tag:blogger.com,1999:blog-2858306095029043871.post7396689019235272767..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: காலணிக்குள் உறங்கும் கடல் மணல்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-31773780266401885902009-09-08T16:52:22.295+02:002009-09-08T16:52:22.295+02:00ரஃபிக், முதலில் தீர்க்கதரிசி என்றுதான் தலைப்பிட்டி...ரஃபிக், முதலில் தீர்க்கதரிசி என்றுதான் தலைப்பிட்டிருந்தேன், பின்புதான் இந்த தலைப்பு வந்து சேர்ந்து கொண்டது.

செஸார் தனிமைப்பட்டுப்போகும் காலம் ஒன்றில் வரும் காட்சியது, அவரது தளர்ச்சி அதில் தெளிவாக தெரிகிறது.

மலிக் தன் உள்மனத்துடன் பேசிக் கொள்வதையே இங்கு அய்யூப் உருவாக காடியிருக்கிறார் இயக்குனர். சிறு குழந்தைகளும் கூட தங்கள்பாட்டில் பேசித்திரிவதும் உண்மையே.

எல்லா நாடுகளின் சிறைச்சூழல்களும் ஒரே மாதிரியாக தோற்றம் தருவதற்கு உலககெங்கும் வேகமாகப் பரவிவிட்ட குற்றநுட்பங்களை காரணமாகக் கொள்ளலாம்.

லாக் அப் படத்தை நானும் பார்த்திருக்கிறேன், சிறையில் அவர்கள் உருவாக்கும் காரொன்றினை வில்லன்கள் நொருக்குவது நினைவிற்கு வருகிறது.

ரஃபிக், நான் எதனையும் தேர்ந்தெடுப்பதில்லை, சென்ற ஞாயிறு கூட டிம் பெர்ட்டனின் தயாரிப்பில் உருவாகிய "9" எனும் அனிமேஷன் படத்தைப் பார்த்து நொந்து போயிருக்கிறேன். பார்க்கும் திரைப்படம் எழுதத்தூண்டினால் எழுதுகிறேன் அவ்வளவே.

காதல் பற்றிப் பேசினால் உங்களிடம்தான் எவ்வளவு அடக்கம் சும்மாவா சொன்னார்கள் நிறைகுடம் தழும்பாது என்று :))

கேப்டன் பார்டர் விட்டு பார்டர் பாய்ந்து வந்து என்னை துவைத்து எடுப்பதை ஒர் பதிவாக போட்டுவிட்டால் போயிற்று. உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-53886457981068568152009-09-07T21:31:01.170+02:002009-09-07T21:31:01.170+02:00காதலரே, இந்த முறை பிரஞ்ச் சினிமாவா, அமர்க்களபடுத்த...காதலரே, இந்த முறை பிரஞ்ச் சினிமாவா, அமர்க்களபடுத்துங்கள். தலைப்பே ஒரு வித ரம்மியத்தை பதிவிற்கு சேர்த்து விட்டது.

ஒரு தனிமைப்பட்ட மனிதன் மனதில் எழும் போராட்டாங்களை மையமாக கொண்டு பிண்ணபட்டுள்ள ஒரு திரைக்காவியத்திற்கு அறிமுகம் கொடுத்துள்ளீர்கள்.

// சிறையில் ஒன்று வலியவனாக இருக்க வேண்டும் அல்லது வலியவன் ஒருவனது பாதுகாப்பின் கீழே இருக்க வேண்டும் //
// சிறையில் எப்போதும் திறந்திருக்கும் காதுகள் வழியாக //

உண்மையின் காரம் கடுத்தாலும், வேதனையான நிதர்சனம்.

அந்த அமைதியான முதுமை தோற்றத்திற்குள் ஒரு ரவுடி கோஸ்டியின் தலைமையா என்று வியக்க வைக்கிறார் செஸார்..... அரியணையில் அவர் அமர்ந்திருக்கும் போதும் அவரின் தொங்கிய தோள்களில் அவர் சுமக்கும் பாரத்தை இயக்குனர் உணர்த்தியிருக்கிறாரோ என்று எண்ணுகிறேன்.

இத்தனை கலவர சித்தாந்தங்களில் நடுவே, தான் கொலை செய்தவனையே மானசீக நண்பனாக கொண்டு உரையாடுவதாக இயக்குனர் கதையமைத்து இருப்பது, மலிக் இன்னும் தன் குழந்தைபருவத்தை மனதளவில் இழக்கவில்லை என்று பறைசாற்றுகிறார் போல.

// என பிரான்சின் தற்கால சிறைச் சூழலொன்றை கூறு போட்டிருக்கிறார் இயக்குனர் //
இது பிரான்ஸில் மட்டுமா, நம் ஊரிலும் நடக்கும் தினசரி கூத்துதான்.

// கழட்டும் போது அதனுள் நுழைந்திருந்த கடல் மணலைக் கண்டு அதனைத் தன் கரங்களில் கொட்டி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தத் தருணம் //

பிரிவு ஆழமான எண்ணங்களை மனதில் விதைக்கும் என்பதை வார்த்தைகளில் செதுக்கியுள்ளீர்கள்.

நல்ல வேளை இயக்குனரின் பெயருக்கான சரியான உச்சரிப்பை தந்தீர்கள்.. இல்லையென்றால் ஜாக்கூஸ் ஆடியார்டு, என்று அடியார் பட்டம் கொடுத்திருப்பேன்... ஆங்கில வார்த்தைகளை பிரஞ்ச் தொனியில் உச்சரிப்பதில் ஒரு தனி கிக் இருப்பது உண்மையிலும் உண்மை. :)

நண்பரே, நீங்கள் விவரித்த ஆரம்பகட்ட சிறை வாழ்க்கை விடயங்கள், எனக்கு ஸ்டாலோன் நடித்த லாக் அப் படத்தை நியாபகபடுத்தியது. அந்த படம் ஆர்வலர்களால் மொக்கை என்று வர்ணிக்கபட்டாலும், திருந்தி வாழ உருவகபடுத்திய சிறைச்சாலைகள் எப்படி ஒரு மனிதனை வன்முறைக்கு தள்ளும் என்பதை தெளிவாக எடுத்து காட்டியிருந்ததாக என் எண்ணம்.

ஒவ்வொரு முறையும் பெரும்பான்மை சினிமா ரசிகர்களின் பார்வையில் விடுபட்டு போக கூடிய, அதே நேரத்தில் அருமையான கலைநயம் கொண்ட படங்களை எப்படி நீங்கள் மட்டும் தேர்வு செய்கிறீர்களோ... தொடர்ந்து கலக்குங்கள், காதலரே.

பி.கு.: ஆமாம், "காதல் - ரஃபிக்" என்று முண்ணுக்கு பின் முரணாண Oxymoron வார்த்தை பிரயோகம்.... காதலர் சித்து விளையாட்டா ? :) எங்கள் ஆசான் கேப்டனிடம் முறை இட போகிறேன்.... அவர் பார்டர் விட்டு பார்டர் கூட பாய்வார் ஜாக்கிரதை :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-33886644119701082342009-09-07T16:25:27.487+02:002009-09-07T16:25:27.487+02:00நண்பர் ஜாலிஜம்ப்பர் அவர்களே, உங்கள் கனிவான முதன்மை...நண்பர் ஜாலிஜம்ப்பர் அவர்களே, உங்கள் கனிவான முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி, தங்கப் பானை அல்ல தங்கப்பனை என்று இருந்தது, இப்போது திருத்தப்பட்டிருக்கிறது நன்றி நண்பரே.

நண்பர் ஜோ அவர்களே, உங்கள் கருத்திற்கு நன்றி, வழமையாகவே என் பதிவுகள் சற்று நீண்டவைதான், பொறுமையாக வாசித்த உங்களிற்கு என் நன்றி.

காமிக்ஸ் காதலரே வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி, உங்கள் புதிய வலைப்பூவிற்கு வாழ்த்துக்கள். கலக்குங்கள் நண்பரே.

நண்பர் வேல்கண்ணன் அவர்களே, அந்தக் காட்சி என் மனதை விட்டு நீங்காது நின்றது. அதனையே வரிகளாக்கினேன், உங்களிற்கு பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியே,கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.

ஜோஸ், இதனை சொல்லிற்கு சொல் நேரடியாக பிரென்ஞ்சில் மொழி பெயர்த்தால், தமிழில் கிடைக்கும் சுகம் கிடைக்காது போகும். இல்லை என்றால்தானே அதன் அருமை புரிகிறது[ உ-ம், காதல், ரஃபிக் மன்னிக்கவும்] சுதந்திரமும் அப்படித்தான் போலும். நாங்களும் முழுச்சுதந்திரந்துடன் தானா இருக்கிறோம் என்ற கேள்வியை எழுப்பிப்பாருங்கள் ஜோஸ்!! கேப்டன் நடிக்கும் படத்தின் தலைப்பையும் நீங்கள் கூறியிருந்தால் நான் மகிழ்ந்திருப்பேன்.நிச்சயமாக கான் விழாவில் ஆலமர விருது ஒன்றை உருவாக்கச் சொலி அவர்களை இப்போதே எச்சரித்து விடுகிறேன். இதற்கு பின்பு கான் விழா காணாது போனால் நான் பொறுப்பல்ல. தொடர்ந்த உங்கள் ஆதரவிற்கு நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-67683413679827216662009-09-06T08:21:37.576+02:002009-09-06T08:21:37.576+02:00அன்பு நண்பரே,
காலணிக்குள் உறங்கும் கடல்மணல்....அன்பு நண்பரே,

காலணிக்குள் உறங்கும் கடல்மணல். தயவுசெய்து இதை ப்ரென்ஞ் மொழியில் மொழி பெயர்த்து சொல்ல முடியுமா? அற்புதமான தலைப்பு.

சுதந்திரம் என்பது அடக்குமுறையின்போது தான் உணரப்படும் விஷயமாக உள்ளது. நகைச்சுவை திரைப்படங்களையும் விமர்சனம் செய்யுங்கள்.

இந்த படம் எங்கள் கேப்டன் நடித்து விரைவில் வெளிவந்து தங்க ஆலமரம் விருது வாங்கும் நாள் விரைவில் வரும்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-60016161070512685782009-09-05T09:08:47.108+02:002009-09-05T09:08:47.108+02:00//தன் காலணிகளை கழட்டும் போது அதனுள் நுழைந்திருந்த ...//தன் காலணிகளை கழட்டும் போது அதனுள் நுழைந்திருந்த கடல் மணலைக் கண்டு அதனைத் தன் கரங்களில் கொட்டி மெளனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்தத் தருணம் சிறைக்கு வெளியே இருக்கும் வாழ்வின் மீதான ஏக்கத்தை சத்தமின்றி உரக்கச் சொல்லி செல்கிறது//
இப்பதிவின் முக்கியமான வரிகள்.
அருமையான பதிவு நண்பரே, ஒவ்வொரு பதிவும் வேறு வேறு களத்தை அறிமுகம் செய்கிறது .
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கும்....rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-56638833304416219872009-09-04T13:55:09.417+02:002009-09-04T13:55:09.417+02:00கனவுகளின் காதலரே,
உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் ப...கனவுகளின் காதலரே,

உங்களின் பதிவுகள் ஒவ்வொன்றும் புதியதோர் உலகினை எங்களுக்கு அறிமுகப் படுத்து கின்றன. நல்ல கதைகளையும், நாவல்களையும், திரைப்படங்களையும் தொடர்ந்து எங்களுக்கு அறிமுகப் படுத்தும் உங்களுக்கு நன்றிகள் பல.

அடுத்ததாக ஒரு சிறிய விளம்பரம் - நானும் ஒரு பிளாக் ஆரம்பித்து இருக்கிறேன். ஒரு முறை பாருங்களேன்?

காமிக்ஸ் காதலன்
பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள்
யார் இந்த மரண அடி மல்லப்பா? காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47066630888880173952009-09-04T05:46:48.874+02:002009-09-04T05:46:48.874+02:00Fantastic review, even though it was a bit too lon...Fantastic review, even though it was a bit too long!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-5138405699720718992009-09-03T16:10:51.902+02:002009-09-03T16:10:51.902+02:00இந்த படத்தை பற்றி பதிவிட்ட நீங்களே ஒரு தீர்க்க தரி...இந்த படத்தை பற்றி பதிவிட்ட நீங்களே ஒரு தீர்க்க தரிசி தான் நண்பரே.

அருமையான பதிவு. பள்ளி தோழனுடன் தோளோடு தோல் சேர்த்து நடந்து கொண்டே செய்யும் உரையாடலை போல இருப்பதே உங்கள் பதிவுகளின் சிறப்பு.

தங்கப் பானை? ரசித்தேன்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.com