tag:blogger.com,1999:blog-2858306095029043871.post8956976179184515655..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: மில்லேனியம் 1- பெண்களை வெறுக்கும் ஆண்கள்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-30297688197211885272009-12-28T08:24:13.367+01:002009-12-28T08:24:13.367+01:00ரஃபிக், நீங்கள் கூறியதுபோல் கதையைப் படிக்கும்போது ...ரஃபிக், நீங்கள் கூறியதுபோல் கதையைப் படிக்கும்போது வேஞ்சர் ஏன் ஸ்லாண்டரை தன் தேவைக்காக நாடவில்லை என்பது புரியும். பிரெஞ்சு மூலத்தின் அட்டையில் உள்ள அந்த மர்மம் ஆங்கில மூலத்தின் அட்டையில் இல்லை என்பது தெளிவு. கவர்ச்சியால்தான் ஒன்றை அதிகம் விற்கமுடியும் எனும் வேதனையான நிலை உலகெங்கும் பரவிக்கிடக்கிறது, இது மாறப்போவதில்லை. உங்கள் விரிவான கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.

நண்பர் வேல்கண்ணன் அவர்களே, பெண்கள் மீதான வன்முறை குறித்து நீங்கள் சொல்வது உண்மையே. பெண்களை காக்கும் பல சட்டங்கள் கொண்ட மேலை நாடுகளில் கூட பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்தபடியே இருக்கிறது. உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-58914329067888124302009-12-26T19:55:18.179+01:002009-12-26T19:55:18.179+01:00நண்பரே
மீண்டும் நாவல் பற்றிய பகிர்வுக்கு நன்றி பல...நண்பரே
மீண்டும் நாவல் பற்றிய பகிர்வுக்கு நன்றி பல. இந்த பதிவை உங்களின் மிக சிறந்த பதிவாக நான் கருதுகிறேன். பெண்களின் மீது செயல் படும் வன்முறைகள் உலகம் எங்கும் பரவிக்கிடக்கிறது.
இம்மாதிரியான ஆக்கங்கள் பெண்களின் இன்னல்களை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதோடு மட்டுமில்லாமல் கண்டிக்கதகுத்தவை என்பதை சுட்டி காட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. அதுவும் மக்களை கவரும் விறுவிறுப்பான நடையில் சொல்லியிருப்பது பாராட்டுக்குரியது. புதிய ஆண்டில் ஆங்கில வழி நாவல் வாங்கிவிடுவேன். மிக சிறப்பான பகிர்வுக்கு நன்றி நண்பரேrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-77678403115409862632009-12-26T19:50:48.231+01:002009-12-26T19:50:48.231+01:00காதலரே,
சமுதாயத்தால் கட்டம் கட்டபட்ட ஒருவன், சமு...காதலரே,

சமுதாயத்தால் கட்டம் கட்டபட்ட ஒருவன், சமுதாயத்தால் ஒடுக்கபட்ட ஒருத்தி, என்ற இரு கதாபாத்திரங்கள் ஒன்று சேர்ந்து ஒரு துப்பறியும் பாணி கொண்ட இந்த தொடர் அருமையான ஒன்றாக தெரிபடுகிறது.

ஆரம்பத்தில், தனக்கு சம்பந்தம் இல்லாத வென்னெர்ஸ்ட்ரம் கதபாத்திரத்தை பற்றி வாங்கர் ஏன் துப்பு துலக்குகிறார் என்று எண்ண தோன்றிற்று. ஆனால், அது ப்ளாம்க்விஸ்ட்டை தன் பணிக்கு அமர்த்த ஒரு தூண்டில் என்று அமைத்திருக்கும் கதாசிரியர் கதையோட்டம் அருமை. அதே வேளையில் இந்த காரியத்தை துப்புதுலக்க ஸ்லேன்டரை அணுகும் நபர், ஏன் அவள் மூலமே தொலைந்து போன உறவுக்கார பெண்ணின் மர்மத்தையும் விடை காண முயலவில்லை என்று உருத்துகிறது. ஒரு வேளை, இரு வேவ்வேறு முறை கொண்ட கதாபாத்திரங்களை கதைகளத்துக்குள் ஒரு சேர பணியாற்ற கதாசிரியர் முயன்ற யுக்தியா.. இல்லை, இந்த இருவரின் கூட்டணிக்கும், அந்த ரகசியங்களுக்கும் சம்பந்தம் உள்ளதா என்று கேள்விகள் பல எழுப்புகின்றன, தங்கள் அறிமும். நாவலை படித்தால் மட்டுமே உணர முடியும் என்று புரிகிறது.... கண்டிப்பாக முயல்கிறேன்.

நீங்கள் கூறியது போல, பிரஞ்சு நாவலின் அட்டைபடம், அந்த முதுகு அழகியை விட நிரைய ஆழ்ந்த அர்த்தங்களை கூறுவதாக தான் எனக்கும் படுகிறது. அந்த பார்வையே பல மர்மங்களை உள்ளடக்கியது போல தெரிகிறதே.... ஆங்கில நாவல்கள் விற்பனைக்கு கவர்ச்சியான அட்டைபடமும், தலைப்பும் தேவை என்பது ஒரு மாற்ற முடியாத விடயம். அதை தான் பதிப்பாளர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் போலிருக்கிறது.

இப்படிபட்ட நாவல்கள் வேற்றுமொழியில் இருக்கும் ஒரே காரணத்தால், ஹாலிவுட் படாதிபதிகள் கைவசம் தஞ்சம் அடையாதிருப்பது, அவர்களின் சமீப கால படவரிசைகளில் உள்ள கதை பஞ்சத்திற்கு காரணத்தை கற்பிக்கிறது. ஆங்கில இலக்கியங்களை தவிர வேறு பக்கம் பார்வையை அவர்கள் திருப்பாத வரை, அது நிரந்தரமே.

உங்கள் தளம் காமிக்ஸ் என்ற வட்டத்தை விட்டு வெளியுலகங்களில் சஞ்சாரம் செய்வதில் இருந்து, உங்கள் நடையில் பல ஊடகங்களுக்கு எனக்கு அறிமுகம் கிடைத்து கொண்டிருக்கிறது. எழுத்துகள் நிறைந்த நாவல்கள் மேல் இருந்த ஒருவித பயத்தை, உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் விலக செய்து வருகின்றன. விரைவில், உங்கள் அளவிற்கு இல்லையென்றாலும், தட்டு தடுமாறி ஒரு நாவலை படித்து முடிக்க உண்டான பொருமை எனக்கும் கைப்படும் என்ற நம்பிக்கை வர தொடங்கியிருக்கிறது. அது கைகூடுமா என்று காலம் பதில் சொல்லும்...

இன்னொரு அருமையான நாவல் தொடருக்கான அறிமுகத்திற்கு நன்றி. உங்கள் எழுத்துகள் மூலம் ஆர்வம் அதிகரிக்கபட்ட ஸ்லான்டர்ஸ் கதாபாத்திரத்தின் தாக்கம் இன்னும் அடங்காமல், கருத்தை முடிக்கிறேன்.

பி.கு.: பெண்களை வெறுக்கும் ஆண்கள்... இப்படிபட்ட ஒரு கூட்டமும் இருக்குமோ... அப்படி இருந்தால் அவர்கள் பெண்ணியத்தை முழுவதும் கிரகிக்கவில்லை என்றுதானே அர்த்தமாகும் ? :) சும்மாவா Men are from Mars, Women are from Venus என்று பீடிகை போடுகிறார்கள் :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.com