Thursday, March 26, 2009

தேளினும் இனியவன்

வணக்கம் அன்பு நண்பர்களே, கடந்த பதிவுகளிற்கு நீங்கள் தந்த அன்பான ஆதரவிற்கு நன்றி. பதிவுகள் பற்றிய உங்கள் மேலான கருத்துக்களிற்கான என் பதில் கருத்துக்களை நீங்கள் அப்பதிவுகளின் கருத்துப்பெட்டிகளில் காணலாம். வழமை போன்றே முதலில் காமிக்ஸ் வலைப்பூ உலாவை ஆரம்பிக்கலாம்.
அறுந்த நரம்புகள் எனும் ஒர் மென்மையான, மனதை நெகிழ வைக்கும் கதையினை முழுமையான காமிக்ஸ் வடிவத்தில் வழங்கியிருக்கிறார் நண்பர் புலா சுலாகி. தமிழில் காமிக்ஸ்கள் சரியான கால இடைவேளையில் வருவதில்லை எனும் குறையை நீக்கியவர். புலா சுலாகி காமிக்ஸ் என்றுதான் அவர் வலைப்பூவை நான் அழைக்க விரும்புகிறேன்.
சுஸ்கி-விஸ்கி எனப்படும் மினிலயன் நாயகர்களைப் பற்றிய ஒர் திரைப்படத்தினை பதிவாக்கியுள்ளார் காகொககூ அன்பர். தன் வழமையான பாணிக்கு திரும்பி, பதிவின் லே அவுட்டையும் சிறப்பாக கவனமெடுத்து செய்திருக்கிறார்.
பூங்காவனம் தன் பிரம்மாக்களைப் பற்றி ஒர் பதிவை இட்டிருக்கிறார். ஆனால் அவர் யாரோ ஒர் டாக்டரின் புதிய டூ வீலரில் சுற்றுவதாக ஒர் வதந்தி உலவுகிறது.
இளைய தளபதி விஸ்வா பரபரப்பான காமிக்ஸ் செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். அதில் ராட்சத ஸ்பெசல் செப்டெம்பர் மாதம் வெளிவரும் எனும் தகவல் நம்பிக்கை அளிக்கிறது.
மெழுகு பொம்மைச் சிற்பியான தூஸாட் அம்மணியைப் பற்றி வெளிவந்துள்ள இரண்டு காமிக்ஸ் புத்தகங்களை, சிறப்பான பாணியில் பதிவாக தந்திருக்கிறார் ரகசிய உளவாளி ரஃபிக். அவர் வலைப்பூவில், மாற்றம் என்பதே நிரந்தரம். நாளிற்கு நாள் மெருகு ஏறிக் கொண்டே போகிறது.


கடந்த இரு வாரங்களிற்கு முன்பாக வாட்ச்மேன் படத்தை பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிட்டியது. Zack Snyder நாவலிற்கு விசுவாசமாக ஒர் படத்தினை தந்துள்ளார் என்பது உண்மை, ஆனால் அலன் மூரின் நாவல் தந்த அந்த பரவச அனுபவத்தை, திரைப்படம் எனக்கு வழங்கவில்லை. வன்முறைக் காட்சிகளில் மிகையான செறிவு எனக்கு அனாவசியாமாகப் பட்டது. ரோர்ஷாக் பாத்திரம் அதற்குரிய முக்கியத்துவம் நீக்கப்பட்டு, இரவு ஆந்தையும், டாக்.மான்ஹாட்டனும் படத்தினை ஆக்கிரமித்ததாகவே நான் கருதுகிறேன். குறிப்பாக காணாமல் போன சிறுமியை ரோர்ஷாக் தேடிச்செல்லும் தருணத்தை மூரும், கிப்பொன்ஸும் ஒர் வன்முறைக் கவிதையாக தந்திருப்பார்கள், ஏன் ரோர்ஷாக் வாழ்க்கையையே அவர்கள் அப்படித்தான் உருவாக்கியிருப்பார்கள். திரையில் அது வெறும் வன்முறைச் சக்கையாகவே எனக்குப் பட்டது. நாவலைப் படிக்காதவர்கள் Snyderஐ பாராட்டினால் அது அவரின் வெற்றி. நாவலைப் படித்தவர்கள் படத்தினை சிலாகிக்காவிடில் அது அவரின் தோல்வியல்ல, மூரின் நாவல் அவரிற்கு தந்த பெருமை அது. இனி ஸ்கார்பியனின் கதைக்குள் நுழைவோம்.

18ம் நூற்றாண்டு ரோம் நகரம். தன் துறவி வீரர்களுடன் மத குரு ஒருவனை தேடி வருகிறான் கர்தினால் (CARDINAL) TREBALDI.விசுவாசிகள், தங்கள் பாவமன்னிப்பின் போது கூறிய ஒர் விடயத்தை பற்றி குருவிடம்வினவுகிறான் கர்தினால் TREBALDI. முதலில் ரகசியத்தை கூற மறுக்கும் குருவானவர், வற்புறுத்தல்களின் பின் தான் பாவ மன்னிப்பில் கேட்டதை கூறி விடுகிறார்.

சூன்யக்காரி ஒருவள், இறவனிற்கு தன்னை அர்ப்பணித்து, விசுவாசத்தில் வாழ்ந்த துறவி ஒருவனை மயக்கி அவனுடன் உறவு கொண்டாள், இக் கொடுமையான பாவத்தின்!! வழியாக அவளிற்கு ஒர் குழந்தை பிறந்தது. அச் சிசுவின் வலது பக்க தோளில் தேள் போன்ற ஒர் அடையாளம் அது ஜனிக்கும் போதே இருந்தது. தேள், உலகத்தின் பாவங்களின் தலைவனான சாத்தான் வதியும் நரகத்தின் அடையாளம். அக்குழந்தை இப்போது வளர்ந்து இளைஞனாக வலம் வருகிறான் என கூறி முடிக்கிறான் துறவி. அன்று அந்த ஆலயத்தை, அம்மத குருவின் குருதி கழுவியது.

SCORPION கண்டுபிடித்து அவனைக் கொன்று விடும்படி, MEJAI என அழைக்கப்படும் எகிப்து நாட்டு ஜித்தான் ஒருத்திக்கு உத்தரவிடுகிறான் TREBALDI. MEJAI, விஷத்திரவியங்களையும், விஷம் ஊறிய ஆயுதங்களை கொண்டும் ஆட்களின் கதைகளை முடிப்பதில் கைதேர்ந்தவள். அவளை நன்கு கூர்ந்து கவனித்தால், அவள் கண்களைவிட கொடிய விஷம் உலகத்தில் இல்லை என்பதனை அறிந்து கொள்ளலாம். அவள் SCORPION தேடும் வேட்டையை தொடங்குகிறாள்.

SCORPIONன் தாயார், திருச்சபையால் சூனியக்காரி எனக் குற்றம் சாட்டப்பட்டு உயிரோடு தீயிட்டு எரிக்கப்பட்டு மரணமானவள். SCORPION கடவுளையோ, ரோமன் திருச்சபையையோ நம்பாதவன், வாள் சண்டைக்கலையில் வித்தகன், கலை நயம் மிக்க பொருட்களின் காதலன், புனிதர்களின் சமாதிகளை உடைத்து, அவர்களின் எலும்புகளை கவர்ந்து, கவர்ந்த எலும்புகளை செல்வந்தக் குடும்பங்களிடம் விற்று பணம் சம்பாதிக்கிறான். வாழ்வை எவ்வித கட்டுப்பாடுமின்றி, மதத்தின் சட்டங்களிற்கு அடிபணியாது கேளிக்கையும், கும்மாளமுமாக வாழ்கிறான். அவன் வாழ்க்கையை வாழ கடவுள் சில நேரங்களில் இஷ்டப்படலாம்.மதுச்சாலைப் பெண்கள் அவனுடன் ஒர் இரவினைக் கழித்திட தங்களிற்குள் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இவ்வாறான ஒர் இரவில், பெண் ஒருத்தியுடன் இரவினை விடியாமல் தடுக்க செல்லும் SCORPION மறைந்திருந்து தாக்குகிறாள் MEJAI. ஆனால் அவள் வைத்த குறி தப்பி விட, அவளுடன் மோதி தன்னைக் கொல்ல ஏவிய நபர் யார் என்பதை அறிந்து கொள்கிறான் SCORPION.

இதற்கிடையில், ஒன்பது பிரபலமான குடும்பங்களை சேர்ந்த நபர்களை, ஒர் ரசியக்கூட்டத்திற்கு வரும்படி சொல்லி, தன் துறவி வீரர்கள் மூலம் அக் குடும்பங்களிற்கு தகவல் அனுப்பி விட்டு, தன் துறவி வீரர்கள் புடைசூழ, அந்த ரகசிய இடத்திற்கு பயணமாகிறான் TREBALDI.

TREBALDI தேடி பாப்பாண்டவரின் மாளிகைக்குள் நுழைந்து அங்குள்ள காவல் வீரர்களோடு மோதும் SCORPION, இறுதியில் TREBALDIன் காரியதரிசி மூலமாக அவன் சென்ற இடத்தினைப் பற்றி அறிந்து கொள்கிறான். அந்த ரகசிய இடத்தை நோக்கி தானும் செல்கிறான்.


TREBALDIயும், அவன் தகவல்சொல்லி அனுப்பிய 9 குடும்பத்தினரும் அந்த ரகசிய இடத்தில் கூடுகிறார்கள். இவ்விடத்தை மறைவாக அணுகும் SCORPION விஷக்கத்தியால் தாக்கி அவனை மரணத்தினை நோக்கி வழிய விட்டு விட்டு, தன் சன்மானத்தினைப் பெற்றுக் கொண்டு சென்று விடுகிறாள் MEJAI. ஒன்பது குடும்பங்களை சேர்ந்தவர்கள் மத்தியில், தனது திட்டத்தினையும், பயங்கரமான சதி ஒன்றைப்பற்றியும் விளக்க ஆரம்பிக்கிறான் கர்தினால் TREBALDI.

SCORPION, TREBALDI கொல்லத் துடித்தது ஏன்? உயிருடன் போராடிக் கொண்டிருக்கும் SCORPIONன் கதி என்னாயிற்று? TREBALDI பின்னும் அப் பயங்கரமான சதி என்ன? போன்ற கேள்விகளிற்கு விறுவிறுப்பாக பதில் தருகிறது LE SCORPION எனும் இக்காமிக்ஸ் தொடர்.

தங்கள் சுயலாபத்திற்காகவும், அதிகாரங்களிற்காகவும் மதத்தை தங்கள் கையில் எடுத்து அதனை தங்கள் இஷ்டப்படி பயன்படுத்த துடிக்கும் மனிதர்களின் கதை இது. மனித உரிமைகள், தனி மனித சுதந்திரம், விடுதலை வேட்கை என்பவை, இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதிகாரத்தை தம் கையில் இருத்தி, மதத்தின் மூலமாக மக்களை அடக்கி, ஒடுக்கி அடிமைகளாக்க விரும்பும் இவர்கள் பாதையில் குறுக்கிடும் ஒருவனின் பயணமே இத்தொடராகும்.

குதிரைகள், ரதங்கள், கண்ணைக் கவரும் மேலங்கிகள், சூடான வாள் சண்டைகள், வத்திக்கன் ரகசியங்கள், SCORPIONன் பிறப்பு மர்மம், TREBALDIன் சதி என தூண்டில் போடுகிறது கதை. இரண்டாவது ஆல்பத்தில் கதை இன்னும் விறுவிறுப்பாகிறது, மர்மங்களின் முடிச்சுகள் விடுபடுவது போல் தோன்றினாலும், அவை மேலும் இறுகவே செய்கின்றன.




LE scorpion எனும் இக்காமிக்ஸ் தொடர் 2000 ஆண்டிலிருந்து வெளியாக ஆரம்பித்தது. இது வரை 9 ஆல்பங்கள் வெளியாகி இருக்கிறது, இதில் SCORPION- LE PROCES( SCORPION- THE TRIAL.) எனும் ஆல்பம் பிரதான தொடருடன் சம்பந்தப்படாத ஒர் ஆல்பமாகும்.

இத்தொடரின் கதாசிரியர் STEPHEN DESBERG ஆவார். பெல்ஜியத்தை சேர்ந்தவர், பிறந்த வருடம்1954. ஆரம்பத்தில் TINTIN எனப்படும் பெல்ஜிய சித்திரக்கதை வாராந்திரியில் சிறிய கதைகளை எழுத ஆரம்பித்தார், 1980 களில் முழுமயான கதைகளை படைக்கத் தொடங்கினார். இது வரையில் 30 வித்தியாசமான தலைப்புகளில் காமிக்ஸ் ஆல்பங்கள் வெளியாகியுள்ளன. இவரது இன்னொரு பிரபலமான தொடரான IR$ ஐப்பற்றி நண்பர் ரஃபிக் ராஜா பதிவிட்டுள்ளார், தவறாது அப்பதிவினைப் படியுங்கள்.

DESBERG தன் பணியை சிறப்பாக செய்திருந்தாலும், அவரைத் தாண்டி பல படிகள் பாய்ந்திருக்கிறார் சித்திரங்களிற்கு பொறுப்பான ENRICO MARINI. 1969ல் சுவிட்சர்லாந்தில் பிறந்த இவர் ஒர் இத்தாலியர். DESBERG உடன் இணைந்து ஏற்கனவே பாலைநிலத் தாரகை [L 'ETOILE DU DESERT] எனும், இரண்டு ஆல்பங்களை கொண்ட ஒர் வெஸ்டர்ன் காமிக்ஸ் தொடரை வெளியிட்டுள்ளார். ஆனால் SCORPIONல் MARINIன் ஒவியங்கள், ஆம் ஓவியங்கள், சித்திரங்களல்ல மிக உச்சமான தரம் கொண்டவையாக இருக்கின்றன. முதலாவது ஆல்பத்தில் ஒவியங்களினாலேயே கதை சொல்கிறார் அவர். ஆல்பத்தின் ஆரம்பக் காட்சிகள், எரியும் தணல் கங்குகள் போல் ஒளிர்கின்றன. நண்பர்கள் DARGAUD தளத்திற்கு சென்று , அந்த அற்புதமான ஒவியங்களை கண்டு களியுங்கள்.

இக்காமிக்ஸ் தொடரின் வெற்றிக்கு MARINI ன் ஓவியங்கள் ஒர் முக்கிய காரணம் என்பது என் தாழ்மையான கருத்து. சுருங்கக் கூறின் இத்தொடரினை படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விடாதீர்கள். சினிபுக் ஆங்கிலத்தில் இந்த ஆல்பங்களை வெளியிட்டுள்ளது, தமிழகத்தில் இக்காமிக்ஸ் தொடர் வெளிவந்து விட்டது மேலதிக விபரங்களிற்கு காமிக்காலஜியில் சினிபுக் புதிய வரவுகள் பதிவினைப் படியுங்கள்.

ஆல்பத்தின் தரம் *****

நண்பர்களே, வழமை போன்று, பதிவைப் பற்றிய உங்கள் மேன்மையான கருத்துக்களை தயங்காது பதிந்து செல்லுங்கள்.

ஆர்வலர்களிற்கு

42 comments:

  1. கனவுகளின் காதலனே,

    என்னுடைய நேரத்தை நான் என்னவென்று சொல்வது? கடந்த இரண்டு நாட்களாக நான் டைப் செய்து எடிட் செய்த பதிவு இப்போது என்னுடைய கணினி விண்டோஸ் லைவ் ரைட்டர் கிராஷ் ஆனதால் பயங்கர கடுப்பில் இருக்கிறேன். அப்போது தான் உங்களின் இந்த பதிவு வந்து என்னுடைய கோபத்தை குளிர செய்து உள்ளது.

    அற்புதமான நடை உங்களின் சிறப்பு அம்சம் என்பது இதன் மூலம் மறுபடியும் தெளிவாக விளங்குகிறது. முழுவதும் நுனிப் புள் மேய்ந்து கொண்டு இருக்கிறேன். என்னுடைய ஸ்பைடர் பதிவையும் முடிந்தால் இன்று இரவெ இட முயற்சி செய்கிறேன்.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  2. ஸ்கார்பியன் பற்றி மிக அருமையான அறிமுகம்.

    இது குறித்து விஷத்தேள் வீராச்சாமி என்றதொரு சித்திர கதை தமிழில் உண்டு. அவருக்கு நண்பராக பூராச்சாமி என்றதொரு சாமியார் வருவார். கதாநாயகனுக்கு ஜோடியாக ஸ்நேக்கா என்றதொரு காரிகையும் கதையில் உண்டு.

    இந்த ப்ரென்ஞ்காரர்கள்தான் எத்தனை மோசம்? நம்முடைய கதைகளை காப்பியிட்டு, கலரிட்டு பூ வைத்து நம்மையே வியக்க செய்து விடுகிறார்களே?

    நீங்கள் கூறிய நெருப்புடன் ஆரம்பிக்கும் முதல்படம் அட்டகாசம்.

    அவர்கள் மட்டுந்தான் இந்தியாவை இன்னும் பாம்பாட்டி தேசம் என்று நினைக்க வேண்டுமா என்ன?

    ReplyDelete
  3. இந்த கதை தொடரை படிக்கும் போது அற்புதமான நினைவுகள் தோன்றுகின்றன என்னுடைய மனதில். ஒரு வித சம்பந்தமும் இல்லை என்றாலும் த ஓமன் என்னும் ஆங்கிலப் படத்தின் முதல் பாகத்தை ஏனோ உங்கள் பதிவு நினைவு படுத்துகிறது.

    நண்பர் ஜோஸ் இப்போது சுதந்திரமாக இல்லை என்று சில பல விஷமிகள் கூறி வருவதை மறுக்கும் விதமாக அவர் சுதந்திரமாக கருத்து வெளியிட்டு இருப்பதை கண்டவுடன் மகிழ்ச்சி பொங்குகிறது. இதனால் சகல காமிக்ஸ் ரசிகர்களுக்கும் கூறுவது என்னவென்றால் வதந்திகளை நம்ப வேண்டாம். ஜோஸ் இப்போது "வெளியில்" தான் உள்ளார்.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  4. ஜோஸ் அவர்களே,

    இந்த விஷத்தேள் வீராச்சாமி என்றதொரு சித்திர கதை தமிழில் படமாக வந்து உள்ளது. ஸ்கார்பியன் பாத்திரத்தை திரு விஜய டி ராஜேந்தர் அவர்கள் திறம்பட ஏற்று நடித்து இருப்பார். அந்த படம் சைதாப் பேட்டை ராஜ் தியேட்டரில் நூறு நாட்கள் ஓடியது என்பது தகவல்.

    கதாநாயகனுக்கு ஜோடியாக வந்த ஸ்நேக்கா பாத்திரத்தை குணசித்திர நடிகை மும்தாஜ் அவர்கள் ஏற்று நடித்து இருப்பார். அற்புதமான அந்த பாத்திரத்தில் ஒரு வசனம் எனக்கு நினைவுக்கு வருகிறது. படத்தில் வியாபார நோக்கில் பாத்திரத்தின் பெயர் சாயா கடை சரசு என்பது ஆகும். அதனால்,

    சாயா கடை சரசு,
    அவ பண்றா பாருங்கோ ரவுசு

    என்று மிகவும் புகழ் பெற்ற வசனம் உண்டு.

    கனவுகளின் காதலனே, நீங்கள் முழு கதையையும் கூறுவீர்கள் என்று பார்த்தால் இப்படி பாதியில் நிற்க வைத்து விட்டீர்களே? கடைசியில் ஸ்கார்பியன் தான் நல்லவன் அன்றும் அந்த பாதிரியார் தான் தீயவர் என்றும் தமிழ் சினிமா பாணியில் முடியுமா என்ன?

    செழி.

    ReplyDelete
  5. தம்பி,
    நீ தங்க கம்பி.

    குரங்குக்கு இருக்கு வாலு,
    என்னுடைய படம் ஓடுச்சு நூறு நாலு.

    மும்தாஜ் சொன்ன பாடல் கீதம்,
    அது பசங்களுக்கு எல்லாம் தேசிய கீதம்.

    இந்த படத்தில் எனக்கு கூட ஒரு பன்ச் டையலாக் இருக்கு:

    காதல் இவனுக்கு தெய்வம்,
    காதல் இவனுக்கு தெய்வம்,
    அந்த காதலுக்கு இவன் காவல் தெய்வம்.
    எப்படி?

    விஜய டி ராஜேந்தர்

    ReplyDelete
  6. இந்த விஷத்தேள் வீராச்சாமி கதையிலும் பஞ்ச் டையலாக் உண்டு.

    வில்லன், வீராச்சாமி. இரு வேறு பாத்திரங்கள். யார் வில்லன் என குழப்பிக் கொள்ள வேண்டாம்.

    ‘பாயும் புலி யாருன்னு ஒன் வாயாலயே கேட்க வைக்கிறேன்டா. பாயும் புலி யாருன்னு தெரியுமா?’

    ‘நீயே சொல்லு.’

    ‘நான்தான்டா.’

    ‘சீறும் சிங்கம் யாருன்னு தெரியுமா?’

    ‘அந்த கருமத்தையும் நீயே சொல்லு.’

    ‘சீறும் சிங்கந்தாண்டா பாயும் புலி.’

    வில்லன் குழம்பி ‘அப்ப பாயும் புலி யாரு?’

    ‘பாத்தியா. உன் வாயாலாயே கேட்க வைச்சுட்டேன். அது நான்தாண்டா.’


    இந்த சாகச சித்திரத் தொடரை தொடர்ந்து வெளியிடலாம் என்றதொரு எண்ணமும் உள்ளது. நான் நன்றாக வரைய கற்றுக் கொண்டதும் வெளியிடும் உத்தேசம் உள்ளது. பார்ப்போம்.

    பின் குறிப்பு விஷத்தேள் வீராச்சாமி என்றதொரு புதிய வலைப்பூ வேண்டாம், நண்பர்களே. ஏற்கனவே புன்னகை அரசி பூங்காவனம் கொட்டம் தாங்க முடியவில்லை.

    ReplyDelete
  7. அப்ப என்னோட பேர்'ல பிளாக் இல்லையா? என்ன கொடுமை சார் இது?



    விஷத்தேள் வீராச்சாமி

    ReplyDelete
  8. யாருப்பா அது, இந்த நேரத்துல கூட பூங்காவனத்த பத்தி எழுதருது? உங்களுக்கு எல்லாம் நேரம் காலம் எதுவுமே கிடையாதா?

    காத்தவ்.

    ReplyDelete
  9. பல மாதங்கள் கழித்து வந்து காமிக்ஸ் பதிவில் கமெண்ட் இட்டு இருக்கும் எங்கள் தமிழ் நாட்டு பிராட் பிட், இங்கிலாந்து நாட்டு அஜித் அண்ணன் ஜோஸ் அவர்களை வருக வருக என்று இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.

    அண்ணன் ஜோஸ் அவர்கள் புல் பார்ம்'இல் இருக்கிறார்கள் என்பதை இந்த கமெண்ட் மூலமே தெரிந்து கொள்ளலாம். விரைவில் அவர் பூங்காவனத்தின் ஏங்கா மனத்திலும் வந்த மணக்க வைப்பார் என்று ஒரு பட்சி கூறுகிறது. இந்த விஷயத்தை மிகவும் ரகசியமாக வைத்து இருக்கிறோம்.

    எவ்வளவு ரகசியமாக என்றால், இந்த விஷயம் அண்ணன் ஜோஸ் அவர்களுக்கே தெரியாது என்றால் பார்த்து கொள்ளுங்களேன்.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  10. தோழர் ஜோஸ்,

    அந்த வில்லன் நம்ம கிங் விஸ்வா தானே?

    இல்லையா?

    இந்த அளவுக்கு புத்திசாலி வேற யாரா இருக்கும்?

    சீக்கிரம் சொல்லுங்க சார். என்னால கெஸ் பண்ண முடியல.

    ReplyDelete
  11. இங்கு எங்கள் தானைத் தலைவி சைதை தமிழரசி தாக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் எங்கள் துணைத்தலைவி சிநேகா அவர்களை நீங்கள் கிண்டல் செய்வதை நங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

    உடனே நீங்கள் மன்னிப்பு கேட்க எங்கள் சங்கத்தினரின் வருங்கால வாரிசுகள் சார்பில் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன்.

    இவன்,
    குடும்ப குத்து விளக்கு நடிகையர் திலகம் சிநேகா ரசிகர் மன்ற சங்க தலைவர் ஸ்நேகாப்பிரியர்

    ReplyDelete
  12. கனவுகளின் காதலனே

    ஒரு மாபெரும் சரித்திர புதினத்தின் முன்னோட்டத்தினை (தலைப்பு சரித்திரத்தை சாகடிப்போம் என வைத்துக் கொள்ளலாமா) தங்களுக்கு இந்த வாரத்தில் அனுப்புகிறேன். கதாநாயகன் நாம் ஏற்கனவே பேசிய ஆள்தான்.

    நீங்கள் அதில் காரம், மசாலா அப்புறம் கொஞ்சம் வயக்ரா எல்லாம் சேர்த்து கொடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  13. கொடுமை கொடுமை என்று கோவிலுக்கு போனால் அங்கே இரண்டு கொடுமை வந்து ஜம்ப், ஜம்ப்'ன்னு ஜம்புச்சான்.

    இப்பதான் வேதாள நகரம் முடிந்தது என்று பேரு மூச்சு விட்டால் இப்போ சரித்திரத்தை சாகடிப்போம் என்று புதிதாக வேறு ஒன்றா?

    என்ன கொடுமை சார் இது?

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  14. கனவுகளின் காதலன் அவர்களே,

    நீங்கள் நான் குறிப்பிட்ட த ஓமன் என்ற படத்தை பார்த்து இருப்பீர்கள் என்றே நம்புகிறேன். அந்த படத்தில் கூட த ஸ்கார்பியன் போல சாத்தானின் குழந்தைக்கு தலையில் 666 என்ற குறி இருக்கும். தான் யார் என்பதை உணரும் கட்டத்தில் அந்த சிறுவன் யாரும் இல்லாத ஒரு நதிக் கரைக்கு சென்று "Why? Why Me?" என்று கதறும் காட்சி ஆங்கில சினிமாக்களில் மிகச்சிறந்த காட்சிகளில் ஒன்று என்பது என்னுடைய கருத்து.

    இதனைப் போல ஸ்கார்பியன் தான் யார் என்பதை உணரும் காட்சிகள் கதையில் உள்ளனவா? இந்த கதையை படிக்கும் ஆர்வத்தை உண்டு பண்ணி விட்டீர்கள். வாழ்த்துக்கள்.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. சரித்திரத்தை சாகடிப்போம் சூப்பர் கதை. தவறாமல் படியுங்கள்.

    மர்ம மனிதன் மார்டின்.

    ReplyDelete
  17. காதலரே, சமீபத்தில் நான் படித்த கதைகளிள் சரித்திரத்தின் முக்கிய நிகழ்வுகளை வைத்து பின்னபட்ட ஒரு கதை ஸ்கார்பியன் தொடர் என்பதில் ஐயமில்லை. கத்தோலிக்க மதகுருமார்கள் பற்றி நிறைய கதைகள் உலவி கொண்டு இருந்தாலும், ஒரு மதகுருவுக்கு பிறந்தது மனிதன் உருவில் ஒரு சாத்தான் என்பது போல கதை பின்னபட்டிருந்தது மிகவும் சிறப்பு.

    இரண்டாம் அத்தியாத்தில் போப்பை கொல்ல ஏவி விடப்படும் குடிகார கயவனிடம் இருந்து போப்பை ஸ்கார்பியன் எப்படி காப்பாற்ற போகிறார் என்று திக் திக் எண்ணங்களுடன் உலவ விட்டிருப்பது கதாசிரியர் டெஸ்பர்கின் திறமை. கூடவே மரினியின் ஓவியத் திறமையை என்ன என்று கூறுவது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு காட்சியமைப்புக்கு ஓவியம் தீட்ட அவர் நிறைய சரித்திரங்களை புரட்டி இருப்பார் என்பது அவரின் திறம் நிறைந்த ஓவிய வெளிபாட்டில் தெரிகிறது.

    9 குடும்பங்களை காப்பாற்றவே போப் என்று ஒருவரை நியமித்தது போல கதை அமைப்பது, அந்த குடும்பங்களுக்குள் பகை பொறாமை,பதவி சண்டை, கூடவே பெண்களை வேட்டையாடுவதோடு கல்லறையும் கொள்ளையடிக்கும் ஸ்கர்பியின் என்ற நபர், அவர் நல்லவரா கெட்டவரா என்று குழப்பம், அவரை கொல்ல, அதாவது விஷ தேளை கொல்ல விஷ மங்கை, மெஜாய் என்ற பெண்மணி ஏவ படுவது, அவருடன் கூடவே அலையும் விசுவாச பூனை, என்று கதையில் இல்லாத அம்சங்களே இல்லை.

    மொத்தத்தில் 2 பாகங்கள் போக அடுத்த பாகங்களுக்காக ஏங்க வைத்து விட்டார்கள் கதாசிரியர்கள்.

    மதங்களை வைத்து சுவாரசியமாக பின்னபடும் கதைகளை மேலைநாட்டினர் கலை ஆர்வத்துடன் பார்பபது போல, இங்கு நாமும் பார்க்க ஆரம்பித்தால், ஒரு வேலை இப்படிபட்ட சிறந்த கதைகள் இந்தியாவிலும் வெளிவருமா என்ற கேள்வி என் மனதில் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

    வழமை போலவே தமிழில் ஸ்கார்பியன் பற்றி உங்கள் அறிமுகம் சிறப்பு. உங்கள் அளவுக்கு இநத் கதை தொடரை விமர்சிக்க முடியாவிட்டாலும், என்னால் ஆன முயற்சியை சில மாதங்கள் கழித்து காமிக்கியலில் முயல்கிறேன்.

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல் & ராணி காமிக்ஸ்

    ReplyDelete
  18. இளைய தளபதி விஸ்வா, கிலி ஜோஸ்யரை நான் தொடர்பு கொண்ட போது, நீங்கள் அவரின் சேவைகளிற்காக பாக்கி செட்டில் செய்யவில்லையென்றும், அதனால் தான் அவர் கிராஷ் அம்மனை உங்கள் சிஸ்டத்தின் மீது ஏவியதாகவும் என்னைக் கிலியாக்கி விட்டார். முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி. ஒமன் படத்தை பற்றிய ஞாபகங்கள் குறைவாகவே உள்ளன. இருப்பினும் சாத்தானின் குழந்தை எனும் கருத்தினை கதையும், படமும் கொண்டிருக்கின்றன. யேசுவை சிலுவையில் அறைய முன்பாக அவர் ஒர் தோட்டத்தில் தியானித்திருப்பார், அப்போது அவர் மனம் கேட்கும் கேள்வியாக என்னை ஏன் தெரிவு செய்தீர்களைக் கொள்ளலாம். என்னே ஆச்சர்யம், பிராட் பிட்டையும், நண்பர் ஜோஸையும் ஒப்பிட்டு நானும் எழுதியிருக்கிறேன் அதனை வரும் வாரம் நீங்கள் காணலாம். பூங்காவனத்தின் தேங்காய் மனம் என்ற தலைப்பு வைக்கக் கூடாதா. வேதாள நகரம் முடிந்து விட்டது, ஆனால் கழுத்திற்கு ஒர் கயிறு இன்னமும் 22 பக்கங்கள் பாக்கியிருக்கிறது. விஸ்வா நான் ஸ்கார்பியனின் இரண்டு பாகங்களை மட்டுமே பதிவிற்காக படித்தேன், மிகுதி 6 பாகங்களையும் படித்து விட்டு பதில் கூறுகிறேன். தயவு செய்து ஜோஸை சுதந்திரமாக ஆடைகளின்று வெளியில் நடமாட அனுமதிக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

    ஜோஸ், பிரென்ச்சுக்காரர்களை ஆங்கிலேயர்கள் தவளைத் தேசம் என்று கிண்டல் செய்வார்கள்.தவளையின் தொடைகளை இவர்கள் விரும்பி உண்ணுவதால் அப்படி. விஷத்தேள் வீராச்சாமியை அவர் கலாச்சார பரிமாற்றம் செய்ய இங்கு வந்த போது சந்தித்தேன், அவ்ர் ஸ்னேகாவைக் காட்டி இவளை நான், என் கொடுக்கால் கொட்டி விட்டேன் எனக் கூறினார், ஸ்னேகாவிடம் அவர் கொடுக்கால் கொட்டப்பட்ட இடத்தைக் காட்ட முடியுமா எனக் கேட்ட போது, அவர் காட்டிய இடத்தைக் கண்ட நான் நினைவிழ்ந்து விட்டேன். மிகுதியை இங்கு எழுத முடியாது. சரித்திரத்தை சாகாமல் சாகடிப்போமில் சகலத்தையும் கலக்க நான் தயார், அனுப்பி வையுங்கள்.

    செழி, முதல் பாகத்தின் முழுக்கதையையும் கூறி விட்டேன், இருப்பினும் சில மர்மங்களைக் கூறினால் நீங்கள் கதையை வாசிக்கும் போது விறுவிறுப்பு இருக்காதே என்பதினால் தான் முழுக் கதையையும் விபரிக்கவில்லை. இவ்வருட கேன்ஸ் விழாவில் நீங்கள் குறிப்பிட்ட படம் தேர்வு செய்யப் பட்டிருப்பது ஒன்றே படத்தின் உன்னதத்தை தெளிவாக்கி விட்டது. ஜார்ஜ் குலுனி, ராஜேந்தர் பாத்திரத்தினை தனக்கு வழங்கா விடில் தீக்குளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    ரஃபிக், வாள் சண்டைகளின் அசைவுகளைக் கூட ஒர் நிபுணரிடம் நன்கு கலந்து கொண்ட பின்னரே கதையில் சித்திரமாக வடித்துள்ளார் மரினி என்றால் மிகுதியைப் பற்றி கூறவும் வேண்டுமோ.முதல் 2 ஆல்பங்களும் மிக விறு விறுப்பாக இருந்துது. நம்ம ஊர் திரைப்படங்களில் இடம்பெறும் வாள் சண்டை வசனங்களையும் கதை நினைவூட்டத் தவறவில்லை. தன் வஞ்சத்தினை தீர்த்துக் கொள்ளும் முதியவரின் பாத்திரம் செமையான சஸ்பென்ஸ் திருப்பம். பாப்பை ஸ்கார்பியோன் நெருங்கி ரகசியங்களை அறிய விரும்பும் இறுதிப் பக்கங்களில் சூடாகும் வேகம். மெஜாயின் கவர்ச்சி என எவ்வளவோ சொல்லலாம். மெஜாய் வரு முன், அந்த இடங்களில் பூனை ஆஜராகி விடுவது சூப்பர் டச். இன்றும் மதங்களின் பின் என்ன உண்டு என்பதை யார் தான் தயங்காது கூறி விட முடியும். மதங்களைப் பற்றிய கதைகளை உருவாக்கா விடினும் இவ்வாறான கதைகளை மொழி மாற்றம் செய்தாலே கருத்துச் சுதந்திரமும், கலை வெளிப்பாடும் எல்லைகளும், கட்டுப்பாடும் அற்றவை என்பதை அறிய உதவிடும்.
    என்னை விட உங்கள் பாணியில் நீங்கள் சிறப்பாக செய்வீர்கள் என்பது எனக்குத் தெரியாதா.

    மற்றைய அனைத்து கும்மி நண்பர்களிற்கும் என் நன்றிகள். தொடருங்கள் உங்கள் கும்மியை.

    ReplyDelete
  19. //ஜார்ஜ் குலுனி, ராஜேந்தர் பாத்திரத்தினை தனக்கு வழங்கா விடில் தீக்குளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்// என்ன கொடுமை ஐயா இது?

    எங்கள் தானைத்தலைவர் விஜய டி ராஜேந்தர் எங்கே? இந்த ஜார்ஜ் க்ளூனி எங்கே? அவரின் அழகுக்கு முன்னே ஜார்ஜ் க்ளூனி நிற்க முடியுமா? அவரின் அறிவுக்கு முன்னே ஜார்ஜ் க்ளூனி எம்மாத்திரம்?

    சரித்திரத்தை சாகடிப்போமில் எனக்கு பங்கு உண்டா?

    செழி.

    ReplyDelete
  20. நல்ல பதிவு.... தொடரட்டும் உங்கள் சேவை ... நான் மொய்த்தாம் 7 கதிகள் படித்து இருக்கேன் மீதி பதிவுவுக்கலுக்கக காத்து
    கொன்டுருக்கென்ரான்........

    ReplyDelete
  21. என்ன, அந்த மயக்கும் மோகினி மேஜாய் ஸ்கார்பியநை கொல்ல வருகிறாளா?

    அவளிடம் கொடிய விஷம் உள்ளதே? அந்த விஷத்தின் முறிவு மருந்து உள்ள ஒரே நபர் நமது காமிக்ஸ் டாக்டர் தான். ஆனால் அவரும் பூங்காவனதுடன் டூ வீலரில் சுற்றுவதாக வயகரா தாத்தா கூறுகிறார்.

    இதனை தடுக்க வேறு வழியே இல்லையா? அந்த மற்ற ரெண்டு குதிரை வீரர்களும் என்ன செய்கிறார்கள்?

    அபித குஜலாம்பாள்

    ReplyDelete
  22. செழி, குலுனியாவது ஓகே ஆனால் ஜே.கே ரித்திஷ் அப் படத்தின் ரீமேக் உரிமையை வாங்க கடும் முயற்சியில் உள்ளாராம். ஹாலிவுட்டில் மும்தாஜ் வேடத்தில் நடிக்க ஹாலிவூட் கண்ணகி, அமெரிக்க அன்னை தெரேசா பமீலா அண்டர்சனை அனுகியுள்ளார்களாம். நண்பர் ஜோஸ் தான் உங்கள் கேள்விக்கு விடை தர வேண்டும்.

    ரமேஷ், 7 பாகங்களையும் படித்துவிட்ட நீங்கள் அதனைப் பற்றி கட்டாயமாக எங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் குழந்தைத் தமிழ் அழகோ அழகு.

    அபித குஜாலாம்பாள், உடனே வயக்கரா தாத்தா கூறும் அகத்திய மாமுனி வெண்கழி சிகிச்சை முறையைப் பின் பற்றவும். உயிர் தப்ப அது மட்டும் தான் ஒரே வழி.

    விஸ்வா, ஆல்பத்தின் முதல் பகுதியில், ஸ்கார்பியோன் தன்னைப் பற்றி கூறும் ஒர் தருணம் உள்ளது.[ ஒர் மங்கையின் முன்பாக அவன் தன் ஆடைகளைக் களையும் போது] ஆனால் அதனை ஒர் உணர்ச்சிகரமான தருணமாக கொள்ளவியலாது. ஸ்கார்பியனும் காரியத்தை முடிப்பதிலே கண்ணாக இருந்ததால், தன்னைப் பற்றி கூற விரும்பவில்லை எனவே நினைக்கிறேன்.

    ReplyDelete
  23. கிசு கிசு கார்னர்:

    (1) ஊர் பெயரை இணையதள பெயராக கொண்ட அந்த வலைப்பூ சொந்தக்காராரின் கணினி மூன்று மாதங்களுக்கு பிறகு சரியாகி விட்டதாம். நாளை ஊருக்கு செல்லும் அவர் திங்கள் கிழமை திரும்பி வந்து பல புதிய இடுகைகளை இட தயாராக உள்ளாராம். விருந்துண்ண நீங்கள் தயாரா?

    (2) முடி சூடிய அந்த மன்னரின் மடிக்கணினி "மறுபடியும்" பிரச்சினை செய்து உள்ளதாம். அதனால் மன்னர் கடுப்பில் இருப்பதாகவும், மீண்டு வந்த அவரால் சொன்ன படி பதிவிட இயலவில்லையே என்ற கோபமும் அவரை விரக்தியின் உச்சதிர்க்கே கொண்டு சென்று உள்ளதாம். கிட்ட தட்ட பதினைந்து பதிவுகளை ரெடி ஆக வைத்து உள்ளாராம் மன்னர். அனைத்தும் ஏப்ரல் மாதத்திலா?

    (3) காமிக்ஸ் வலைப் பூக்களுக்கு முன்னோடியாக திகழும் அந்த வலைப்பூவின் சொந்தக்காரர் பதிவிடாமல் இருக்க காரணம் யாரோ ஒரு பயங்கரவாதி பதிவராம். அவர் எண் கூட ஆறுக்கும் எட்டுக்கும் நடுவில் இருக்குமாம். அவர் பல ஸ்கான்'களை பல மாதங்களாக தாமதப் படுத்தி வருகிறாராம். இந்த தகவலை வலையுலகிற்கு கசிய வைத்தது அவரின் வேண்டப் பட்ட விரோதியாகிய இன்னொரு பதிவர்.

    கிசு கிசு கோபால்.

    ReplyDelete
  24. Sorry, i have 5 comics only... :)

    ReplyDelete
  25. கிசு கிசு கோபால் தொடரட்டும் உங்கள் நற்சேவை.

    ரமேஷ்,நீங்கள் விரும்பினால் தாராளமாக அந்த 5புத்தகங்களினைப் பற்றி எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே, தயங்காது எழுதுங்கள் மொழி ஒர் பிரச்சனையாக இருக்காது என்றே நான் கருதுகிறேன். நீங்கள் ஆல்பங்களை பிரென்ச்சு மொழியில் படித்தீர்களா அல்லது வேறு ஏதேனும் மொழியிலா.

    ReplyDelete
  26. நான் படித்த புக்ஸ் 5. அனைத்தும் ஆங்க்கேழா மொழிய் தான்.

    all parts are finished with suspense... fifth part, they got the holly gril but scorpion and his friends are locked in the secrete place. ..

    i am waiting for the 6 the scanlation of the scorpion and also waiting for XIII scanlations.

    ReplyDelete
  27. ரமேஷ், நீங்கள் இக்கதையை எங்கு டவுன் லோட் செய்ய முடியும் என்பதை தெரியப்படுத்தினால் மற்ற நண்பர்களும் இதனால் பயன் அடைவார்கள் என்பது என் தாழ்மையான கருத்து. உங்கள் தொடர்ந்த ஆதர்விற்கு என் நன்றிகள், வார இறுதியை இனிதே கழியுங்கள்.

    ReplyDelete
  28. Hi கனவுகளின் காதலன் ,

    இப்போ மகிழ்ச்சியா?

    எனக்கும் யாராவது Lucky Luke ஸ்கான் ஶர் பண்னுங்கா

    The Scorpion 1 - The Mark of the Devil
    http://sharebee.com/51a6068a

    The Scorpion - T02 - The Pope's Secret [Dargaud][2002](JJ-DarthScanner - Dragonz)
    http://sharebee.com/730a2d47

    The Scorpion - T03 - Peter's Cross [Dargaud][2002](JJ - Dragonz))
    http://sharebee.com/766e4d3a

    The Scorpion - T04 - The Demon in the Vatican [Dargaud][2004](JJ - Dragonz)
    http://sharebee.com/20ef738b

    The Scorpion 05 - The Sacred Valley (JJ)
    http://sharebee.com/313d334c

    ReplyDelete
  29. ரமேஷ் மிக்க நன்றி. நண்பர்களே லக்கி லூக் லிங்குகளை இனிய நண்பர் ரமேஷிற்கு தந்து உதவுங்கள்.

    ReplyDelete
  30. யானை பாதை அல்லாது யானை கல்லாரை கதை ஹீரொ பேயர் தெரியும?

    ReplyDelete
  31. ரமேஷ்,

    ஹீரோவின் பெயர் எனக்குத் தெரியாது,ஏனெனில் கதையை நான் படித்ததில்லை, எம் சக நண்பர்கள் பதில் தர வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete
  32. ரமேஷ்,

    யானைக் கல்லறை கதையின் ஹீரோ பெயர் வன ரேஞ்சர் ஜோ.

    இந்த கதைத் தொடரில் மொத்தம் மூன்று கதைகளே உள்ளன. அவை மூன்றையும் முது காமிக்ஸ் இதழ்களில் ஆசிரியர் திரு விஜயன் அவர்கள் வெளியிட்டு விட்டார்.

    ரமேஷ், என்ன காரணம்? என் திடீரென்று இதனை பற்றி கேட்கிறீர்கள்?

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. ரமேஷ்,

    ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரம் அவரைப் (வன ரேஞ்சர் ஜோ) பற்றி ஒரு பதிவு இடலாம் என்று இருக்கிறேன். மேல் விபரங்கள் இருந்தால் அனுப்பவும்.

    கிங் விஸ்வா.

    ReplyDelete
  35. நான் கலர் காமிக்ஸ் தேடீ வருகறயன்... ப்ரென்ச் பாயார் என்ன என்று தெறிிஉமா ..

    if i get anything,, i will share here....

    ReplyDelete
  36. விஸ்வா, ரமேஷ், கீழுள்ள சுட்டிகள் உங்களிற்கு உதவுமா எனப் பாருங்கள். இது தான் கதையா என தெரியப்படுத்துங்கள்.
    http://www.bedetheque.com/serie-844-BD-Freddy-Lombard.html#6733

    http://images.google.com/images?hl=fr&q=freddy+lombard+Le+cimeti%C3%A8re+des+%C3%A9l%C3%A9phants+bd&btnG=Recherche+d%27images&gbv=2

    ReplyDelete
  37. i got it from other place... i didnt download yet...
    he is called Tiger Joe...

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. ok... coming to the point.. who will going to post valhalla comics? lol..

    Valahall is a nice story and very good graphics...

    some one pls introduce to our community ....

    ReplyDelete
  40. That Comment was for me from King viswa in my mail. i accidentaly put it while copy pasting the tamil comments over here mixing the contents.

    apologies.

    Chezhi.

    ReplyDelete
  41. why limit is locked his blogspot?

    is it require any invitation?

    ReplyDelete
  42. ரமேஷ், நண்பர் லிமட் தன் வலைப்பூவை அங்கத்தினர் அனுகுவதற்கு மட்டுமே வாய்ப்பளித்துள்ளார், உங்கள் கருத்தை அவர் படித்தாரேயானால் நிச்சயம் உங்களிற்கும் அழைப்பு வரும் என்றே நம்புகிறேன்.

    ReplyDelete