிகள்.
ReplyDeleteஉங்கள் கூற்று உண்மையே, கிங்கின் கற்பனை உலகினை பக்கங்களில் தவழவிட்டிருக்கிறார்கள் சித்திரக்காரர்கள், கையில் புத்தகம் ஒர் பரவசமாக புரள்கிறது.
ஸ்டிபன் கிங்,DUMA KEY எனும் நாவலை வெளியிட்டிருக்கிறார். தொடர்ந்தும் இயங்கி கொண்டிருக்கிறார். TWILIGHT எல்லாம் ஒர் கதையா எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
EXORCIST, நாவலும் சரி திரைப்படமும் சரி எனக்கு மிகவும் பிடித்தவை. குருவானவர்க்கும், துஷ்ட ஆவிக்குமான நேருக்கு நேர் தருணங்கள் சிறப்பாக இருக்கும். THE HOWLING எனும் நாவலும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவை நான் ஸ்டிபன் கிங்கின் நாவல்கள் அறிமுகமாகும் முன் படித்தவை.
உப்புக்கடல் பாடல், வாட்ச்மென்,ஃப்ரம் ஹெல் ஆகிய ஆல்பங்கள் நல்ல வாசிப்பு அனுபவத்தை தருபவை என்பதால் அக் கதைகள் எனக்குப் பிடிக்கும். இருள் கோபுரத்தின் சித்திரங்கள் என்னை நன்கு கவர்ந்தவையாக உள்ளன. இதை தவிர வேதாள நகரம், நியாயப் படை என்பனவும் நான் விரும்பி வாசிப்பவை ஆகும்.
ரஃபிக், இன்று விடுமுறை தினமில்லையா. உங்கள் பதிவை முடித்துக் கொண்ட்டு வாருங்கள். வேதாளரின் பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன். நீங்கள் கூறியது போல் மார்வல் மேல் ஒர் கண் வைத்திருப்பது நல்லதே. கருத்துக்களிற்கு நன்றி.
கனவுகளின் காதலனே,
ReplyDeleteஅருமையான பதிவு. தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் பதிவாக இது உண்மையில் எங்களுக்கு ஒரு பரிசு தான்.
//ரோலண்டின் கையில் இருந்த டேவிட் எனும் பெயர் கொண்ட ராஜாளி// இதனை படிக்கும் போது ராணி காமிக்ஸ் இதழில் வந்த ராஜாளி ராஜ என்ற ஜேம்ஸ் பாந்து காமிக்ஸ் வில்லன் தான் நினைவுக்கு வந்தார். அந்தக் கதையை நீங்கள் படித்து உள்ளீர்களா? அருமையாக இருக்கும்.
அந்தக் கதையின் முதல் காட்சி வயகரா தாத்தாவை மிகவும் கவரும் என்பதில் ஐய்யமில்லை.
இந்தக் கதையில் வரும் சித்திரங்கள் அருமையாக, கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி உள்ளன.
//இக்காமிக்ஸ் தொடரைக் கையில் எடுத்தால் அதை உடனே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என தோன்றும் சபலத்திலிருந்து பூங்காவனம் எங்களை காப்பாற்றட்டும்// இவை வயகரா தாத்தாவின் வரிகள் போல உள்ளதே?
நீங்கள் ரேடிங் நான்கு என்று அளிக்கும்போதே அதனை படிக்கும் ஆர்வத்தை தூண்டி விட்டீர்கள்.
ஏற்கனவே உப்புக் கடல் பாடலை இணையத்தில் இறக்கம் செய்து படித்து விட்டேன்.
இப்போது இந்த கதையையும் தேட வேண்டும்.
பதிவுக்கு நன்றி.
பின் குறிப்பு: விஸ்வா'வின் வயதை கண்டறிய நான் உங்களுக்கு மெயில் அனுப்பி விட்டேன். பதில் அனுப்புங்கள்.
நண்பர் ரஃபிக் ராஜா,
ReplyDeleteஇப்போதுதான் உங்கள் பின்னுட்டத்தை படித்தேன். வேதாளர் பற்றிய தொலைக் காட்சி தொடரை பற்றியும் ஆரம்ப கால வேதாளர் தொடரையும் பற்றி ஒரு பதிவு இட்டுள்ளேன்.
எனினும், அந்த பதிவுகள் தமிழ், இந்திய வேதாளர் பற்றியும், எனக்கு தெரிந்த கதைகளை பற்றியும் மட்டுமே எழுதி உள்ளேன்.
உங்கள் பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.
கனவுகளின் காதலனுக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதை நடையையும் எழுத்து நடையையும் சேர்த்து நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவும் அற்புதம். நீங்கள் என்ன தொழில்முறை எழுத்தாளரா?
ஸ்டீபன் கிங் எழுத்துக்களை படமாகவே பல இயக்குனர்கள் சிரமப் பட்டனர். விசூவல் மீடியாவில் முடியாத ஒன்றை காமிக்ஸ் மீடியாவில் செய்து இருக்கிறார்கள் என்றால் (உங்கள் விமர்சனப் படி) இது ஒரு அட்டகாசமான புத்தகமாகத்தான் இருக்க வேண்டும்.
//பெண் உடல் ரகசியங்கள், அவள் தரக் கூடிய இன்பத்தின் ஒர் சிறிய பகுதியினை அனுபவித்து விட்டு// கவிதை கவிதை.
நீங்கள் எடுத்து கையாண்டிருக்கும் படங்கள் அருமை.
சூசனின் உடம்பில் அந்த பாம்பு தேவை இல்லாத இடங்களை காட்டியும், தேவை உள்ள இடங்களை மறைப்பதாகவும் வயகரா தாத்தா கூறினார்.
தொடருங்கள்.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
//விடுதலையின் காற்றை சுவாசிக்க வேகமாக மேலே பறக்கின்றன வெண்புறாக்கள்- மரணம் கூட சில சமயங்களில் விடுதலையே-.//
ReplyDeleteஎன்ன ஒரு அற்புதமான வரிகள்.
நோட் பண்ணுங்கப்பா, நோட் பண்ணுங்கப்பா.
புலா சுலாகி,
கவலைக்கேது நேரம், குறுகிய வாழ்வில்.
காமிக்ஸ் பிரியரே, பாண்டின் ராஜாளி கதை ஞாபகத்தில் சிறிதே இருக்கிறது. வயக்கரா தாத்தா ஜேம்ஸ் பாண்ட் கதைகள் என்றால் 4 இதழ்கள் வாங்குவார் அவ்வளவு காமிக்ஸ் பற்று.
ReplyDeleteஉப்புக்கடல் பாடலை நீங்கள் படித்தது எனக்கு மிகவும் மகிழ்சியை தருகிறது. உங்களிற்கு அக்கதை பிடித்திருந்ததா. பிராட்டின் அக்கதை எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. கருத்துக்களிற்கு நன்றி. விஸ்வாவின் வயதைப் பற்றிய மெயில் அனுப்பி விட்டேன். திருப்தி தானே.
நண்பர் புலா சுலாகி,பதிவை மிகவும் ரசித்துப் படித்திருக்கிறீர்கள், பதிவை எழுதிய எனக்கு இதை விட பெரிய பரிசு கிடையாது. நன்றி.
நான் எழுத்தாளனில்லை. ஆனால் நீங்கள் காமிக்ஸ் கடந்தும் புத்தகங்களை வாசிக்கிறீர்கள் என்றே எண்ணுகிறேன், அது மிகவும் நல்ல விடயம். நீங்களும் உங்கள் பதிவில் எழுத தயங்கக் கூடாது.
வயக்கரா தாத்தா போன் போட்டு நான் தான் பாம்பு போலிருக்கும் கிளையை அப் படத்தில் சேர்த்திருக்கிறேன் என்றும், இது அந்த ஓவியரின் கலைப் படைப்பின் மேல் என் காட்டு மிராண்டித்தனமான அத்து மீறல் என்றும் சீறி விட்டுப் போனார். என்ன செய்யப் போகிறாரோ. கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.
விஸ்வாவின் வயதைப் பற்றிய மெயில் வந்து விட்டது. நன்றி.
ReplyDeleteஉண்மையை தெரிந்து கொண்டேன்.
இன்று நிம்மதியாக உறங்குவேன்.
அன்பிற்கினிய கனவுகளின் காதலனே,
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் அன்பின் துணைவி அவர்களுக்கும் எனது (தாமதமான) தமிழ் புத்தாண்டு நலவாழ்த்துக்கள்.
நேற்று முழுதும் கோவில்களுக்கு செல்வதிலும், வந்த விருந்தினர்களை உபசரிப்பதிலும் சரியாக கழிந்ததால் உங்கள் மற்றும் பலரின் பதிவில் காலடி பதிக்க முடியவில்லை. தவறாக இருப்பின் குட்டவும்.
ஸ்டீபன் கிங் எனக்கு பிடித்த கதாசிரியர்களில் ஒருவர். என்னுடைய பிறந்த நாளில் அவரின் கதையை பதிவிட்டமைக்கு நன்றி.
//மன்மதனின் குளோனுமான கிங் விஸ்வா தன் பிறந்த நாளை சிட்டுக்கள், நிலவுகள் சகிதம் வெகு விமர்சையாக கொண்டாடுகிறார்// இப்படியும் நடந்து இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஹ்ம்ம். என்ன செய்வது? நாந்து வைத்தது அவ்வளவு தான். அட்லீஸ்ட், பதிவுலகிலாவது இப்படி எல்லாம் நடக்குது என்று சந்தோஷப் பட்டு கொள்ள வேண்டியது தான்.
//வயதை அறிய விரும்பியவர்கள் என்னை மெயில் மூலம் தொடர்பு கொள்ளுங்கள்// ஏன் இந்த கொலை வெறி? ஏற்கனவே காமிக்ஸ் டாக்டர் என்னுடைய வயதை பற்றி கவிதை மூலம் தெரிவித்து விட்டார் என்றால் நீங்கள் இப்படி.
//மேற்கூறிய பதிவுகள் யாவும் புத்தாண்டு சிறப்பு பதிவுகளால் பின் தள்ளப்படக்கூடிய வாய்புகள் பெருமளவு உண்டு// நடந்து விட்டது.
//வறண்ட, கண்களைக் கூசச் செய்யும், வெண்மனற் கடலாக விரியும் ஒர் பாலைவனத்தில், கரிய ஆடை அணிந்த தன் எதிரி ஒருவனைத் துரத்திச் செல்லும் இத்துப்பாக்கி வீரனின் தேடலின் கதை// டிரேட் மார்க் ஸ்டீபன் கிங் தனம். உங்கள் கவிதை வார்த்தைகளில் மின்னுகிறது.
//தனக்குச் சேர வேண்டியது தன்னை வந்தடையும் எனக் காத்திருப்பது முட்டாள்களின் நம்பிக்கை// வாழ்வியல் தத்துவம். சஞ்சய் தத் "கல் நாயக்" என்னும் படத்தில் இப்படி கூறுவர் ஒரு பாடலில் "எனக்கு என்ன தேவையோ அதனை வாழ்க்கை தரவில்லை. அதனால் எனக்கு தேவையானதை நான் பறித்து கொண்டேன்".
//விடுதலையின் காற்றை சுவாசிக்க வேகமாக மேலே பறக்கின்றன வெண்புறாக்கள்- மரணம் கூட சில சமயங்களில் விடுதலையே// உண்மை. இதைப் பற்றி ஹாலிவுட் இயக்குனர் Gus Van Sant தன்னுடைய Death Trilogy பட வரிசையில் கூறி இருப்பார். அதே கருத்துக்கள். How true?
//கழுத்தில் ரத்தம் உறிஞ்சப்பட்டதால் ஏற்பட்டுள்ள தழும்புகளை// வேம்பயர்? Summon Blade.
//கோர்ட் சகல போர் முறைகளையும் கற்றவன், தேர்ந்தவன். ஆனால் கற்றவை யாவும் புதிதான ஒன்றின் முன்பாக சில வேளைகளில் பலமிழந்து விடும் தருணங்கள் உண்டு// Shades of சாணக்கியர்? இந்த வசனங்கள் எனக்கு அர்த்த சாஸ்திரத்தை நினைவு படுத்துகிறது. தொலைக் காட்சியில் தொண்ணுறுகளில் வந்த சாணக்கியர் தொடரில் இப்படி வரும்.
//புதைகுழி ஒன்றில் தன் ராஜாளியைப் புதைக்கிறான். வரும் வருடங்களில் இதே நாளில் தன் ராஜாளியின் நினைவாக அவன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு வணக்கம் தெரிவிப்பான். அது அவன் தன் நண்பனான ராஜாளிக்கு தந்த கடைசி வாக்கு// அற்புதம். வளர்ப்பு பிராணிகளுடன் மற்றும் பறவைகளுடன் நட்பு பாராட்டும் கதை நாயகர்கள் இப்படி செய்ய தவறுவதே இல்லை.
Kevin Costner தான் முதன்முதலாக இயக்கிய Dances With Wolves படத்தில் அந்த நரி இறக்கும்போது அவரின் ரியாக்ஷன் அருமையாக இருக்கும். எனக்கு பிடித்த காட்சிகளில் இதுவும் ஒன்று. பார்த்து இருக்கிறீர்களா? இல்லையெனில் பாருங்கள்.
//பெண் உடல் ரகசியங்கள், அவள் தரக் கூடிய இன்பத்தின் ஒர் சிறிய பகுதியினை அனுபவித்து விட்டு// என்னைப் போல குழந்தைகள் படிக்கும் தளத்தில் இப்படியா எழுதுவது? இதனை நீங்கள் வயகரா தாத்தா மிரட்டி எழுத வைத்ததாக தகவல். உண்மையா?
//டெல்காடோ// ராணி காமிக்ஸ்'ல் வந்த மறக்க முடியாத பெயர்.
//இத்தொகுப்பை முதலில் பத்து பக்கங்கள் படிக்கலாம் எனத்தான் படிக்க ஆரம்பித்தேன் ஆனால் ஒரே வீச்சில் ஆல்பத்தினை படித்து முடித்தேன், ஆல்பம் என்னை மயக்கி விட்டது// இயக்குனர் Mysskin அவர்கள் என்னிடம் இந்தக் கதையை பற்றி ரசித்து, சிலாகித்து கூறி இருப்பார். அவருக்கு பிடித்த மற்றுமொரு காமிக்ஸ் புத்தா. (மங்கா).
//ஆங்கில மொழியில் இதன் முதல் அத்தியாயம் பிப்ரவரி 7, 2007ல் நள்ளிரவு வெளியீடாக வெளி வந்தது// அப்போது மக்கள் கூட்டமாக நின்று ஆடோகிராப் வாங்கியதையும் மறவாதீர்.
அற்புதமான பதிவு. தொடருங்கள்.
கிங் விஸ்வா.
தமிழ் காமிக்ஸ் உலகம்
கனவுகளின் காதலனே,
ReplyDeleteஇந்த தொடர் ஆங்கிலத்தில் வந்து உள்ளதா?
இதனை இணையத்தில் டவுன்லோட் செய்ய இயலுமா?
லிங்க் தருவீர்களா?
மற்றபடி பதிவு அருமை.
நண்பர்கள் அனைவரும் ஏற்கனவே சில சிறந்த காட்சிகளை கோட் செய்து விட்டதால் நான் அவர்களை வழிமொழிகிறேன்.
அருமையான பதிவு. தொடருங்கள்.
நீங்கள் எழுதும் ஒவ்வொரு பதிவும் சூப்பர். ஆனால் அந்த லக்கி லுக் தொடர் வராததில் மன வருத்தம்.
காதலரே, வாக்களித்தபடி மீண்டும் வந்து விட்டேன். இனி பதிவை பார்ப்போம்
ReplyDelete// வாழ்க்கையில் சில வேளைகளில் அதிர்ஷ்டம் தானாகவே வந்து உங்கள் முதுகில் அமர்ந்து விடுவதுண்டு. //
அடடா நினைத்து பார்க்கவே ஆனந்தமாக இருக்கிறதே. ஆனால் நமக்கு எப்பவும் விக்ரமாதித்தின் முதுகில் வந்து உட்கார்ந்து கொள்ளும் வேதாளர் நியாபகம் தான் வருகிறது :)
ஆரம்ப காட்சிகளில் ராஜாளிகள் புறாக்களை வேட்டையாடும் அந்த கட்டங்கள் திக் திக் ரகம். சிறு வயதில் வானத்தில் புறாக்கள் பறக்கும் போது சில நேரம் ராஜாளிகள் அவற்றை வேட்டையாடுவதை கண்டுள்ளேன். இறைவன் இட்ட உணவு சங்கிலி மூலமே அவைகள் தங்கள் இரைகளை தேடி கொண்டாலும், கீழே இருந்து கொண்டு நம்மால் அதை தடுக்க எதுவும் செய்ய முடிவதில்லையே என்று பச்சாதாபம் ஒரு பக்கம் இழையொடுகிறது.
ராஜாளி கதைகளை பற்றி படிக்கும் போது ராணி காமிக்ஸில் வெளி வந்த ராஜாளி ராஜா ஜேம்ஸ் பாண்ட் கதையும், பிறகு லயன் காமிக்ஸில் மாடஸ்தி ஒரு ராஜாளி மூலம் மலை முகட்டை அடைய முயற்சிக்கும் ஒரு கதையே (கழுகு மலை கோட்டை ??) நியாபகம் வருகிறது. அவற்றில் பல காட்சிகள் இன்றும் மனதில் பசுமையாக இருக்கிறது.
// வெண்மனற் கடலாக விரியும் ஒர் பாலைவனத்தில் //
சமீபத்தில் முதலை பட்டாளத்தார் கர்ஜிக்கும் பாலைவணம் என்று பதிந்தார்... இப்போது அதற்கு இன்னொரு அடைமொழியை கூறியிருக்கிறீர்கள்
// மரணம் கூட சில சமயங்களில் விடுதலையே //
ஆழமான அர்த்தம் பொறிந்த வரி.... மரணத்தின் வாயிலில் இருக்கும் முதியவர்கள், அல்ல மரணக் காயம் அடைந்தோர் பிரார்த்திக்கும் வார்த்தைகள் என்று எங்கோ படித்த நியாபகம்
ராஜாளியை கோர்டன் பிய்த்து எறியும் அந்த காட்சிகளில் தான் எத்தனை வன்மை.... அவன் ஆயுதத்தை வைத்து அவனையே மடக்கும் காட்சி அருமை.
// பெண் உடல் ரகசியங்கள், அவள் தரக் கூடிய இன்பத்தின் ஒர் சிறிய பகுதியினை அனுபவித்து விட்டு,//
இந்த வார்த்தைகளை ஆங்கிலத்தில் விவரிக்க முடியுமா...சந்தேகமே. தமிழுக்கே உண்டான தனி சிறப்பு.. காதலர் உங்கள் "துறை" சம்பந்தபட்ட விஷயங்களில் புகுந்து விளையாட மறப்பதில்லை
//இக்காமிக்ஸ் தொடரைக் கையில் எடுத்தால் அதை உடனே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என தோன்றும் சபலத்திலிருந்து பூங்காவனம் எங்களை காப்பாற்றட்டும்//
ஏற்கனவே போன வருடம் மொத்தக்கும் காமிக்ஸ் மீது செலவிட்ட பணத்தை இந்த வருடம் ஆரம்பித்து நான்கு மாதங்களிலேயே தாண்டி போயிற்றே என்று உள்மனம் காலி பர்சு ரூபத்தில் சிரிக்கிறது. இதில் இது வேறா... கொஞ்ச நாள் புத்தக கடை பக்கம் போவதில் இருந்து எனக்கு நானே தடா போட்டு கொண்டுள்ளேன். :)
காமடிகள் ஒரு பக்கம் இருக்க, உண்மையில் ஓவியங்கள் எல்லாம் டாப் டக்கர் ரகம். மார்வல், டிசி போன்ற பெரிய காமிக்ஸ் ஸ்தாபனங்கள் தங்களிடம் உள்ள அற்புத ஓவியர்களின் கலையை ஏற்கனவே படித்து படித்து அழுத்து போன சூப்பர் ஹீரோக்களை பற்றிய வட்டம் அடித்து, அவர்களின் உழைப்பை வீணடிக்கிறார்கள், என்ற கோபம் என்னிடம் எப்போதும் உண்டு. சில சமயங்களில் அவர்கள் இப்படி புகழ்பெற்ற நாவல்களை சித்திரங்களில் வடிக்க முயன்று வெல்லும் போது, என்னில் உள்ள அந்த சித்திர ரசிகன் துள்ளி குதிப்பதை என்னால் உணர முடிகிறது.
ஒரு அற்புத மார்வல் நாவலை இதன் மூலம் அறிமுகம் செய்து வைத்தற்கு நன்றிகள். இப்போதைக்கு இந்தியாவில் இவை கிடைப்பது அரிது என்பதால், ஆன்லைனில் தருவித்து படித்து பார்த்து கொள்ள முயற்சிக்கிறேன்.
இது வரை அலேக்ஸான்டர் கண் காமிராவுடன் படம் எடுத்து திரிந்த காதலர், இப்போது நவீன பானியில் பிரதி எடுத்து படங்கள் தந்து கலக்கியுள்ளார். அதுவும் வண்ணங்களும், சிறந்த ஓவியங்களும் அடங்கிய இந்த ஆல்பத்தில் அந்த முயற்சியை ஆரம்பித்து இருப்பது என்ன ஒரு சரியான தேர்வு. நான் முன்பு கூறியது போல படங்களை எழுத்துகளுடன் அங்கு அங்கு தெளித்து என்னை பிரமிக்க வைத்து விட்டீர்கள். உங்கள் பதிவு இனி ஏ ரகம் தான். ரேட்டிங்கில் மட்டுமே, அந்த விஷயத்தில் அல்ல....:)
கனவுகள் காதலர், நவஜோ மதகுரு மற்றும் இதர காமிக்ஸ் காதலர்கள் அனைவருக்கும் என்னுடைய இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள். செல்வமும் செழிப்பும் பெருகி, கெட்ட எண்ணங்களும் பொறாமையும் ஒழிந்து. புதிய மனிதர்களாக உலா வருவோம், என்று இறைவனை பிரார்த்தித்து கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
ரஃபிக் ராஜாகாமிக்கியல் & ராணி காமிக்ஸ்
கனவுகளின் காதலர்,
ReplyDelete//இக்காமிக்ஸ் தொடரைக் கையில் எடுத்தால் அதை உடனே சொந்தமாக்கி கொள்ள வேண்டும் என தோன்றும் சபலத்திலிருந்து பூங்காவனம் எங்களை காப்பாற்றட்டும்//
பூங்காவனத்தை சொந்தமாக்கி கொள்ளத்துடிக்கும் சபலத்திலிருந்து என்னை யார் காப்பாற்றுவது?
கில்லாடி கிரிகிரி
விஸ்வா, வாழ்த்துக்களிற்கு முதலில் நன்றி, என்ன ஒர் ஞாபக சக்தி. ஒவ்வொரு வசனத்திற்கும் உதாரணங்களை அள்ளி வீசியிருக்கிறீர்கள். சாணக்கியன், GUS VAN SANT,மிஷ்கின் என்று ஆச்சர்யப் படுத்துகிறீர்கள்.
ReplyDeleteராஜாளிக்கு, ரோலண்டின் வணக்கம் நல்ல ஒர் தருணம். எனக்கு அக்கட்டம் மிகவும் பிடித்திருந்தது.
கெவின் காஸ்டன்ரின் அத்திரைப் படத்தினை பார்த்திருக்கிறேன், அது அவரின் சிறந்த படங்களில் ஒன்று. போஸ்ட்மேன், வாட்டர் வர்ல்ட், என பின்பு அவர் நடித்த படங்கள் அவரை கீழே கொண்டு சென்றது கொடுமை.
வயக்கரா தாத்தா துப்பாக்கி முனையில் என்னை மிரட்டி எழுத வைத்த வசனம் அது. குழந்தைகள் எல்லாரும் என்னை மன்னிக்கவும்.
உங்கள் நண்பர் மிஷ்கின் இக்கதையை ரசித்திருப்பதே போதுமே கதையின் தரம் பற்றி எடுத்துரைக்க. அவர் ஏன் ஒர் தொடரோ அல்லது ஒர் புத்தகமோ எழுதக் கூடாது, இதனால் தமிழ் மக்கள் மத்தியில் காமிக்ஸ் இன்னும் பிரபலமாகுமே.
ஆட்டோகிராப் வாங்கியது உண்மையே, ரசிகர்களின் வரவேற்பு அங்கு அப்படி இருக்கிறது. தமிழ் உலகில் இது சாத்தியமாக வேண்டும் என்பதும் என் விருப்பம்.
சிட்டுக்களிற்கு விஸ்வா கூலாக ஆட்டோகிராப் போடும் காட்சி வேறு கண்ணில் தெரிகிறது.
உங்களின் மேன்மையான கருத்துக்களிற்கு நன்றி.
அன்பர் அம்மா ஆசை இரவுகள், இக்கதை ஆங்கிலத்தில் தான் முதலில் வந்தது. பதிவிலுள்ள சுட்டிகள் உங்களை சில பக்கங்களை படிக்க உதவும். டவுன்லோட் செய்யலாமா என்பது பற்றி நண்பர்கள், லக்கி லிமட், ரமேஷ் ஆகியோரே பதில் அளிக்க வேண்டும். லக்கி லூக் கதை இறுதிப் பக்கம் வரை தொடரும். உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
ரஃபிக், என் துறையில் நான் புகுந்து விளையாடுகிறேனா. எல்லாம் வயக்கரா தாத்தாவின் உபயம்.
நீங்கள் கூறியது போன்று ஒர் குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்வை தாண்ட இயலாது என்பது முற்றிலும் உண்மை. மேலும் பல தொகுப்புகள் வரும் போல் தெரிகிறது. எனவே பொறுத்திருந்து விலையில் கழிவு தரும் சந்தர்பங்களில் வாங்குவதே சிறந்தது. ஆங்கில பதிப்பு, பிரென்சுப் பதிப்பை விட 2 மடங்கு அதிகமாக விலை நிர்ணயித்துள்ளதை பார்த்தேன்.ஆங்கிலத்தில் முதல் தொகுப்பு தற்போதைக்கு தீர்ந்து விட்டது என்றே எண்ணுகிறேன்.
மார்வல் குழு ஓவியர்களின் திறமைக்கு இந்நாவல் உண்மையிலேயே ஒர் சான்று. அவர்களை இம் மாதிரியான முயற்சிகளில் மார்வல் மேலும் ஈடுபடுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். THE MOON KNIGHT எனும் தொடரின் அட்டைப் படங்கள் பிரமிக்க வைக்கின்றன.
கழுகு மலைக் கோட்டை ஒர் கிளாசிக். கதையில் ராஜாளிகள் ஒர் முக்கிய பங்கை ஆற்றும். ஆசிரியர் மனது வைத்தால் அதனை ஒர் சிறப்பு பதிப்பாக வெளியிடலாம். செய்வாரா.
சின்ன அணில் மார்க் கமெராவின் துணையுடன் தயாரிக்கப்பட்ட 2 பதிவுகள் பாக்கியுள்ளன, அதன் பின் வரும் பதிவுகள் நியாயப் படை ஸ்கேனர் துணையுடன் தயாராகும்.
மேன்மையான கருத்துக்களிற்கும், வாழ்த்துக்களிற்கும் நன்றிகள்.
கில்லாடி கிரிகிரி,நீங்களும் பூங்காவனத்தின் வலையில் சிக்கி விட்டீர்களா, தற்போது அவர் டாக்.7ன் சினேகிதி என்பதை மட்டும் அறியத் தருகிறேன். இனி உங்களை முத்தாத நகை கூட காப்பாற்ற இயலாது.
ReplyDeleteகனவுகளின் காதலரே,
ReplyDelete//அவர் ஏன் ஒர் தொடரோ அல்லது ஒர் புத்தகமோ எழுதக் கூடாது, இதனால் தமிழ் மக்கள் மத்தியில் காமிக்ஸ் இன்னும் பிரபலமாகுமே// அவருடைய அடுத்த படம் பற்றி கடைசியாக அவரிடம் பேசியபோது, அடுத்தபடம் ரிலீஸ் ஆகும்போது அதனுடன் அந்தப் படத்தின் காமிக்ஸ் புத்தகமும் வரும் என்று கூறினார்.
அவருடைய அடுத்த படம் பெயர் முகமூடி. ஹீரோ சூர்யா. இது ஒரு இந்திய சூப்பர் ஹீரோ கதை. திரு Mysskin அவர்கள் எடுப்பதால் கண்டிப்பாக உலகத்தரத்தில் இருக்கும்.Palme d'Or அவார்ட் வங்கக் கூடிய திறமை பெற்ற ஒரே இந்திய இயக்குனர் இவர் என்பது என்னுடைய கருத்து.அதற்கான கதையை ஒரு மழை நாள் இரவில் அவர் கூறியபோது மெய்சிலிர்த்துப் போனேன். அற்புதமான கதை.
அவருடைய படம் "நந்தலாலா" விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. அதனையும் மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
விஸ்வா, மிஸ்கினின் புதிய முயற்சி விரைவில் கைகூட வேண்டுமென்றே விரும்புகிறேன். இது தமிழில் ஒர் புது முயற்சி. சூர்யாவும் இணைகிறார். அந்தக் கதையை எங்களிற்கும் சொல்லக் கூடாதா. நீங்கள் பயன் படுத்தும் அந்த லத்தின் சொற்களின் அர்த்தம் நன்றாக இருக்கிறது.[ நாளை நமதாக்கு அல்லது உனதாக்கு எனச் சொல்லலாமா] சுவாரஸ்யமான தகவல்களிற்கு நன்றி. ஆனால் ஹீரோயின் யார் என்று கூறவில்லையே நீங்கள்!!
ReplyDeleteHi friend KanuvukalinKathalan,
ReplyDeleteI got download links for this comic. May I put link here?
Lovingly,
Lucky Limat
நண்பர் லிமட் என்ன தயக்கம், தயங்காது லிங்கை பதியுங்கள். நன்றி
ReplyDeleteDARK TOWER The Gunslinger Born Link
ReplyDeletehttp://rapidshare.com/files/18739330/DarkTower.rar
Lovingly,
Lucky Limat